இராப்போஜனம் (THE COMMUNION) வியாழக்கிழமை மாலை, ஏப்ரல் 18, 1957 பிரான்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 57-0418 வில்லியம் மரியன் பிரன்ஹாம் 1. கர்த்தர்... ஜனங்களுக்கு இடமளிக்க நம்மிடம் இருக்கைகள் இல்லாமல், வெளியே போகவிடப்பட்டவர்களுக்காக நாங்கள் நிச்சயமாகவே வருந்துகிறோம். அநேகமாக சுமார் 3,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் நியூ ஆல்பெனியில் நம்மால் ஒரு அரங்கத்தைக் கொண்டிருக்க முடியும் ஒரு இடம் உள்ளதாக நான் சற்றுமுன் கேள்விப்பட்டேன். ஆனால் நாம் அப்படியே.... எழுப்புதலானது இங்கே சபையிலுள்ள வெறும் இச்சிறு கூட்டத்திற்காகத்தான் இருந்தது. நாம் அப்படியே வீட்டிற்குத் திரும்பிவரும் ஒரு சிறு நேரத்தில் இருக்கிறோம். உங்கள் எல்லாரையும் உள்ளே காண்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 2. நான் தவறாக இல்லை என்றால், ஜார்ஜியாவிலிருந்து வந்திருக்கும் எனது சகோதரனைத் தான் இங்கு காண்கிறேன். சகோதரனே, இப்பொழுது உங்கள் பெயரைக் கூப்பிட முடியவில்லை; ஜார்ஜியாவிலுள்ள மாகன்-லிருந்து வந்திருக்கும் பால்மர். சகோதரன் பால்மர் அவர்களே, உங்களை இங்கே கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இங்கே முன்னால் இருக்கும் சகோதரன் கிரீச் அவர்களே, உங்களைக்காண்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 3. கட்டிடத்தில் ஏதோவொரு இடத்தில் டாக்டர் லீவேயில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், ஓஹியோவிலுள்ள லீமாவில் நடந்த கூட்டத்திற்கான நிதி ஆதரவு தந்தவர்களில் (sponsors) இவரும் ஒருவர், அங்கே .... அவர் முதலாவது பாப்டிஸ்டு சபையின் மேய்ப்பராக இருக்கிறார். மேலும் அவர் என்னுடைய ஒரு ஒரு தனிப்பட்ட நண்பராகவும் இருக்கிறார். அவர் இன்று (அங்கு) மேலே வீட்டில் இருந்தார். மேலும் அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, எங்களைப் பார்க்கும்படியாக வந்திருந்தார். அநேகமாக இந்த இரவுகளில் ஒன்றில் அவர் எழுந்து எதையாவது கூறும்படி நாம் அவரைக் கொண்டிருப்போம். இன்றிரவு பேசும்படியாக, என்னுடைய இடத்தை எடுத்துக்கொள்ள அவரைப் பெற்றுக்கொள்ள முயற்சித்துப் பார்த்தேன், அவரோ அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே ஒருக்கால், ஒருவேளை நாளை இரவு அல்லது ஏதோவொரு நேரத்தில், சகோதரன் வேயில் அல்லது அவர்களில் யாராவது ஒருவர்..... ஒருக்கால் அங்கே மேலே நடைபெற்ற கூட்டம் அல்லது ஏதோவொன்றைப் பற்றி கர்த்தர் அவருடைய இருதயத்தில் என்ன வைத்திருந்தாலும் அதைக் குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பேச இயலும் என்று நம்புகிறேன். 4. (இவர்களையும் அடையாளம் கண்டுகொள்ளும்படி அப்படியே நேரத்தை எடுத்துக்கொள்ள என்னால் கூடுமானதாக இருக்க நான் விரும்புகிற மற்றவர்களும் இங்கேயிருக்கிறார்கள். ஒரு சிறிய நபர் அங்கே பின்னால் இருப்பதைக் காண்கிறேன், அவர்கள் இன்று பிற்பகலில் என்னைக் காண வந்திருந்த ஒருகூட்ட ஊழியக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் ஆர்கன்ஸாஸிலிருந்தும் அதோடு கூட மிசௌரியிலிருந்தும் வந்திருக்கிறார்கள். 5. இப்பொழுது. இன்றிரவில், நாம் இழந்த நேரத்தைத் திரும்பப்பெற விரும்புகிறோம், ஏனென்றால் கூடுமானால், ஒவ்வொரு இரவும் 9 மணி வாக்கில் முடிக்க முயற்சிக்கப் போகிறோம். இன்றிரவு இராப்போஜன இரவாக உள்ளது, எனவே வழக்கமாக இருப்பதைக் காட்டிலும் இன்றிரவு சற்று தாமதமாகும். 6. கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவில், ஆகையால் நீங்களும் பூரணராக இருங்கள் என்பதன் பேரிலும் அந்த பூரணமான பலி என்பதன் பேரிலும் பிரசங்கம் பண்ண விரும்புகிறேன். நாளை இரவில் அதைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். அதன்பிறகு பெரிய வெள்ளி வருகிறது. 7. அதன்பிறகு சனிக்கிழமை இரவில், கர்த்தருக்குச் சித்தமானால், கல்லறையிலிடுதல் (The Entombrment) என்பதன் பேரில் (பிரசங்கிப்பேன்). 8. ஞாயிறு காலையில், 5 மணிக்கு சூரியோதய ஆராதனை (Sunrise service) இருக்கிறது. பத்து மணிக்கு, ஒரு ஞானஸ்நான ஆராதனை உண்டு. பத்தரை மணிக்கு உயிர்த்தெழுதலைக் குறித்த ஞாயிறு பள்ளி பாடம் இருக்கிறது. 9. ஞாயிறு இரவில். வெளியே சுவிசேஷ களத்தில் நமக்கு இருப்பதைப் போன்று. ஒரு வழக்கமான சுகமளிக்கும் ஆராதனை இருக்கும். 10. பாவியான நண்பர்களையும் மற்றவர்களையும் நீங்கள் அழைத்து வந்து எங்களோடு இருந்து, வருகிற இந்த.... இன்னும் சரியாகச் சொன்னால், இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வருகிற, இக்கூட்டத்தில் எங்களுக்கு உதவியாயிருப்பீர்கள் என்று இப்பொழுது நாங்கள் நம்புகிறோம். 11. பாப்டிஸ்டு உபதேசத்தைப் பின்பற்றுகிற யாரோ ஒரு சகோதரன் (a Dunkard brother) மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு புதிய வேதாகமம் இன்றிரவு என்னிடம் இருக்கிறது. இது ஒருவகையில் பெரிதாக இருக்கிறது. இதிலிருந்து எப்பொழுதாவது நான் பிரசங்கம் பண்ணுவது இதுவே முதல்முறையாகும். இது எனக்கு சற்றே கடினமாக இருக்கிறது. 12. இப்பொழுது, ஒரு நோக்கத்திற்காகவே நாம் சந்தித்திருக்கிறோம் என்பதை நான் அறிவேன். அதாவது, கிறிஸ்துவினிமித்தமாக இன்னும் ஒருபடி மேலே போகவும், நம்முடைய ஆத்துமாக்களில் சமாதானத்தைக் கண்டடையவும், நம்மை மேலான மனிதர்களாகவும், ஸ்திரீகளாகவும், கர்த்தருடைய மேலான ஊழியக்காரர்களாகவும் ஆக்கும் ஒரே நோக்கத்திற்காகவே. வேறெந்த எண்ணத்திற்காகவும் நாம் வந்திருந்தால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட மாட்டோம். நாம் உதவிக்காகவே வந்திருக்கிறோம். தேவனைக் காணும்படியாகவே நாம் வந்திருக்கிறோம். மேலும் இது திருத்தப்படுதலின் வீடாக உள்ளது, இங்கு தேவன் தமது ஆசீர்வாதங்களை நமக்கு அருளி, தப்பிதங்களிலிருந்து நம்மைத் திருத்துகிறார். இப்பொழுது வார்த்தையை நாம் திறப்பதற்கு சற்று முன்பாக, அல்லது-அல்லது நமக்கு ஒத்தாசை புரியும்படியாக பரிசுத்த ஆவியானவரை நாம் வேண்டிக்கொள்வதற்கு சற்றுமுன்பாக நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். 13. ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, நாங்கள் எங்களைத் தானே சுவிசேஷத்திற்கு செவிகொடுப்பவர்களாகவும், வார்த்தையைக் குறித்துப் பேசுபவர்களாகவும், இப்பொழுது உம்முடைய தெய்வீக பிரசன்னத்திற்குள் சமர்ப்பிக்கிறோம்; பேசுகிற உதடுகளையும், கேட்கிற காதுகளையும், ஏற்றுக்கொள்ளும் இருதயங்களையும் விருத்தசேதனம் பண்ணும். இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய நித்திய கிருபையைக் குறித்த சத்தியங்களை எங்களுக்கு பகிர்ந்து கொடுத்து, எங்கள் ஒவ்வொருவருக்கும் கற்றுத்தருவாராக; நாங்கள் இன்றிரவில், இந்தக் கட்டிடத்தை விட்டுச் செல்லும் போது. எம்மாவூரிலிருந்து வந்து கொண்டிருந்தவர்கள், “பாதை நெடுகிலும் அவர் நம்மிடம் பேசினதினிமித்தமாக நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?" என்று கூறினது) போன்று நாங்கள் கூறுவோமாக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 14. பரிசுத்த மத்தேயுவின் சுவிசேஷ புஸ்தகம், 26ம் அதிகாரம், 27 மற்றும் 28வது வசனங்களை, ஒரு உரைச் செய்திக்காக (text) வாசிக்க விரும்புகிறேன். மத்தேயு 26:27-29) பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய - என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 15. இப்பொழுது, இராப்போஜனம் என்பதன் பேரில் நாம் பேசப்போகிறோம். இது மூலமுதலான இராப்போஜன இரவாக (original communion night) உள்ளது. | 16. இராப்போஜனமானது முதலாவது ஆசரிக்கப்பட்டது எகிப்தில் தான் way down, அதுதான் முதலாவது இராப்போஜனமாகும், அது கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருந்த, அடிக்கப்பட்ட பஸ்கா ஆட்டுக்குட்டியாக இருந்தது. அங்கே அவர்கள் எவ்வாறு இராப்போஜனத்தை ஆசரித்தார்கள் என்றும், எவ்வாறு நாற்பது வருடங்களாக வனாந்தரத்தினூடாக நடந்து சென்றார்கள் என்றும், அதைக் குறித்த அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழைய கதை நம்மில் அநேகருக்கு நன்றாகத் தெரிந்தது தான். அவர்கள் வெளியே வந்தபோது, அங்கே அவர்கள் மத்தியில் பலவீனம் ஒருவனும் இருந்ததில்லை. மேலும் அங்கே அவர்களுடைய வஸ்திரங்கள் கூட உடுத்துக் கிழிந்ததாக (கந்தல் கந்தலாக, பழம்பஞ்சடையாக - threadbare) கூட ஆகவில்லை , நாற்பது வருடங்களாக தேவன் அவர்களைப் பாதுகாத்து வந்திருந்தார். இன்றிரவு நமக்கும், அது என்னவொரு ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையாக உள்ளது! அது முன்னடையாளமாக (type) இருக்குமானால், கிறிஸ்து அதற்கு நேர் எதிர் முன்னடையாளமாக (antitype) இருக்கிறார். தேவன் எப்படியாக அந்தப் பிள்ளைகளை விடுவித்து (கொண்டு வந்தார்)! 17. மேலும் இராப்போஜனம் ஆசரிப்பதில், அது ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக உள்ளே இருந்தவர்களே இராப்போஜனத்தை ஆசரித்தார்கள். சிந்தப்பட்ட இரத்தத்திற்கு வெளியிலுள்ள யாருமே இராப்போஜனம் எடுக்கக் கூடாதிருந்தது. முதலில் ஆட்டுக்குட்டியின் இரத்தம் சிந்தப்பட்டது. அதன்பிறகு வாசலின் மேற்சட்டத்திலும், கதவுநிலைக்கால்களின் மேலும் பூசப்பட்டது.... வாசல் மேற்சட்டம் (lintel) என்பது குறுக்காக இருக்கும் மரக்கட்டையாகும். மேலும் கதவுநிலைக்கால்கள் மேலும் அது பூசப்பட்டது. அதன்பிறகு அந்த ஆட்டுக்குட்டியானது நெருப்பினால் சுடப்பட்டு, கசப்பான கீரைகளோடு புசிக்கப்பட்டு, தங்களை கச்சை கட்டிக்கொண்டும் இருந்தார்கள். இரத்தமானது சிந்தப்பட்ட பிறகு, அந்த சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழாக கடந்து போயிருந்தார்கள், அவர்கள் கச்சை கட்டிக்கொண்டு அணிவகுத்து செல்லும்படி ஆயத்தமாயிருந்தார்கள். 18. இப்பொழுது, இன்றிரவு இராப்போஜனம் எடுக்கிற ஜனங்களைக் குறித்த மிகவும் அழகானதொரு முன்னடையாளமாக அது உள்ளது. இவர்கள் இனிமேல் உலகத்தின் காரியங்களோடு தொடர்பு கொள்ளவோ, இணைந்து கொள்ளவோ கூடாது. இவர்கள் முதலில் நிச்சயமாகவே இரத்தத்தின் கீழாக வந்து, அவிசுவாசமாகிய, சகல பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டே ஆக வேண்டும்; அதன்பிறகு சுவிசேஷத்தின் ஆயத்தத்தோடு பாதரட்சைகளைக் கட்டிக்கொண்டும், முழு சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொண்டு அழைப்புக்காக (summons) எந்நேரமும் ஆயத்தமாக இருக்க வேண்டும். 19. மரண தூதனால் அந்த இரத்தத்தின் கீழே போக முடியாது என்பதற்கான அடையாளமாக அது இருந்தது. மரண தூதன் எழும்பி அந்த இரத்தத்தின் மேலாக போக வேண்டியதாயிற்று. அங்கே தான் அந்தக் கவிஞன் ஊக்குவித்தலைப் பெற்று, "நான் இரத்தத்தைக் காணும்போது, உங்களைக் கடந்து செல்வேன்" என்று கூறினான். அவர்கள் புறப்பட்டு போவதற்கு முன்பாக எடுத்த இராப்போஜனத்தையும் நெருப்பிலே சுடப்பட்ட ஆட்டுக்குட்டியையும், கீரைகளையும் தாங்கள் ஏற்றுக்கொண்ட நேரமானது. விடுதலையின் மணிவேளையை நெருங்கும் நேரமாக இருந்தது. 20. இப்பொழுது, நாம் பேச வேண்டியிருக்கும் காரியத்தின் நேரெதிர் முன்னடையாளத்தைப் (antitype) பார்க்கும்போது, அது அநேக வருஷங்களுக்கு முன்பு, இதே இரவில் (tonight), இராப்போஜனமாகிய கர்த்தருடைய இராவுணவாக நாம் அறிந்துள்ளதை இயேசு எடுத்துக்கொண்டதாக அது இருக்கிறது. அவர் தமது சீஷர்களிடம் பேசப்போவதாக இருந்த, அதைக் குறித்த ஏதோவொரு காரியம் அங்கேயிருந்தது. அவர் போவதற்கு சற்று முன்பாக, அவர் அதை அவர்களிடம் பேச விரும்பினார். மேலும் அது ஒரு-- ஆயத்தம் பண்ணப்பட்டிருந்த ஒரு அறை அவர்களுக்கிருந்தது. அது ஐக்கியம் கொள்வதற்கான ஒரு நேரமாக இருந்தது. மேலும் இராப்போஜனமானது ஒரு ஐக்கியத்தை அர்த்தப் படுத்துகிறதாயிருக்கிறது. 21. அனேக சபைகள் "ஒரு வரையறைக்கு உட்பட்ட" இராப்போஜனத்தை உடையவர்களாயிருக்கிறார்கள். அதாவது அவர்கள் தங்களுடைய இராப்போஜனததைக கொணடிருககும போது, வெறுமனே தங்களுடைய சொந்த சபைக்கே அதைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு நாமோ ஒரு ஸ்தாபனமாக இல்லை. நமக்கோ எல்லாருக்குமான ஒரு வெளிப்படையான இராப்போஜனமே உள்ளது. கோட்பாடு (creed). நிறம், அல்லது அவன் என்னவாக இருந்தாலும், ஒவ்வொரு விசுவாசியும், ஒவ்வொரு விசுவாசியோடுங் கூட கர்த்தருடைய பந்திக்கும். தேவனுடைய நன்மையான காரியங்களைச் சுற்றிலும் ஐக்கியம் கொள்ளும்படியான ஒரு உரிமை அவனுக்கு இருக்கிறது. எல்லாருமே கிறிஸ்துவாகிய ஒரே ஆசீர்வாதத்தையே பானம் பண்ணியிருக்கிறார்கள். 22. இப்பொழுது, இந்த மகத்தான வேளையானது நம்முடைய கர்த்தரை அணுகிவந்திருந்தது. அவருடைய பூமிக்குரிய பிரயாணம் எல்லாவற்றிலுமே மிகக்கடுமையான கடும் சோதனையான நேரங்களில் ஒன்று சமீபமாயிருந்தது. சோதனையின் நேரம்! நாம் சோதனைகளினூடாக போவது போன்று. அப்படியே இயேசுவும் சோதனைகளினூடாகப் போக வேண்டியிருந்தது. "தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு புத்திரனும் முதலில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டு, கண்டித்து (திருத்தப்படுகிறான்" என்று வேதாகமம் கூறுகிறது. 23. இப்பொழுது, அனேக ஜனங்களுக்கு சோதனை நேரம் வரும்போது, அது ஒரு பலப்பரீட்சையாக இருக்கிறது. அது நிரூபித்துக் காட்டும் ஒரு ஸ்தலத்தை (proving place) உடைய ஒரு நேரமாயிருக்கிறது. "நம்மால் சோதனையை (எதிர்த்து நின்று) தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், நாம் முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளாக ஆகிறோம்" என்று வேதாகமம் கூறியுள்ளது, தேவனை நம்முடைய பிதாவென்று மனமார ஒத்துக்கொண்டும், அப்படியானால் அவர் நம்முடைய பிதாவல்ல. நாம் சரியாக, நம்முடைய முழு இருதயத்தோடும், கர்த்தராகிய இயேசுவை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்போமானால், இந்த உலகத்திலோ, அல்லது இருண்ட நித்தியம் எல்லாவற்றிலுமோ கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு எப்பொழுதாவது நம்மைப் பிரிக்கக் கூடியதான - அதைச் செய்யக்கூடியதான எதுவுமே அங்கே கிடையாது. 24. ஜனங்கள் கிறிஸ்தவர்கள் என்று உரிமை கொண்டாடிவிட்டு, முதலாவது சிறிய சோதனை வரும்போது வழியோரத்திலேயே விழுந்துவிடுகிறார்கள் என்பது. நான் இந்த நாளிலும், எப்போதுமே அதைக்குறித்து திகைப்படைந்து விடுகிறேன். அது கிறிஸ்துவைக் குறித்த ஒரு அறிவுத்திறனுடைய எண்ணமாக இருந்தது என்பதைத் தான் அது காண்பிக்கப் போகிறது. அந்தக் காரணத்தினால் தான் இன்று மிக அனேகமானவர்கள் நிலைத்திருப்பதில்லை, அதற்குக் காரணம் அது ஒரு அறிவுத்திறனுடைய எண்ணமாக இருப்பது தான், அறிவுத்திறனோடு, அதை உங்களால் விசுவாசிக்க முடிகிறது, ஆனால் அது அதைக்காட்டிலும் இன்னும் ஒருபடி மேலே போகிறதே. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது கிறிஸ்துவாகிய நபரை ஏற்றுக்கொள்வதாகும். 25. நம்மில் அநேகர்கோட்பாட்டை கற்றுக்கொள்வதின் பேரில் கிறிஸ்தவ மார்க்கத்தை ஏற்றுக்கொள்கிறோம். மற்றவர்களோ ஞானஸ்நானத்தைக் குறித்த உபதேசங்களின் பேரில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களோ சத்தமிடுதல், அல்லது ஆவியில் நடனமாடுதல், அல்லது அந்நியபாஷைகளில் பேசுதல், அல்லது காண்பிக்கும்படியாக ஏதோவொரு அற்புதமான வரத்தைக் கொண்டிருப்பது போன்ற அப்படிப்பட்டவைகளை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் உணர்ச்சிவசப்படுதலின் நிமித்தமாகத் தாங்களும் கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். அந்தக் காரியங்கள் எல்லாமே தங்கள் ஸ்தானத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது, கிறிஸ்துவாகிய நபரை ஏற்றுக்கொள்வதாகும். அதன்பிறகு இந்த மற்றக் காரியங்கள் அப்படியே தானாகவே ஸ்தானத்தில் பொருந்திவிடும். 26. இப்பொழுது, தேவன் தம்முடைய சொந்த குமாரனையே கொடூரமான சோதனையிலிருந்து காப்பாற்றாமல் இருந்திருப்பாரானால், அவர் உங்களையோ அல்லது என்னையோ அந்தக் கொடூரமான சோதனையிலிருந்து காப்பாற்றவே மாட்டார். 27. இயேசு தாம் எப்பொழுதும் கொண்டிருந்ததிலேயே மிகப்பெரிய சோதனையை இங்கே நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டிருந்தார், அவருக்கு சற்று முன்பாக கெத்சமனே வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஒரேமுறையும் கடைசியும், எல்லாவற்றிற்கும் போதுமானதுமான சோதனையானது, முழு உலகத்தின் பாரங்களும் ஸ்தோத்தரிக்கப்பட்ட அவருடைய தோளின்மேல் வைக்கப்பட்ட போது, அந்த சோதனை நிச்சயமாக வந்தே ஆக வேண்டியிருந்தது (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) அவரைத் தவிர அதை எப்பொழுதாவது தாங்கிக்கொள்ளக்கூடியவர் பரலோகங்கள் முழுவதிலுமோ அல்லது பூமியிலோ யாருமே அங்கே இல்லாதிருந்தார்கள். கடந்தகால பாவங்களும், நிகழ்கால பாவங்களும், எதிர்கால பாவங்களுமாகிய, பாவங்கள் எல்லாமே இந்தத் தீர்மானத்தின் பேரில் வைக்கப்பட்டதை அறியும் போது. அவர் தேவனிடம், "என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று கூறியபோது, அது கிறிஸ்து எப்பொழுதும் பெற்ற வெற்றிகளிலேயே அல்லது அவருடைய மகத்தான மேசியாத்துவத்தை நிரூபித்துக் காண்பித்த மிகமிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக இருந்தது. அவர் எப்பொழுதும் பெற்ற வெற்றிகளிலேயே மிகப்பெரிய வெற்றியாக அது இருந்தது. நரகத்திலுள்ள பிசாசுகள் எல்லாம் அவரைச் சோதித்து, அவரைச் சோதிக்க வைக்கும்படியாக சுற்றிலும் (சூழ்ந்து) இருந்தன. 28. நாம் தேவனோடு சரியாகி, நமது இருதயங்கள் தூய்மையாகி, பரிசுத்த ஆவியானது நம்முடைய இருதயத்தில் அதனுடைய இடத்தை எடுத்துக்கொள்ளும்போது, அதுவே சோதனையைக் கொண்டிருப்பதற்குள்ள மிகவும் மகிமையான காரியமாக அப்போது இருக்கிறது. "நமக்கு வரும் சோதனைகளும் உபத்திரவங்களும் இவ்வுலகத்திலுள்ள வெள்ளியையும் பொன்னையும் பார்க்கிலும் நமக்கு அதிக விலையேறப்பெற்றது" என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது. எனவே, நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். 29. என் சொந்த சுயத்தை ஏதோவொரு அனுபவத்திற்குள்ளாக கொண்டுவர நான் விரும்புவதில்லை. ஆனால் என்னுடைய ஞாபகத்தில் வருகிறபடி, என்னுடைய கிறிஸ்தவ அனுபவத்தில் நான் கொண்டிருந்ததிலேயே பெரியதும் கடைசியானதுமான பரீட்சையை நான் நினைவுகூருகிறேன், அது அதோ அங்கே வெளியே ஸ்பிரிங் ஹில்-லில் உள்ள மருத்துவமனையில் தான். என்னுடைய மனைவி இங்கே கீழே சவக்கிடங்கில் சடலமாக கிடத்தப்பட்டிருந்தபோது, அவள் தேவனோடு இருக்கும்படியாக இந்த ஜீவனைவிட்டு அப்பொழுது தான் வெளியே போயிருந்தாள். அப்பொழுது பரீட்சைகளும் சோதனைகளும் தொடங்கிவிட்டன! வெறுமனே யாரோ ஒருவர், "பில்லி, நீ ஒரு பரிசுத்த உருளையன்" என்று கூறுவதல்ல. அல்லது அது பெரிய அளவில் பரீட்சையே அல்ல. இந்த மற்ற சிறிய சோதனைகளும், அதைப் போன்றவைகளும், நான் கூட வேலை செய்கிற மனிதர்களிடமிருந்து வரும் குற்றச்சாட்டுகளும், அது பெரிய அளவிலான சோதனையே அல்ல. ஆனால் என்னுடைய பெரிய சோதனையின் வேளையானது எப்போது வந்தது என்றால், டாக்டர் அடேயர் அவர்கள் நேற்று மருத்துவமனையில், நாங்கள் ஒருமித்து உட்கார்ந்து கொண்டிருந்த போது, நான் இதை அவரிடம் திரும்பவும் கூறிக் கொண்டிருந்தேன்), அவர் கீழேயிருந்த கூடத்திற்கு (hall) என்னைச் சந்திக்க இறங்கிவந்து, என்னைக் கரத்தால் பற்றிக்கொண்டு, “பில்லி, உம்முடைய குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது, அது பிழைக்க வாய்ப்பேயில்லை. அது காசநோயினால் தண்டுவடத்தின் சவ்வில் ஏற்பட்டுள்ள வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். அதற்கு நான், “டாக்டர், நிச்சயமாக இருக்காது" என்றேன். அதனுடைய தாயோ ஒரு சவமாகக் கிடத்தப்பட்டிருந்தாள். 30. நான் உள்ளே சென்றேன். அவர், "அப்படியே என்னோடு கூட வாரும்" என்றார். நாங்கள் பரிசோதனைக் கூடத்திற்குப் போனோம். அங்கே அவர் ஒரு சிறிய கண்ணாடிக் குழாயை எடுத்து, அதைக் குலுக்கினார். அதோ அதற்குள்ளே ஒரு கீற்று (streak) இருப்பதாகத் தோன்றினது. அவர், "அதுதான் தண்டுவடத்தின் சவ்வில் ஏற்படும் வீக்கத்தை உண்டுபண்ணும் நோய்க்கிருமி (meningitis germ), இது குழந்தைக்குள் இருக்கிறது. திடீர்வலித்துடிப்பை விலக்கும்படி நாங்கள் இதை முதுகுத்தண்டிலிருந்து பிரித்தெடுத்தோம்" என்றார். மேலும் அவர், "இதனுள் இருப்பது. இது காசநோயினால் தண்டுவடத்தின் சவ்வில் ஏற்பட்டுள்ள வீக்கமாகும் (tubercular meningitis). அது தன்னுடைய தாயிடமிருந்து பால்குடித்தபோது பெற்றுக்கொண்டது). அந்தக் குழந்தை பிழைக்குமானால், அது முடமாகி, அல்லல்பட்டுக்கொண்டு தான் இருக்கும். ஆனால், தேவனுடைய இரக்கங்களினால், குழந்தையானது அதனுடைய தாயோடு கூட இருக்கும்படி போய்க்கொண்டிருக்கிறது" என்றார். நான், "டாக்டர், நான் குழந்தையைக் காண விரும்புகிறேன்" என்றேன். அவர், “பில்லி, உமது மகன் பில்லிபாலின் நிமித்தமாக, உம்மால் அதைக் காண முடியாது" என்றார். “நீர் அந்த நோய்க்கிருமியை அவனிடம் திரும்பக் கொண்டு சென்று விடுவீர்" என்றார். 31. எவ்வாறு தைரியப்படுத்துவது என்று அவருக்குத் தெரிந்த மிகச்சிறந்த விதத்தில் என்னைத் தைரியப்படுத்த முயற்சித்த பிறகு, அவர் அந்தக் கட்டிடத்தை விட்டுப் போனபோது, நான் சுற்றிலும் நழுவி கட்டிடத்தின் அடித்தளத்திற்கு இறங்கிச் சென்றேன். நான் அங்கு போனபோது, அந்நேரத்தில் மருத்துவமனையானது. இப்பொழுது இருப்பதுபோல், நிறுவப்பட்டிருக்கவில்லை. ஜன்னல் மேலே உயர்த்தப்பட்டு, திரை விலகியிருந்தது. சிறு குழந்தையின் கண்களுக்குள் சில ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. நான் ஈக்களைத் துரத்திவிட்டு, கீழே நோக்கி அவளுடைய சிறிய சரீரம் முழுவதும் இழுக்கப்பட்டிருந்ததையும், அவளுடைய சிறிய கால்களானது முன்னும் பின்னும் அசைவதையும் பார்த்து, அவளிடம், "ஷாரி (Sharry), தேனே, அப்பாவைத் தெரிகிறதா?" என்று கேட்டேன். 32. அவள் தன்னுடைய சிறிய கரத்தை என்னை நோக்கி அசைத்துக்காட்ட முயற்சிப்பது போன்று காணப்பட்டது; அவளுக்கு ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பது மாதங்களே வயதாகியிருந்தது. நான் அவளை நோக்கிப்பார்த்தேன். தன்னுடைய சிறிய நீலநிறமுடைய குழந்தைகண்களில் ஒன்று குறுக்கிடும் அளவுக்கு, அவள் மிகக்கொடிதாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள், அவள் ஒரு சிறு அப்பாவிக் குழந்தை. மிக அதிக வேதனை அனுபவித்துக் கொண்டிருந்தாள்! ஓ. அவள் வேதனை அனுபவிப்பதற்குப் பதிலாக, எந்தநேரமும் நானே அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். 33. கதவுகள் சாத்தப்பட்டிருக்க, நான் முழங்கால்படியிட்டு, "ஓ தேவனே, பிதாவே, அதோ என் மனைவி கிடக்கிறாள், இந்தக் குழந்தையின் தாய் அதோ அங்கே மரித்தோரை அடக்கம் செய்யும் காரியங்களைச் செய்பவரின் சவக்கிடங்கில் (undertaker's morgue) கிடக்கிறாள். அதோ பில்லிபால் வியாதியாக படுக்கையில் இருக்கிறான். இங்கேயோ என் குழந்தை மரித்துக் கொண்டிருக்கிறது. கர்த்தாவே, நிச்சயமாகவே நீர் அவளை எடுத்துக்கொள்ள மாட்டீர். நான் அவளை நேசிக்கிறேன். அவள் தன்னுடைய தாய் போலவே இருக்கிறாள். நான் அவளை வளர்க்க விரும்புகிறேன். ஓ தேவனே, தயவுகூர்ந்து என் குழந்தையின் ஜீவனைக் காப்பாற்ற மாட்டீரா?" என்றேன். 34. அப்போது நான் மேலே நோக்கிப் பார்க்கையில்.... நீங்கள் எல்லாரும் அறிந்துள்ளபடி, நான் எப்போதுமே தரிசனங்களின் கீழாக இருந்து வருகிறேன். ஒரு கறுத்த மேற்போர்வை (black sheet) விரிக்கப்படத் தொடங்கி, இறங்கி வருவதுபோல் தோன்றியது. மேலும் தேவன் என்னுடைய ஜெபத்தை எடுத்து, என் முகத்திலேயே திரும்ப எறிவதாக இருந்தால், (எப்படி இருக்குமோ அது போல் காணப்பட்டது. மேலும் நான், “தேவனே, நான் என்ன செய்தேன்? இந்தத் தண்டனையை நான் அனுபவிக்கும்படி, உமது பிரமாணங்களை மீறிவிட்டேனா? அப்படியானால், நீர் அதை வெளிப்படுத்தும், நான் மனந்திரும்புகிறேன். நான் எதையும் செய்வேன், ஆனால் எனது குழந்தையை எடுத்துக்கொள்ளாதேயும்" என்றேன். எப்படியும், அவள் போய்க் கொண்டிருந்தாள் என்பதைக் கண்டு, எழுந்தேன். 35. அதன்பிறகு சோதனைக்காரன் என்னிடம் வந்தான். என்னுடைய முழு ஜீவியத்திலும் கடுஞ்சோதனையான நேரம் என்று நான் அழைக்கக்கூடிய ஒரு நேரம் அங்கேதான் இருந்தது. அதுதான் என்னுடைய கெத்சமனே. படுக்கையைப் பற்றிக்கொண்டிருப்பதே கஷ்டமாக (barely) இருந்தபோது, பிசாசு, "அங்கேதான் காரியம். அவரைச் சேவிக்க முயன்றதற்கு அதுதான் பலன். அவர் அந்த 22 வயது வாலிப தாயை எடுத்துக்கொண்டு, அவளை அதோ அங்கே சவக்கிடங்கில் சவமாகக் கிடத்துவார் என்றா நினைக்கிறாய்? உன்னுடைய சொந்த மாம்சமும் இரத்தமுமாகிய இந்த விலையேறப்பெற்ற குழந்தையை எடுத்துக்கொண்டு, உன் ஜெபத்தை உன் முகத்திலேயே படாரென்று மூடிக்கொண்டாரா? அதன்பிறகும் நீ அவரைச் சேவிப்பாய் என்றா சொல்ல வருகிறாய்?" என்றான். 36. நான் எண்ணங்களுக்கிடையே நின்று கொண்டிருந்தேன். அது தீர்மானம் செய்யப்பட வேண்டியதாயிருந்தது. அப்போது நான் அவளுடைய சிறிய தலையின் மேல் என் கரத்தை வைத்து, “கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்!" என்றேன். அப்போது வருத்தம் நீங்கியதை உணர்ந்தேன். 37. நான், "ஷாரி (Sharry), தேனே, நீ இப்பொழுது இருக்கிற இடத்தில் அப்பாவால் வர முடியாது, ஆனால் ஏதாவது ஒரு நாளில் அப்பாவால் அங்கு வரமுடியும். நான் தாயின் கரத்தின் மேல் உன்னைக் கிடத்தி, உன்னை அடக்கம் பண்ணுவேன், ஆனால் நான் ஏதோவொரு நாளில் உன்னை மறுபடியும் காண்பேன்" என்றேன். 38. திரு. ஐஸ்லர் அவர்கள், அவர் அநேகமாக இப்பொழுது இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம் (கூட்டத்தினர் ஊடாக என்னால் காண இயலவில்லை) அவர் இங்கே இந்தியானாவில் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினராய் (ex-state senator) இருக்கிறார். நான் மேலேநெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தேன், திரு. ஐஸ்லர் அவர்களே, உமக்கு அது நன்றாக நினைவிருக்க முடியும் என்று நினைக்கிறேன். 39. நான் என் கரங்களை எனக்குப் பின்னால் வைத்தவாறு, மேலே கல்லறைத் தோட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். அது சரியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குப் பிற்பாடு, அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நான் வழக்கமாக சாயங்கால நேரத்தில் அங்கு மேலே போவதுண்டு. ஒரு வயதான புறா அந்த மரத்தின் மேல் உட்கார்ந்து என்னைப் பார்த்து பாடும். அந்த தேவதாரு மரங்களின் தென்றல்காற்றுகளினூடாக அது கீழே வருவதுபோல் தோன்றினது. அந்தப் பாடலானது அதனூடாக இவ்விதமாய் மெல்ல காதோடு காதாக பேசி, சொல்வது போன்று தோன்றினது: நதிக்கு அப்பால் ஓர் தேசமுண்டு, அது எப்போதும் இனிமையானது என்கிறோம், விசுவாசமாகிய பிரமாணத்தின் மூலம் மாத்திரமே அதன் கரையை நாம் சென்றடைகிறோம்; அங்கேயுள்ள அழிவில்லாதவரோடு நாம் வாழ்ந்திட, நாம் ஒருவர் ஒருவராய் அந்நுழைவாயிலில் போய்ச் சேர்வோம், என்றாவது ஒருநாள் உனக்காகவும் எனக்காகவும் அவர்கள் அந்தப் பொன் மணியோசையை தொனிப்பர். 40. திரு. ஐஸ்லர் அவர்கள், தம்முடைய பழைய பார வண்டியை (truck) ஓட்டி வந்து, வெளியே குதித்து. தம்முடைய கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டு, அவர், “பில்லி, நீ தெரு மூலையில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருப்பாய் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், நீ கூடாரத்தில் நிற்பதையும் பார்த்திருக்கிறேன்; நீ கீர்த்தனைப்பாடல்கள் பாடுவதையும் கேட்டிருக்கிறேன். நீ எவ்வளவாய் கிறிஸ்துவை உயர்த்தி, அவர் எப்படிப்பட்டவர்! என்று சொன்னாய். இப்பொழுதோ அவர் உமது தகப்பனாரையும், உம் சகோதரனையும், உமது மனைவியையும், உமது குழந்தையையும் எடுத்துக்கொண்டாரே. இப்பொழுது அவர் உமக்கு எவ்வளவு அருமையானவராக இருக்கிறார்?" என்று கேட்டார். 41. அதற்கு நான், "திரு. ஐஸ்லர் அவர்களே, அவர் என்னை இழக்கப்பட்டவர்கள் இருக்கும் பிரதேசத்திற்கு அனுப்பினாலும், நான் அப்பொழுதும் அவரை நேசித்திருப்பேன்! ஒருநாள், அதோ அங்கே கீழேயிருக்கும் ஒரு பழைய நிலக்கரி கொட்டகையில் இருக்கும்போது, இங்கே கீழே என் இருதயத்தில், அதை அகற்றிப்போடக்கூடிய எதுவுமே கிடையாது என்பதாக உள்ள ஏதோவொன்று சம்பவித்துவிட்டது. அது நான் செய்த எதுவுமல்ல. அந்தப் பெரிய தீர்மானத்தின் வேளையில் என்னைப் பற்றிப்பிடித்துக்கொண்ட தேவனுடைய நித்திய கிருபையாகத்தான் அது இருந்தது!" என்றேன். 42. நம்முடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தர், கெத்சமனேயில், அங்கே போய்க் கொண்டிருந்த போது, அவர்.... எருசலேமில் புறக்கணிக்கப்பட்டு, அந்த ஆலோசனை சங்கமானது (council) அவருடைய ஜீவனை எடுக்கப்போவதாக இருந்தது, எப்பொழுதாவது இருந்த அல்லது பூமியின் மேல் இருக்கும் ஒவ்வொரு ஆத்துமாவின் நித்தியமாகப் போய்ச்சேருமிடமானது அவருடைய தீர்மானத்தின் பேரில் சார்ந்திருந்தபோது, அப்போது தான் அந்நேரமாயிருந்தது). 43. ஓ, அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, என்னுடையது எவ்வளவு சிறிய காரியமாக இருந்தது! அதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, உங்களுடையதும் எவ்வளவு சிறியதாக இருந்தது! இந்தச் சிறு காரியங்களையே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது என்பது அவ்வளவு வருத்தத்திற்குரிய விஷயம் அன்றோ ! 44. ஆனால் அந்த மகா இக்கட்டான மணிவேளையில், அவர் உபத்திரவப்பட்டு, எல்லா காரியங்களையும் அறிந்து, தண்ணீரும் இரத்தமும் அவருடைய சரீரத்தில் வேறுபிரிந்து, வியர்வை போன்ற பெரிய இரத்தத்துளிகள் அவருடைய புருவத்திலிருந்து துளித்துளிகளாக விழும் அளவுக்கு அது இருந்தது. அவர் சிலுவையில் மரித்ததைக் காட்டிலும் கெத்சமனேயில் அதிகமான மரணத்தில் மரித்துவிட்டார். 45. அந்த மகத்தான யுத்தமானது துவங்குவதற்கு சற்று முன்பாக, அவர் இந்த நிகழ்வில் இருந்து, அவர் இராப்போஜனம் எடுத்தார். அவர் தமது சீஷர்களோடு காரியங்களைப் பேசும்படியாக, அவர் அவர்களை ஒன்றாகக் கூடிவரச்செய்தார். 45. ஜீவியத்தின் மகத்தான யுத்தமானது துவங்குவதற்கு சற்று முன்பாக, அவர் உங்களுக்கும் எனக்கும் அந்தவிதமாகத்தான் செய்கிறார். நமக்குள்ளே யுத்தம் செய்யும்படியாக, சரிக்கும் தவறுக்குமான அந்த மகத்தான யுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, தேவன் நம்மையும் ஒரு கெத்சமெனேக்குக் கொண்டு வருகிறார். அவர் நம்மை இராப்போஜனத்திற்குக் கொண்டு வந்து, அவை எல்லாவற்றையும் நம்மோடு பேசுகிறார். 47. வெளியே அரிசோனாவிலுள்ள போனிக்ஸில், அங்கே வழக்கமாக எனக்காகப் பாடும்படியாக, மூவர் சேர்ந்து பாடும் பாடல் வழக்கமாகவே உண்டு, அது இவ்வாறு பாடப்படும்: "நான் அதை இயேசுவோடு பேச விரும்புகிறேன். 'இயேசுவே, என்னுடைய பாதையானது மிகவும் குறுகினதாக ஆனபோது, நீர் என்னை நேசித்தீர். அதிக தூரமாக என்னால் பார்க்க முடியாமல், அது மிகவும் மங்கலாக இருந்தபோது, அது தெளிவில்லாமல் இருந்தபோது, நீர் என்னை நேசித்தீர்' என்று கூற விரும்புகிறேன்." அந்தச் சிறு பாடலானது தொடர்ந்து இவ்வாறு பாடப்படும். "நான் அதைப் பேச விரும்புகிறேன்" என்று. 48. ஜீவியத்தின் நீண்ட பிரயாணத்தில் நின்று, இயேசுவோடு அதைப் பேசி, ஒரு ஐக்கியத்தில் அவரோடு கூட கூடி கலந்து பேசுவது (communion) என்பது இந்த பூமியிலுள்ள மனிதர்களுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல காரியமாக இருக்கிறது. அதன்பிறகு பரீட்சையும் சோதனையுமாகிய யுத்தமானது துவங்குகிறது. தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு புத்திரனும் நிச்சயமாக சோதிக்கப்பட்டே ஆகவேண்டும். 49. இப்பொழுது, இராப்போஜனம் என்பது... அல்ல.... தவறு... அது அவ்வாறு இருக்கும் என்று அநேக ஜனங்கள் நினைப்பது போன்று, அந்த நோக்கத்திற்காக அது கொடுக்கப்பட்டதல்ல. இராப்போஜனம் என்பது இரட்சிப்போடு சம்பந்தப்பட்ட "மரித்துக்கொண்டிருக்கும் நபருக்கு கத்தோலிக்க சாமியார் செய்யும் இறுதிச்சடங்குகள் (the last rites)" என்னப்படுவதாக ஒரு குறிப்பிட்ட சபை ஸ்தாபனம் மூலமாக போதிக்கப்படுகிறது. இராப்போஜனமானது இரட்சிப்போடு சம்பந்தப்பட்டது அல்ல. இராப்போஜனம் உங்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்காது. அதை நீங்கள் உங்கள் மரணத்தில் எடுத்தாலும், அல்லது-அல்லது என்னவாயிருந்தாலும், அதற்கும் உங்கள் இரட்சிப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. 50. அது ஞாபகார்த்தமாக ஆசரிக்கப்படுவதாக (commemoration) இருக்கிறது. இயேசு, சுவிசேஷத்தில், "என்னை நினைவுகூரும்படியாக இதைச் செய்யுங்கள்" என்றார். அது இரட்சிப்பை நம்பியிருக்கிற ஒன்றோ அல்லது இரட்சிப்பை நோக்கிச் சுட்டிக்காட்டுவதோ கிடையாது, ஆனால் பரிசுத்த ஆவியினாலே, உங்களுக்குள் செய்யப்பட்டிருக்கிற ஒரு செய்துமுடிக்கப்பட்ட கிரியையின் ஞாபகார்த்தமாக ஆசரிக்கப்படுவதில் (commemoration) தான் அது இருக்கிறது. 51. இப்பொழுது, இராப்போஜனம் எடுக்கிற அநேகர் இரட்சிக்கப்பட்டவர்களல்ல. பஸ்கா ஆட்டுக்குட்டியைப் புசித்த அநேகர் வனாந்தரத்திலேயே அழிந்து போனார்கள். இன்று இராப்போஜனம் எடுக்கிற அநேகரும் ஒருக்காலும் தேவனைக் காண மாட்டார்கள். 52. ஆனால் உங்களால் அவருடைய இரட்சிப்புக்கு பங்காளிகளாக முடியாது, அவரைக் காணவும் முடியாது. ஏனென்றால் இரட்சிப்பு என்பது தேவனுடைய ஒரு வெகுமதியாக (gift) இருக்கிறது. இராப்போஜனம் என்பது அந்த இரட்சிப்புக்காக உண்டாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் போதுமான அம்மகத்தான பலியின் ஞாபகார்த்தமாக ஆசரிக்கப்படுகிறது. நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறோம் என்பதை ஜனங்கள் காணும்படி செய்வதற்கே இராப்போஜனம் உள்ளது. அது செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையைத் தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறதாயிருக்கிறது. 53. ஒருகாலத்தில், பழைய ஏற்பாட்டில், வெள்ளாடு, செம்மறியாடு, கிடாரியைக் கொண்டு செலுத்தப்பட்ட பலியில், இரட்சிப்பானது முழுமையடையாமல் இருந்தது. ஏனென்றால் பழைய ஏற்பாட்டு இரத்தமானது பாவத்திற்காக பிராயச்சித்தம் பண்ண முடியவில்லை. அதனால் பாவத்தை மூட மாத்திரமே முடிந்தது. அது நிறைவுபெறும் ஒரு நேரத்தை நோக்கியே அது சுட்டிக்காட்டினது. நாளை இரவில், நாம் சரியாக அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அது ஒரு முன்னடையாளமாக மாத்திரமே இருந்தது. 54. ஆனால் இயேசு வந்து, அவருடைய இரத்தமானது கல்வாரியில் சிந்தப்பட்ட போது, அது பாவத்தை முழுவதுமாக அகற்றிப்போட்டது. அது பாவத்தை நீக்கிப்போட்டது. அது மாத்திரமே இரட்சிப்பை அர்த்தப்படுத்துகிறது. இரட்சிப்பு சம்பந்தப்பட்ட ஒழுங்குகளாக (articles), அங்கே சபையில் சேர்ந்துகொள்ளுதலோ, ஐக்கியத்திற்கான கடிதங்களோ, ஞானஸ்நான சடங்குகளோ, இராப்போஜனமோ கிடையாது, அல்லது சமயச்சடங்கிலோ அல்லது, தேவனிடமிருந்து வந்த எந்த ஒழுங்கிலுமோ (அது) எதுவும் கிடையாது; அவை எல்லாமே செய்து முடிக்கப்பட்ட ஒரு கிரியையை நினைவுகூரும்படி செய்யப்படும் காரியங்களேயாகும். 55. தண்ணீர் ஞானஸ்நானம் இரட்சிக்கும் என்று சிலசமயங்களில் ஜனங்கள் நினைத்தாலும், அது உங்களை இரட்சிப்பது கிடையாது. தண்ணீர் ஞானஸ்நானமானது கர்த்தருடைய மரணம், அடக்கம், மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும்படியான ஒன்றாகவே இருக்கிறது. அது உங்களை இரட்சிப்பதில்லை. 56. இராப்போஜனம் என்பதும் அவருடைய மகா வேதனையையும், அவர் மரித்துக் கொண்டிருந்ததையும், உடைக்கப்பட்ட அவருடைய சரீரத்தையும், சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தையும் நினைவுகூரும்படியாகவே உள்ளது. அது எழுத்தின்படியான இரத்தமல்ல, அது எழுத்தின்படியான சரீரமும் அல்ல; ஆனால் அவருடைய எழுத்தின்படியான சரீரம் மற்றும் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் நினைவுகூருதலாயிருக்கிறது. ஒரு ஒழுங்காகவே நாம் இதை எடுக்கிறோம். அதைச் செய்யும்படியாக, இயேசு நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவர் அதை நிறுத்தும் காலம் வரையில், நாம் அதை எடுத்தாக வேண்டும் (As long as He stays away, we are to take it). 57. எபிரெய நிரூப புத்தகத்தில், 7ம் அதிகாரத்தில், நமக்கு மகத்தானதும் அழகானதுமான ஒரு காட்சி உள்ளது. இதற்கு நிகரான ஒரு சூழலைப் பெறும்படி, நான் எபிரெயர் 7ம் அதிகாரத்தில், வெறுமனே ஒரு சிறு இடத்தை வாசிக்க விரும்புகிறேன். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். எபிரெயர் 7:1-2 58. கவனியுங்கள், நாம் திரும்பிச்சென்று, சிந்தித்துப்பார்க்க விரும்புகிறோம். ஒரு பழைய ஏற்பாட்டு கதாபாத்திரத்தை பவுல் இங்கு திரும்பக் குறிப்பிடுகிறான். ஆதியாகம புஸ்தகத்தில், ஆதியாகமம் 12ம் அதிகாரத்திலிருந்து, ஆபிரகாமின் ஜீவியத்தை நாம் எடுத்துக்கொள்வோம். தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். ஆபிரகாமினூடாக அந்த நீதியான வித்து வரும். ஆபிரகாம் ஒரு யூதன் என்று அநேகரால் நம்பப்படுவது போன்று, அவன் ஒரு யூதனல்ல. ஆபிரகாம் ஊர் என்ற பட்டணத்திலிருந்து வந்த ஒரு கல்தேயனாகிய புறஜாதியானாக இருந்தான். பிறகு அவன் தேவனுடைய ஊழியக்காரனாக ஆனான், அவன் மற்ற எவரிடமிருந்தும் வித்தியாசப்பட்டவன் என்பதனால் அல்ல, ஆனால் தேவன் தெரிந்தெடுத்த காரணத்தினால், 59. நீங்கள் ஒரு நல்ல நபர் என்ற காரணத்தினால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. கிறிஸ்து உங்களைத் தெரிந்துகொண்ட காரணத்தினால் தான் நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். எந்த மனிதனுமே தேவனைத் தேடுவதில்லை; தேவன் தான் மனிதனைத் தேடுகிறார். இயேசு, "என் பிதா முதலாவது ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், ஒருவனாலும் என்னிடத்தில் வரமுடியாது" என்று கூறியிருக்கிறார். நாம் சற்று நேரம் நிறுத்திவிட்டு, உங்களைத் தெரிந்து கொண்டதும், நீங்கள் கெட்டுப்போக சித்தமில்லாமல், ஆனால் உங்களுக்கு ஒரு தருணத்தைக் கொடுத்து, உங்களை அழைத்து, அவருடைய ஊழியக்காரனாக இருக்கும்படி உங்களைத் தெரிந்துகொண்ட தேவனாகவே அது இருந்தது என்ற அந்த ஒரு காரியத்தினுடைய பெரும் முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமானால், நல்லது. அதைக் காட்டிலும் அதிக விலையேறப்பெற்ற காரியம் என்ன தான் இருக்க முடியும்? நீங்கள் ஒரு தெரிந்தெடுப்பைச் செய்யாமலே! எந்த மனிதனாவது தேவனைத் தேடுவது என்பது முற்றிலும் கூடாத ஒரு காரியமாகும். சுபாவத்தின் மூலமாக, அவன் ஒரு பாவியாக இருக்கிறான். தேவனைச் சேவிக்கும்படியான ஒரு வாஞ்சையைக் கொடுக்கும்படியாக அவனுக்குள்ளே எதுவுமே கிடையாது. 60. நீங்கள் பன்றியிடம் சென்று. அது தவறாக இருக்கிறது என்று அதனிடம் உங்களால் சொல்ல முடியுமா? சுபாவத்தின் மூலமாக, அது ஒரு பன்றியாகத் தான் இருக்கிறது. அதனுடைய உணவுமுறை தவறாயுள்ளது என்று உங்களால் அதனிடம் கூற முடியுமா? நிச்சயமாக முடியாது. சுபாவத்தின் மூலமாக, அது ஒரு பன்றியாக இருக்கிறது. அது ஒரு ஆட்டுக்குட்டியாக இருக்கலாம் என்று அதனிடம் கூறினாலும், அது ஒரு பன்றியாக இருப்பதிலேயே திருப்தியாயிருக்கும். ஒரு பாவியும் ஒரு பாவியாக இருப்பதிலேயே திருப்தியாயிருக்கிறான். ஏனென்றால் அவனுடைய சுபாவமே ஒரு பாவியாக இருக்கிறது. 61. இதோ அது இருக்கிறது! “நாமெல்லாரும் பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாக்கப்பட்டு, பொய் பேசுகிறவர்களாக உலகத்திலே வருகிறோம்;" சுபாவத்தின் மூலமாக, கீழ்ப்படியாமையின் பிள்ளையாகவும், தேவனின்றி, ஒரு நம்பிக்கையுமின்றி, நம்மேல் தேவனுடைய கடுங்கோபம் தங்கியிருக்கிறவர்களாகவுமே இருக்கிறோம். கிறிஸ்துவின் அன்புள்ள கிருபையினாலே, தேவன் தம்முடைய இராஜாதிபத்திய கிருபையிலும், அவருடைய சர்வவல்லமையினாலும், உங்கள் இருதயத்தைத் தட்டி, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை உங்களுக்குக் கொடுத்து, உங்களை மறுபக்கம் திருப்பி, மேலேயுள்ள பாதைக்கு உங்களை அனுப்பினார். உங்களால் எப்படி அதைப் புறக்கணிக்க முடியும்? உங்கள் முழு வாஞ்சையையும் மாற்றி, உங்களை மறுபக்கம் திருப்பி, மற்ற வழியிலே உங்கள் பிரயாணத்தை ஆரம்பிக்கச் செய்கிறாரே! ஓ. அப்பொழுது நீங்கள் உலகத்திற்கு முட்டாள்தனமாக இருப்பீர்கள்; ஆனால் தேவனுடைய பார்வையில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள். “நீதியின் பேரில் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்" என்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். தேவன் தம்முடைய ஆச்சரியமான கிருபையினாலே! 62. கவனியுங்கள், அதைச் செய்தது தேவன் தான், தேவன்தான் அழைத்தார். கூப்பிட உங்களுக்கு எந்த விருப்பமும் இல்லாதிருந்தது. கூப்பிட எந்த வாஞ்சையுமே உங்களுக்கு இருக்க முடியாது, ஏனென்றால் உங்கள் சுபாவமானது முற்றிலுமாக அதற்கு முரணாயுள்ளது. ஆனால் தேவனோ, தெரிந்து கொள்ளுதலின் மூலமாக, உங்களை அழைத்து, உங்களை மறுபக்கம் திரும்பிவரச்செய்து, உங்கள் நேசங்களை கிறிஸ்துவை நோக்கியும், பரத்திலுள்ள காரியங்களை நோக்கியும் நிலைநிறுத்தினார். அப்படியானால் நம்மால் எப்படி அதைப் புறக்கணிக்க முடியும்? 63. அதன்பிறகு எல்லாருக்கும் தேவன் என்ன செய்கிறார் என்பதை அவர் ஆபிரகாமில் காண்பித்தார். உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய ஜீவனைக் குறித்த இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தமானது ஆபிரகாமுக்கு மட்டுமல்ல கொடுக்கப்பட்டது. ஆனால் அவனுக்குப் பிறகு, தேவளால் அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்ட அவனுடைய சந்ததிக்கும் அது கொடுக்கப்பட்டது. 64. ஆபிரகாம் வெளியில் திறந்தபூமியில், அங்கே அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்பதை நாம் கவனிக்கிறோம். அவனுடைய சகோதரனாகிய லோத்து, அவன் அதை அவ்வாறு தான் அழைத்தான்; உண்மையில், அது அவனுடைய உடன்பிறந்தவளின் மகன் (nephew), அவனுடைய சகோதரனுடைய மகன். அதன்பிறகு சோதனைக்கான நேரம் வந்தது. லோத்து சோதனையின் கீழாக ஊக்கமிழந்து போனான். இன்றைக்குள்ள மாம்சபிரகாரமான விசுவாசியைக் குறித்த ஒரு பரிபூரண காட்சியாக அவன் இருக்கிறான். அந்த தரிசு நிலத்தில் தங்க வேண்டுமா என்ற சோதனைகள் வந்தபோது, ஆபிரகாம் அவனுக்கு அவனுடைய தெரிந்தெடுத்தலைக் கொடுத்தாள். லோத்து தன்னுடைய கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, வயல்நிலங்களையும், பள்ளத்தாக்கையும் கண்டான். அது புற்கள் நிறைந்து காணப்பட்டது. அதோடு கூட அருமையான வீடுகள் நிறைந்திருந்தன. அது முழுவதும் சந்தோஷமாக நிறைந்து காணப்பட்டது. மேலும் அதோடு அது பாவம் நிறைந்திருந்தது. ஆனால் லோத்துவோ, மாம்சபிரகாரமான சுபாவத்தை உடையவனாயிருந்து, வரப்போகிற காரியங்களைக் காட்டிலும் இந்த தற்போதைய உலகத்தையே நேசித்து, இதற்குப் பிற்பாடு வருங்காலத்தில் ஜீவனைக் கொண்டிருப்பதைக் காட்டிலும், இந்த வாழ்க்கையில் ஆடம்பரமாக ஜீவிப்பதையே பெரிதளவில் தெரிந்துகொண்டான். 65. தன்னுடைய ஆசைகளை பரம காரியங்களின் மேல் பதித்து, ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் கழுவப்பட்டுள்ள உண்மையான விசுவாசியைக் குறித்த ஒரு பரிபூரண முன்னடையாளமாக ஆபிரகாம் இருந்தான். அவன், “கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலரோடு பாதையை நான் தெரிந்து கொள்வேன். ஜனங்கள் மத்தியில் எனக்கிருக்கும் புகழையே கிரயமாக செலுத்த வேண்டியிருந்தாலும், எதைக் கிரயமாகச் செலுத்த வேண்டியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல, நான் கர்த்தருடைய சிலரோடு பாதையைத் தெரிந்து கொள்வேன்" என்றான். அந்த சோதனை நேரத்தின் கீழாக தேவன் அவனை வைத்திருந்த இடமாகிய அந்த தேசத்தில் தங்கியிருப்பதையே அவன் தெரிந்துகொண்டான். 66. ஒருகாலத்தில் தேவனோடு கூட பிரயாணம் போக ஆரம்பித்த ஜனங்களோடு நான் பேசிக்கொண்டிருப்பேன் என்றால், சோதனை நேரம் வந்தபோது, மறுபடியும் உலகத்திற்குள் திரும்பிச்சென்று, உலகத்தின் காரியங்களை செய்வதை அதிகம் விரும்பி தெரிந்துகொண்டீர்களா, அல்லது கரடுமுரடான இரட்சிப்பின் பழைய பாதையை தெரிந்து கொண்டீர்களா என்று நான் இன்றிரவு வியப்படைகிறேன். 67. மோசே. தன்னுடைய காலை எகிப்தின் சிங்காசனத்தின் மேல் வைத்திருந்த நேரத்தில், அவன் சோதனையின் கீழாக இருந்தபோது, அவனைப்போன்று நீங்கள் செய்தீர்களா? ஆனால், அவன் எகிப்திலுள்ள ஆடம்பரங்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களையே (riches) பெரிய பொக்கிஷங்களாகக் கருதினாள். அவன் எகிப்தை விட்டுவிட்டான். எவ்வளவு பொன் அங்கு இருக்கிறது என்பதையோ, எத்தனை பிரபலமாக (இருக்கிறான் என்பதைக் குறித்தோ அவன் கவலைப்படவேயில்லை.... அவன் தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்து, எகிப்தின் காரியங்களை விட்டுவிட்டு, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக செல்வம் என்று கருதினான். 68. கடினமான சோதனைகள் வரும்போது, அந்த சோதனையின் கீழாக நாம் என்ன செய்கிறோம்? நீங்கள் உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களைத்தானே வேறுபிரித்துக் கொண்டதின் நிமித்தமாக, நீங்கள் ஒரு மதவெறியர் என்று அவர்கள் சொல்லும்போது, மனஉளைச்சல் ஏற்படுகிறதா? அது வந்தாக வேண்டும். நீங்கள் அந்த தெரிந்தெடுத்தலைச் செய்தாக வேண்டும். 69. ஆனால் நானோ சர்வவல்லவரின் நிழல்களின் கீழே தங்கியிருப்பதையே அதிகம் விரும்புவேன், கல்லை தலையணையாக வைத்திருந்த, யாக்கோபைப் போல என்னுடைய வழியைத் தெரிந்துகொள்வதையே அதிகம் விரும்புவேன். தரும்படியாக இந்த உலகமானது கொடுக்கக்கூடிய எல்லா ஐசுவரியங்களையும் ஆசீர்வாதங்களையும் கொண்டிருப்பதிலும், "ஒரு பித்துக்கொள்ளி" என்று உலகத்தால் கருதப்படுவதையே அதிகம் விரும்புவேன். ஏனென்றால், இவ்வுலகத்தின் எல்லா ஐசுவரியங்களையும் பொன் வெள்ளியையும் பார்க்கிலும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இப்பொழுது கவனியுங்கள். 70. அதன்பிறகு அந்தப் பெரிய சோதனைகள் வந்தபோது, லோத்து பாவத்திற்குள் இறங்கிச் சென்றுவிட்டான். அவன் மலையிலிருந்து, சமபூமியில் இறங்கிப் போய்விட்டான் என்பதை நினைவுகூருங்கள். அவன் -ஐப்போன்று பின்மாற்றமடைந்தான். இன்றைக்குள்ள மாம்சபிரகாரமான கிறிஸ்தவத்தை, பெயர் கிறிஸ்தவத்தை இது பரிபூரணமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது, சோதனை நேரத்தில் உண்மையாக நிற்பதைக் காட்டிலும், கஷ்டமேயில்லாத பூப்படுக்கையாகிய, தொல்லைகள் இல்லாத பாதையை எடுத்துக்கொள்வதையே அதிகம் விரும்பி தெரிந்துகொள்கிறார்கள். முடிவிலே அவன் தொல்லையில் சிக்கிக்கொண்டான். 71. நீங்களும் கூட தொல்லையில் அகப்படுவீர்கள். நீங்கள் சௌக்கியமான இறகுகளைத் திணித்து உருவாக்கப்பட்ட மெத்தையைத் தெரிந்துகொள்ளும்போது, நீங்கள் தொல்லையிலோ, ஏதோவொன்றிலோ அகப்படத்தான் போகிறீர்கள். உங்கள் பாவங்கள் உங்களைக் கண்டுபிடிக்கும். ஏதோவொரு நாளில் தேவன் உங்களைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார் (catch up). 72. ஒருநாள். அந்த இராஜா, தூரமாக அந்தப் பெரும் பிரதேசங்களில் இருந்த புறஜாதி இராஜாக்கள் உள்ளே வந்து, லோத்தையும் அவனுடைய பிள்ளைகளையும், அவனுடைய மனைவியையும் அவனுக்கிருந்த எல்லாவற்றையும் எடுத்து, அவைகளோடு தப்பிச்சென்று விட்டார்கள். 73. என் பலவீனமான நண்பனே. நீ இரத்தத்தின் கீழாக தரித்திராவிட்டால், ஏதோவொரு நாளில், சாத்தானுடைய இராஜ்யங்கள் உன்னைப் பின்தொடர்ந்து பிடித்து, நீ இரத்தத்தின் கீழாக தங்காமல் போனால், உன்னைத் திருடிக்கொண்டு போய்விடும். 74. ஆபிரகாம், நீதிமானைக் குறித்த ஒரு முன்னடையாளம், அவன் தன்னுடைய உடன்பிறந்தவனின் மகனைக் (nephew) குறித்து மிகவும் அக்கறையுள்ளவனாயிருந்தான். அவன் பரீட்சிக்கப்பட்டு, நன்கு சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட மெய்யான.உண்மையான கிறிஸ்தவனுக்கு ஒரு மாதிரியாயிருக்கிறான். 75. இப்பொழுது, அந்த ஸ்திரீகளுக்கு அதனோடு நிறைய சம்பந்தம் இருந்தது. லோத்துவின் மனைவி மாம்சபிரகார மானவளாயிருந்தாள். அவள் மிகவும் மாம்சபிரகாரமாக இருந்தாள். அவள் இன்று அங்கேயிருக்கும் இடத்தில் (fields) உப்புத்தூணாக, அதன் பக்கமாகக் கடந்து போகிறவர்களுக்கு ஒரு அவமானமாக நின்று கொண்டிருக்கிறாள். 76. சாரா ஒரு அழகான பெண்ணாக இருந்தாள். அவள் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் விரும்பினாரோ, அதைச் செய்யவே அவளும் விரும்பினாள். சென்ற மாலையில் நாம் மிகவும் உறுதியாகப் பேசினது போன்று, அவள் தன்னுடைய கணவனை மதித்தாள்; என்ன வந்தாலும் போனாலும், அவள் அதைப் பொருட்படுத்தாமல், ஆபிரகாமோடு தங்கியிருந்தாள். அவன் அந்த வாக்குத்தத்தத்தோடு தரித்திருந்த காரணத்தினால், அவள் அவனோடு கூட தங்கியிருந்தாள். அதுதான் காரியம். 77. அதன்பிறகு லோத்து தூரமாகக் கொண்டு செல்லப்பட்டபோது. ஆபிரகாமுடைய இருதயம் அவனுக்காகச் சென்றது. அவன் தன்னுடைய சொந்த வேலைக்காரர்களாகிய ஒரு இராணுவத்தை ஒன்றுதிரட்டிக்கொண்டு, தன்னுடைய சகோதரன் பிறகே போனாள். மிகவும் அழகான ஒரு முன்னடையாளம். அங்கே அவர்களில் ஒருவரும் மீதியாக இல்லாமல் போகும் வரை, அவர்கள் தங்களுடைய பட்டயங்களை எடுத்து, அந்த இராஜாக்களை வெட்டிப்போட்டார்கள். 78. சுவிசேஷ பிரசங்கியானவன். பாவமானது தன்னுடைய சபையையும், ஜனங்களையும் பிடிப்பதை அவன் காணும்போது, அவனைக் குறித்த முன்னடையாளமாக அது இருக்கிறது. அவன் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பழைய சுவிசேஷத்தை, ஆவியின் பட்டயத்தை எடுத்து, பாவத்தை தன்னுடைய சபையை விட்டு வெட்டி எறிந்து போடும் வரையில், அதை வெட்டி, வெட்டிக் கொண்டேயிருக்கிறான். அவன் தேவனுடைய ஒரு உண்மையான ஊழியக்காரனாக இருந்தால் (அதைச் செய்வான்). அவன் எல்லா முட்டாள்தனத்தையும், ஊர்வம்பு பேசுவதையும், புறங்கூறுதலையும் அகற்றிப்போட்டு விடுகிறான். அவள் தேவனுடைய ஒரு உண்மையான ஊழியக்காரனாயிருந்தால், சபைக்குள்ளே ஊர்ந்துவந்திருக்கும் உலகத்தின் எல்லா காரியங்களையும் மாம்சபிரகாரமான சுபாவங்களையும் அகற்றிப்போட்டு விடுவான். அவன் வார்த்தையை எடுத்து, எல்லாவற்றையும் வெட்டி எறிந்துபோடும் வரையில், ஒருபுறம் தொடங்கி மறுபுறம் வரையில், அதை வெட்டிப்போடுவான். 79. அதன்பிறகு பின்வாங்கிப்போன தன்னுடைய சகோதரன் லோத்துவையும், பிள்ளைகளையும் பெற்று, அவர்களைத் திரும்ப ஒப்புரவாக்கினபோது, கவனியுங்கள். இந்த மகத்தான இராஜா எருசலேமிலிருந்து இறங்கி வந்து, அவனைச் சந்திக்கிறார். மெல்கிசேதேக்! அவர் எந்தவிதமான மனிதராக இருந்தார்? அவர் “சாலேமின் இராஜா" என்று அழைக்கப்பட்டார். சாலேம் என்பது "எருசலேம்" தான் என்று எந்தப் பண்டிதனும் அறிவார்கள். அது எருசலேம் என்று அழைக்கப்படுவதற்கு முன்பு, சாலேம் என்றுதான் அழைக்கப்பட்டது. அவன் சரியான அடியை எடுத்து வைத்திருக்கிறான் என்று எண்ணி, அவளைச் சந்தித்த இந்த மனிதர் யார்? அவன் அருகில் நின்று கொண்டிருந்த இந்த நபர் யார்? அவர் யார் என்று கவனியுங்கள். --- அவர் எருசலேமின் ராஜா, அவர் சமாதானத்தின் இராஜாவாக கூட இருக்கிறார்; மூன்றாவது வசனம்: இவன் தகப்பனும் தாயும், வம்சவரலாறும், நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவும் உடையவனாயிராமல்.... அந்த யுத்தம் முடிந்தபிறகு, அவனைச் சந்தித்த இந்த மகத்தான பிரபுவானவர் யார்? நாம் ஆதியாகமத்திற்குத் திருப்புவோம், 14வது வசனம்.... 14வது அதிகாரம், 18வது வசனம். அன்றியும், - சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, -- அதை ஆசீர்வதிந்து: வானங்களையும் பூமியையும் பாதுகாப்பவராகிய உன்னதமான தேவவடைய ஆசீர்வாதம்... உண்டாவதாக ஆசீர்வாதம் அவருடைய தாசனாகிய ஆபிரகாமுக்கு உண்டாவதாக. 80. அந்த யுத்தம் முடிந்து, வெற்றி பெற்று, அப்புறப்படுத்தின பிறகு, அந்தச் சமபூமியில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்து, அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அதை அவனுக்கு பரிமாறினார். அது யார்? அது ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஆபிரகாமைச் சந்தித்து, அந்த மரத்தின் கீழே உட்கார்ந்து, அவளிடம் பேசின அந்த ஒருவரைக் காட்டிலும், அது வேறு யாராகவும் இருக்கவில்லை . 81. இந்த அதே மெல்கிசேதேக் தான், “யுத்தம் முடிந்து, ஜெயம் பெற்ற பிறகு, என் பிதாவின் இராஜ்யத்தில் நான் இந்தத் திராட்சப்பழரசத்தைப் புதிதாக உங்களோடு கூட பானம் பண்ணும் மட்டுமாக, நான் இனி இதைப் பானம்பண்ணவதில்லை" என்றார். அதன்பிறகு கடைசியான யுத்தத்தை செய்துமுடிக்கும்போது (fought}, நாம் அதைப் புதிதாக அவருடைய இராஜ்யத்தில் எடுப்போம் (take). கடைசி பட்டயமானது உலகத்தின் கடைசி பொல்லாங்கைக் கொல்லும்போது, ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான சபையானது வெற்றிவாகைச் சூடும்போது, கிறிஸ்து மறுபடியுமாக அப்பத்தோடும் திராட்சரசத்தோடும் ஆகாயத்தில் அவர்களைச் சந்தித்து, இராப்போஜனம் எடுப்போம், பிதாவின் சமூகத்தில் நித்தியமாக அதைச் செய்வோம். 82. ஓ, இன்றிரவு, களைப்புற்ற யாத்ரீகனே, பிதாவின் வீட்டிற்குத் திரும்பி வா. சோதோமை விட்டு மேலே ஏறிவா! நீ இரத்தத்தின் மூலமாக ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறாயே. இந்த மகிமையான ஞாபகார்த்த இரவிலே (glorious memorial night), நாட்களின் துவக்கமோ ஜீவனின் முடிவோ இல்லாமல், ஆனால் என்றென்றும் என்றென்றுமாக இராஜாவாகவும் அதிபதியாகவும் இருக்கிறாரே நம்முடைய மகத்தான மெல்கிசேதேக்கு. 83. இப்பொழுது நீங்கள் இன்றிரவில் கிறிஸ்து இல்லாமல் இருப்பீர்களானால், இன்றிரவு இங்கிருக்கும் பரிசுத்த ஆவியானவர் இரட்சிக்கப்படாதவர்களை நோக்கி கெஞ்சிக் கொண்டிருக்கிறார். யுத்தம் முடிவுபெறும் போது, நீங்கள் அவரைச் சமாதானத்தோடு சந்தித்து, அவரோடு கூட இராப்போஜனம் எடுக்க விரும்பி, நீங்கள் அவரை நேசிப்பதாகவும், உலகத்தின் காரியங்களிலிருந்து உங்களைத்தானே வேறுபிரித்துக்கொள்வதாகவும் நீங்கள் வாக்குப்பண்ணியிருப்பீர்களானால். அந்தப் பழைய கரடுமுரடான சுவிசேஷத்தையும், பழைமை நாகரீகமான கரடுமுரடான வழியையும் ஏற்றுக்கொண்டு, உலகத்திலுள்ள உபத்திரவமாகிய கசப்பான பாத்திரத்திலிருந்து குடித்து, உலகத்தின் உபத்திரவங்களாகிய கசப்பான பானத்தைக் (drugs) குடியுங்கள்; அதோ அங்கே பரலோகங்களுக்கும் பூமிக்கும் இடையே நாம் ஏதோவொரு நாளில், அவரை சமாதானத்தோடே சந்தித்து, அவர் இராப்போஜனத்தைப் பரிமாற வருகிற போது, நாம் பரலோகத்திலுள்ள இனிமையான திராட்சரசங்களைப் பருகுவோம் என்று வேதாகமத்தின் மூலமாக நமக்குச் சொல்லப்பட்டுள்ளது (given). (ஒலிநாடாவில் காலியிடம் -ஆசிரியர்) 84. "நான் இதை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே பானம்பண்ணுவேன்" என்ற இதன்பேரில் நம்முடைய இருதயங்கள் சிந்தித்துக் கொண்டிருப்பதாக. வேறொரு ஈஸ்டர் வருவதற்கு முன்பே அவர் வருவாரானாலும், வேறொரு ஈஸ்டர் வரும் முன்பதாகவே நீங்கள் மரித்துப்போவீர்களானாலும், அந்த மகத்தான சம்பவத்தை அது தடைசெய்யாது. கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்கள் முதலாவது புறப்பட்டு வருவார்கள் என்று கர்த்தருடைய வார்த்தையின் மூலம் நான் சொல்லுகிறேன். பின்பு அது மட்டும் உயிரோடிருக்கிற நாமும் அவர்களோடு கூட ஒன்றாக ஆகாயத்தில் கர்த்தரைச் சந்திக்கும்படியாக எடுத்துக்கொள்ளப்படுவோம். இயற்கையான எருசலேமின் இராஜாவாயிராமல், பரலோக எருசலேமின், புதிய எருசலேமின் இராஜாவாகிய பரலோகத்தின் மகத்தான மெல்கிசேதேக்கு நம்மைச் சந்தித்து, நமக்கு திராட்சரசமும் அப்பமும் மறுபடியும் பரிமாறப்படும். 85. இன்றிரவு நாம் இதைக் குறித்த அடையாளங்களை (சின்னங்களை - symbols) எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் மீண்டும் வருவதை நாம் காணும் வரையில், நாம் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஒரு சிறு ஜெபம் செய்யும்படியாக, சற்றுநேரம் நமது தலைகளைத் தாழ்த்துகையில், நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்படுவோமாக. 86. இந்த மிக உயர்ந்த பயபக்தியுடன் கூடிய பரிசுத்த நேரத்தில், ஒவ்வொருவரும் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அமைதியாக இருப்போம். இக்காரியங்களை நழுவவிடுவது என்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது! "நாம் அந்தக் காரியங்களை நழுவ விடாமலும், இவ்வளவு பெரிதான இரட்சிப்பைப் புறக்கணியாமலும் இருப்போமாக" என்று வேதாகமம் கூறியுள்ளது. அதை மறந்துவிடுவது என்பது மிகவும் எளிதாயுள்ளது. காணப்படும்படியாக நாம் சபைக்கு வருவதில்லை. நன்றாகப் பாடல் பாடுவதைக் கேட்கவோ, அல்லது ஒரு நல்ல பிரசங்கத்தைக் கேட்கவோ நாம் வருவதில்லை. நாம் ஆராதிக்கவே, தேவனை ஆராதிக்கவே நாம் சபைக்கு வருகிறோம். 87. நம்மில் ஒவ்வொருவருமே, நம்முடைய பூமிக்குரிய ஜீவன்கள் ஏதோவொரு நாளில் அவரைச் சந்திக்க வேண்டிய ஒரு ஆத்துமாவைப் பெற்றிருக்கிறது. சிலுவையில் அறையப்பட்ட இந்த மகத்தான நாளுக்கு முந்தைய நாளாகிய இன்றிரவில், அவர் போவதை ஞாபகார்த்தமாக நாம் கொண்டிருக்கையில், நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இல்லை என்றால், கிறிஸ்துவை உங்கள் ஜீவியத்தில் இரட்சகராக ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், வார்த்தையைப் பிரசங்கிப்பதின் மூலமாக நீங்கள் போதுமான அளவு முழு நிச்சயத்தோடு இருக்கிறீர்களா, “நீ குற்றமுடையவனாயிருக்கிறாய். இப்பொழுதே திரும்பி, மற்ற வழியில் போகத் தொடங்கிவிடு" என்று கூறும்படியாக, பரிசுத்த ஆவியானவர் உங்கள் அருகில் நின்று கொண்டிருக்கிறாரா? நீங்கள் உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, "சகோதரன் பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். தேவன் என்னிடம் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நீங்கள் ஜெபிக்கும் உங்கள் ஜெபங்களை நான் இப்பொழுது வேண்டுகிறேன்" என்று கூறுவதன் மூலமாக, நீங்கள் அதே காரியத்தை பகிரங்கமாகக் கூறுவீர்களா? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்). நாங்கள் காத்துக் கொண்டிருக்கையில், நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. வேறு யாராவது? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. சிறியவரே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. யாராவது...? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. 88. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே. என்னுடைய கரத்தை உயர்த்துவதில் ஏதாகிலும் அர்த்தம் இருக்கிறதா?" என்று கேட்கலாம்? அப்படியே மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையேயுள்ள வித்தியாசம் அதில் இருக்கிறது. ஜீவனைக் காட்டிலும் பெரிதான ஏதாகிலும் என்ன இருக்கிறது? நீங்கள் நேசிக்கிறீர்கள். நீங்கள் இயற்கையை நோக்கிப்பார்த்து, அதை நேசிக்கிறீர்கள். நீங்கள் அதைவிட்டுத் தூரமாகப் போவதையே வெறுக்கிறீர்கள். 89. அப்படியே இங்கே தெருவைத் தாண்டி, அநேக வருடங்களுக்கு முன்பு ஒருநாள் காலையில், சகோதரனுடைய மனைவி மரித்துக்கொண்டிருந்தபோது, பரிதாபமான சிறு ரூத் தன்னுடைய தலையை உயர்த்தினபோது, அங்கே ஒரு செர்ரி மரத்தில் ராபின் பறவை ஒன்று அமர்ந்திருந்தது. அவள் அதை இன்னும் ஒருமுறை காண விரும்பினாள்.... அவள் எவ்வளவாக இயற்கையை நேசித்தாள். ஆனால் ஏதோவொரு நாளில், இயேசு வரும்போது, பறவைகள் நித்திய காலமாக பாடிக்கொண்டிருப்பதைக் கேட்பாள். மலர்கள் அழிவில்லாதவைகளாய் வளரும். அங்கே எந்த வியாதியோ, துக்கமோ, அல்லது மரணமோ இருக்காது, ஏனென்றால் அவள் தேவனோடு சமாதானமுள்ளவளாகி, அவளுக்காக மரித்த மகத்தான கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தாள். தவறிப்போக முடியாத இந்த ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியைக் கொண்டு, பொய்கூற முடியாத ஆசீர்வதிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைக் கொண்டே, விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தும்போது, உங்களுக்கு உள்ளிருக்கும் ஒரு ஆவியானது ஒரு தீர்மானம் எடுத்துள்ளது என்பதை அது காண்பிக்கிறது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. 90. உங்களுக்குள்ளிருக்கும் ஏதோவொன்று, ஒருஒரு ஆவி.... இயல்பாக, உங்கள் கரங்கள் கீழே தொங்கும்படிக்கே உண்டாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தும்போது, நீங்கள் அதே ஈர்ப்பு விசையின் பிரமாணங்களை எதிர்த்து நிற்கின்றீர்கள். அது இயற்கைக்கு மேம்பட்டதாக இருந்தாக வேண்டும். அது அது விஞ்ஞான.... க்கு எதிராக இருக்கிறது. ஈர்ப்புவிசையின் பிரமாணங்களை உடைத்துப்போடும்படியாக, விஞ்ஞானப்பூர்வமான காரியங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே அது உங்களுக்கு உள்ளது. அங்கே இயற்கைக்கு மேம்பட்ட ஏதோவொன்று இருந்தாலொழிய செய்யப்பட்டிருக்க முடியாது. உங்கள் கரங்கள் தொடர்ச்சியாக கீழே தொங்கிக்கொண்டே இருந்திருக்குமே. ஆனால், நீங்கள் பாவத்தோடு கூட அதனூடாக இருக்கிறீர்கள் என்றும், கல்வாரியை நோக்கிய இந்த அழகான அணுகுமுறையின் பேரில், இயேசு உங்கள் இரட்சிப்புக்காக மரித்த அந்த நாளை, நாளைய தினம், 3 மணிக்கு, நாம் ஞாபகார்த்தமாக கொண்டாடுகிறோம் என்றும், உங்கள் இருதயத்தில், நீங்கள் இந்த சுவிசேஷ கதையை விசுவாசித்து, இந்த இரவில் உங்கள் தீர்மானத்தைச் செய்திருக்கிறீர்கள் -- நீங்கள் அதைக்குறித்து போதுமான அளவு சிந்தித்திருக்கிறீர்கள், பரிசுத்த ஆவியானவர் வந்து, உங்கள் இருதயத்தைத் தட்டி, இப்பொழுது நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு விட்டீர்கள்... 91. நீங்கள் அப்படியே.... உங்கள் இருதயத்திலுள்ள ஏதோவொன்று, "உன் கரத்தை உயர்த்து" என்று கூறுகிறது. நீங்கள் அதை விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று ஜனங்களுக்கும் தேவனுக்கும் அது காண்பிக்கிறது. சிறு பிள்ளைகளாகிய உங்கள் எல்லாரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக: இங்கே பீடத்தில் அவர்களில் மூன்று அல்லது நான்கு பேர் இருக்கிறீர்கள், ஏறக்குறைய எட்டு, பத்து வயதுடைய சிறு பையன்களும், பெண் பிள்ளைகளும், அவர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் தங்கள் கரங்கரளை உயர்த்தினார்கள். இயேசு, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவைகளைத் தடைபண்ணாதிருங்கள், ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று கூறினார். நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இன்னுமொருவர் உண்டா? 92. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. அது ஒரு உண்மையான... சீமாட்டியே, நீங்கள் ஜீவியத்தில் அநேக காரியங்களை செய்திருக்கலாம். அது உண்மையாக இருந்தது: நீங்கள் ஒரு ஒரு நேர்மையான ஸ்திரீயாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அன்பு சகோதரியே, உங்களுக்குள்ளே ஏதோவொன்று. உங்களுக்குள்ளே கீழேயுள்ள ஏதோவொன்று. “அதைச் செய்" என்று சொல்லியிருந்தாலொழிய உன்னால் உன்னுடைய கரத்தை மேலே உயர்த்தியிருக்க முடியாது. ஆனால் சகோதரனே. இப்பொழுது அது ஒருக்கால் மாம்ச சிந்தைக்கு சற்றே முட்டாள்தனமாக காணப்படலாம், அந்நாளில் மருத்துவர் கதவுக்கு வெளியே நடந்துவந்து, "முடிந்தது" என்று கூறும்போது. அவர் அந்த சிதைந்து சேதம் அடைந்த காரியங்களை விட்டு அப்புறமாகச் சென்று, உங்களுடைய அந்தச் சிறு சரீரத்தை வெளியே இழுத்து, இரத்தமானது வழிந்தோட (flowing away), உங்கள் இருதயமானது மூச்சுத்திணறிக்கொண்டிருக்க, "இவர்களோடு நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை; இவர்கள் மரித்துவிட்டார்கள்" என்று கூறும்போது). ஓ. என்னே. அப்போது ஒரு மணிநேரத்தில், நீங்கள் வெறித்தனமாக மனந்திரும்ப முயற்சிப்பீர்கள், தேவனோ, "உங்களுக்கு பேராபத்து நேரிடும்போது, நான் நகைக்க மாத்திரமே செய்வேன்" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உங்களுடைய சரியான மனநிலையில் நீங்கள் இருக்கையில், நீங்கள்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 93. நாங்கள் இந்தச் செய்தியை முடிவுக்குக் கொண்டுவருகையில், தங்கள் ஜீவியம் முழுவதும் பாவிகளாக இருந்துவருகிற ஏறக்குறைய 15 பேர் தங்கள் கரங்களை உயர்த்தியிருக்கிறார்கள், இவர்களே அறுவடையாயிருக்கிறார்கள். இப்பொழுது. கிருபையினாலே, நீர் இவர்களிடம் பேசி, இவர்களைச் சரியாக மறுபக்கம் திரும்பச் செய்து, இவர்களை கல்வாரியை நோக்கிப் பார்க்கச்செய்து, தேவனுடைய குமாரனின் உதடுகளிலிருந்து, "பிதாவே, இவர்களை மன்னியும், இவர்கள் செய்தது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்" என்று வரும் அந்த வார்த்தைகளைக் கேட்கும்படி செய்திருக்கிறீர். ஆனால் இன்றிரவு இவர்கள் சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கும் ஒருசில நாட்களுக்கு முன்பு அவர், "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு; அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்" என்று கூறுவதை நாங்கள் கேட்கிறோம். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) 94. கர்த்தாவே, இவர்களை உமது பிள்ளைகளாக இன்றிரவு உம்மிடம் சமர்ப்பிக்கிறோம் (present). உமது நித்திய ஆசீர்வாதங்கள் தாமே இவர்கள் மேல் தங்குவதாக, கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். இவர்கள் தாமே ஞாயிறு காலையில், தங்கள் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டு வந்து, “நான் ஒரு விசுவாசி என்று இந்த உலகத்திற்கு பகிரங்கமாக அறிக்கையிட வாஞ்சிக்கிறேன். நான் இப்பொழுது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, ஜீவியம் முழுவதும் என்னைக் கவனித்துக்கொள்ளும்படி அவரைக் கூப்பிட வாஞ்சிக்கிறேன்" என்று கூறுவார்களாக. 95. இந்த வாலிப பெண்களையும், இந்த வாலிபர்களையும், வயோதிபர்களையும், சிறு பிள்ளைகளையும், மற்றும் எல்லாரையும் ஆசீர்வதியும், அவர்களைக் கவனித்துக்கொள்ளும், பிதாவே, அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்கள். இன்றிரவு இந்தச் செய்தியின் கனிகளிலே, நான் இவர்களை உம்மிடம் தன்மைகளாக (attributes) சமர்ப்பிக்கிறேன். பிதாவே இவர்கள் தேவனிடமிருந்து கிடைத்த அன்பின் வெகுமதிகளாக, உமது கரத்தில் இருக்கிறார்கள். இவர்களை ஜீவியம் முழுவதும் கவனித்துக்கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்..?... 96. இன்றிரவு உங்களைக் கொண்டிருப்பது மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. நீங்கள் வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாளை இரவில், நம்முடைய செய்தியானது, நாளை இரவில்: விசுவாசியின் பரிபூரணம் (The Perfection of The Believer) என்று இருக்கும். இப்பொழுது உங்களுடைய சொந்த சபையில் ஆராதனைகள் இல்லை என்றால், உங்களோடு கூட யாராவது ஒருவரை அழைத்துக்கொண்டு வாருங்கள். 97. இப்பொழுது, நாம் இராப்போஜனத்தைக் கொண்டிருக்கப் போகிறோம். ஒருக்கால் உங்களில் யாராவது ஒருவர்... நான் சற்றே கொஞ்சம் ஒருசில நிமிடங்களுக்கு தாமதித்துவிட்டேன், போக வேண்டியவர்களை நாம் போகவிடப் போகிறோம். 98. எங்களோடு கூட இராப்போஜனம் எடுத்து. கால்கழுவுதலைச் செய்யும்படி தங்கியிருக்க விரும்புகிறவர்கள், நாம் செய்யும்படியாக, இயேசு நம்மிடம் விட்டிருக்கிற ஒவ்வொரு ஒழுங்கையும் (article) கடைபிடிப்பதில் நாம் முழுமையாக விசுவாசம் கொண்டிருக்கிறோம். அவர் என்னுடைய தலைமுறையில் வந்து, நான் என்னுடைய சரியான மனநிலையில் இருக்க அனுமதிப்பாரானால், நான் தொடர்ந்து என்னுடைய இருதயத்தில் அவரை நேசிப்பேன் என்றால், இவர்கள் ஒவ்வொருவருக்கும் என்னால் செய்ய முடிந்த சிறந்ததைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்து, வேலையில் உண்மையுள்ளவனாக காணப்படுவேன். இப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.