அடையாளம் Dallas, Texas, USA 64-0308 1வார்த்தை வாசிக்கபடுதல். ஆராதனை முடிவில் நான் உங்களை எழுந்து நிற்க சொன்னதற்கு காரணம்... அவர்கள் தேசிய கீதம், கொடி வணக்கத்தின் போது பாடுகையில் நீங்கள் எழும்பி நிற்கிறீர்கள். நீங்கள் நிற்பதில்லை? அப்படியானால் தேவனுடைய வார்த்தைக்கு ஏன் எழுந்து நிற்கக்கூடாது. அது ஒரு மரியாதையாக இருக்கிறது. இப்பொழுது யாத்திராகமம் புத்தகம் பன்னிரண்டாம் அதிகாரம் 12ம் வசனம் முதல் துவங்குவோம் வேத வார்த்தையின் ஒரு பகுதியை 12,13ம் வசனங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். அந்த ராத்திரியிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம் பண்ணி, எகிப்து தேவர்களின் மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்து போவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும் போது அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். அடையாளம் என்பது என்னுடைய பேசும் பொருளாய் இருக்கும். நம்முடைய தலைகளை நாம் இப்பொழுது வணங்குவோமாக. அவருடைய இந்தப் புனித வேளையின் அமைதிக்குள் ஜெபத்தில் அவரை அணுகுவதற்கு முன்னதாக தேவன் உங்களுக்கு பதிலளிக்கும் படியான வேண்டுதல்கள் ஏதாவது இந்த பிற்பகல் வேளையில் இருக்கின்றதா? வெறுமனே கரத்தை உயர்த்தி உங்களிடம் ஏதாவது இருந்தால் உண்டு என்று காட்டி அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் இருதயங்களில் சிந்தியுங்கள். இந்த கட்டிடத்தில் எங்கு இருந்தாலும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் இருதயங்களில் சிந்தியுங்கள். 2எங்களுடைய பரலோக பிதாவே, நீர் மாறாத தேவனாய் இருக்கிறீர், எங்கள் கரம் உயர்த்தப்பட்டு இருப்பதினால், இந்த பிற்பகல் வேளையிலே நீர் எங்களுடைய ஜெபங்களுக்கு பதில் அளிப்பீர் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். என்னுடைய கரங்களும் கூட உயர்த்தப்பட்டிருக்கிறது. நீர் கவனிக்கிறீர், என்னுடைய விண்ணப்பத்தை யாவர் முன்னிலையிலும் நான் கூறுகிறேன். அது கர்த்தாவே இன்றைக்கு இங்கே இருக்கின்ற ஒவ்வொரு நபரையும் நீர் சுகப்படுத்த வேண்டும். இழக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் இரட்சிக்க வேண்டும் என்பதே. நீர் சொல்லியிருக்கிறீர், என் நாமத்தினால் நீங்கள் பிதாவை எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் என்று. இப்பொழுது நாங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்ட ஜனங்களாக விசுவாசிக்கின்ற ஜனங்களாக விசுவாசிக்க உதவி செய்யும். கர்த்தாவே உம்முடைய வார்த்தை மூலமாக பேசும். கர்த்தாவே உம்முடைய வார்த்தை சத்தியமாய் இருக்கிறது. எங்களுடைய இருதயங்களை ஆசீர்வதியும். இந்தக் கூட்டத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். சகோதரன் கிராண்ட்காகவும் அவளுடைய எல்லா ஊழியர்களுக்காகவும் எல்லா சபைகளுக்காகவும் ஜனங்களுக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுக்காக செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம் கர்த்தாவே. பிதாவே அக்கரையில் நாங்கள் சந்திக்கும் வரை ஒருக்கால் நாங்கள் மறுபடியுமாக இங்கே காணமுடியாதவைகளாய் இருக்கலாம். இந்த பூமியின் மேல் உட்கார்ந்து நாங்கள் கேட்கும் கடைசி ஆராதனையாய் இது ஒரு வேளை இருக்கலாம். பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து எங்களை ஒன்று சேர்த்து ஆசீர்வதித்து, எங்களுடைய தேவைகளை எங்களுக்கு சந்திப்பதாக இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம், ஆமென். நீங்கள் உட்காரலாம். 3இங்கே என்னிடத்தில் ஒரு அடுக்குத் தாள்கள் இருக்கிறது. நானும் அதில் சில வேத வார்த்தைகளையும் சிறு காரியங்களையும் எழுதுவேன். வழக்கமாக நான் அவைகளை என் சிந்தையில் ஞாபகம் வைத்து கொள்ளுவேன். 25 வயதை கடந்து விட்டேன், உங்களுக்குத் தெரியுமே, அதாவது இரண்டாவது முறையாக கடந்துவிட்டேன். அதனால் நான் வழக்கமாக ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. கூட்டங்களில் மற்ற காரியங்களிலும் அதிகம் செய்யப்பட வேண்டி இருப்பதினால் முடியவில்லை. இன்றைய பிற்பகல் பேசும் பொருள் ''அடையாளம்''. நம்முடைய காட்சியானது எகிப்தில் துவங்குகின்றது. அது இப்பொழுது ஒரு மகத்தான காட்சி. நீங்கள் யாவரும் அதைக் காண வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களால் முடிந்த அளவு பயபக்தியாக இருங்கள். காட்சியின் ஸ்தலம் எகிப்தாய் இருக்கிறது. காட்சியின் நேரமானது வெளியேற்றத்தின் துவக்கமாக இருக்கிறது. 4நாம் இன்னொரு வெளியேற்றத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிற படியால், அதை இன்றைய நாளின் பாவனையால் காட்டப்பட்டு இருக்கிறது. தேவன் இஸ்ரவேலை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு போகிறார். அது கிறிஸ்துவானவர் மணவாட்டியை சபைகளிலிருந்து வெளியே கொண்டு வந்து வாக்குத்தத்தத்தின் தேசத்துக்கு கொண்டு போகிறதற்க்கு பாவனையாய் இருக்கிறது. நாம் இன்னொரு வெளியேற்றத்தில் இருக்கிறோம். நீங்கள் வேத வார்த்தைகளை கவனிப்பீர்களானால் அதனுடைய முக்கிய கட்டங்கள் மட்டும் கவனிக்கவே நமக்கு நேரம் இருக்கிறது. அது உண்மையே தேவன் ஒரு தேசத்தை ஒரு தேசத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தது போல, தேவன் ஒரு சபையிலிருந்து மணவாட்டியை வெளியே கொண்டு வருவார். எல்லா சபைகளிலிருந்தும் மணவாட்டி அழைக்கப்படுவாள். அது தேவனுடைய தெரிந்து கொள்ளப்பட்டதாய் வெளியே கொண்டு வரப்படும். நாம் அந்த வெளியேற்றத்தில் இப்பொழுதே சம்பவிக்கும் தருணத்தில் இருக்கிறோம். ஏனென்றால் நாம் அங்கே நின்று கொண்டு இருக்கிறோம் என்பதற்கு நம்மிடத்தில் எல்லா வேத பூர்வமான நிறுவனம் இருக்கிறது. இப்பொழுது அது அனேக முறைகள் கூறப்பட்டு இருக்கிறது என்று நான் அறிவேன், ஆனால் என் நண்பனே ஒரு சமயத்தில் அது கடைசி முறையாக கூறப்படும். அப்பொழுது நேரமானது நித்தியத்துக்குள்ளாக மங்கி விடும் ஒரு சபையிலிருந்து ஒரு மணவாட்டியை எடுக்க அவர் வருகிறார். 5எகிப்தும் இஸ்ரவேலுமான அந்த இரண்டு தேசங்களுக்கும் இடையே அங்கே வித்தியாசத்தை உண்டுபண்ணின காரியம் அந்த அடையாளமாய் இருக்கிறது. அவர்கள் எல்லாரும் மனிதர்கள் தான். ஆனால் அவர்கள் எல்லாரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். எல்லாரும் தேவனுடைய கை வேலையாய் இருக்கிறார்கள், ஆனால் அங்கே மரணம் அபராதம் விதிக்கப்பட்ட போது வித்தியாசமாய் இருந்தது. மரணத்திற்கும் ஜீவனுக்கும் இடையே இருந்த வித்தியாசம் அந்த அடையாளமாக இருந்தது. தேவகுமாரனுடைய வருகையின் போது அதே விதமாக இருக்கும், அவர் மணவாட்டி சபையிலிருந்து வெளியே கொண்டு வரும் போது வித்தியாசம் அடையாளமாக இருக்கும். இப்பொழுது இந்த பிற்பகல் வேலையில் கூர்ந்து கவனித்து அது உண்மைதானா என்று பாருங்கள். அங்கே உள்ள வித்தியாசம் அடையாளமாக இருக்கும் அங்கே ஒரு வித்தியாசம் இருக்கதாக வேண்டும். 6என்றாவது ஒருநாள் தேவன் இந்த உலகத்தை நியாயம் தீர்க்க போகிறார். நான் கத்தோலிக்க ஜனங்களிடத்தில், யாரை அவர் நியாயம் தீர்ப்பார். உலகத்தை அவர் எதைக்கொண்டு நியாயம் தீர்ப்பார் என்று கேட்டால் அவர்கள் சபையே என்று கூறுவார்கள். எந்த சபையை, எந்த கத்தோலிக்க சபையை, எந்த கத்தோலிக்க சபையை அவைகளில் அநேகம் இருக்கிறது. மெதொடிஸ்டுகள், மெதொடிஸ்டுகள் சபையைக் கொண்டு என்று கூறுவார்கள். அப்படியானால் பாப்டிஸ்டுகள் அதற்கு புறம்பே இருப்பார்களே, பின்னர் நீங்கள் அதைப் பாப்டிஸ்ட் சபை கொண்டு நியாயம் தீர்த்தால் மற்ற எல்லாரும் புறம்பே இருப்பார்கள். பெந்தெகொஸ்துகள் பெந்தெகொஸ்தையைக் கொண்டு என்றால் அப்பொழுது மற்றவர்கள் புறம்பே இருப்பார்கள் பாருங்கள். அது குழப்பமாய் இருக்கும். அதிகப்படியான குழப்பமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நினைப்பது சிந்தைக்கு அதிக குழப்பமாய் இருக்கும். தேவன் பூமியை தண்டிக்க போகிறேன் என்று கூறி இங்கே ஒரு வழியை உடையவராய் இருக்கிறார். கத்தோலிக்க சபையை கொண்டு அல்ல புராடெஸ்டென்ட் சபையை கொண்டல்ல, ஆனால் அவர் இந்த உலகத்தை இயேசு கிறிஸ்துவை கொண்டு நியாயம் தீர்க்க போகிறார். இயேசு வார்த்தையாய் இருக்கிறார், எனவே அங்கே அது மீண்டுமாக வேதத்திற்கு வருகிறது பார்த்தீர்களா. அவர் உலகத்தை வேதத்தைக் கொண்டு நியாயம் தீர்ப்பார். வேதம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் புத்தகமாய் இருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவை பற்றின முழு வெளிப்படுத்தலாய் இருக்கிறது. அதனோடு ஒன்றும் கூட்டப்படவும் கூடாது அல்லது அதிலிருந்து எடுக்க படவும் கூடாது. அப்படி செய்வதற்கான அபராதம் உங்களுடைய பெயர் ஜீவ புத்தகத்திலிருந்து நீக்கப் படுவதாய் இருக்கிறது. சரியாக அந்த புத்தகத்திலே தரித்திருந்து அதில் நம்மை ஒரு பாகமாகும் படி ஜெபியுங்கள். 7இப்பொழுது ஒரு அடையாளம் என்பது என்ன என்று நாம் கண்டறிவோம். அடையாளம் என்பது செலுத்தப்பட்ட கிரயத்தின் அத்தாட்சியாக இருக்கிறது. அது நம்முடைய ரயில் பேருந்து போக்குவரத்துகளை போன்று நம்முடைய பயணத்தை எடுத்துக் கொண்டு நிலையத்திற்கு போகிறோம். அடையாள சீட்டுகள் உபயோகப்படுத்தப்படுகிற இடங்களில் பேருந்துகளின் பாதை அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் பயணத்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பயணத்தை பெற்றுக் கொள்ள முடியாது. அடையாள சீட்டைத்தான் அவர்கள் எடுக்கிறார்கள். உதாரணமாக ஆகாய விமானம் வேறு என்னவெல்லாமோ நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சீட்டுகள் விற்கும் மையத்திற்கு சென்று உங்களுடைய பணத்தை கொண்டு விலைக்கு இத்தனை அடையாள சீட்டுகள் இந்த குறிப்பிட்ட அடையாள சீட்டுகளை வாங்குகிறீர்கள். இந்த அடையாளம் உன்னுடைய பிரயாணத்தை நீ செலுத்தி விட்டாய் என்பதற்கு ஒரு அத்தாட்சியாய் இருக்கிறது. கப்பலில் ஏறிக் கொள்வதற்கோ பேருந்தில் ஏறிக் கொள்வதற்கோ வேறு என்னவாக அது இருந்தாலும் சரி, அந்த அடையாள சிட்டை நீங்கள் உடையவர்களாய் இருக்கும் வரைக்கும் உங்களுடைய பிரயாண கட்டணம் செலுத்தப்பட்ட ஆயிற்று, என்று காட்டி பிரயாணம் செய்ய உங்களுக்கு உரிமை அளிக்கிறது, அதை மறந்து விட வேண்டாம். 8இஸ்ரவேலின் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி தேவனுடைய தேவையாய் இருந்தது. யெகோவாவிற்கு ஒரு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒரு குற்றமற்ற பலியை தேவையாக இருந்தது. கடந்து போன வாரத்தின் ஊடாக நாம் பார்த்தது போன்று, தேவன் அவர் ஒரு தீர்மானத்தை எடுக்கும் பொழுது அதை ஒரு போதும் மாற்றுவதில்லை. அவர் ஒரு வழியை உண்டு பண்ணினார். மனிதன் விழுந்து போன போது அவர் செய்த முதலாவது காரியமாய் அது இருக்கிறது. அவன் திரும்புவதற்கு வழியை உண்டு பண்ண வேண்டியதாயிருந்தது. அவர் எப்பொழுதாவது அவரை மீட்டுக்கொள்ள விரும்பினால் ஒரு நிரபராதியான ஒன்றின் இரத்தத்தின் மூலமாய் மனிதனை மீட்டுக் கொள்ள வேன்டும் என்று ஒரு தீர்மானம் செய்தார். அவர் அதையே என்றென்றைக்குமாய் செய்தார், அவர் அதை மாற்றவே இல்லை. எந்த ஆராதிப்பவரையும் அவர் வேறு எந்த இடத்திலும் சந்திக்க மாட்டார். இரத்தத்தின் கீழ் மட்டுமே. அதுதான் அவருடைய ஒரே ஸ்தலமாய் இருக்கிறது. நம்முடைய வேத சாஸ்திரத்தின் கீழ், நம்முடைய ஸ்தாபனத்தின் கீழ், நம்முடைய கல்வி திட்டங்களின் கீழ், நாம் அவரை சந்திக்க முயற்சிக்கிறோம். சிலர் பெரிய கோபுரங்களை கட்டினார்கள், சிலர் பட்டணங்களை கட்டினார்கள். பாபிலோனும் பாபேல் கோபுரமும் எல்லா வித்தியாசமான காரியங்களையும் செய்தார்கள். ஆனால் அவை இன்னமும் இருக்கிறது. தேவன் உண்மையாக ஆராதிப்பவனை இரத்தத்தின் கீழ் மட்டுமே சந்திக்கிறார். அவர் அதை மாற்றுகிறதே இல்லை. மெதொடிஸ்ட்களாக இருக்க முடியாது, நாமெல்லாருமாக பெந்தெகொஸ்தேக்களாக இருக்க முடியாது, நாமெல்லாருமாக இதுவாக அதுவாக இருக்க முடியாது, கருத்து வேறுபாடு கொள்வோம். ஆனால் நான் ஒரு மனிதனிடத்தில் வரும்போது அவன் ஒரு கத்தோலிக்க குருவாக இருக்கட்டும் அல்லது அவன் என்னவாக இருந்தாலும் சரி. அவன் இரத்தத்தின் கீழ் இருக்கும் பொழுது நாம் சகோதரர்களாய் இருக்கிறோம். அவன் இரத்தத்தின் கீழ் இருக்கும் வரைக்கும் அவன் எங்கே இருக்கிறான் என்பதை குறித்து அக்கறை இல்லை. 9இஸ்ரவேலின் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி யெகோவாவின் தேவையாக இருந்தது. அந்த கிரியையானது செய்யப்பட்டாயிற்று என்பதன் அடையாளமாய் இரத்தம் இருந்தது. தேவன் மீட்பிற்கும் எகிப்திலிருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்வதற்கும் அவருக்கு ஒரு அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி தேவையாயிருந்தது. அந்த அந்தப் பிராணி ஆனது கொல்லப்பட்டு, அந்த மரித்த பிராணியின் இரத்தமானது, வாசல்களின் நிலை கால்களில் பூசப்பட்டிருக்க வேண்டும். யெகோவாவுக்கு தேவையானது நிறைவேற்றப்பட்டாயிற்று என்று என்ற காரியத்துக்கு அது அடையாளமாய் இருந்தது, புரிகின்றதா. ஆட்டுக்குட்டி அடையாளமல்ல இரத்தம் அடையாளமாய் இருந்தது. அந்த பலியிலிருந்து இரத்தம் வெளியேறியது. இப்பொழுது அவருடைய கட்டளை செய்யப்பட்டாயிற்று என்பதற்கு அந்த இரத்தமே அடையாளமாய் இருந்தது. இரத்தமானது அடையாளத்திற்காக நின்றது. விசுவாசியானவன் தேவை என்னவோ அதை சரியாக அப்படியே செய்தான் என்பதற்கு அத்தாட்சியாக இருந்தது. சரி விசுவாசியை கண்டு அதன் பிறகு ஆராதனையானது உன்னுடைய பலியோடு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது. இதோ இங்கே இருக்கிறது வீடும் ஆராதிக்கிறவனும் தேவையானது என்ன? ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியை அடியுங்கள். ஒரு பழுதற்ற ஆண் ஆட்டுக்குட்டி பரிசோதிக்கப்பட்ட பின்னர் 14ம் நாளன்று கொல்லப்பட வேண்டும். இஸ்ரவேலர் யாவரும் அதைக் கொன்று, அதன் இரத்தத்தை ஈசோப்பினால் எடுத்து, வாசல்களின் நிலை சட்டங்களில் பூசப்பட வேண்டும். 10பார்க்கும் போது ஈசோப்பு என்பது எங்கு விளையும் புல் பூண்டு ஈசோப்பு என்பதற்கு உங்கள் விசுவாசம் என்று அர்த்தமாகும். சில பேர்கள் இயற்கைக்கு மேம்பட்ட விசுவாசத்தை உடையவர்களாக இருக்க முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் உங்களுடைய சுகம் பெறுதல் தவறிப் போகிறது. விசுவாசம் என்பது ஒரு சாதாரண காரியமாய் இருக்கிறது சபைக்கு வருவதற்கு உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது. அங்கே நடந்து போக உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது, உங்கள் மோட்டார் வாகனத்தை துவக்க உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது, உங்களுடைய போஜனத்தை சாப்பிட உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது, அந்த விதமாகத்தான் அது இருக்கிறது. சாதாரண விசுவாசம் அந்த இரத்தத்தை பூசுவதற்கு ஈசோப்பை கொண்டு பூசப்பட்டது. பாலஸ்தீனாவில் எந்த இடத்திலும் விளைகின்ற சாதாரண புல் பூண்டு எதைக் காட்டுகிறது என்றால் ரத்தத்தை சொல்வதற்கு உபயோகப்படும் விசுவாசமானது ஏதோ மேம்பட்ட காரியமல்ல. அதாவது அதை செய்ய வேண்டுமாயின், நீங்கள் எல்லாவிதமான டாக்டர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும் என்பது அல்ல. தேவனை விசுவாசிக்கு அது சாதாரணமான அனுதின விசுவாசம் புரிகின்றதா ஈசோப்பை கொண்டு விசுவாசத்தினால் இரத்தத்தை பூசுங்கள். 11இப்பொழுது ஆராதிப்பவன், அப்படியானால் இரத்தத்திற்கு கீழாக காணப்படுவான். அவன் யெகோவாவின் தேவைகளைப் பூர்த்தி செய்து இருக்கிறான் என்பதை அது காட்டுகிறது. அவன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு இருக்கிறான். யெகோவாவிற்கு தேவையான அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியோடு அவன் அடையாளம் கண்டு கொள்ள பட்டிருக்கிறான் என்பதை காட்டுகிறது. கிரியை செய்யப்பட்டாயிற்று என்பதை கிறிஸ்துவும் விசுவாசியும் என்பதற்கு இன்றைக்கு என்ன ஒரு பரிபூரண மாதிரியாக இருக்கிறது. அடையாளமானது விசுவாசியினால் காணப்படும்படி செய்யப்படும் போது அதை ஏற்றுக் கொள்ளபட்டதென்றும் கிரியை என்பதையும் அது காட்டுகிறது. அப்படியானால் இரத்தமானது அடையாளம் கண்டு கொள்ள படுதலின் அடையாளமாய் இரத்தந்தானே இருக்கிறது. மிருக இரத்தம் சிந்தினது, மரித்தது, அதனுடைய இரத்தம் சுவற்றின் மேல் இருந்தது. இப்பொழுது மிருக ஜீவன் அந்த இரத்தத்தில் இருக்கிறது. நாம் அதை அறிந்திருக்கிறோம். வேதம் அந்த விதமாக ஜீவன் இரத்தத்தில் இருக்கிறது, விஞ்ஞானம் அதை நிரூபிக்கிறது. ஒரு அடையாளமாக நிற்கும் படியாக அந்த மிருகத்தின் இரத்தத்தின் ரசாயனமாக இருக்க வேண்டியதாய் இருக்கிறது. ஏனென்றால் அந்த இரத்தத்திலிருந்து ஜீவனால் அந்த விசுவாசியின் மேல் வர முடிகிறதில்லை. ஏனென்றால் அது ஒரு மிருகத்தினுடைய ஜீவனாய் இருக்கிறது. ஒரு மிருக ஜீவனும் ஒரு மனித ஜீவனும் முற்றிலுமாய் வித்தியாசமாய் இருக்கிறது. அதற்குள்ளாக அங்கே ஒன்றுமே இல்லை. நீங்கள் மிருகத்தின் இரத்தத்தை எடுத்து உங்களுக்குள்ளாக செலுத்த முடியாது, நீங்கள் மரித்துப் போவீர்கள். எனவே நீங்கள் பாருங்கள். மனித இரத்தத்தில் இருக்கின்ற ஜீவனை காட்டிலும் அந்த மிருகத்தின் இருக்கின்ற ஜீவனுக்கு ஒரு வித்தியாசம் இருக்கின்றது. ஏனென்றால் மனிதனுக்கு ஒரு ஆத்துமா இருக்கிறது, மிருகத்துக்கு ஆத்மா கிடையாது. 12இப்பொழுது ஆகையினால் இரத்தம் தன்னில் தானே இப்பொழுது புரிகின்றதா. சிகப்பு ரசாயனம், இரத்தத்தின் ரசாயனம் அங்கே வெளியே சட்டங்களில் மரித்துப்போன மிருகத்துக்கு அடையாளமாக நின்றாக வேண்டும். ஏனென்றால் செம்மறி ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் ஆராதிக்கின்ற மனிதனின் மேல் திரும்பி வர முடியாது. ஆனால் இன்றைக்கோ அது வெறுமனே ஒரு பாவனையாக இருக்கிறது. இன்றைக்கோ நம்முடைய செம்மறி ஆட்டு குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ரசாயனம் அல்ல. அது ஆனால் அது அந்த இரத்தத்தில் இருந்த ஜீவனாய் இருக்கிறது. அது பரிசுத்த ஆவியாய் இருக்கிறது. அது திரும்ப வருகிறது. நாம் ஏற்றுக்கொண்டு தேவன் செய்ய வேண்டும் என்று நம்மிடத்தில் கூறினதை சரியாக அப்படியே செய்தோம் என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. பின்னர் அந்த அடையாளத்தை உடையவர்களாய் இருக்கிற படியினால் நாம் கர்த்தருடைய பலியோடு பரிபூரணமாய் அடையாளம் கண்டுகொள்ள பட்டோம். இதற்கு மேலும் இன்னும் அதை இன்னும் தெளிவு படுத்தி எப்படி கூறுவது என்று எனக்கு தெரியவில்லை, புரிகின்றதா. 13அந்த வீடானது இரத்தத்திற்கு சொந்தமானது, இரத்தத்தின் கீழ் இருக்கிறது என்று எவரும் கூறுவதற்கு உண்டான ஒரே வழி அதுவே. ஏனென்றால் அந்த இரத்தத்தின் இராசாயனமானது அந்த வாசல்களின் மேல் இருந்தது. அவர்கள் கடந்து சென்றார்கள். மரண தூதன் நோக்கி பார்த்து இரத்தத்தை காண வேண்டியவனாக இருந்தான். இப்பொழுது அது மீண்டுமாய் பரிசுத்த ஆவியின் ஒரு பாவனையால் அது இருந்தது. இப்பொழுது, பாருங்கள். உண்மையான இரத்தம் நம் ஒவ்வொருவர் மேலும் வர முடியாது என்றால், அவருடைய சரீரத்தில் அவருக்கு அவ்வளவு இரத்தம் தான் இருந்தது. அவருடைய சரீரத்திலிருந்து பூமிக்குள்ளாக இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சொட்டினது. ஆனால் அது ஒரு அடையாளமாக இருக்கும். இப்படியாக அல்ல, ஜீவன் இரத்தத்திற்குள்ளாக இருக்கின்ற அந்த ஜீவன் இப்பொழுது அடையாளமாய் இருக்கின்றது. ஒரு நிமிஷத்தில் வேதப் பூர்வமாக அதை நிரூபிக்கிறேன். நாம் யெகோவாவின் தேவையை அந்தப் படியாக செய்தோம் என்பதையும் நம்முடைய பலியோடு அடையாளம் கண்டு கொள்ள பட்டிருக்கிறோம் என்பதை காட்டும்படியாக, நாம் ஒவ்வொருவர் மேலும் வர வேண்டியதா இருக்கின்ற அடையாளமாய் அது இருக்கிறது. 14பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று கூறினான். பாருங்கள். வெறுமனே அதை அவர்களுக்கு காட்டுகிறது அல்ல. கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும் அநேகர் தாங்களும் அழைக்கப்பட்டதாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஆனால் கர்த்தர் வரவழைக்கும் யாவருக்கும் எவர்களை அவர் முன்னறிந்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார், எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்கள் ஆக்கியும் இருக்கிறார், எவர்களை நீதிமான்கள் ஆக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார். ஏற்கனவே காரியமானது தீர்க்கப்பட்டாயிற்று. பின்னர் பரிசுத்த ஆவியானவர் இந்நாளுக்குரியது என்று விசுவாசியாக ஒரு நபரை நீங்கள் எடுக்கும் போது, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் உங்களுடைய பலியோடு தொடர்பாக இருக்கிறீர்கள் என்பதற்காக, சின்னமாகிய அந்த அடையாளத்தையே அவர்கள் மறுதலிக்கிறார்கள். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா. தேவன் அதை எழுதியுள்ள விதத்தில் நீங்கள் அதை நோக்குவீர்களேயானால் மிகவும் சாதாரணமாக இருக்கும். இப்பொழுது இரத்தமானது நம்மை சுமந்து கொண்டு போனது. அது பரிசுத்த ஆவியின் சின்னமாய் இருக்கிறது. 15அதுதான் ஜீவன் மிருக ஜீவனால் திரும்பி மனிதனுக்குள்ளாக வர முடியாது. ஏனென்றால் பொருத்தமாக இராது. மிருக ஜீவன், அதற்குள்ளாக ஆத்துமா கிடையாது. மனுஷ ஜீவன் ஒரு ஆத்துமாவை உடையதாய் இருக்கிறது. மிருக ஜீவனுக்கு தான் நிர்வாணியாய் இருப்பது தெரியாது. அதற்கு சரியானதற்கும் தவறானதற்கும் வித்தியாசம் தெரியாது. அதற்கு ஒரு ஆவி இருக்கிறது, ஆனால் ஒரு ஆத்துமா கிடையாது. இப்பொழுது நினைவிருக்கட்டும். ஆத்மாவானது ஆவியின் சுபாவமாக இருக்கிறது நிச்சயமாக. இப்பொழுது கவனியுங்கள், ஆனால் நம்முடைய பலியின் ஜீவனான இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது சிந்தப்பட்ட பொழுது, அவர் ஒரு மனிதனுக்குள்ளாக அடைக்கப்பட்ட தேவனாய் இருக்கிறார். யெகோவாக இருந்ததில் இருந்து அவர் இறங்கி மானிட வர்க்கத்தோடு தம்மை அடையாளம் காட்டும் படியாகவும், ஒரு மானிட ரூபத்தை தம்மேல் எடுத்துக் கொள்ளும் படியாகவும், நம்மை அவரோடு கூட அடையாளம் காட்டும் படியாகவும் கீழே வந்தார். அவரே தேவ ஆட்டுக்குட்டியாக இருந்தார். அவருக்குள்ளாகத்தான் இரத்தம் இருந்தது. 16இப்பொழுது யாரோ அவர் யூத இரத்தமாய் இருந்தார் என்று கூறுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். யூதர்கள் அதை கூறுகிறதே, நீங்கள் செவியால் கேட்கிறீர்கள். அவர் ஒன்று யூத இரத்தமும் அல்ல ஒரே ஜாதி இரத்தமும் அல்ல. அவர் தேவனின் இரத்தமாய் இருந்தார். ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள். இப்பொழுது உங்களில் அநேகரும், புராடெஸ்ட்டுகளும் அது மரியாளின் முட்டை என்றும் நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஹீமோகுளோபின் என்பது ஜீவன் இரத்தத்தில் வருகிறது. ஒரு கோழி முட்டையிடலாம், ஆண் கோழியுடன் இல்லாமல், அது குஞ்சு பொரிக்காது. ஏனென்றால் அதில் ஜீவன் இல்லை ஜீவனானது இரத்த ஓட்டத்தில் இருந்து அது ஒரு ஆணுக்குள் இருந்து வருகிறது. ஆனால் இந்தக் காரியம் ஏதும் ஆண்பால் இல்லை, எனவே அந்த இரத்தத்திற்கும் ஜீவன் தேவனிடத்திலிருந்து மட்டுமே வந்தாக வேண்டும். மரியாளின் கர்ப்பப்பையில் ஒரு இரத்த அனுவை சிருஷ்டித்தார். இப்பொழுது பாருங்கள், அவர்கள் சரீரமாயிருந்தது மரியாள் முட்டையை உடையவளாக இருந்தாள் என்று சொல்லுகிறார்கள். இல்லை ஐயா, அவளுடைய முட்டை அல்ல. அது ஒரு முட்டையாக இருந்தால், உணர்ச்சி வசப்படாமல் இந்திரியம் வெளிவராது. அப்படி அவருக்கு அவளுக்கு ஒரு உணர்ச்சி வசப்படுதல் இருந்தது, ஆனால் தேவன் என்ன செய்துக் கொண்டு இருந்தார் என்கிறீர்கள். அவர் முட்டை இரத்தம் இரண்டையும் சிருஷ்டித்தார். சரியாக அதுவாகத்தான் அவர் இருந்தார். நாம் தேவனை கைகளினால் தொட்டோம் என்று வேதம் கூறுகிறது, 1 தீமோத்தேயு 3:16 அன்றியும் தேவ பக்திக்குரிய ரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்கிறபடி மகா மேன்மை உள்ளது, தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டார். நம்முடைய கரங்களினாலே அவரை நாம் தொட்டோம். அந்த சரீரம் தேவனாய் இருந்தது. நிச்சயமாக அது தேவனாயிருந்தது. ஒரு மானுட உருவத்தில் முழுவதுமாக தேவனாய் இருந்தார். 17இப்பொழுது இதில் நான் கவனிக்கிறது என்னவென்றால், அந்த இரத்த அணு உடைக்கப்பட்டு, ஆதி தேவனை வெளிக்கொண்டு வந்தது. தேவன் கிறிஸ்துவுக்குள் உலகத்தை தம்மோடு ஒப்புரவாகிக் கொண்டார். அங்கே அதை வேறு ஒருவரும் செய்ய முடியாது. வேறு ஒன்றும் படவும் முடியாது. அந்தப் பரிசுத்த இரத்தத்தை தம்மைத் தாமே அதை எடுத்துக் கொண்டது. தேவன் தாமே கீழே இறங்கி வந்து மனிதனாக அவருடைய சொந்த நியமங்களின்படி பாடுபட வேண்டியதாய் இருந்தது. இயேசுவானவர் வெறுமனே ஒரு தீர்க்கதரிசியாய் தேவனிடத்தில் இருந்து பிடிக்கப்பட்ட ஒரு மனிதனாக இருந்தால், அப்பொழுது தேவன் அநியாயம் உள்ளவராய் இருக்கிறார். பில்லி மறுக்கத் தக்கதாக செய்த பாவத்திற்கு அல்லது வேறு ஏதோ காரியத்துக்கு ஏதோ அபராதமாய், சகோதரன் பிரண்ட் மறுக்க வேண்டும் என்று நான் கூறினால், அது நியாயம் உள்ளதாய் இருக்கும். நான் அறிவித்ததான தண்டனையின் படியாய் என்னுடைய சொந்த மகனை மறுக்கும்படி நான் செய்தால், அப்பொழுது அது நீதியானது அல்ல. என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நீதியான காரியம் இருக்கிறது. அது என்னவென்றால் நான் அவனை ரட்சிக்க விரும்புவேன். அவனுடைய ஸ்தானத்தை நான் எடுக்க வேண்டும். ஆவிகளின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமானால், தேவன் மாம்சம் ஆக ஆக்கப்பட வேண்டும். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். தேவன் தாமே அல்லாமல் அதற்கு குறைவாய் ஒன்றுமில்லை. இப்பொழுது உலகத்தின் பாவத்தை நீக்கும் படியாக அவர் இங்கே மாம்சத்தில் வெளிப்பட்டார். அவர் தம்மைத் தாமே நமக்கு உள்ளாக அடையாளம் கண்டு கொண்டார். அதன் மூலமாக நாம் அவருக்குள்ளாக அடையாளம் கண்டு கொள்ளும் படியாக, அதன் நோக்கத்தை புரிந்து கொண்டீர்களா. 18இப்பொழுது நம்முடைய பலியோடு நம்மை அடையாளம் கண்டு கொள்ளுதல். அந்த பலியின் ஜீவன் நமக்கு உள்ளாக இருக்கிறது. அது பரிசுத்த ஆவியால் இருக்கிறது. அந்த ரத்த அணுவானது உடைந்த பொழுது, அது தேவனை வெளிக்கொண்டு வந்தது. தேவனை வெளிக்கொண்டு வந்தது. அவருடைய சொந்த ரத்தத்தை கொண்டு, ஒரு ஜனத்தை அவர் பரிசுத்தப்படுத்தி, தேவனை மீண்டுமாக மனிதனுக்குள்ளாக வைத்தார். தேவன் உனக்குள்ளாக இருப்பது நித்திய ஜீவனாய் இருக்கிறது. நித்தியஜீவன் என்ற வார்த்தை, அந்த Z-o-e, Zoe என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது என்று எந்த கிரேக்க பண்டிதனும் அறிந்து இருக்கிறான். நான் அதற்கு அர்த்தம் தேவனுடைய சொந்த ஜீவன் என்பதாகும். அது உண்மை, ஜீவனை நீங்கள் உடையவர்களாய் இருப்பதற்கான ஒரே வழி அங்கே ஒரே ஒரு விதமான நித்தியஜீவன் தான் இருக்கிறது. அது தேவனுடைய சொந்த ஜீவன் உங்களுக்குள்ளாய் இருக்கிறதாக இருக்கிறது. புரிகின்றதா. அப்பொழுது நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருப்பீர்கள், ஏனென்றால் அவர் ஒருவர் மட்டுந்தானே, அங்கே இருக்கின்ற நித்தியமானதாய் இருக்கிறது. உலகத்துக்கு ஒரு அஸ்திபாரமோ அல்லது எந்த காரியமோ இல்லாததற்கு முன்னரே, நாம் அவருடைய சிந்தனையின் தன்மையாய் இருக்கிறோம். இவைகளையெல்லாம் அவருடைய சிந்தனைகளாய் இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் என்ன என்பதன் காட்டுகிறதாய் நாம் இருக்கிறோம். 19பாவத்தை எடுத்து போடும் படியாக அவர் கீழே இறங்கி வர வேண்டியதாயிருந்தது. வேறு ஒருவராலும் அதை செய்ய முடியாது. அதை செய்ய தக்கதாக வேறு ஒருவனும் பாத்திரவானாக இல்லை. அவராலேயன்றி வேறு ஒருவராலும் செய்யவே முடியாது. அதை அவர் செய்தார். பின்னர் அந்த ஜீவனானது அந்த சரீரத்திலிருந்து மனிதனிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட போது, அவரே தேவனுடைய குமாரன் ஆவார். அவருடைய சிருஷ்டிக்கும் வல்லமையானது ஒரு கட்டிடத்தை உண்டாக்கியது. எந்த ஒரு கட்டிட வேலையை ஒப்புக் கொண்டவன் போல, அதை கட்டி முடித்து, அதற்குள்ளாக தாமே சென்று விட்டார். தேவன் அதை செய்தார். பின்னர் அந்த ஜீவன் எடுக்கப்பட்ட பொழுது, ரத்தம் அதனுடைய ரசாயனமானது, ஆபேலின் ரத்தமானது பூமியின் மேல் சிந்தப்பட்டது போன்று பூமியின் மேல் ஊற்றப்பட்டது. ஆனால் அந்த ரத்தத்தில் இருந்து தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் வந்தார். அவர்களுக்காக மரித்த அந்த வலியோடு, அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் படியாக அது மனிதரிடத்தில், பெந்தேகோஸ்தே நாளன்று அனுப்பப்பட்டது. அதை நாம் பெற்றுக் கொள்ளும்படியாக அங்கே உலகத்தில் வேறு எந்த வழியும் கிடையாது. ஒரு நிச்சயமான அடையாளம். 20பாருங்கள், மரணத்திற்கு ஏதுவான குற்றத்தை உடையவர்களாய் இருந்தால், நீங்கள் மின்சார நாற்காலிக்கு போகிறீர்கள் என்பதை அறிந்து இருக்கிறீர்கள். நினைவிருக்கட்டும், அதை ஏற்க மறுத்தால். டல்லாசே கவனி, இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தத்தை, அவருடைய இரத்தத்தின் அடையாளத்தை ஏற்க மறுத்தால், நீங்கள் அதை கண்டு ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவருடைய இரத்தத்தை கரத்தில் உடையவர்களாய், நீங்கள் நியாயத் தீர்ப்பை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கும். பாவியே, சபை அங்கத்தினனே, அதை நினைவில் வையுங்கள். லீ ஓஸ்வால்ட், அந்த ஒரு சில நாட்கள் அவன் உயிரோட இருந்து, உச்சநீதிமன்றத்தை முகமுகமாய், வியர்க்க விருவிருக்க சந்திக்க நேர்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும். ஜனாதிபதியை கொலை செய்ததினால் அங்கே ஒரு துளி இரத்தம் கூட கிடைக்காது என்பதை அறிந்தவனாய், அந்த மனிதனுக்கு உணர்வு எப்படி இருந்திருக்கும். அது ஒரு பயங்கரமான காரியத்துக்குள்ளாக இருந்திருக்க வேண்டும். அவன் அதை ஒருபோதும் சந்திக்காதபடி ஆயிற்று. ஏனென்றால் இன்னொருவன் அவனை சுட்டு விட்டான். ஆனால் கோபமான உச்சநீதிமன்றத்திற்கு முன்பாக, உன்னுடைய உடன் இருப்பவனுடைய அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியின் இரத்தத்தை கரத்தில் உடையவனாய் அங்கே உட்கார்ந்து இருப்பதை, சற்று சிந்தித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை உடையவர்களாய் கடந்து போகிற ஜனங்களாகிய உங்களுக்கு, நீங்கள் தேவனுடைய நீதிமன்றங்களுக்கு முன்னால் நிற்கும்போது, இந்தக் காரியம் உங்களுக்கு லேசானதாக இருக்கும். நீங்கள் அதை அறிந்திருக்கும் பொழுதே அதை சரிபடுத்திவிடுங்கள். இந்த உலகத்தை விட்டு கடந்து போக முடிந்ததேயன்றி வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் தேவனோ நித்திய காலமாக உன்னை அவருடைய சமூகத்திலிருந்து எடுத்து போடுவார். அது ஒரு பயங்கரமான காரியமாக இருக்கும். கவனியுங்கள். 21குற்றவாளியாய் இருந்து நீங்கள் நீதிமன்றத்துக்கு வருவதாய் இருந்தால், நீங்கள் ஒரு மேலான வழக்கறிஞரை தேடி கண்டு பிடிப்பீர்கள். யாரும் அதையே செய்வார்கள். இந்த பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவன் எவ்வளவு அந்த வீட்டிலிருந்து வாழ்ந்திருந்தாலும் சரி, எனக்கு அக்கறை இல்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலான மன்னிப்பை அவள் ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் அவன் அதற்கு குற்றவாளியாக இருக்கிறான். மன்னிப்பு சரியாக இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்கு உள்ள அடையாளமானது, தன்னில் தானே உங்கள் மேல் இருக்கும் போதுதான், நீங்கள் அடையாளத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள். கவனியுங்கள், நீங்கள் குற்றவாளியாய் இருக்கிறீர்கள். உங்களுடைய வழக்கை வாதாட நீங்கள் ஒரு மேலான வழக்கறிஞரை தேடுவீர்கள். நான் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு போவதாக இருந்தால் எனக்கு எந்த ஆசாரியனும் தேவை இல்லை. எந்த மனிதனும் தேவையில்லை. என்னுடைய வழக்குக்காக வாதாட எனக்கு மேலான வழக்கறிஞரே. கிறிஸ்துவ நண்பனே, இதை நான் உனக்கு கூற அனுமதியுங்கள். நம்முடைய வழக்கறிஞர் நம்முடைய நீதிபதியாயும் இருக்கிறார். நம்முடைய நீதிபதி, நம்முடைய வழக்கறிஞர் ஆனார். அவருடைய மன்னிப்பை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, நம்முடைய வழக்கே முடிவடைந்து விடுகிறது. நியாயாதிபதி தாமே கீழே இறங்கி வந்து வழக்கறிஞர் ஆனார். வழக்கறிஞரும் நியாயாதிபதியும் அதே நபராய் இருக்கிறார்கள். மனிதன் மேல் அவர் வைத்ததான மரணத்தை, அவருடைய சொந்த மரணத்தினால், மனிதனை நீதிமானாக்கும்படிக்கு தேவன் மனிதனாக ஆனார். அல்லேலூயா, ஆதலால் அர்த்தம் என்னவென்றால் நம்முடைய தேவனை ஸ்தோத்திரங்கள், எல்லா ஸ்தோத்திரத்துக்கும் அவர் பாத்திரர். நம்முடைய நியாயாதிபதியும் வழக்கறிஞரும் அதே நபராக இருக்கிறார். 22நாம் மன்னிக்கபட்டோம் என்பதற்கு பரிசுத்த ஆவி அடையாளமாக இருக்கிறது. வழக்கு முடிக்கப்பட்டு விட்டது. பரிசுத்த ஆவியை உண்மையாகவே பெற்றுக்கொண்ட ஒவ்வொரு மனிதனும் ஸ்தீரியும், போதிக்கப்பட்டு அவனுடைய வழக்கறிஞரோடும், அவனுடைய நியாயாதிபதியோடும் அவனுடைய பலியோடும் அவன் அடையாளம் கண்டுகொள்ளபட்டு இருக்கிறான். மகிமைக்கு அவன் செல்வதற்கான கட்டணமானது செலுத்தப்பட்டாயிற்று என்பதை அவனிடமாய், அவன் வைத்துள்ள அடையாளம் எடுத்துக் காட்டுகிறது. ஆமென். அதெல்லாம் முடிந்து விட்டது. அவன் அந்த அடையாளத்தை உடையவனாய் இருக்கிறான். அது அவருடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகமாய் இருக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதலின் சாட்சியாய் இருக்கிறது. ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா, அதுதான் உங்களுடைய அடையாளம் கண்டு கொள்ளப்படுதலாய் இருக்கிறது. நீங்கள் அடையாளத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள். இப்பொழுது, நீங்கள் அந்த அடையாளத்தை உடையவர்களாய் இல்லை என்றால் நீங்கள் உள்ளாக வர மாட்டீர்கள். நீங்கள் அடையாளத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அதுதான் செலுத்தப்பட வேண்டிய கிரயமாய் இருக்கிறது. இரத்தத்தை நான் காணும்போது, இரத்தம் அடையாளமாய் இருக்கும். இரத்தத்தை நான் கண்டு உங்களை கடந்து போவேன். நீங்கள் அந்த அடையாளத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும், உடையவர்களாக நீங்கள் இல்லையென்றால் ஏன் நீங்கள் போகவே மாட்டீர்கள். நீங்கள் அடையாளத்தை உடையவர்களாக இருக்கத்தான் வேண்டும். 23அந்த அடையாளமானது காணும் படியாய் வைக்கப்படவில்லை என்றால், அடையாளமானது அங்கே கீழே காட்டப்படவில்லை என்றால், உடன்படிக்கையும் கூட அங்கே அவமாக்கப்படும். நீங்கள் சொல்லலாம், “நல்லது இப்பொழுது சகோதரன் பிரான்ஹாம் நீங்கள் சொல்கிறீர்கள், ”சரி, இப்போது ஒரு நிமிடம் காத்திருங்கள்.“ அது முற்றிலும் சரியே அடையாளமானது உடன்படிக்கைக்கு மேலாக இருந்தது. ஏனென்றால் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்ற ஒரு உடன்படிக்கையை இஸ்ரவேலர் உடையவர்களாய் இருந்தார்கள். எந்த யூதனானாலும் வெளியே சென்று எந்த நபரிடமும் நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருக்கிறேன் என்று என்னால் நிரூபிக்க முடியும். நான் ஒரு யூதன் யெகோவாவின் கட்டளையின் படியாய் நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டு இருக்கிறேன் என்று காட்ட முடியும். அப்படியாய் இருந்தும் அந்த அடையாளம் அங்கே இல்லை என்றால் அது அவனை தவிர் காது அவன் அடையாளத்தை காணும்படி வைக்க வேண்டும். உங்களுக்கு அது புரிகின்றதா. எப்படியாய் இருந்தாலும் நான் என் வாசலின் நிலை காலின் மேல் எந்த இரத்தத்தையும் பூச மாட்டேன். நான் ஒரு உடன்படிக்கையின் யூதன் என்று நிரூபிக்க முடியும் என்று எந்த யூதன் கூறினாலும் மரணத்துடன் அவனை பற்றிக் கொள்வான். அவன் எவ்வளவு நன்றி விசுவாசம் உள்ளவனாக இருந்தாலும், அவன் எவ்வளவுதான் சபை அங்கத்தினாக இருந்தாலும், எவ்வளவுதான் தசமபாகம் கொடுத்தாலும், சரி அவன் எவ்வளவுதான் யெகோவாவை விசுவாசிக்கிறேன் என்று கூறினாலும், சரி அக்கறை இல்லை. யெகோவா அந்த அடையாளம் தேவை என்கிறார். அவர் அதை இன்றைக்கும் கூட செய்கிறார். அது இருந்தாக வேண்டும். அது இருக்கத்தான் வேண்டும். ஏனென்றால் எவ்வளவுதான் நல்லதாய் இருந்தாலும், எவ்வளவு நன்றி விசுவாசமாய் இருந்தாலும், வானத்தின் கீழே அங்கே வேறு ஏதும் வழியே கிடையாது. வேறொரு நாமம் வேற எந்த வழியிலும் கொடுக்கப்படவில்லையே. அந்த அடையாளம் அங்கே இருந்தாக வேண்டும், காணும்படியாக இருக்கவேண்டும். 24இரத்தம், நீங்கள் கூறலாம் நான் ஆட்டுக் குட்டியை கொண்டு அதை நான் ஒரு ஜாடியிலே வைத்து இருக்கிறேன். நான் அதை அங்கே வைத்திருக்கிறேன் என்று அவர் கூறுவது அதுவல்ல. அது வாசலின் நிலைக்கால் சட்டங்களின் மேல் வேண்டும். அது காணும்படியாக இருக்க வேண்டும். அடையாளம் உங்களுக்குள் இருக்கிறது என்று உங்களுடைய ஜீவியம் எடுத்துக் காட்ட வேண்டும். ஓ உங்களைத்தான், பெந்தேகோஸ்தேக்களே உங்களுக்கு என்ன நேர்ந்தது. குட்டையாக வெட்டின தலைமயிர், வர்ணம் தீட்டப்பட்ட முகங்களும், மனிதனின் அசுசியான காரியங்களும், பரிசுத்த ஆவியின் அடையாளமான அந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இங்கே காணும்படியாக வைக்கப்பட்டிருக்கிறது. நீங்களோ ஒரு தேவ பக்தியின் வேஷத்தை தரித்து, பில்லி சூனியத்தையும், காரியங்களையும் தேவனுடைய கிரியைகள் என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். பில்லி சூனியத்தை நீங்கள் எப்படி அடையாளம் காட்ட போகிறீர்கள். நான் பெந்தேகோஸ்தே என்று நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் யார் என்பதை குறித்து எனக்கு அக்கறை இல்லை. நான் பாப்டிஸ்ட், நான் பிரஸ்பிடெரியன், நீங்கள் யார் என்பதை குறித்து எனக்கு அக்கறை இல்லை. அந்த அடையாளம் அங்கே இருந்தாக வேண்டும். தேவனுக்கு அது தேவையாயிருக்கிறது, அதைத் தவிர வேற எதுவும் வேண்டியது இல்லை 25நல்லது, நான் டாக்டர் பட்டம் உடையவனாய் இருக்கிறேன் என்று நீங்கள் கூறலாம். உங்களுக்கு எத்தனை பட்டங்கள் இருக்கிறது என்பதை குறித்து எனக்கு அக்கறை இல்லை. தேவனுக்கு அந்த அடையாளம் தேவையாயிருக்கிறது. அது மட்டும் தான் நீங்கள் செல்வதற்கான கிரையம் செலுத்தப்பட்டாயிற்று என்பதற்கு அது அடையாளமாக இருக்கிறது. அவர் உங்களுடைய சான்றிதழ்கள் அல்லது மற்ற ஏதோ காரியங்கள் எதையும் எங்கும் போகிறது இல்லை. அந்த அடையாளம் அவருக்கு அங்கே இருந்தாக வேண்டும். பேருந்துகாரன், இங்கே ஒரு நிமிடம் பொறு, அது என்னுடைய அடையாளம் அல்ல என்று கூறுகிறார். ஆகாய விமானக்காரன், நீ இப்பொழுது அங்கே வெளியே போ என்று கூறுகிறான். ஒரு சீட்டு அடையாளமாக இருக்கிறது. நீங்கள் அங்கே போய் விமான ஓட்டி இடம், எங்கே நான் உன்னுடைய விமானத்தில் போக கேட்கிறான். அதற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறுங்கள். அவன் உள்ளே போய் உங்களுடைய அடையாளச் சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என்பான். நான் உனக்கு பணம் கொடுக்கிறேன் என்று கூறுங்கள். அவன் நான் அதை கொள்ளக்கூடாது. நீங்கள் போய் கிரயத்தை செலுத்தி அடையாளத்தை வாங்கி வரும் வரைக்கும், உன்னை என்னுடைய விமானத்தில் ஏற்ற முடியாது. நான் அடையாளத்தை எதிர்பார்க்கிறேன் என்பான். நான் பள்ளிக்கூடத்துக்கு சென்றேன், நான் இதை செய்தேன் என்று நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது குறித்து எனக்கு அக்கறை இல்லை. உன்னிடத்தில் அடையாளம் இருந்தாக வேண்டும் அல்லது நீங்கள் அது ஏறி போவதில்லை. ஆமென், ஆமென். உங்களால் அதை புரிந்து கொள்ள முடியவில்லையா. தேவனுக்கு அந்த அடையாளம் தேவையாயிருக்கிறது. நான் இரத்தத்தை காணும்போது நான் அந்த அடையாளத்தை கண்ட பின்னர் தான் கடந்து போவேன். 26அதை காணும்படியாக இல்லை என்றால் உடன்படிக்கையின் அங்கீகாரத்தை அவன் பெறவேயில்லை. ஒரு யூதன் முற்றிலுமாக தான் நான் விருத்தசேதனம் பண்ணப்பட்ட யூதன் என்று நிரூபிக்க வேண்டும். சகோதரர்களை வெளியே கொண்டு போய், இங்கே பாருங்கள், நான் விருத்தசேதனம் பண்ணப்பட்டு இருக்கிறேன் என்று கூறவும் முடியும். அதனால் ஒரு காரியமும் இல்லை. நான் மெதடிஸ்ட், நான் பாப்டிஸ்ட், நான் பெந்தேகோஸ்தே, நான் இது, நான் அது என்று உங்களால் கூற முடியும். அதனால் ஒரு காரியமும் இல்லை. நீங்கள் அடையாளத்தை உடையவர்களாய் இருக்கத்தான் வேண்டும். அடையாளம் வரும்பொழுது, அது கிறிஸ்துவை சாட்சி பகர அது செய்யும் என்று அவர் கூறியிருக்கிறார். கிறிஸ்து வார்த்தையாய் இருக்கிறார். வேதாகமத்தின் ஒரு பகுதிதான் சத்தியம் என்று அதை மறுதலித்து, இன்னமும் நான் அடையாளத்தை உடையவனாய் இருக்கிறேன் என்று உங்களால் எப்படி கூற முடியும்? இயேசு கிறிஸ்துவை பற்றி மனசாட்சியே அடையாளமாக இருக்கிறதே. பாருங்கள். அங்கேதான் வியக்கிறேன். ஓ நான் விசுவாசிப்பதில்லை, அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டது என்று கூறலாம். ஓ வெளியே பாருங்கள். அங்கே எந்த அடையாளமும் இல்லை. அடையாளமானது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆமென் என்று இதை குறிக்கும். ஏனென்றால் அது தேவன் தாமாகவே இருக்கின்றது, சரி. 27ஆனால் அந்த அடையாளம் அங்கே இல்லை என்றால் உடன்படிக்கை அமலில் இருக்காது. அது தீர்ந்து போன தான் இருக்கும். இப்பொழுதும் அதே தான். நீங்கள் அதுதான் கூறினாலும் சரி, வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நான் விசுவாசிக்கிறேன். சகோதரன் பிரன்ஹாம் என்னால் பாதி வேதாகமத்தை முழுவதையுமே மனப்பாடமாக சொல்ல முடியும். அதில் ஒவ்வொரு துணிக்கையும் நான் விசுவாசிக்கிறேன் என்று எவ்வளவுதான் கூறினாலும் அக்கறையில்லை. நல்லது, சாத்தானும் கூட சொல்லுகிறான் அது தேவையாயிருக்கிறது நல்லது. சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய சுவர் நிறையும் அளவுக்கு எனக்கு பட்டங்கள் இருக்கிறது, எனக்கு பி ஏ பட்டம் இருக்கிறது, எனக்கு டாக்டர் பட்டம் இருக்கிறது, லத்தீனில் ஒரு பட்டம் வருகிறது. ஓ நான் புத்தகங்கள் எழுதி இருக்கிறேன், நான் இதை செய்திருக்கிறேன், நான் எல்லா காரியத்தையும் செய்திருக்கிறேன், நான் இந்த எல்லா காரியங்களும் செய்து இருக்கிறேன் என்று கூறலாம். எனக்கு அக்கறை இல்லை. அதெல்லாம் பரவாயில்லை ஆனால் இருந்தாலும் உங்களிடத்தில் அடையாளம் இருக்க வேண்டும். அடையாளம் இன்னமும் அடையாளம் தேவையாயிருக்கிறது. நான் ஒரு வேதாகம மாணவன், நான் ஒரு நல்ல நபர் அது என்று கூறலாம். அது ஒருக்கால் அருமையாய் இருக்கலாம். அது எல்லாம் நல்லது. ஆனால் இன்னமும் அது அடையாளத்தை உடையதாய் இருக்க வேண்டும். 28இப்பொழுது எகிப்தை எந்த நேரத்திலும் மரணம் தாக்க ஆயத்தமாய் இருக்கிறது. அதே விதமாக தேசத்தை எந்தநேரத்திலும் மரணம் தாக்க ஆயத்தமாய் இருக்கிறது. அன்னா ஜீன், ஒருசமயம் உன்னுடைய தகப்பனால் குறிப்பாக சொன்னதை போன்று நான் உணருகிறேன். அவர் உங்களுக்கு தெரியும், இந்த தேசம் அதே பாவங்களோடு அவள் செய்து கொண்டு இருக்கின்ற விதமாக, அமெரிக்காவை போக விட்டு விட்டால், அவர் சோதோம் கொமராவை எழுப்பி, அவர்களை சுட்டெரித்தற்காக, அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டவராய் இருப்பார் என்று சொன்னார். அது சரியே. நினைவிருக்கட்டும். இஸ்ரவேல் தான் செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் கிரையம் செலுத்தினார்கள். நாமும் அதே விதமாகத்தான் நாம் எவ்வளவு கவலையீனமாக காரியங்களை எடுக்கிறோம். ஆயுதங்களை சரிப்படுத்துங்கள். சபையே, தேவன் திரும்பி வரும் போது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இந்தக் காரியங்களை கூறவில்லை. ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். நீங்கள் விசுவாசியுங்கள். 29மரணம் தாக்க ஆயத்தமாய் இருக்கிறது. தேவன் அவருடைய வல்லமைகள், அடையாளங்கள், அற்புதங்கள் மூலமாக அவருடைய கிருபையை, அவருடைய இரக்கத்தை அவர்களுக்கு காண்பித்தார். (சபையே இன்றைக்கு அவர் வெளியே எடுப்பதற்கு முன்னும் அவர் அப்படியே செய்கிறார்) ஆனால் அவர்களோ இன்னமும் மனம் திரும்பாமலும், செய்தியை விசுவாசியாமலும் இருக்கிறார்கள். பாருங்கள் சபையை வெளியே எடுப்பதற்கு முன்பதாக அங்கே ஒரு செய்தி இருந்தது. எப்பொழுதுமே ஒன்று அங்கே இருக்க வேண்டும். இப்பொழுதும் அவ்விதமே ஒவ்வொரு ஆவிக்குரிய சம்பவமும் தேவனிடத்திலிருந்து வந்த ஒரு அடையாளமாய் இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா. செய்தியைப் போன்று அங்கே ஒரு அடையாளம் இருக்கிறது. செய்தியானது அடையாளத்தை பின்தொடர்ந்து வருகிறது. தேவன் மோசேயினிடத்தில், முதலாவது அடையாளத்தின் சத்தத்தை அவர்கள் விசுவாசியாமல் போனால் அவர்கள் இரண்டாவது அடையாளத்தின் சத்தத்தை விசுவாசிப்பார்கள் என்று கூறினார். 30இப்பொழுது அடையாளங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கண்டு, அதற்குப் பின்னால் ஒரு செய்தியும் வராமல், அதே பழைய வேத சாஸ்திரமாக இருந்து கொண்டு இருந்தால் அது தேவனிடத்திலிருந்து வந்தது அல்ல. ஆனால் அங்கே ஒரு அடையாளம் காண்பிக்க பட்டால், ஒரு செய்தி அதை தொடரும். இப்பொழுது பாருங்கள், இயேசுவானவர் காட்சியில் வந்தார். நான் உங்களை செவிடாக்கிறேனா அல்லது இந்த ஒலிபெருக்கியை கவனிக்கிறவர் யார்? சத்தம் திரும்பி வருகிறது போல, காணப்படுகிற ஒருவேளை சத்தம் சற்று அதிகமாக இருக்கலாம், நீங்கள் அதை பெற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். 31இயேசுவானவர் காட்சியில் வந்த போது, அவர் ஜனங்களிடத்தில் அதிகமானது கூறவில்லை. எல்லாரும் அவருடைய சபைக்கு அவர் வரவேண்டும் என்று விரும்பினார். ஓ இந்த வாலிப தீர்க்கதரிசி அவரை எங்கள் மத்தியில் வைக்க சந்தோஷப்படுகிறேன். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்திக் கொண்டு இருந்தார். தேவனுக்கு மகிமை, நமது மத்தியில் ஒரு மகத்தான மனிதனை தேவன் எழுப்பினார். அது அருமையாக இருக்கிறது. ஆக ஒரு நாள் அது கட்டிடத்திற்கு அதுதான் அவருடைய அடையாளமாய் இருந்தது. அது ஒரு அடையாளமாய் இருக்குமென்று ஏசாயா 35 கூறுகிறது. முடவன் மானை போல குதிப்பான், குருடர் பார்வை அடைவார்கள் முதலானவைகள் அது ஒரு அடையாளமாக இருந்தது. மேசியா முதலான அடையாளத்தை காணும்படி அவர் செய்தார். அவர்களில் அதிகமானவர்கள் ஆம் நான் அதை ஏற்றுக் கொள்வேன் என்றார்கள். இப்பொழுது அது ஒரு அடையாளமாக இருந்தால் அந்த அடையாளத்தின் ஒரு சத்தம் அங்கே உண்டாயிருக்க வேண்டும். அதற்குப் பின்னால் இருந்த சத்தம் என்ன அவருடைய உபதேசத்தை அவர் துவங்கின போது, அவர்களை புற்களின் மேல் உள்ள சர்ப்பங்கள் என்று அழைத்தார். அப்பொழுதிலிருந்து அவர் அவ்வளவாய் விரும்பப் படவில்லை. பாருங்கள், அடையாளத்தோடு சத்தம் வந்தபோது அடையாளம் முன்னதாக சென்றது. 32மோசே எகிப்திற்குள்ளாக ஒரு அடையாளத்தோடு சென்றான். அவனுடைய கோலை அவன் கீழே தூக்கி எறிய அது ஒரு சர்ப்பமாக மாறிற்று. அது அடையாளமாய் இருந்தது. ஆனால் கொஞ்சம் கழித்து அடையாளத்தோடு சத்தம் வருகிறது. அப்பொழுது அது வித்தியாசமாய் இருந்தது, பாருங்கள். அவர்களுக்கு அது தேவையில்லை. சத்தம் இருக்க வேண்டும். ஒரு அடையாளத்தை பின்தொடரும் அந்த நேரத்தைத் தவிர வேற எந்த நேரத்திலும் வந்திருக்க முடியாது. ஏனென்றால் வேத வார்த்தைகள் நிறைவேற வேண்டியதான நேரமாய் இருந்தது. பற்றி எரிந்து கொண்டிருந்த புதரில் அவனுக்கு அவர் என்ன சொன்னார் என்று பாருங்கள். என் ஜனங்களின் பெருமூச்சை கண்டும் ஆள் ஓட்டிகள் நிமித்தம் அவர்களுடைய உபத்திரவத்தை பார்க்கவே பார்த்து ஆபிரகாமுக்கு செய்த வாக்குத்தத்தத்தை நினைவு கூர்ந்தேன் என்றார். 2400 வருடங்கள் கடந்து விட்டது. அவர்கள் அங்கே இருப்பார்கள் என்று அவர் ஆபிரகாமுக்கு கூறியிருந்தார், பாருங்கள். வேறு எந்த நேரமுமாய் அது இருக்க முடியாது. சரியாக அந்த நேரத்தில் தானே மோசே வர வேண்டியதாயிருந்தது. 33தேவனுடைய பெரிய கடிகாரம் தவறாமல் ஓடுகிறது. ஒரு நிமிஷம் கூட வேகமாகவோ குறைவாகவோ ஓடாது. சரியாக சரியான நேரத்தை அப்படியே காட்டும், நல்லது. எனவே நீங்கள் பாருங்கள். எல்லா காரியங்களும் சரியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மற்ற நேரங்களில் வர முடியாது. இந்தக் காரியங்களும் கூட மற்ற நேரங்களில் வர முடியாது. லூத்தரன் நாட்களில் இது வந்து இருக்க முடியாது. வெஸ்லியின் நாட்களில் இது வந்து இருக்க முடியாது. பாப்டிஸ்ட் அல்லது மெத்தோடிஸ்ட் நாட்களில் வந்திருக்க முடியாது. அது வந்தாக வேண்டும். இஸ்ரவேல் ஒரு தேசமாக இருக்க வேண்டும். சபைகள் இப்பொழுது இருக்கிறது போன்று இருந்தாக வேண்டும். அங்கே ஒரு மூன்றாவது செய்தி ஒரு மூன்றாவது சபை காலம் இருந்தாக வேண்டும். ஒரு லவோதிக்கேயா அங்கு இருந்தாக வேண்டும் .பெந்தெகொஸ்தே வந்து அவர்கள் ஆதியில் நடந்து வெளியேறி ஸ்தாபனம் ஆகும் வரைக்குமாய் லவோதிக்கேயா உருவாக முடியாது. அவர்கள் செய்ததை செய்தார்கள். பின்னர் அது வந்தாக வேண்டும். அவர்கள் அவரை சபையை விட்டு வெளியேற்றி அகற்றிய பின்னர், கர்த்தர் வருகிறார், அவர் வார்த்தையாக இருக்கிறார். 34அவர்கள் அந்த வார்த்தையை எந்த இடத்திலும் சவாலிட பயப்படுகிறார்கள். அவர்கள் அதைப் பற்றி மிகவும் அமைதியாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் பற்றி வம்பு செய்கிறார்கள். சிகாகோ, இங்கே வெகு காலத்திற்கு முன்பு, கர்த்தர் எனக்கு தரிசனத்தைக் கொடுத்தார். என்னிடம் என்னிடம் முன்னூறு போதர்கள் இருந்தார்கள். நான் சொன்னேன், இப்போது நீங்கள் “சர்ப்பத்தின் வித்து” முதலானவகளைக் குறித்து என்னிடம் என்னவென்று கேட்கப் போகிறீர்கள் உங்களில் ஒருவர் உங்கள் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு வந்து என் பக்கத்தில் நின்று அதை இல்லையென்று நிரூபியுங்கள் என்று கூறினேன். அதுவரை கேள்விப்படாத மிக அமைதியான கூட்டமாயிருந்தது.. நான், “அப்படியானால் என் முதுகிற்கு பின்னே போங்கள்” என்றேன். பாருங்கள், அது அவர்களின் சிந்தனையின் கருத்துக்கள் புறம்பாக இருந்தது. இருந்த போதிலும் சகோதரன் பிரான்ஹாம் அபிஷேகம் பண்ணப்படும் போது தீர்க்கதரிசியாக இருக்கிறார். “ஆனால் அபிஷேகம் அவரை விட்டு நீங்கும் போது, ஓ, எனக்குத் தெரியாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். அது கலப்பான வேத சாஸ்திரிகளின் கலப்பான முத்திரையாயுள்ளது. தீர்க்கதரிசி என்ற வார்த்தையின் அர்த்தம் “ஒரு தெய்வீக வார்த்தைகளை வெளிப்படுத்துபவர்”. கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வருகிறது. அந்த விதமாகத்தான் இயேசு அடையாளம் கண்டு கொள்ளப் பட்டார். உயிர்த்தெழுதலுக்கு பின்னர் அவர்கள் அவர் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம், பாருங்கள். தேவனோடு அவன் இல்லாமல் எந்த ஒரு மனிதனாலும் இந்த காரியங்களை செய்ய முடியாது என்று கூறி பின்னர் செய்தியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் யோவானை ஏற்று கொள்ள மறுத்தார்கள். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். எலியாவையும் மற்றவரில் ஒருவனையும் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அவர்களோ தெய்வீக வெளிப்பாட்டை உடையவர்களாக இருந்தார்கள். 35வார்த்தை “தீர்க்கதரிசி” என்ற ஆங்கில வார்த்தை ஆங்கில வார்த்தைகள் எந்தவித அர்த்தத்தையும் கொடுக்கலாம். அதற்கு ஒரு “பிரசங்கியார்” என்று அர்த்தம். நீங்கள் பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசி என்று கூறும் பொழுது, அதற்கு ஒரு ஞானதிருஷ்டிகாரன் என்று அர்த்தம். அவனுடைய சான்றிதழ்கள் என்னவாக இருந்தது என்றால் அதாவது அவன் கூறினது நிறைவேறுதலுக்கு வருவது. அது அவன் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு ஒரு அறிகுறியாய் இருந்தது. எழுதப்பட்ட வார்த்தையின் தெய்வீக வெளிப்படுதலை அவன் உடையவனாய் இருந்தான் என்பதற்கு அது அறிகுறியாகவும் இருந்தது. பின்னர் தேவன் அதை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனுக்குப் பின்னால் அதை நிரூபிக்கிறார். எவ்விதமாக அது அந்த விதமாகத்தான் இருந்தாக வேண்டும். அவ்வளவுதான், அதைச் சுற்றிக் கொண்டு வரக்கூடிய தான வழி எதுவும் இல்லை. அது அந்த விதமாய் இருக்கும் என்று தேவன் கூறினார். அங்கே தான் காரியம், ஆனால் இன்றைக்கு அது அங்கே இருக்கிறது பாருங்கள். அந்த அடையாளம் அங்கே இருந்தாக வேண்டும். அது அந்த வார்த்தையை அடையாளம் காட்டி அதை அப்படியே சத்தியமாக ஆக்குகிறது. பின்னர் அதற்காக அவர் எப்படி வாக்களித்தார். அப்படியே வாக்களிக்கப்பட்ட தேசத்தின் ஜனங்கள் எல்லாரையும் அவர் எப்படி ஆயத்தப் படுத்தினார். அது ஒரு பாவனையாய் இருக்கிறது. 36இப்பொழுது இன்னுமொரு 15 20 நிமிடங்களில் இந்த செய்தியோடு வெளியே போக முயற்சிக்க போகிறேன். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் ஒருவேளை உங்களை நான் மீண்டும் காண முடியாமல் போகலாம், பாருங்கள். அவருடைய ஜனங்களை அவர் எப்படி ஆயத்தப்படுத்துகிறார் என்பதை இப்பொழுது, கவனியுங்கள். அவனுடைய வழிகளை அவர் ஒரு போதும் மாற்றுகிறதில்லை என்பதை எத்தனை பேர் அறிந்து இருக்கிறீர்கள். அவர் ஒருபோதும் செய்வதில்லை. வேதத்தின் ஊடாக பார்த்து, அவர் எப்பொழுதாவது மாற்றி இருக்கிறாரா என்று பாருங்கள், இல்லை ஐயா. அவர் ஜனங்களை எப்படி ஆயத்தபடுத்துகிறார். முதலாவதாக அவர் ஒரு தீர்க்கதரிசியை ஒரு அடையாளத்தோடு அனுப்பினார். அது மோசமாக இருந்தது. அது சரிதானே, அந்த அடையாளம் ஒரு செய்தியை உடையதாய் இருந்தது. ஆயத்தப்படுத்துவதற்கான ஒரு செய்தி. வாக்களிக்கப்பட்ட தான ஒரு தேசத்திற்கு அவர்களை வெளியே கொண்டு போய் கொண்டிருந்தது. பின்னர் அவர் இந்த தீர்க்க தரிசனத்தை பற்றின ஒரு அடையாள குறியை உடையவராய் இருந்தார். அதாவது அவனுக்கு மேலாக அங்கே ஒரு வெளிச்சம் இருந்தது. ஒரு அக்னி ஸ்தம்பம் இந்த தீர்க்கதரிசியை பின் தொடர்ந்தது. மோசேயோடு கூட வனாந்தரத்தினுடாக அது சென்றது. நாம் அதை அறிந்து இருக்கிறோம். நாம் அதை உணர்ந்து கொண்டோம். பின்னர் அவர்கள் பயப்படாமல், குழம்பாமல், தளர்ச்சியடையாமல் இருக்கும்படியாக அந்த நிச்சயத்திற்கு அவர்களுக்கு அவர் ஒரு அடையாளத்தை கொடுத்தார். அதில் அவர் நான் அந்த அடையாளத்தை காணும்போது நான் கடந்து போவேன் என்று கூறினார். 37இப்பொழுது அவர் அதை எப்படி செய்தார் என்பதை கவனியுங்கள். அவர் முதலாவது ஒரு அடையாளத்தை, ஒரு செய்தியாளனை அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட செய்தியை, செய்தியாளனின் அடையாளத்தை, அதற்கான கிரையம் செலுத்தப்பட்டாயிற்று என்பதற்கான நிச்சயத்தின் ஒரு அடையாளத்தை ஆயத்தப் படுத்தினார். அவர்கள் ஒரு வாக்களிக்கப்பட்ட தேசத்தை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறார்கள். அதே காரியத்தை அவர் இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறார். அவர் என்ன செய்தார். அவர் நமக்கு பரிசுத்த ஆவியை அனுப்பினார். பரிசுத்த ஆவியானவர் செய்தியாளனாக இருக்கிறார். அவரைப் பற்றின வேதபூர்வமான நிரூபனங்கள் நமது மத்தியில் அவரை நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக பொருத்தி காட்டுகிறது. அடையாளமானது உறுதிப்படுத்தலாய் இருக்கிறது. நாம் எதை குறித்து பயப்படுகிறோம். நம்முடைய பயணக்கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டாயிற்று நம்முடைய பலியோடு நாம் அடையாளம் கண்டு கொள்ள பட்டோம். உங்களை நாங்கள் தள்ளி விட மாட்டோம். அவர் அதை வாக்களித்திருக்கிறார். நாம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு இருக்கிறோம். 38இஸ்ரவேல் எகிப்திலிருந்து வெளியே வந்ததை நான் கூறியது போன்று, சபையை விட்டு மணவாட்டி வெளியே வருவது போன்று இருக்கிறது. மோசே அவருடைய ஊழியத்தை துவங்கிய போது இஸ்ரவேலர் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஜெபத்திற்காகவும், ஐக்கியத்திற்காகவும், எகிப்தின் எல்லா பாகங்களிலிருந்து கோசேனிலே ஒன்று கூடினார்கள். அந்த விதமாகத்தான் மணவாட்டி செய்வாள் ஒருத்துவதிலிருந்தும் இருத்துவத்திலிருந்தும் திரித்துவத்திலிருந்தும் மற்ற எல்லா விதங்களிலிருந்தும் மணவாட்டியானவள் வெளியே வருவாள். அது வெளியே வரும். அது வந்தாக வேண்டும். இப்பொழுது நாம் இங்கே எபிரேயரில் வாசிக்கிறோம். இப்பொழுது நாம் சிந்திக்க வேண்டிய முதலாவது காரியம் எல்லா பாகங்களிலிருந்தும் வந்தது. அவிசுவாசத்தின் மத்தியிலிருந்து வெளியே வருதல். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் கடைசி நாட்களில் அவாசிகளின் மத்தியிலிருந்து வெளியே வாருங்கள் என்று அழைப்பதாக வாக்களித்திருக்கிறார், கவனியுங்கள். 39எபிரேயர் 10 : 26 நாம் காண்கிறோம். நான் இங்கே எழுதி வைத்திருக்கிறேன். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்களாய் இருந்தால் பாவங்களின் நிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இல்லை என்று அது கூறுகிறது. மனப்பூர்வமாய் நீங்கள் அவிசுவாசித்தால். இப்பொழுது நான் இங்கே சொல்லகூடியதற்கு நீங்கள் கவனித்திருப்பீர்களானால், நான் இந்த உதாரணத்தை கூறும் வரைக்கும், உங்களால் ஒரு நிமிடத்தை கொடுக்க முடிந்தால் நலமாயிருக்கும். அது சரியாக போகவில்லை என்பதை என்னால் ஆவிக்குள் உணர முடிகிறது புரிகின்றதா, கவனியுங்கள். 40இதோ இருக்கிறது எபிரேயர் அவர்கள் போய்க் கொண்டிருக்கும் பாதையில் இருக்கிறார்கள். தேவன் 12 மனிதர்களை தேர்ந்தெடுத்தார் அல்லது தேசத்தை வேவு பார்க்கும் படி அனுப்புவதற்காக தேவனுடைய கரத்தைக் கொண்டு மோசேயை தெரிந்து கொண்டார். அவர்கள் திரும்பி வருகையில் அந்த தேசத்தின் அடையாளமாக ஒரு அடையாளத்தை திருப்பிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் அங்கே அங்கே சென்ற பொழுது 10 பேர்கள் மரணத்திற்கு ஏதுவான பயம் அடைந்தார்கள். அவர்கள் ஏன் அங்கே இருக்கின்ற அமலேக்கியர்களுக்கும் வெட்டுக் கிளிகளை போன்று நாம் இருக்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். யோசுவாவும் காலேபும் நம்மால் அதை செய்ய முடியும் என்ற அந்த அத்தாட்சியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார்கள். நீங்கள் பாருங்கள், அதுதான் எல்லைக்கோடு விசுவாசிகள். இந்த வித்தியாசமான காரியங்களில் ஊடாக, எல்லாம் சபையின் ஊடாக, சபையில் சேர்ந்து கொள்வது, ஞானஸ்நானங்கள் வேஷங்கள் இவைகளின் ஊடாக அவர்கள் வந்தார்கள். ஆனால் அந்த தேசம் அங்கே இருக்கிறது என்பதின் அக்காட்சியை, அந்த ஜீவனை இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை என்ற அடையாளத்தை, அங்கே கடந்துபோய் கொண்டு வர வேண்டும் என்பதற்கு வந்தபோது அது இன்னொரு பரிமாணமாய் இருந்தது. அவர் அதில் ஜீவிக்கிறார். அவர் நம்மோடு இருக்கிறார். இப்பொழுது அவர் நமக்குள்ளாக இருக்கிறார். அந்த நிலைக்கு அவர் வரும்போது அதை அவர்களால் சுவாசிக்க முடியாது. அதை மிஞ்சினதாக இருக்கிறது. நீங்கள் பாருங்கள், அவர்கள் திரும்பி வந்து விட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வனாந்தரத்திலே மாண்டு போனார்கள். அவர்களில் ஒருவர் கூட கடந்து போகவில்லை, பாருங்கள். நாம் அவிசுவாசிப்போமானால் மெத்தொடிஸ்ட்கள் பாப்டிஸ்டுகள் பிரஸ்பிடெரியன்கள்! 41என்னுடைய பழைய உபாத்தியாயர் இன்றைக்கு இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் என்று நம்புகிறேன். டாக்டர் ராய் டேவிஸ் உங்களில் அநேகருக்கு அவரை தெரியும். அவர் இங்கே தான் இருக்கிறார். ஒருக்கால் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கலாம். அநேகம் அநேகம் வருஷங்களுக்கு முன்னர், நாங்கள் இந்த காரியங்களை குறித்து விவாதித்தது எனக்கு நினைவு இருக்கிறது. ஒரு மிஷினரி பாப்டிஸ்ட் சபையில் அவர் என்னை விசுவாசத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார். இப்பொழுது இங்கே நோக்கிப் பாருங்கள். நாம் எந்த எல்லைக்கோடு மட்டுமாய் வந்திருந்தால், நாம் தேவனுக்கு மகிமை, நான் பாஷைகளில் பேசினேன் அல்லேலுயா என்று கூறுவோம். அதுவல்ல காரியம் இதில் எந்த வார்த்தையாவது அவிசுவாசித்தாலோ என்று உங்களால் சொல்லக் கூடுமானால் அங்கே உங்களுடைய அனுபவத்தில் ஏதோ காரியம் தவறாக இருக்கிறது, புரிகின்றதா. நீங்கள் நேராக அந்த தேசம் மட்டுமாக வந்து அது அங்கே இருக்கிறதா என்று பாருங்கள். இயேசு கிறிஸ்து எழும்பினதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் நமது மத்தியில் இருக்கிறார். செய்தியை பின்தொடர்ந்து வருகிற வார்த்தையை நீங்கள் கேட்கிறீர்கள். இருந்தபோதிலும் நீங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை. என்ன சம்பவிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? பின்னர் அவர்கள் அங்கேயே வனாந்தரத்தில் மரித்துப் போனார்கள். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நான் மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்கள் இருந்தால் பாவங்களின் நிமித்தம் செலுத்த தக்கதாக வேறொரு பலி இல்லை, அதுதான் எபிரேயர் புத்தகம் நமக்கு கூறுகிறது. 42இப்பொழுது கவனியுங்கள். பூமியின் மேல் மகத்தான கடைசிகால அடையாளங்களை நான் காண்கையில் அவர் அதை வாக்களித்திருக்கிறார். எவ்வளவு அதிகமாக எச்சரிக்கிறது. விசுவாசத்தை ஒழித்து விடுங்கள். ஒன்று கூடி வாருங்கள். நாம் ஒருவரை ஒருவர் நேசித்து விசுவாசித்து, உலகத்திலிருந்து நம்மை நாம் வேறு பிரித்துக் கொள்வோம். கவனியுங்கள். அவர்கள் வெறுமனே ஒன்று கூடி வந்து செய்தியை குறித்து பேசுவதற்காக அல்ல. அவர்கள் அதற்குள்ளாக செல்ல இரத்தத்தின் கீழாக போக வேண்டியதாய் இருக்கிறது. பாருங்கள். உங்களுக்கு தெரியுமா? மோசே எங்களுக்குச் சொன்னார், செய்தியாளன் அவர் சொன்னார், நாங்கள் இரத்தத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதைக் குறித்து பையன்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்வதற்காக அல்ல, அதுவல்ல. அது ஆட்டுக்குட்டியை நீங்கள் கொல்ல வேண்டும். இரத்தத்தை நீங்கள் உயரே பூசவேண்டும். நான் வந்து உட்கார்ந்து வார்த்தையோடு ஒத்துப் போய் செய்தியை குறித்து பேசலாம். ஆனால் அடையாளம் நம்மிடத்தில் இல்லை. அது நமக்கு என்ன நன்மையை செய்ய முடியும். ஒரு நன்மையையும் இல்லை. அதற்கு அடியில் செல்லுங்கள். அந்த இரத்தத்திற்கு கீழாக இல்லாத எவர் ஒருவருக்கும் அவர் பொறுப்பாளி அல்ல. 43அடையாளத்தின் கீழ் இருக்கும் பொழுது தான் முழு குடும்பமும் பாதுகாவலாக இருக்கிறது. அடையாளமோ காணும் படியாய் வைக்கப்பட்டிருக்கிறது. குடும்பம் முழுவதுமாய் நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இன்றைக்கு நாம் அதை ஞாபகத்தில் வைக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜனங்களே நம்முடைய பிள்ளைகள். நமக்கு இருந்து கொண்டு இருக்கின்ற இந்த இருபது வயதுக்குட்பட்ட அடுத்தமற்றதும், ராக்கண்ட்ரோலும், காரியங்களும், இங்கே இருக்கின்ற இந்த எல்லா இவைகள் எல்லாம் எங்கே புத்தகத்தில் வேதாகமத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா. வெளிப்படுத்தல் அதை அது கூறுகிறது. நிச்சயமாக அது செய்கிறது. எப்படி ஜனங்கள் அவர்கள் மரித்து போயிருக்கிறார்கள். அவர்களால் எழும்ப முடியாது. அவர்கள் ஒருபோதும் நித்தியமாய் இல்லை. அவர்கள் சிந்தனையில் கூட இருந்ததில்லை. எனவே அவர்கள் அழிந்து போவார்கள். அவர்கள் என்றென்றைக்குமாய் இல்லாமல் போவார்கள். முற்றிலுமாய் அழிக்கப்பட்டு போவார்கள். அதை செய்தவர்களுக்கு அவர்கள் காலா காலங்களாக தண்டிக்கப்படுவார்கள். ஆனால் துவக்கத்தை உடைய காரியமும் ஒரு முடிவை உடையதாய் இருக்கிறது. அது, எது என்றால் துவக்கமே இல்லாததற்கு முடிவு கிடையாது. அங்கே ஒரே ஒரு விதமான நித்தியஜீவன் தான் இருக்கிறது. அதற்காக நாம் பிரயாசப் படுகிறோம், கவனியுங்கள். 44யோசுவா இரண்டாம் அதிகாரம் யோசுவா விசுவாசிக்கிற புறஜாதியான வேசி கேள்விப்பட்டாள். அவருடைய குடும்பத்தாரை அந்த சிவப்பு கயிற்றின் கீழாக கொண்டு வந்தாள். இது யோசுவாவின் தூதர்களிடத்திலிருந்து அவள் பெற்ற தான அடையாளமாய் இருந்தது. தேவனுடைய சங்கார தூதன் அந்த அடையாளத்தை, அவள் மட்டும் அந்தப் பட்டணத்தில் கனம் பண்ணுவாள். தேவனுக்கு இந்த அடையாளம் தேவையாயிருந்தது. அந்த ஒன்று மட்டுமே தேவையாக இருந்தது என்று அவருடைய ஊழியக்காரர்களால் கூறப்பட்ட அந்த தேவனுடைய தேவைகள் அங்கே இருந்தது. அதை அந்தப் பட்டணத்தின் இருந்தாலும், இந்த படத்தில் உள்ள மிகப் பரிசுத்த மனிதனாய் இருந்தாலும், அவர்கள் அந்தப் பட்டணத்தின் மிகுந்த பெரிதான சபைக்கு போகிறவர்களாய் இருந்தாலும், அக்கறை இல்லை. அந்த வீட்டைத் தவிர மற்ற எல்லா காரியங்களும் விழுந்து போயிற்று. தேவன் தனித்தவராய் அந்த அடையாளத்தை கனப்படுத்தினார். கவனியுங்கள். தேவன் மகத்தான காரியங்களைச் செய்கிறார் என்று எரிகோ கேள்விப்பட்டது. ஆனால் அந்த எச்சரிக்கைக்கு அவர்கள் கவனம் செலுத்தவில்லை. 45அதே விதமாக தான் இன்றைக்கு ஜனங்கள் கடந்த ஒரு சில வருடங்களாக தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை செவியால் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சோதோமின் நாட்களில் இருந்தது போலவே, அது சம்பவிக்கும் என்று அவர் வாக்களித்துள்ளது போலவே, இந்தக் கிருபையும் மகத்தான வல்லமையும் அடையாளங்களும் இருக்கிறது. அந்தக் காரியம் இருக்கும் என்று எப்படியாய் வாக்களித்திருக்கிறார். சோதோமில் என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். அங்கே சோதோமின் அடையாளம் இருந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆனால் மல்கியா 4ன் தூதனானவனோ ஜனங்களுடைய இருதயங்களை பிதாக்களுடைய பெந்தேகோஸ்தே பிதாக்களுக்கு வேதத்துக்கு திரும்புவான் என்பதை செய்ய வேண்டியவனாக இருக்கிறான். இதற்கு மேலும் வேதத்தில் வேறு ஏதாவது காரியம் இருக்கப்போவதில்லை. இது தேவனைப் பற்றின முழு வெளிப்பாடாக இருக்கிறது. யாரோ ஒருவர் நான் இந்தப் பகுதியை விசுவாசிக்கிறேன். அதை குறித்து எனக்கு தெரியாது என்று கூறினார். உண்மையான தூதனானவன் உங்களை அப்படியே அந்த முழு காரியத்துக்கும் திருப்புவான், புரிகின்றதா. கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் அதைத்தான் செய்கிறார். தேவனுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் உங்களை திருப்பிக் கொண்டு வருகிறார். 46அவருடைய கிருபையானது காட்டப்பட்டாயிற்று. அடுத்தது அவருடைய நியாயத்தீர்ப்பு தான். எரிகோவில் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய மகத்தான ஸ்தாபன கட்டடங்களில் அவர்கள் பாதுகாவலாக இருக்கிறோம் என்று அவர்கள் நம்பி இருக்கக் கூடும். ஆனால் அது அந்த விதமாக கிரியை செய்யவில்லை என்று அவர்கள் கண்டறிந்தார்கள். அங்கே ஒரு சில பேர்கள் இருந்திருக்க வேண்டும். ஏதோ விதத்தில் அவர்கள் உள்ளே வந்திருக்கலாம். அங்கே ஒரு சில பையன்கள் உள்ளே இருந்தார்கள். எல்லா முன் குறிக்கப்பட்ட வித்துக்களையும் ஒன்றாக கூட்டும் படி கூறினார்கள். அவளுடைய வீட்டை அவள் ஒரு சபைக்காக உபயோகப்படுத்தி, தூதர்களை அவள் ஏற்றுக் கொண்டாள். பின்னர் விசுவாசிக்க கூடியவர்களாய் அவர்களுடைய பட்டணத்தில் இருந்த யாவரையும் அந்த அடையாளத்தின் கீழாக கொண்டு வந்தாள். 47ஒரே ஒரு ஸ்தீரி அந்த ஒரு மகத்தான முழு சமுதாயத்திலே ஒரு சிறிய ஸ்தீரி. அவளும் அவளுடைய துர்கீர்த்தியினால் ஒருக்கால் அந்த பட்டணத்தில் இருக்கும் எல்லா சபைகளிலும் சபைக்கு உருவாக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் அவள் அந்த தூதனை விசுவாசித்தாள். அந்த தூதன் அந்த அடையாளத்தை அந்த சின்னத்தை வைத்து போனான். தேவன் அந்த அடையாளத்தை கனப்படுத்தினார். இன்றைக்கும் அந்த விதமாகவே இருக்கிறது, நினைவில் வையுங்கள். தேவனுடைய கோபாக்கினையின் சங்காரக்காரனான அவன் வந்த போது அந்தப் பெரிய ஒழுங்கு விழுந்தது. அந்த அடையாளம் அவளுடைய வீட்டை பத்திரமாய் காத்து, அவள் ஒரு நல்ல ஸ்தீரி என்ற காரணத்தினால் அல்ல. ஏனென்றால் அவரிடத்தில் விசுவாசம் இருந்தது அவள் அடையாளத்தை பிரயோகித்தாள். இப்பொழுது, அவள் ஆம், அவர்கள் நல்ல மனிதர்கள் தான். அவர்கள் கொடுத்த அந்த செய்தியை நிச்சயமாய் ரசித்தேன். ஆனால் உத்தமமாக என்னுடைய அந்த ஜன்னலில் அந்தக் கயிறு தொங்கிக்கொண்டு இருக்கிறதே. அது ஏதோ ஒரு விதமாக அற்பமாய் காணப்படுகிறது. அதுதான் உள்ளே எடுத்து விடுகிறேன் என்று கூறி இருந்தால் அது விழுந்து போய் இருக்கும். அது விழுந்து போயிருக்கும். தேவன் அந்த அடையாளத்திற்கு கனத்தை கொடுத்தார். எகிப்தில் இருந்த ஜீவ அடையாளத்தை போன்று. 48யோசுவா இயேசுவின் ஒரு பாவனையாய் இருந்தான். ஏனென்றால் யோசுவா என்றால் யெகோவா இரட்சகர் என்று அர்த்தம். இயேசுவுக்கு ஒரு பாவனையாக அவன் இருந்தான். அவனுடைய தூதன் பிரசங்கித்ததான அடையாள சின்னத்தில் உண்மையாய் இருந்தான். யோசுவா அந்த அடையாள சின்னத்திற்கு உண்மையாய் இருந்தான். எகிப்தில் அதற்கு அடியில் இருந்த யாவும் இரட்சிக்கப்பட்டது. எரிகோவில் அதற்கு கீழாக இருந்த யாவும் இரட்சிக்கப்பட்டது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் இன்றைக்கு அடையாளமாய் இருக்கிறது என்பதற்கு, இன்றைக்கு பரிசுத்த ஆவியானது அடையாளமாய் இருக்கிறது. அதற்கு கீழாக இருக்கின்ற யாவும் பாதுகாவலாக இருக்கும். அதற்குக் கீழாக இல்லாத யாவும் பாதுகாவலாக இராது. எபிரேயர் 13 ஆம் அதிகாரம் 10, 20 வசனங்களில் அவர் நித்திய உடன்படிக்கை என்று அழைக்கின்றார். பழைய உடன்படிக்கை ஒரு காரியமாக இருந்தது, இது புதிதாக இருக்கிறது. நித்திய உடன்படிக்கை இருக்கிறது. 49தேவனுடைய இரத்தக்கட்டுக்குள்ளான வாக்குத்தத்தங்கள் பாவத்திலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது. உலகத்தின் மற்றவர்களிடத்திலிருந்து வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது. நீங்கள் ஒன்றும் வித்தியாசமாய் உடுத்திக் கொள்ள வேண்டியதில்லை. யாரும் வித்தியாசமாய் உடுத்திக் கொள்ளலாம். ஆனால் உங்களுக்கோ வித்தியாசமானது உள்ளாக இருந்தாக வேண்டும். ஜீவியமானது உள்ளாக இருக்கிறது உடுத்திக் கொள்வதோ அணிந்து கொள்வதோ அல்ல. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்பும் அல்லது ஆபரணங்களை அணிவதோ அல்ல. ஆனால் அது ஆவிக்குள்ளாக நீடிய பொறுமை, நற்குணம், தயவு, சந்தோஷமாக இருக்கிறது. இப்பொழுது வாக்குத்தத்தங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கி தேவன் உன்னுடைய பாவங்களை எண்ணாமல் விட்டு விட்டார். அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. எவனுடைய பாவத்தை தேவன் எண்ணாதிருக்கிறாரோ அவன் பாக்கியவான் என்று தாவீது கூறியிருக்கிறான். அந்த அடையாளத்தின் மேல் தேவன் ஒருபோதும் பாவத்தை எண்ணாதிருப்பார். ஏனென்றால் தேவன் ஏற்கனவே பெற்றுக் கொண்டாய் என்பதின் கிரயத்தின் அத்தாச்சியாய் அடையாளம் இருக்கிறது. அதற்கான அடையாளத்தை நீங்கள் உடையவர்களாக இருக்கிறீர்கள். உங்களுடைய விசுவாசமானது அதை வாங்கி விட்டது. அவரை ஆராதிக்கும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் வல்லமைகளையும் காட்டவும். உங்களுடைய சரீரத்தில் உங்களுடைய மீட்பின் வாங்கின கிரயத்தை நீங்கள் உடையவர்களாய் இருக்கிறீர்கள். 50புதிய ஏற்பாடு என்றால் புதிய உடன்படிக்கை என்று அர்த்தம். இரத்தம் என்றால் ஜீவன் என்று அர்த்தம். புதிய ஏற்பாடு என்பது பரிசுத்த ஆவியின் உடன்படிக்கையாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து என்னை எழுப்பினார். அதை சாட்சி கொடுப்பது தான் பரிசுத்த ஆவியாய் இருக்கிறது. நமக்காக இயேசுவானவர் எல்லா தேவைகளையும் சந்தித்து உன்னோடு இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அவருடைய வாக்குத்தத்தத்தின் படியாக நம்மோடு அவரைத் தாமே அடையாளம் காட்டும் படியாக அவர் ஜீவிக்கிறார் என்பதை அடையாளம் நிரூபிக்கிறது. இப்பொழுது ஒரு மனிதனால் எப்படி வேதாகமத்தை வாசித்து, அவர் அதை வாக்களித்திருக்கிறார் என்பதைக் கண்டு, கிறிஸ்து இந்த கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் வடிவில் திரும்பி வந்து அவரை ஜீவிக்கிறவறாய் அடையாளம் காட்டுவார் என்று காணமுடியும். அதுதான் அடையாளம். அதுதான் சின்னம். செலுத்தப்பட்ட கிரயமாய் இருக்கிறது. ஒரு பொழுதும் ஏதோ உணர்ச்சிவசப்படுதலின் மேல் நம்பிக்கையாய் இராதேயுங்கள். என் முதுகில் குளிர்ச்சி பாய்வதுபோல் நான் உணர்கிறேன். நான் ஏதோ காரியத்தை உணர்கிறேன். என்னுடைய கரங்களில் இரத்தம் அல்லது எண்ணெய்யை கண்டேன் அல்லது என்னுடைய பட்டப்படிப்பில் பட்டம் பெற்றேன் அல்லது நான் ஆவியில் நடனமாடினேன், நான் சத்தமிட்டேன், நான் பாஷைகளில் பேசினேன், இந்தக் காரியங்கள் ஒருகால் சரியாக இருக்கலாம். அவர்களுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் நான் பேசிக்கொண்டிருப்பது அதுவல்ல. நான் அந்த அடையாளத்தின் அறிகுறியை குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதாவது இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்து, இப்பொழுது நமக்குள்ளாக இருந்து நம்மை நாமே அடையாளம் காட்டி, இந்த நாளின் அவருடைய வாக்களிக்கப்பட்ட வார்த்தையை மீண்டும் ரூபகாரம் படுத்துகிறார் என்பதே. ஆமென். அப்பொழுது நீயும் கிறிஸ்துவும் ஒன்றாய் இருக்கிறீர்கள். தேவனும் கிறிஸ்துவும் ஒன்றாய் இருக்கிறார்கள். நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். மனித மாம்சத்தில் வெளிப்பட செய்யப்பட்டவராய் அங்கே இருந்து அவரை ஜீவித்துக் கொண்டிருக்கிறவராய் இரண்டாயிரம் வருடங்களுக்கு பின்னர் காட்டிக் கொண்டு இருக்கிறார். அதுதான் அடையாளமாய் இருக்கிறது. நீங்கள் உள்ளாக இல்லை என்றால் நண்பர்களே! சீக்கிரமாய் உள்ளே செல்லுங்கள். அது என்றென்றைக்குமாய் அதிக காலதாமதமாக இருக்கலாம். நமக்கு தெரியாது. 51அவருடைய பிரசன்னத்தை புதிய உடன்படிக்கையை இரத்தத்தை வெளி காட்டுங்கள். அது இப்பொழுது ஜீவனோடு இருந்து கொண்டு ரூபகாரங்கள் செய்து கொண்டு இருக்கிறது. அவர் இருக்கின்ற படியினாலே அவர் நமக்காக வாங்கின எல்லா காரியத்திலும் நமக்கு உரிமை இருக்கிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்ட ஒரு புருஷனும் அல்லது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட ஒரு ஸ்தீரியோ நமக்காக வாங்கியுள்ள எல்லா காரியத்திலும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அது நாம் உடையவர்களாக இருக்கின்றோம் என்பதற்கு அடையாளமாய் இருக்கிறது. அதுதான் வாங்குவதற்கான வல்லமையாய் இருக்கிறது. 52ஒரு உதாரணமாய், நல்லது, சகோதரன் பிரன்ஹாம் நீர் என்ன கூறுகிறேன் என்று கேட்டால், இங்கே இப்பொழுது தெளிவாக்குகிறேன். வியாதியாய் இருக்கின்ற நீங்கள் தானே இதை புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கவனியுங்கள். நான் மறுக்கும் அளவிற்கு பட்டினியாய் இருந்து, ஒருவர் ரொட்டி 25 சென்டுகள் என்று எனக்கு தெரியும். அவ்வமயம் ஒரு சகோதரன் வந்து சகோதரன் பிரான்ஹாம் இருந்தாலும் 25 செண்டுகள், நீர் பட்டினியா இருக்கிறீர், இந்த கால் டாலரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்களுக்குத் தெரியும். என்னுடைய கருத்தில் ஒரு ரொட்டி இருந்தால் சந்தோசமா இருப்பேனோ அவ்வளவு சந்தோசமாய் அந்த கால் டாலரோடு இருப்பேன். ஏனென்றால் வாங்கக்கூடிய கிரயத்தை நான் உடையவனாக இருக்கிறேன். ரொட்டியை வாங்கக்கூடிய அடையாளத்தை என் கரத்தில் உடையவனாக இருக்கிறேன். சரியாக அங்கே ரொட்டி இருக்கிறது. ஒரே காரியம் என்னவென்றால், நான் அந்த ரொட்டியை வாங்கக்கூடிய கால் டாலரை அந்த அடையாளத்தை வைத்திருக்கிறேன். ரொட்டியை கரத்தில் வைத்து சந்தோசமாக இருப்பது போன்றே சந்தோசமாக இருப்பேன். இப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்களாய் இருந்தால், இயேசுவானவர் மரித்த தான எல்லா மீட்புக்குரிய காரியங்களும் நீங்கள் உடையவர்களாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு சொந்தமானது அது உங்களுடைய கருத்தில் இருக்கிறது என்று அடையாளத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள். அதை உரிமை கோர நீங்கள் பயப்படுகிறீர்களா? அதை என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு என்னால் ரொட்டியை வாங்க முடியுமா அல்லது முடியாதா என்று எனக்கு தெரியவில்லை. நான் மரிக்கும் வரை பட்டினியாய் இருப்பேன் என்று கூறினால், ஆனால் நினைவிருக்கட்டும். வியாபாரி கூறுகிறான் திரு பிரான்ஹாமே எனக்கு ஒரு தேவை இருக்கிறது. ஒரு 25 சென்ட்கள் இருந்தால், உங்களுக்கு அந்த ரொட்டி கிடைக்கும் என்று. நான் அதை பெற்றுக் கொண்டேன். ஆமென். அது அதை முடித்தது. அந்த காரணத்தினால்தான் இன்றைக்கு அனேக காரியங்கள் சம்பவிப்பதை காண முடியாதவர்ளாய் இருக்கிறோம். அடையாளம் உண்மையான அடையாளம் காணும் படியாய் வைக்கப்படவில்லை. ஓ எல்லாவிதமான போலிகளையும் உடையவர்களாய் இருக்கிறோம். ஆனால் நானோ உண்மையான அடையாளத்தை தான் கூறுகிறேன். 53கவனியுங்கள். பின்னர் நாம் உணர்ந்தவர்களாய் அடையாளத்தை காட்டும் பொழுது அந்த அடையாளத்திற்காக எடுத்துக் கொண்டதை. எடுத்துக் கொண்ட ஜீவனான இரத்தம் நமக்காக பேசுகிறது. நினைவிருக்கட்டும். உடன்படிக்கையின் இரத்தமானது அடையாளத்தோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறது. வார்த்தையானது நமக்கு வாக்குத்தத்தத்தை நிச்சயபடுத்துகிறது. நமக்காக விலை கொடுத்து வாங்கப் பட்டாயிற்று என்ற அத்தாட்சியாய் இருக்கிறது. இப்பொழுது, நீங்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றால் நிச்சயமாக ஒன்றையும் ஒரு போதும் பெற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் வெறுமனே ஜெப வரிசையில் நடந்து வந்து திரும்பி நடந்து போகிறீர்கள். பீட மட்டுமாக நடந்து வந்து மேல்நோக்கி பார்த்து விட்டு திரும்பி நடந்து போகிறீர்கள். ஆனால், ஓ சகோதரனே! அந்த அடையாளமானது உங்கள் இருதயத்தில் பொருத்தப்பட்டது. அது உங்களுக்குள்ளாக இருக்கும். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இருக்கிறது. ஏதோ காரியம் சம்பவித்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். அங்கே உங்களை திருப்ப போகிற காரியம் எதுவுமே கிடையாது. நீங்கள் எதற்கு சொந்தமானவர்கள் என்பதை அறிந்து இருக்கிறீர்கள். தேவனுடைய முழு வார்த்தைக்கும் உள்ள முழுமையான கீழ்ப்படிதல் உங்களை அடையாளத்திற்கு பாத்திரமாக ஆக்குகிறது. வேறொன்றும் அல்ல. ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்களாக ஆவதற்கு. அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். பின்னர் நாம் ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபத்தோடு அர்ப்பணிக்கும் படியாய் நாம் அடையாளத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இப்பொழுது அதை பெற்றுக் கொள்ள தவறி போகாதீர்கள். நீங்கள் ஜெபிக்கும் பொழுது உங்களுடைய ஜெபத்தின் மேல் பிடிக்கும் படியாக நீங்கள் அடையாளத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். உங்களிடத்தில் இல்லை என்றால் அந்த அடையாளம் வரும் வரைக்குமாய் ஜெபியுங்கள். ஏனென்றால் அதைப் பெற்றுக் கொள்ள நீங்கள் வாக்களிக்க படவில்லை. பாருங்கள். நீங்கள் முதலாவதாக இந்த அடையாளத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். அது செலுத்தும் கிரையமாய் அதை நம்புவதற்கு உள்ளதான உங்கள் விசுவாசமாய் இருக்கிறது 54இப்பொழுது முழுமையான கீழ்ப்படிதலான சின்னமாய் அது இருக்கிறது. பயம் நீங்கி போயிற்று. இரத்தம் நன்மையான வகைகளை பேசுகிறது என்று பவுல் நமக்கு கூறுகிறார். இரத்தம் பேசுகிறதா என்று நீங்கள் கூறலாம். ஆம் இரத்தம் பேசுகிறது. ஆதியாகமம்-4:10ல். ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து பேசுகிறது என்று கூறுகிறதாக நாம் கண்டறிந்தோம். நாம் எபிரேயர் 12ல் கிறிஸ்துவின் உடன்படிக்கையின் இரத்தமானது ஆபேலின் இரத்தம் பேசினதை பார்க்கிலும் நன்மையான வகைகளைப் பேசுகிறது என்று நாம் கண்டறிந்தோம். புரிகின்றதா. இரத்தம் பேசுகிறது என்று நாம் கண்டறிந்தோம். உன் சார்பாக அது பேசுகிறது. உனக்குள்ளே இருக்கின்ற ஜீவனில் சிந்தப்பட்ட இரத்தத்தில் இருந்து பேசுகிறது, ஆமென். ஓ சகோதரனே! எல்லாரும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். புரிகின்றதா. அது என்ன, என்பதை மட்டும் உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் நலமாயிருக்கும். அது உனக்குள்ளாக இருக்கின்ற ஜீவனாக இருக்கின்றது. பாருங்கள், அந்த இரத்தமானது உங்களை அதோடு அடையாளம் காட்டுகிறது. அது அடையாளமாய் இருக்கிறது. அது என்ன இரத்தம் உனக்காக சிந்தப்பட்டது நீ ஏற்றுக் கொண்டாய். ஜீவன் உனக்குள்ளாக வந்துவிட்டது. நீ அடையாளத்தை உடையவனாய் இருக்கின்றாய். அது பரிசுத்த ஆவியா இருக்கிறது. 55பின்னர் நாம் ஜெபம் செய்யும் போது நம்முடைய ஜெபங்களோடு அர்ப்பணிக்கும் படியாக அடையாளத்தை உடையவர்களாய் இருக்க வேண்டும். நான் கூறியது போன்று இப்பொழுது நமக்குத்தானே நாம் விசுவாசித்து, நம்முடைய முழு குடும்பத்துக்கும் அதைப் பிரயோகிக்க வேண்டும். எகிப்தில் இருந்தது போன்று அல்லது அப்போஸ்தலர்-16:31 போன்று நீ விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று ரோமர் நூற்றுக்கு அதிபதியிடம் பவுல் கூறினான் என்று நாம் கண்டறிந்தோம். அதை உன்னுடைய குடும்பத்துக்கு பிரயோக படுத்து. உங்களிடத்தில் ஒரு இரட்சிக்கப்படாத பிள்ளை இருந்தால் அந்த அடையாளத்தை அந்தப் பிள்ளையின் மேல் கை வைத்து, தேவனாகிய கர்த்தாவே நான் அவனை உரிமை கோருகிறேன் என்று கூறுங்கள். அங்கேயே தரித்திருங்கள். நீங்கள் ஒரு தாயையோ அல்லது நேசிக்கின்ற இழக்கப்பட்ட ஒருவன் இருந்தால் அந்த அடையாளத்தை அவன் மேல் வைத்து, தேவனாகிய கர்த்தாவே நான் அதை உரிமை கோருகிறேன் என்று கூறுங்கள். உலகப்பிரகாரமான எல்லா குப்பைகளும் வெளியே தள்ளுங்கள். உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள். அதற்காக ஆயத்தப் படுங்கள். உங்கள் அரைக்கால் சட்டைகளை கொளுத்தி போடுங்கள். சீட்டுக் கட்டுகளை தூக்கி எறியுங்கள். உங்களுடைய சிகரெட்டுகளை ஒழித்து கட்டுங்கள். அவிசுவாசத்தையும், உங்களுடைய சபை காகிதங்களையும் குப்பை தொட்டியில் போடுங்கள். அது சேர வேண்டிய இடம் அதுதான். ஆமென். அப்பொழுது நீங்கள் ஆயத்த படுகிறீர்கள். அதற்குப் பிறகு என்னச் செய்வது, பின்னர் உண்மையான அத்தாட்சியோடு, உண்மையான விசுவாசத்தோடு, ஜெபத்தில் அந்த அடையாளத்தை பிரயோகப்படுத்துங்கள். அதை பிரயோக படுத்துங்கள். உறுதியோடு அதை பிரயோக படுத்துங்கள். நீங்கள் அடையாளத்தை பிரயோகிக்கும் போது நீங்கள் சுத்தப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை அறிந்திடுங்கள். நம்முடைய இருதயங்கள் நம்மை குற்றவாளி என்று தீர்க்காத்திருந்தால் அப்பொழுது நாம் வேண்டிக் கொள்ளுகிறதை பெற்றுக் கொள்கிறோம். தவறான அந்த காரியங்களை ஜனங்கள் ஆகிய நீங்கள் செய்து கொண்டு இருக்கும் வரைக்கும், நீங்கள் தவறு என்பதை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது, உங்களுக்காக ஏதாவது ஒரு காரியத்தைச் செய்யும்படி நீங்கள் எப்படி கேட்க முடியும். அந்தக் காரணத்தினால்தான் மேலாக தடுமாறுகிறோம். பின்வாங்குகிறோம். புண்படுத்த வேண்டும் என்று நான் இதைக் கூறவில்லை. சரிப்படுத்தவும், காரியங்களை சரியாக ஆக்கும்படியாகவே நான் இதைக் கூறுகிறேன். சோதோம் கொமாராவில் எரிந்து போன கரியின் மேல் நீங்கள் எப்படி கட்டப் போகிறீர்கள். திரும்பி வாருங்கள். 56சங்கங்களும், ஊழியக்காரர், ஜனங்கள் எதையும் செய்து தொடர்ந்து போக அனுமதித்துள்ளனர். புதிர்கள் வெறுமனே அவர்களுடைய பெயரை ஒரு புத்தகத்தில் எழுதிவிட்டு அது ஒரு அவமானமாய் இருக்கும் பொழுது, அவர்களை அது இது மற்றது என்று மறைக்கிறீர்கள். அது அந்த விதமாகி விசுவாசம் என்பது இல்லாத ஏதோ காரியமாய் இருக்கிறது. சில சமயங்களில் கூட அது என்ன என்பதைக் கூட அறியாது இருக்கிறீர்கள். அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் விசுவாசம் இல்லை. எல்லா காரியங்களும் சீவப்பட்டு சுத்தமாக இருக்கிறது. நீங்கள் திரும்பி வந்தாக வேண்டும். அப்பொழுது உங்களுடைய அடையாளத்தை எடுத்துக் கொண்டு அதாவது இயேசு கிறிஸ்து உங்களுக்குள்ள இருக்கிறார் என்பதை அறிந்து இருப்பதே. அது பின்னர் அதை பிரயோகியுங்கள். ஏதாவது காரியம் சம்பவிக்கவில்லை என்றால் அங்கே ஏதோ காரியம் தவறாக இருக்கிறது. மீண்டுமாக திரும்பிப் போங்கள். தவறான காரியத்தை உங்கள் கரத்தில் வைத்திருக்கிறீர்கள். அவர் அதை வாக்களித்திருக்கிறார் அதை வாக்களித்தவர் அவராக இருக்கிறார் அதை பிரயோகியுங்கள். எபேசியர்-2:12 வாசிக்க நீங்கள் விரும்பினால் எப்பொழுதாவது வாசியுங்கள். அதை நீங்கள் அதை காண்பீர்கள். 57எபிரேயர்-9:11 கூட கவனியுங்கள். ஜீவ வார்த்தைகளோடு ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்ய என்று பவுல் கூறினார். ஒரு எபிரேயர் வழக்கமாக போவது போன்று அங்கே போய் என்னுடைய பலியை கொண்டு, வீதி வழியாய் ஒரு பெரிய கொளுத்த காளையோடு, சென்று அவருடைய கரங்களை வைத்து தன்னை அடையாளம் காட்டி இரத்தத்தை சிந்தி, நீதிமானாய் திரும்பி போவேன் என்பது போன்று அவன் கூறவில்லை. யேகோவாவிற்கு அது தேவையாக இருந்தது. அவன் அதை செய்தான். பின்னர் அடுத்த தலைமுறையாலும் ஒரு கால் சற்று குளிர்ந்து போய் இருக்கலாம். வேறு யாராவது இன்னும் சிறிது குளிர்ந்து போய் இருக்கலாம். முதலாவது காரியம் உங்களுக்கு தெரியுமா? அது ஒரு குடும்ப பாரம்பரியமாக ஆனது. அந்த விதமாகத்தான் பெந்தேகோஸ்தே நமக்கு ஒரு குடும்ப பாரம்பரியமாக ஆகிவிட்டது. நாம் அப்படியே இறங்கி அந்த தொலைக்காட்சி நாடகம் இன்று இரவு நன்றாக இருந்தது இல்லையா. சபையில் அங்கே என்ன செய்திருப்பார்கள் என வியக்கிறேன். இயேசு கிறிஸ்துவே சுகப்படுத்தும் என்போம். ஓ இரக்கம் புரிகின்றதா. அது ஒரு குடும்ப பாரம்பரியம். உங்களுக்கு தெரியுமா? அன்றொரு நாள் நான் பாஷைகளில் பேசினேன், நான் இதை அதை சார்ந்தவன், உங்களுக்கு தெரியும். நண்பர்கள்! ஓ அது ஒரு குடும்ப பாரம்பரியம். 58தேவன் என்ன சொன்னார் என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய நிணமும் ஆட்டுக்கடாவும் உங்கள் நாசிக்கு ஆரோக்கியமாய் இருக்கிறது. அது உண்மை. உங்களுடைய பலி எனக்கு திர்கந்தமாய் இருக்கிறது என்று தேவன் கூறினார். அந்த விதமாகவே இருக்கிறது பெந்தேகோஸ்தே பலிகளும் நம்முடைய எல்லா ஸ்தாபனங்களின் மதவெறிகளும், விரும்பும்படியாய் செய்கிறதும், நம்முடைய ஸ்திரீகளும் புருஷர்களும், அவர்கள் செய்து கொண்டு இருக்கிற விதமாகவே நடந்து கொண்டும், ஒரு தேவ பக்தியின் வேஷத்தை உடையவர்களாய் இருக்கிறார்கள். வார்த்தை சுத்தமாக்குகிறது. யாராவது சிறிது நேரம் மேலும் கீழுமாக குதிப்பது, தேவனுடைய வார்த்தை புறப்பட்டு வந்து ஏதாவது காரியத்தை கூறினால் அதன் மேல் ஒரு வாளித் தண்ணீரை ஊற்றினது போன்று, அது எல்லாம் தீர்ந்து விட்டது. என்ன சம்பவித்தது? உங்களுடைய பலிகள் யேகோவாவிற்கு உப்பாக துர்க்கந்தமாயிற்று. அந்த நேரத்தில் தானே ஏசாயா காட்சியில் வந்து அவர்களிடத்தில் நான் உங்களுக்கு ஒரு நித்திய அடையாளத்தை கொடுக்கிறேன். ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று கூறினான். பாருங்கள். அங்கேயே தான் காரியம் மரித்துப் போனது. தோற்றங்களும் கோட்பாடுகளுமல்ல இல்லை. ஆனால் மரித்தோரிலிருந்து எழுந்து நமது மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஜீவிக்கின்ற தேவன் என்ற ஜீவ வார்த்தை. 59அவைகளில் சில அதைப் போன்றே இந்த சபைகள் இந்த காரியங்களை சுவாசிக்கிறார்கள். அவர்கள் அடையாளம் என்ற அப்படி ஒரு காரியம் இல்லையென்று மறுக்கின்றனர். ஒரு ஆள் என்னிடத்தில் வந்து அப்போஸ்தலர்கள் 12 பேர்கள் மாத்திரமே பரிசுத்த ஆவியை பெற்று கொண்டார்கள். அங்கே இருந்ததெல்லாம் அவ்வளவுதான். ஆம் என்று கூறினான். ஓ! ஆனால் வார்த்தையை விசுவாசிக்கிற நாமோ வித்தியாசமாக அறிந்திருக்கிறோம். இதை ஜீவிக்கின்ற பிரசன்னாய் இருக்கிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். நமது மத்தியில் இருக்கின்ற ஆவியான கிறிஸ்துவின் பிரசன்னம் என்று அவர் செய்த அதே கிரியைகளை அது செய்கிறது. அதுதான் அவனுடைய அத்தாட்சியாக இருக்கிறது. திராட்சைச் செடியானது அது கொடுக்கின்ற கனிகளினாளே அறியப்படும். அப்படியானால் அந்த முதலாவதான திராட்சைச் செடி வந்து அதைத் தொடர்ந்து ஒரு நடபடிகளின் புத்தகம் அவர்கள் எழுதினார்கள். ஏனென்றால் இயேசுவானவர் செய்த அதே காரியத்தை அப்போஸ்தலர் செய்தனர். அப்படியானால் அந்த திராட்சை செடியானது மீண்டுமாக எழும்பி வரும் பொழுது அது அதே காரியத்தை செய்யும். பாருங்கள். எபிரேயர் 13 : 8 அவர் இருக்கிறார் என்று கூறுகிறது. ஓ என்னே! தேவன் அவருடைய வாக்களிக்கப்பட்ட வார்த்தையின் படியாய் நமக்காக அவரை எழுப்பினார் என்பதை அது நிரூபிக்கிறது. 60ஒரு வாக்குத்தத்தத்தின் முத்திரை மீட்கப்படும் நாளுக்கென்று நீங்கள் முத்திரையாய் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கபடுத்தாதிருங்கள் என்று எபேசியர் 4 : 30 கூறுகிறது. அடுத்த எழுப்புதல் வரைக்கும் அல்ல. உங்களுடைய மீட்பின் நாள் வரைக்குமாக அதற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, 1 கொரிந்தியர் 12ன் படியாக அவருக்குள் பரிபூரணம் இருக்கிறது. அவருக்குள் எந்த பாவமும் அடையாளம் கண்டு கொள்ளப்படுவதில்லை. தேவனுடைய வித்து அவனுக்குள்ளாக இருக்கிற படியினால் அவனால் பாவம் செய்ய முடியாது. அடையாளம் அங்கே இருக்கும் பொழுது நம்மால் எப்படி செய்ய முடியும். அவன் ஏற்றுக் கொள்ளப்பட்டான் என்பதற்கு அத்தாட்சியாக அடையாளம் இருக்கிறது. நல்லது நீங்கள் சொல்லலாம் நான் பாவம் செய்கிறேன் என்று. அப்படியானால் உன்னிடத்தில் அடையாளம் இல்லவே இல்லை. புரிகின்றதா. கிரையமானது செலுத்தப்பட்ட ஆயிற்று என்பதை காட்டுகின்றதாய் அடையாளம் இருக்கிறது. சாத்தான் அதை உங்களிடத்தில் கொடுக்க முயற்சித்தான். வெறுமனே சிந்தியுங்கள். சாத்தான் ஏதோ வியாதியை உங்களிடம் தான் அல்லது ஏதாவது காரியத்தை உங்கள் இடத்தில் கொடுக்க முயற்சித்தான். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா? உங்களின் அடையாளத்தை அவனிடத்தில் காட்டுங்கள். நிச்சயமாக வியாதி கிறிஸ்தவனை தாக்குகிறது. உங்களுடைய அடையாளத்தை அவனிடத்தில் காட்டுங்கள். நீங்கள் ஒரு தேவனுடைய கிரையம் கொடுத்து வாங்கப்பட்ட பொருள் என்பதை நிரூபியுங்கள். பிசாசை எதிர்த்து நில்லுங்கள். அவன் உங்களை விட்டு ஓடிப் போவான். அவருடைய வாக்களிக்கப்பட்ட வார்த்தையின் மேலுள்ள உங்களுடைய அசைக்க முடியாத விசுவாசத்தின் மேல் அடையாளத்தை பிடியுங்கள். 61ஒரு சமயத்தில் தேவன் ஒரு வானவில் சின்னத்தை ஒரு அடையாளமாக கொடுத்தார். எனக்கு இன்னும் பத்தே நிமிடங்கள் தான் இருக்கிறது. அதன் பின்னர் ஜெப வரிசையை வைத்திருக்கிறேன். முடிக்கின்றேன். அவர் என்றும் அந்த அடையாளத்திற்கு உண்மையாய் இருந்தார். அவர் இருந்தாரா? அவர் இன்னமும் அதை செய்கிறார். இந்த எல்லா ஆயிரமாயிரம் வருடங்களில் ஒரு போதாவது, ஒரு முறையாவது அவருடைய அடையாளங்களை கனப்படுத்த தவறுவதில்லை, தவற போவதுமில்லை. இயேசு கிறிஸ்து இன்னும் பத்தாயிரம் வருஷங்களுக்கு வரவில்லை என்றாலும் நீங்கள் அடையாளத்தை உடையவர்களாய் இருக்கிறீர்கள். அவர் அதை இன்னமும் கனப்படுத்த வேண்டியவராக இருக்கிறார். எத்தனை காரியங்கள் மாறினாலும், இன்னமும் என்னவெல்லாம் இருந்தாலும், அவர் அந்த அடையாளத்தை கனப்படுத்த வேண்டியவராக இருக்கிறார். நான் செய்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். சரியாக அடையாளங்களும் அற்புதங்களும் விசுவாசிகளை பின் தொடர்வதில்லை என்று விசுவாசிக்கின்ற இந்த தேசத்திலும், உலகத்திலும் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும், அவருடைய அடையாளத்தை நம்முடைய தேவனால் கொடுக்கப்பட்ட விசுவாசத்தின் மேல் காணும் படியாய் வைக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இந்த அடையாளத்திற்கு உண்மையாய் இருங்கள். நம்முடைய பயணக் கட்டணம் செலுத்தப்பட்டாயிற்று. என்பதையும் ஜீவனின் அடையாளத்தை நமக்குள்ளாக கொண்டிருக்கின்றபடியினாலும் உயிர்த்தெழுதலுக்காக நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கிறோம், என்பதையும் அது காட்டுகிறது. 62அது ஒரு வெட்டுகின்ற ஒரு செய்தியாக இருக்கிறது. ஆனால் அது சத்தியமாய் இருக்கிறது. அதுதான் நமக்குத் தேவையாய் இருக்கிறது. சத்தியமாய் இருக்கிறது. சத்தியத்தை அறிந்து கொள்ள தேவன் நமக்கு உதவி செய்வாராக. நீங்கள் சத்தியத்தை அறிந்திருப்பீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும். இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் என்று நான் உரிமை கோருகிறேன். யாத்திரைக்கு முன்னர், சபையிலிருந்து மணவாட்டி வெளியே வருவதற்கு முன்னர், சரியாக இப்பொழுது தேவன் பரிசுத்த ஆவியை ஒரு அடையாளமாக கொடுக்கிறார் என்று நான் நம்புகிறேன். அங்கே அதிகப்படியான மற்றவர்கள் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஜனங்கள் நாங்கள் சத்தமிட்டோம். நாங்கள் மொழிகளில் பேசினோம் என்று கூறுகிறார்கள், அந்தக் காரியங்களை நான் விசுவாசிக்கிறேன். ஆனால் உங்களால் அதன் பேரில் காத்திருக்க முடியாது. எப்படி? உங்களால் அதை சார்ந்திருந்து பின்னர் வார்த்தையை எப்படி மறுதலிக்க முடிகின்றது. புரிகின்றதா. அடையாளமானது உனக்குள்ளாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டதும் தன்னையே ஜீவித்து காட்டுகின்றதுமான வார்த்தையாய் இருக்கிறது. அது தேவனே தம்முடைய சொந்த வியாக்கியானமாக இருக்கிறது. நல்லது, இப்பொழுது என்னுடைய பாஷையை நீ வியாக்கியானி என்று நீங்கள் கூற வேண்டி இருக்காது. அதுவல்ல, அது உங்களுடைய ஜீவியத்தை அவர் வார்த்தையை கொண்டு வியாக்கியானிக்கிறவர். என்னவாக இருக்கிறீர்கள் என்ற உங்களுடைய வார்த்தையை எடுக்கும் பொழுது அங்கே அதற்கு வியாக்கியானம் தேவையில்லை. அது ஏற்கனவே அங்கே இருக்கிறது என்று அவருடைய வார்த்தையின் ஊடாக அங்கே அடையாளம் காட்டுகிறார். தேவன் அவருடைய சொந்த வியாக்கியானத்தை செய்கிறார். இந்த நாளுக்கான இந்த வாக்குத்தத்தங்களை எல்லாம் நாம் உடையவர்களாய் இருக்கிறோம். 63ஓ டல்லாசே! அருமையான கிறிஸ்தவ கூட்டமே! உங்களைத்தான் அப்படியாய் போய்க் கொண்டிருக்க நீ காணும் இந்த காரியங்களால், இன்றைக்கு உன் காலத்தை ஓட்டாதே. ஏனென்றால் அது அனைந்து போகப் போகிறது. எப்பொழுதும் அந்த அடையாளத்தை உபயோகியுங்கள். அந்த அடையாளத்தை காணும் படியாய் வையுங்கள். வேதத்தை வாசியுங்கள். எல்லா காரியங்களையும் நிறைவுக்கு கொண்டு வாருங்கள். உங்களுக்கு உள்ளாக இருக்கின்ற ஆவி. அதற்கு ஆமென் என்று கூறவில்லை என்றால். அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து அடையாளமாக உங்களிடத்தில் இருக்கிறதை மாற்றுங்கள். நீங்கள் அதை இன்னும் உடையவர்களாய் இல்லை. 64ஒரே பிற்பகலில் இங்கே சொல்லிக் கொண்டே இருப்பது மிகவும் அதிகமாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கிறேன். இப்பொழுது மணி 4 : 30 ஆகிவிட்டது. இந்த ஜெப வரிசையோடு நாம் 5 மணிக்கு வெளியேறக் கூடுமானால் இப்பொழுது அதற்கான நேரமாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்து இன்று ஜீவிக்கிகிறார் மற்றும் ஆட்சி செய்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களிடத்தில் கூறினது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதுதான் தேவையானது அடையாளமாய் இருக்கிறது என்னால் சத்தியத்தை மட்டும் தான் பேச முடியும். நான் என்ன காண்கிறேனோ, நான் என்ன கேட்கிறேனோ, வெளிப்படுத்த படுகின்றதோ அதை மட்டுமே நான் பேசுவேன். நான் ஏன் இதை கூறுகிறேன் என்றால் அநேக அநேகமாயிரம் முறைகளில் ஒரு முறைகூட சத்தியமாக இல்லாமல் தவறி போனதே கிடையாது. இப்பொழுது அது தேவனாக இருக்க வேண்டும். நல்லது எதை குறித்து பேசுகிறோம் என்று அறியாத யாருக்காவது அப்படி பட்டதான ஒரு ஊழியத்தை தேவன் கொடுப்பாரா? இல்லை, அங்கே இருக்கின்ற அந்த ஞானதிருஷ்டிகாரன் என்று தன்னையே அடையாளம் காட்டி, பின்னர் அப்படியே திரும்பி எனக்கு ஒரு கலப்பான வார்த்தையை கொடுப்பாரா? மறுதலிக்க அந்த நபர் தானே அந்த கலப்பான ஒருவனாக இருக்கிறான். தேவன் கலப்பாகவில்லை. தேவனே தம்முடைய சொந்த வியாக்கியானியாக இருக்கிறார். 65அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். எந்த சபையையாவது எந்த அமைப்பையாவது அல்லது எந்த காரியத்தையாவது சேர்ந்து கொள்வதில் இளைப்பாறாதீர்கள். அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதைப் பற்றிக் கொள்ளுங்கள். அந்த ஒரு காரியத்தை மட்டும் தான் தேவன் அடையாளம் கண்டு கொள்வார். நீங்கள் அந்த வேளை வரும் பொழுது, உங்கள் மரணத்திற்கு அது வரும் பொழுது, அந்த அடையாளத்தை உங்களுக்கு மேலாக பிடிப்பது நலமாயிருக்கும். அவருடைய வருகையின் நாளில், அந்த உயிர்த்தெழுதலின் அந்த அடையாளத்தை காட்ட முடியும் என்பதை அறிந்தவர்களாய் இருங்கள். அது இந்த சரீரத்தில் இருக்காது, அது அழுகி போய்விட்டது. ஆனால் இந்த ஆவியில் அதனால் மரிக்க முடியாது. அது நித்திய ஜீவனாய் இருக்கிறது. அடையாளம் அங்கே இளைப்பாறுகிறது. கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். அதே இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அவர் தூதனாய் இருக்கிறார். அவர் இருக்கிறார். இங்கே இருக்கிறார். செய்தி அவருடைய செய்தியை அடையாளம் காட்ட அவர் இங்கே தூதனாய் இருக்கிறார். நான் தூதன் அல்ல. தூதன் அவராய் இருக்கிறார். இதுதான் செய்தியாய் இருக்கிறது. அதனோடு ஒத்துப்போகாத ஒரு ஆவியை நீங்கள் உடையவர்களாய் இருந்தால், அது எப்படி செய்தியின் தூதனாக இருக்க முடியும். அடையாளம் மட்டுமே அதை அடையாளம் காட்ட முடியும். ஆமென். 66நான் பக்தி பரவசம் அடைகிறேன். இப்பொழுது என்னால் பறந்து போக முடியும் போல் உணர்கிறேன். ஏனென்றால் நான் விசுவாசிப்பது இன்னாரென்று அறிந்திருக்கிறேன். அவருடைய உயிர்த்தெழுதலில் அவரோடு என்னுடைய ஜீவன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு இருக்கிறதை நான் காண்கிறேன். அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது. நண்பர்களே! அதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலே தயை கூர்ந்து செய்யுங்கள். நாம் யாவரும் பீடத்தை சுற்றிலுமாய் வந்து ஜெபிக்கிறோம் என்று அறிந்து இருக்கிறோம். அது ஒரு பழைய மெதொடிஸ்ட் கருத்தாக இருக்கிறது. வேதத்தில் அவர்கள் அதை செய்ததே இல்லை. விசுவாசித்த அத்தனை பேர்களும் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று வேதம் கூறுகிறது. அது உண்மை. வேதத்தில் பீடத்தின் அழைப்பு என்ற காரியமே கிடையாது. ஏதோ நாம் கூட்டிக் கொண்ட காரியமாய் இருக்கிறது. அது எல்லாம் சரியாக இருக்கிறது. தேவன் ஆசீர்வதிக்கிறார். எந்த காரியமும் சரியாக இருக்கிறது. 67துணிகளை அபிஷேகப்பது அப்படிப்பட்ட ஒரு காரியமே வேதத்தில் அங்கே இருந்ததில்லை. அவர்கள் பவுலின் மேலிருந்த கை குட்டைகளையும் உருமால்களையும் கொண்டு போனார்கள். ஆனால் நீங்கள் என்ன விதத்தில் அதை செய்தாலும் உங்களுடைய இருக்கையில் அங்கே எங்கே இருந்தாலும் அதையெல்லாம் சரிதான். ஒரே காரியம் என்னவென்றால், உங்களுக்கு ஒரு அடையாளமாய் அதை பிரயோகியுங்கள் பின்னர் நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். எந்தவிதமான ஜீவியம் என்ன என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். அதை பிரயோகிக்கப்படுகின்றதா இல்லையா என்று பாருங்கள். அது பிரயோகிக்கப்படுகின்றது அல்லது இல்லையா என்று பாருங்கள். அது பிரயோகிக்க படவில்லை என்றால் உங்களிடத்தில் என்ன இருந்தாலும் அதை தள்ளி வைத்து அந்த அடையாளம் பிரயோகிக்க படுத்தும் வரைக்கும் திரும்பி வாருங்கள். 68ஜெபம் செய்வோமாக. பரலோக பிதாவே! ஒருவேளை நான் கடினமாக பேசியிருக்கலாம். ஆனால் கர்த்தாவே ஆழமாக அடிக்கவில்லை என்றால் ஒரு சிறிய ஆணி எப்படி பற்றி பிடிக்கப் போகிறது. பிதாவே ஜனங்களுடைய இருதயத்தில் அது பதிந்து அது ஒரு கீழ் பிரிக்கப்படாத காரியமாய் இருக்கிறதை அவர்கள் காணும்படி செய்ய நான் ஜெபிக்கிறேன். ஏதோ ஸ்தாபனம், ஏதோ வகுப்பு, ஏதோ பிரிவு, ஏதோ நபர் அல்லது என்னையே அல்லது மற்ற யாரோடு அடையாளம் காட்ட முயற்சிக்கிறேன் என்பதல்ல. அது இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறது. நான் அந்த எல்லா நிறுவனங்கள் யாவற்றையும் இன்று தூக்கி எறிவேன், உங்கள் வார்த்தையின்படி அவை ஒன்றரை டசனில் ஆறு. “வயதான தாய் வேசி,” வெளிப்படுத்துதலில் வேதம் கூறுகின்றது. அவர்கள் மனிதனாய் இருக்க முடியாது. அவர்கள் வேசிகளாய் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் லௌகிக சிந்தனையினால் படுகைக்குள்ளாக சென்று விட்டார்கள். பெந்தகோஸ்துகளும் மற்ற எல்லாரும் அதை செய்து இருக்கிறதை நாம் காண்கிறோம். ஆனால் இயேசுவோ நீர் இன்னமும் இயேசுவாகவே இருக்கிறீர். ஒரு சபையின் செய்தியை அவர்கள் கேளாமல் ஆனால் வார்த்தையாகிய கிறிஸ்துவின் செய்தியை கேட்பார்களாக. கர்த்தாவே இன்றைக்கு நீர் உண்மையான விசுவாசிகளோடு அடையாளம் காட்டுவீராக. வியாதியாய் உள்ள யாவரையும் சுகப்படுத்தும். எங்களுடைய பாவங்களை கர்த்தாவே மன்னியும். என்னுடைய பாவங்களை மன்னிக்கும் படியாகவும் பாவங்களை மன்னிக்கும் படியாகவும் ஒரு ஊழியக்காரன் என்ற முறையில் நான் ஜெபிக்கிறேன். நான் நம்புகிறேன் கர்த்தாவே. அவர்கள் இந்த கட்டிடத்திற்கு கொடுக்கும்படி அவர்கள் ஒவ்வொருவரும் காணிக்கையிலே இதை உறுதியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் பணத்தை செலவழித்து இருப்பார்கள். அவர்கள் எல்லா காரியங்களையும் செய்திருக்கிறார்கள். கர்த்தாவே ஓ தேவனே, அவர்களில் ஒருவர் கூட இதை தவற விடக்கூடாது என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்வார்களாக. 69நான் அதை உத்தமதோடு செய்கிறேன். இருந்தாலும் கர்த்தாவே நீர் கண்டிப்பாக இருக்க வேண்டும். திருத்துவது அன்பாக இருக்கிறதே என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அன்பானது திருத்துகிறதாய் இருக்கிறது. நான் வேண்டிக் கொள்கிறேன். அந்த காரணத்தினால் தான் நீர் உம்முடைய ஜனங்களை திருத்தினேன். ஏனென்றால் நீர் அவர்களை நேசித்தீர். ஒவ்வொரு பாவத்திற்கும் பதில் சொல்லி ஆக வேண்டும். பிதாவே நாங்கள் எங்கள் பாவங்களை அறிக்கையிடுகையிலே அவைகளை நீர் எங்களுக்கு மன்னிக்கும் படியாய் நான் ஜெபிக்கிறேன். நாங்கள் தூரத்திலே வியந்தோம். கர்த்தாவே! நான் இந்த பெந்தகோஸ்தே ஜனங்களோடு அடையாளம் கண்டு கொண்டேன். நான் அவர்களில் ஒருவன். தேவனே! நீர் எங்கள் எல்லாரையும் மன்னிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். இந்த தவறு சிலரை எடுத்து அவர்களை அப்படியே சுற்றி திருப்பி, அங்கே ஒருமுறை கல்வாரியை நோக்கி பார்க்கும் படி செய்யும். அப்பொழுது அவர்கள் ஒரு மூப்பர் அல்லது ஒரு பேராயர் அல்லது என்னவாக இருந்தாலும் சரி, தாங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை அவர்கள் மறந்து, இந்த ராஜ்யத்தில் நாம் ஒன்றும் பெரியவர்கள் அல்ல என்பதை அறிந்து கொள்வார்கள். நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். நீர் எங்களுக்கு இப்பொழுது உதவி செய்யும்படி நான் ஜெபிக்கிறேன். இன்றைக்கு எங்கள் மத்தியில் உண்மை அடையாளம் காட்டும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 70ஜெப வரிசையை தூங்குவதற்கு முன்பாக, இதற்கு முன்பு இங்கே வந்திராத யாராவது இருக்கக் கூடும். நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். நான் உண்மையை கூறி இருந்தால், அது சாத்தியம் தானா அல்லது இல்லையா என்பதை தேவன் அடையாளம் காட்டட்டும். அதுதான் அதன் நிருபணமாய் இருக்கிறது. அவர் மரித்தோரிலிருந்து எழுந்ததுண்டானால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் யோவான் 14 : 12 இல் என்னை விசுவாசிக்கிறவன் பாவனை செய்கிறவன் அல்ல, என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான் என்று கூறுகிறார். அது சரிதானே. மகத்தான கிரியைகளை செய்வேன் என்று கூறுகிறார்கள். அது உண்மை. நல்லது, சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறோம். அது மகத்தான தான் இருக்கிறது. அவர் செய்த கிரியைகளை செய்தால், அது அதை எனக்கு நிரூபிக்கும். பாருங்கள். அதன் பின்னர் நாம் மகத்தானதை குறித்து பேசுவோம். அவர் இந்த பூமியின் மேல் இருந்த பொழுதில் செய்ததை காட்டிலும் மகத்தான காரியங்களை நான் உங்களுக்கு காட்டுகிறேன். அது வெறுமனே சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அல்ல, அது அடையாளங்களில் அற்புதங்களிலும் இருக்கிறது. அதற்கான நேரம் அல்ல. வெறுமனே விசுவாசியுங்கள். கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின பரலோகத்தின் தேவன் தாமே 2000 வருடங்களுக்கு பின்னர் இந்த செய்தியை அது சரிதான் என்று அடையாளம் காட்ட அவரை நமக்கு ஜீவனுள்ளவராய் பிரதியட்ச படுத்தி இருக்கிறார். அடையாளமானது பிரயோகிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. 71இப்பொழுது வியாதிகளையும் தொல்லைகளையும் உடையவர்கள் கர்த்தாவே, எங்களுடைய பலவீனங்களைக் குறித்து பரிதவிக்க கூடிய ஒரு பிரதான ஆசாரியராய் நீர் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன் என்று கூறி, உத்தமமாய் ஜெபியுங்கள். இங்கே உள்ள இந்த ஊழியக்காரனாய் நீர் இங்கே எங்களோடு பிரசன்னமாய் இருக்கிறேன் என்று கூறப்படும். அப்படியானால் நீர் எங்களோடு பிரசன்னமாய் இருந்து உம்மை தாமே அடையாளம் காட்டும். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். இப்பொழுது ஏதாவது காரியம் கூறுவது என்பது தேவனைப் பொருத்ததாய் இருக்கிறது. என்ன ஒரு நேரம். ஓ என்னே! நீங்கள் ஏதாவது காரியத்தை அறிய வேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். அது வரும் பொழுது எந்த விதமாய் உணர்கிறீர்கள். முழு உலகமும் உங்களுக்கு சொந்தமானது. ஆமென். பிசாசும் எந்த ஒரு காரியத்தையும் செய்யப்போகிறது இல்லை. அவன் ஒரு நொந்துபோன ஜீவனாய் இருக்கிறான். என்னுடைய கர்த்தர் பிரசன்னராய் இருக்கிறார். அது எல்லாமுமாய் நம்முடைய கரங்களில் இருக்கிறது. ஆமென். உண்மையான அமைதியாய் இருங்கள். நடக்காதீர்கள், அசையாமல் இருங்கள். 72சக்கர நாற்காலியில் இருக்கும் உங்களையும் மற்றவர்களையும் நீங்கள் உதவியற்றவா்களாய் இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். விசுவாசியுங்கள். நீங்கள் ஜெப வரிசையின் ஊடாக சென்று தவறி போகாதீர்கள். உங்களுக்காக ஜெபித்த ஊழியக்காரன் தவறிப் போகவில்லை. அது உங்களுடைய விசுவாசமாய் இருக்கிறது. நான் ஒன்றும் செய்ய போகிறது இல்லை என்று நினைக்க தொடங்கிவிட்டீர்கள். நீங்கள் விசுவாசியுங்கள். இதோ, அந்த வெளிச்சம் பின்னாக உட்கார்ந்திருந்த சிறிய ஸ்திரியின் மேல் இருக்கிறது. அவளுடைய கரங்களை இந்த விதமாக உயர்த்தி இருக்கிறாள். ஆம் நீ ஜெபித்துக் கொண்டிருந்தாயா? நான் அவருடைய தீர்க்கதரிசி அல்லது அல்லது ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா அல்லது சொல்லக்கூடாது. ஏனென்றால் அது ஜனங்களுக்கு அவ்வளவு இடறுவதற்கு ஏதுவாய் இருக்கிறது. இதோ வெள்ளையனும், கருத்த ஸ்திரியும் கிணற்றண்டையில் நம்முடைய ஆண்டவரும் ஸ்திரியும் இருந்தது போன்ற இரண்டு வித்தியாசமான இனங்கள், இங்கே இவைகளில் வித்தியாசம் ஒன்றுமே இல்லை என்பதை அவள் காட்டுகிறாள். நம்முடைய நிறங்கள் அதோடு ஒன்றும் செய்வதற்கு இல்லை. நாம் ஒருவர் மற்றொருவருக்கு ரத்தம் கொடுக்கலாம். ஒரு ரத்தத்தைக் கொண்டு தேவன் எல்லா ஜாதிகளையும் உண்டாக்கினார். உங்களுக்கு தலைவலிகள் பயங்கரமான தலைவலிகள் இருக்கின்றன. மட்டுமல்லாமல் உங்களுக்கு ஒரு பாரம் இருக்கிறது. அது ஒரு பிள்ளைக்காக இருக்கிறது. அது மிகவுமாய் உங்களை வருத்துகிறது. அது சரியாக அப்படியே, அது உண்மையா? உண்மை. உங்களை தாண்டி அங்கே உட்கார்ந்து இருக்கிற அந்த அம்மாள், அவள் உன்னோடு அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது போல் காணப்படுகிறது. அது உன்னுடைய தாயார். அது உண்மை. அவளுக்கு ஏதோ கோளாறு இருக்கிறது. என்னை நீ விசுவாசிக்கிறாயா அம்மாள். நீங்கள் விசுவாசிப்பீர்கள் இல்லையா. உங்களுக்கு உள்ள கோளாறு பக்கவாட்டில் உங்களுக்கு தொல்லை இருக்கிறது. அது உண்மை. உங்களுக்கு தொல்லை கொடுக்கிறது. உன்னுடைய வலது பக்கமே. அது சரி என்றால் உங்களுடைய கரத்தை உயர்த்தி காட்டுங்கள். இனிமேல் அது உங்களுக்கு தொல்லை கொடுக்க போவதில்லை. நீங்கள் யார் என்பதை தேவன் எனக்கு கூறுவாரானால் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. திருமதி லூபன், சரியானது உம்முடைய வழியே போ, உங்களுடைய வேண்டுதல்களை கர்த்தராகிய இயேசு உங்களுக்கு கொடுக்கிறார். 73சரியாக அந்த கோடியிலே ஒரு சிறிய கருத்த ஸ்திரி உட்கார்ந்து கொண்டு அவளை துண்டங்களாக கிழிக்கும் அளவுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் நேராக என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அதை விசுவாசிக்கிறாள். அது அங்கே அவள் பக்கத்தில் இருக்கின்ற அந்த காரியத்தை நீங்கள் பார்க்கவில்லையா. அவள் சிறுநீரக கோளாறினால் அவதிப்படுகிறாள். அது உண்மை. இப்பொழுது அது எல்லாம் தீர்ந்து விட்டது. அவர் உன்னை சுகப்படுத்த விட்டார். ஆமென். நீங்கள் ஏன் விசுவாசிக்க கூடாது. உங்களால் விசுவாசிக்க கூடுமானால் எல்லா காரியங்களுக்கும் கைகூடும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரியாக இங்கே ஒரு கருத்த சகோதரி உட்கார்ந்து கொண்டு நேராக என்னை நோக்கி பார்த்துக்கொண்டு இருக்கிறாள். ஒருவிதமாக தரித்தவள் அவளுக்கு முட்டியில் தொல்லை இருக்கிறது. அவளுக்கு இன்னொரு தொல்லையும் இருக்கிறது. இருதயக் கோளாறு இருக்கிறது. ஆம், அவளுக்கு பெலவீனம் படபடப்பு அதை போன்ற காரியங்கள், விசேஷமாக கீழே படுக்க முயற்சிக்கும்போது அமைதியாக இருக்கிறது. அது கடந்த இரவு சம்பவித்தது நினைவிருக்கட்டும். நான் உங்கள் சிந்தையை அறியவில்லை. ஆனால் நீங்கள் எதைக் குறித்து ஜெபிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இதைப் பற்றி உண்மை என்று அழைக்கப்பட வேண்டும் என்று நீர் விரும்பி நீர் அவர் உங்களுக்காக பதிலளித்தார். இப்பொழுது உங்களால் எழுந்திருக்கக் கூட முடியாது. ஏனென்றால் உங்களுக்கு மூட்டு வியாதி இருக்கிறது. அது உண்மை. பின்னர் இன்னொரு காரியம் உங்களுக்கு ஒரு வயிற்று வலி இருக்கிறது. வயிற்றுக்குள்ளே உண்டாயிருக்கும் ஒரு வளர்ச்சியினால் உண்டாகிறது. இப்பொழுது நீர் என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறாயா? எப்படி இருந்தாலும் நான் அதை கூறினேன். விசுவாசியுங்கள். நீா் சுகமாக்கபடுவீர். 74உங்களுடைய வயிற்று தொல்லையை குறித்து என்ன. உங்களுடைய வயிற்று தொல்லையை தேவன் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா. அங்கே உட்கார்ந்து இருக்கும் உங்களையும் கூட நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா. சரி, அப்படியானால் உங்களுடைய வயிற்றுக்கான உங்களுடைய சுகத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். ஆமென். அங்கு அம்மாளே புகைப்பதை விட்டுவிட வேண்டுமா புகைப்பதை நீர் விடும்பும் படி செய்ய தேவனால் ஆகும் என்று விசுவாசிக்கிறாயா. அதிக காலமாய் முயற்சித்து கொண்டு இருக்கிறாய். உனக்கு கூட வயிற்றுத் தொல்லை இருக்கிறது. புகைப்பதை விட்டுவிட முயற்சித்து கொண்டு இருக்கிறாய். நீ அவைகளை விட்டு விடுவாயா. அதுதான் உங்கள் வயிற்று தொல்லையை கொண்டு வருகிறது. அவரைத் தொடக்கூடிய விசுவாசத்தின் காரணத்தினால் அவைகள் உன்னிடத்தில் இருந்து போகும் படியாய் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கடிந்து கொள்கிறேன். நீங்கள் தேவனை விசுவாசிக்கும் படியாய் நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். 75ஒரு சிறிய ஸ்திரி இங்கே உட்கார்ந்து கொண்டு ஜெபித்துக் கொண்டு இருக்கிறாள். ஆஸ்பத்திரியில் புற்றுநோயால் மரித்து கொண்டிருக்கிற தான நேசிக்கிற ஒருவர். சரி. அது உறவினர். அது உண்மை. நீ ஒரு ஊழியக்காரனுடைய மனைவி. அந்த மனிதன் சுகம் அடைந்து விடுவான் என்று உன் முழு இருதயத்துடனும் நீ விசுவாசி கிறாய். தேவனை விசுவாசிக்கும் படியாய் நானும் உனக்கு சவால் விடுகிறேன். அது என்ன? அந்த இயேசு கிறிஸ்து என்பதின் அடையாளமாய் அது இருக்கிறது. கிறிஸ்து என்னவாக இருக்கிறார் என்று நீ கூறலாம். அவர் வார்த்தையாய், ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமது மத்தியில் வாசம் பண்ணினார். வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் இருதயத்தின் நினைவுகளையும் வகையருக்கிறதாயும் இருக்கிறது. கடைசி நாட்களில் வார்த்தை நமது மத்தியில் வந்துள்ளதை உங்களால் காண முடியவில்லையா? தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு இயேசு கிறிஸ்துவை அடையாளம் காட்டி கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியே. அதுதான் அடையாளமாய் இருக்கிறது. ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 76எத்தனை பேர்கள் இடத்தில் ஜெப அட்டை இருக்கிறது. இந்த பக்கத்தில் இருப்பவர்கள் ஜெப அட்டை உள்ளவர்கள் யாவரும் எழும்பி நில்லுங்கள். இந்த வரிசையில் இங்க நில்லுங்கள். இந்தப் பக்கத்தில் யாவரும் எழும்பி நின்று, இங்கே இந்த திட்டில் நில்லுங்கள். தயவுசெய்து சரியாக இங்கே உதவியாளர்கள் உங்கள் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் ஊடாக சென்று முடித்த பின்னா், மற்றவர்கள் எழும்பி நின்று அப்படியே ஆறுதலாக இப்படி சொல்லுங்கள். இப்பொழுது எல்லாரும் பய பக்தியாய் இருங்கள். பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தை பொறுப்பேற்று கொண்டார். எனவே அங்கே போதுமானது கூறப்பட்டு நிரூபிக்க செய்யப்பட்டும் இருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். அதை அடையாளம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். அது வார்த்தை என்று எத்தனை பேர்கள் விசுவாசிக்கிறீர்கள். கவனியுங்கள். இருதயத்தின் சிந்தனைகளை தேவனுடைய வார்த்தை வகையருக்கிறது என்று எபிரெயர் புத்தகம் கூறுகிறது என்று எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள். எத்தனை பெயர் அறிந்திருக்கிறீர்கள். அந்த காரணத்தினால் தான் இயேசுவானவராலும் இருதயத்தின் சிந்தனைகளை வகையருக்க முடிந்தது. அவர் வார்த்தையாய் இருந்தார் என்பதை எத்தனை பேர் அறிந்து இருக்கிறீர்கள். எத்தனை பேர் அதை விசுவாசிக்கிறவர்கள். தீர்க்கதரிசியிடத்திலும் காரியம் அந்த விதமாக தான் இருந்தது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். வார்த்தை அவர்களிடத்துக்கு வந்தவர்களாய் அவர்கள் இருந்தார்கள். இப்பொழுது வார்த்தை உம்மிடத்துக்கு திரும்பி வந்தால் அது அதே காரியத்தை செய்யாதா? அப்படியானால் வார்த்தை அடையாளம் காட்டுகிற வார்த்தை எப்படி வார்த்தையினால் தவறாக இருக்க முடியும்? ஓ இரக்கம், பய பக்தியாய் இருங்கள், 77இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிற இந்த அம்மாள், அவளுடைய இருதயத்தில் கூட ஏதோ ஒரு காரியத்தை வைத்திருக்கிறாள். நான் இந்த பக்கமாக திரும்ப நேர்ந்து அதைப் பற்றிக் கொண்டேன். நீங்கள் திருமதி கிரண் தானே. நான் அதை அறிந்ததே இல்லை. ஆனால் நீர் திருமதி கிரண். ஏனென்றால் அவரோடு நான் உங்களை காண்கிறேன். உங்களுக்கு நரம்பு சம்பந்தமான வியாதி இருக்கிறது. அது உங்களைத் தொல்லை படுத்துகிறது. அது உங்களுக்கு இருக்கிறது. உங்களுடைய மகனுக்கு வேறு ஒரு காரியம் இருக்கிறது. அவனுடைய இரத்தம் சொட்டுவது போன்று இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கும் படியாய் நான் சவால் விடுகிறேன். ஆமென். அவர் சூழ்நிலைக்கும் ஆண்டவராய் இருக்கிறார். அவரே மரணத்துக்கும் ஆண்டவராய் இருக்கிறார். நாம் ஜெபம் செய்வோம். 78கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய சமூகம் எங்களை அபிஷேகித்துக் கொண்டு இருக்கையில், இங்கே இந்த கட்டிடத்திற்குள்ளாக இதுதான் பரிசுத்த ஆவி என்று நாங்கள் அறிந்து இருக்கிறோம். கர்த்தாவே இந்த கைக்குட்டைகளை அணிகின்ற ஒவ்வொரு நபரையும் நீர் சுகப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஒருசமயம் உம்முடைய ஜனங்கள் கடமையின் பாதையில் இருக்கும் பொழுது, சிவந்த சமுத்திரம் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்கள் போய்க்கொண்டிருக்கும் பாதையிலே, அவர்களுக்கு குறுக்கிட்டது என்று நாங்கள் பீடத்தில் போதிக்கப்பட்டு இருக்கிறோம். தேவன் தம்முடைய கோபக் கண்களோடு அக்னி ஸ்தம்பத்தில் ஊடாக சிவந்த சமுத்திரத்தை நோக்கி பார்க்க, சமுத்திரமானது பயந்து போய் பின்னிட்டு திரும்பியது. இஸ்ரவேல் அவர்களுடைய கடமையின் பாதையிலே அதனூடாக வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு சென்றார்கள். ஓ தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கண்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் ஊடாக, இன்றைக்கு எங்கே இந்த கை குட்டைகளின் மேல் பிடித்துக் கொண்டிருக்கின்ற இந்த அடையாளத்துக்குள் நோக்கி பார்ப்பதாக, இதை அணிந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரையும் பார்த்து வியாதியானது பயந்து, அப்படியே திரும்பிப் போய் உம்முடைய ஜனங்கள் வாக்களிக்கப்பட்ட நல்ல தேசத்திற்குள்ளாக கடந்து செல்வார்களாக. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அது அவ்வண்ணமாக இருப்பதாக. ஆமென். 79விசுவாசிக்கிற மெத்தோடிஸ்ட் பிரசங்கிமார்கள், பாப்டிஸ்ட் பிரசங்கிமார்கள், பிரஸ்பிடெரியன் பிரசங்கிமார்கள், லுத்ரன் அல்லது பெந்தகோஸ்தே பிரசங்கிமார்கள் எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். சத்தியமாய் இருக்கிறது. இது என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். அப்படியானால் இங்கே வந்து என் பக்கத்தில், வியாதியஸ்தலருக்கு நாம் ஜெபிக்கும் போது, நில்லுங்கள். விசுவாசிக்கு என்ற எல்லா பிரசங்கிமார்கள், இங்க மேலே வாருங்கள். அதெல்லாம் சரிதான் இல்லையா, சகோதரன் கிரேன். அதெல்லாம் சரியா சகோதரன். இங்கே வரும் சகோதரன் கிரேன் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க ஒரு ஊழியத்தை உடையவராய் இருக்கிறார். ஒரு தைரியசாலியான மனிதன், ஒரு நல்ல மனிதன். தேவன் ஜெபத்தை கேட்டு பதில் அளிக்க ஒரு மனிதன் சகோதரன் கிராண்ட். அவர் மேல் சுற்றி கரத்தை போட்டுக் கொண்டு, அதைக் கூறவும், சகோதரனே என்று கூறவும், நான் சந்தோஷமாய் இருக்கிறேன், இப்பொழுது அவர் என்னுடன் கீழே இறங்கி ஜெபிக்க போகிறார். 80நீங்கள் இந்த வரிசையின் ஊடாக வரும் பொழுதே, சிலுவையின் கீழாய் நீங்கள் வருவது போன்று இருங்கள், சகோதரர்களே நீங்கள் இரட்டை வரிசையை ஏற்படுத்துங்கள். இங்கே இரட்டை வரிசையை ஏற்படுத்துங்கள். எங்க மேலே சிலரும் கீழே சிலரும். சகோதரன் ராய் பாடஸ், அவர் எங்கே இருக்கிறார் என்று நான் நினைத்தேன். 81இங்கே ஊழியர்களை நோக்கி பாருங்கள். நீங்கள் பார்ப்பீர்களா? அங்கே நோக்கி பாருங்கள். அது எனக்கு ஒரு நல்ல உணர்வை உண்டு பண்ணுகிறது. சகோதரர்களே சிலுவையின் ஊழியக்காரர்கள் இந்த செய்தியோடு தங்களை அடையாளம் காட்டும் படியாக அவர்கள் இங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன சம்பவிக்க கூடும். இப்பொழுது கவனியுங்கள். அதை இப்பொழுது ஊழியக்காரர்கள் மேல் சுமத்தாதே. அவர்களை அடையாளம் காட்டும் வழியாகவே அவர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். நீங்கள் இங்கே ஊடாக கடந்து போகும் போது உங்களுக்கு முன்பாக அடையாளத்தைப் பிடியுங்கள். கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய பாவங்களை நான் அறிக்கை செய்தேன். அதற்கு பதிலாக நீர் எனக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தீா். நான் கிரையம் கொடுத்து வாங்கப்பட்ட ஒரு பொருளாய் இருக்கிறேன். பாவம் வியாதி அல்லது எந்த காரியமும் இது முதல் என்னைப் பற்றிக் கொண்டே இருக்க முடியாது. இப்பொழுதே நான் போகிறேன் என்று கூறுங்கள். அதை உங்களுக்கு முன்பாக பிடித்து கொண்டு இருங்கள். இங்கே ஊடாக செல்லுங்கள். தேவன் உங்களை சுகப்படுத்தவார். நீங்கள் களிகூர்ந்து கொண்டு சந்தோஷமாய் வெளியே சென்று சுகமாய் இருங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா. 82இப்பொழுது இங்கே உள்ள இருக்கின்ற ஒவ்வொருவரும் சகோதரர்களே, நாம் எல்லாருமாக சேர்ந்து நம்முடைய தலைகளை வணங்குவோமாக. என்ன சம்பவிக்க போகிறது என்று நமக்கு தெரியாது. இந்த பிற்பகல் வேலையிலே இந்த கட்டிடத்தை விட்டு ஒருவராவது வியாதியாக திரும்ப செல்வதற்கு அங்கு எந்த ஒரு காரணமும் கிடையாது. அந்த அடையாளத்தை உங்கள் இருதயத்தில் பிடித்துக் கொண்டு இந்த ஜெப வரிசையின் ஊடாக கடந்து செல்லுங்கள். இங்கே ஊழியக்காரர்கள் தங்கள் ஜீவியங்களை சேவைக்கு என்று அர்ப்பணம் செய்தவர்கள், இங்கு நின்று நீங்கள் கடந்து போகையிலே உங்கள் மேல் கரங்களை வைப்பார்கள். சகோதரன் பிரன்ஹாம், எதற்காக இதை செய்கிறீர்கள் என்று நீங்கள் கூறலாம் . நீங்கள் ஒவ்வொருவரும் அதை அறிந்திருக்க நான் விரும்புகிறேன். சுகம் அளிப்பவர் நான் அல்ல. மற்ற எவரையும் போலவே வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்ய, இந்த மனிதர்களுக்கும் அவ்வளவு உரிமை இருக்கிறது. வெளிப்படையாக கூறினால் தேவனுடைய ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கு முன்னதாக அவர் அவர்களுடைய ஜெபங்களுக்கு பதில் அளிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் களைத்து போய் விட்டது. விடாயித்துப் போய் எல்லா காரியங்களுக்குமாய் இருக்கிறேன். அவர்களுடைய ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பார் என்று நான் நம்புகிறேன். இதோ அவர்கள் அதன் மத்தியில் நிற்கிறார்கள். அவர்களுடைய ஸ்தானத்தை எடுக்க வெட்கப்படாமல் அவர்களை தானே அடையாளம் காட்ட நிற்கிறார்கள். அதே போன்ற மனிதனை நான் பாராட்டுகிறேன். 83இப்பொழுது சகோதரர்களே, உங்களுடைய உணர்வுகளை நான் அறிவேன். நான் இருக்கிறேன், நான் உங்களோடு ஒன்றாக இருக்கிறேன். உங்களோடு சேர்ந்து டெக்ஸாஸில் வலையை விரித்து, அவன் நான்தான் இங்கே ஜீவனுக்கேன்று தேவனே வைத்துள்ள அந்த மீன்கள் ஒவ்வொன்றையும் பிடிக்க முயற்சிக்கிறேன். என்னால் முடிந்த மேலான வற்றை நான் செய்கிறேன் நான் 100% உங்களோடு இருக்கிறேன் சில சமயங்களில் நான் ஸ்தாபனம் மற்ற காரியங்களை குறித்து சத்தம் இடுகிறேன். திட்டுகிறேன். ஆனால் என்னுடைய சகோதரனே நான் உங்களுக்கு எதிராய் இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. சகோதரர்களாய் நாம் இருப்பதை பிரிக்கின்ற தான அந்த ஒழுங்குகளுக்கு எதிராக நான் இருக்கிறேன். சில மத உபதேசங்களின் நிமித்தமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நாம் சகோதரர்களாய் இருக்கிறோம். நாம் அதே அடையாளத்தை பிடித்தவர்களாக இருக்கிறோம். நாம் அதே இரத்தத்தை பெற்றுக் கொண்டவர்களாக இருக்கிறோம். எனவே நாம் அதை விசுவாசிப்போமாக. நம்மால் அங்கே சந்திக்க முடியும். நம்மால் முடியாதா. சகோதரரே நாம் ஒவ்வொருவரும் இரத்தத்தின் கீழாக இருக்கிறோம். 84இப்பொழுது நான் ஒரு பாப்டிஸ்டாக நியமிக்கப்பட்டேன். ஒருகால் நீங்கள் ஒரு மெத்தடிஸ்ட் அல்லது லூத்தரன் அல்லது பிரஸ்பிடெரியன், பெந்தகோஸ்தே அல்லது ஒருத்துவம், இருத்துவம் அல்லது உங்களுக்கு வேறு எது இருந்தாலும், சர்ச் ஆப் காட் சபை, அது என்னவாக இருக்கட்டும். அது எந்த ஒரு வித்தியாசத்தையும் உண்டு பண்ணாது. நாம் அந்த சிறிய காரியங்களில் ஒத்துப் போக முடியவில்லை, அப்படியானால் நாம் அது குறித்து மறந்து போவோமாக. நாம் ஒத்துக் கொள்ள தக்கதான ஏதோ காரியம் அதாவது இயேசு கிறிஸ்துவாக நமது இரட்சகர் நம்முடைய பாவங்களுக்காக மரித்து மீண்டுமாக எழும்பி நமக்கு அடையாளத்தை கொடுத்தார். நாம் அங்கே நம்முடைய ஜனங்களோடு நின்று கொண்டு, அந்த சுகவீனமான சகோதரர்கள் சகோதரிகள் இந்த ஜெப வரிசையில் கடந்து போகுமட்டுமாக, இவர்கள் மேல் அடையாளத்தை பிடித்து கொண்டு இருக்கிறோம். நான் அதை என் முழு இருதயத்தோடு விசுவாசிக்க போகிறேன். 85சரியாக இப்பொழுது ஏதோ காரியம் சம்பவிக்க நான் காண்கிறேன். ஆமென். நான் பைத்தியமாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் பைத்தியமாக இருப்பதை நன்மையாக உணருகிறேன். நான் வெறுமனே நம்புகிறேன். நான் இந்த வழியாக இல்லாமல் இருக்கலாம். ஆம் ஐயா. இந்த வழியாக இருப்பதை நான் அற்புதமாய் இருக்க உணருகிறேன். நாம் ஜெபம் செய்வோமாக. கர்த்தராகிய இயேசுவே, நாம் இப்பொழுது இந்த மேடையை விட்டு கீழே இறங்கிப் போய் இந்த சகோதரர்களோடு என்னை அடையாளம் காட்ட போகிறேன். நாங்கள் எங்கள் அடையாளங்களை கரத்திலும் இருதயத்திலும் பற்றிக் கொண்டு, நான் அவர்களோடு என்னை அடையாளம் காட்டுகிறேன். உம்முடைய கட்டளைக்கு நாங்கள் கீழ்படிகையிலே அதாவது வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள். அவர்கள் சுகம் பெறுவார்கள் என்பது, அங்கே ஊடாக கடந்து போகின்ற ஒவ்வொருவரும் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டோம் என்றும், அவர்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளைகள் என்றும், அவர்களுடைய முழு இருதயத்தோடும் அதை அவர்கள் விசுவாசி கிறார்கள் என்பதற்கு அவர்களுடைய அடையாளத்தை காட்டுவார்களாக. அவர்கள் ஊடாக கடந்து போகயிலே, அவர்கள் அந்த வியாதியையும் அவர்களுடைய சரீரத்தின் தொல்லையும் சகிப்பார்களாக. அவர்கள் இங்கே இருந்து களிகூர்ந்து கொண்டு அவர்களுடைய விசுவாசம் அவர்களை சுகப்படுத்துவது என்று அறிந்தவர்களாய் வெளியே செல்வார்களாக. 86தேவனாகிய கர்த்தாவே, பழைய ஏற்பாட்டில், எங்கள் கரங்களை பலி பொருளின் மேல் வைத்து, அந்த பலியோடு எங்களை அடையாளம் காட்டியது போன்று, நாங்கள் எங்கள் கரங்களை இயேசுவானவர் என் மேல் வைத்து எங்களை அவரோடு அடையாளம் காட்டுகிறோம். ஊழியத்தில் அவருடைய கரங்களை எங்கள் மேல் இப்பொழுது வைத்து அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் அவரை தாமே நம்மோடு அடையாளம் காட்டுகிறார். அவர்களோடு எங்களோடு சம்பந்தப்பட்ட விசுவாசத்தைக் கொண்டு, அவர்களோடு எங்களை தானே அடையாளம் காட்ட, நாங்கள் எங்களுடைய கரங்களை வியாதியஸ்தர் மேல் வைக்கிறோம். சுகமாக வேண்டும். நாங்கள் அதை பெற்றுக் கொள்ள இங்கே நடந்து வருகையிலே, அதை அது செய்வதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சபையார் யாவரும் ஜெபிப்பார்களாக. ராய் அல்லது வேறு யாராவது இங்கே வந்து இந்த ஒலிபெருக்கியின் முன்பாக நின்று வரிசையை நேராக இருக்க கவனிக்கவும். கவனியுங்கள், கவனியுங்கள். நீங்கள் இப்பொழுது இங்கே கடந்து போகும் போது விசுவாசித்து கொண்டு வாருங்கள். ஜெபித்துக் கொண்டே வாருங்கள். நாங்கள் வெறுமனே எங்கள் கரங்களை வைக்கப் போகிறோம். நேராக ஊடாக வாருங்கள். ஜெபியுங்கள். வரிசையாக இருக்கின்ற இந்த ஊழியக்காரர்கள் நீங்கள் கடந்து போகையிலே ஒருகால் நீங்கள் கட்க தண்டங்களை வைத்து உபயோகித்து நடந்து கொண்டிருந்தால் அவைகளைக் கீழே வைத்து விட்டு நடந்து போங்கள். உங்களுக்கு புற்றுநோய், சுகவீனம் இருந்தால் உதாரணமாய் வைத்தியர் அவரால் செய்யக்கூடிய எல்லா காரியங்களையும் செய்து, அவரால் முடிந்த எல்லாவற்றையும் செய்து நீ மரிக்கத் தான் வேண்டும் என்று அவர் கூறியிருந்தால், நான் மரிக்கப் போவதில்லை, இதோ இருக்கிறது என்னுடைய அடையாளம். கர்த்தாவே, நீர் எனக்கு வாக்களித்து இருக்கிறீர். இதோ நான் ஊடாகப் போய் கொண்டு அதை செய்து கொண்டே இருக்கிறேன். பாருங்கள். செய்யுங்கள். நீங்கள் அதை செய்வீர்களா. இயேசுவின் நாமத்தில் அதை அப்படியே ஆகக் கடவதாக. ஆமென். சரி வரிசையை வர விடுங்கள். 87நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா. ஆமென். ஓ அற்புதமாய் இல்லையா. ஆமென். அந்த கட்டிடங்களிலும் டோலிகளிலும் இருந்து சிலர் உயரே எழும்பி நடந்து போய் விட்டார்கள். அவைகளை அங்கேயே கிடத்தி விட்டு நடந்து போய் விட்டார்கள். ஓ இப்பொழுது அதை விசுவாசிக்கிற எல்லாரும் சுகமாக்க பாடலாம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா. சகோதரியே நான் அவரை நேசிக்கிறேன் என்ற பாடலுக்கு ஒரு ஸ்ருதியை கொடுக்கட்டும். பழைய பாடல் நான் அவரை நேசிக்கிறேன் முன்னதாக அவர் என்னை அன்பு கூர்ந்ததால், நம்முடைய சத்தங்களை நம்முடைய இருதயங்களை தேவனுக்கு உயர்த்தி பாடுங்கள். நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முன்னாக அவர் அன்புகூர்ந்தார் கல்வாரியில் என்று பாடுங்கள். இப்பொழுது நாம் எல்லோருமாக அவரை ஸ்தோத்தரிப்போமாக. ஒரு பெண்மணி, சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, இரண்டு ஆண்களின் ஆதரவுடன் இங்கு நடந்து செல்கிறார். “நான்...” தேவனிடம் கைகளை அசைப்போம், “நான் அவரை நேசிக்கிறேன்!” நான் அவரை நேசிக்கிறேன் நான் அவரை நேசிக்கிறேன் முன்னாக அவர் அன்புகூர்ந்தார் கல்வாரியில் இப்போது அவரைப் புகழ்வோம், எல்லோரும்! 88தேவனுக்கு மகிமை. உன்னுடைய நன்மைகளுக்காக உம்முடைய பிரசன்னத்திற்காக கர்த்தராகிய இயேசுவே, எப்படியாய் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ அடையாளத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தாவே, நாங்கள் இரட்சிக்கப்பட்டோம், ஆவியினால் நிரப்பப்பட்டோம். பரிசுத்த ஆவியானவர் மேலும் மேலுமாய் எங்களுடைய சரீரங்களை கழுவுகின்றீர். பிதாவே இதற்காக நாங்கள் உம்மை எப்படியாய் நன்றி செலுத்துகிறோம். ஓ இயேசுவின் நாமத்தில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென். ஆமென். எல்லாரும் கரங்களை குலுக்கி கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறுங்கள். இப்பொழுது நாம் உண்மையான பயபக்தியோடு நம்முடைய தலைகளை வணங்குவோம். நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டு நான் கலைந்து போவதற்காக, நான் இப்பொழுது ஆராதனையை சகோதரன் கிரண்டிடம் கொடுக்கிறேன். முதலாவதாக கர்த்தருக்கு அவருடைய நன்மைக்காக அவருடைய இரக்கத்திற்காக, நான் இங்கே தனிமையாக இல்லை என்ற நிச்சயத்தை நாங்கள் உங்களுடைய இருதயத்தில் விட்டிருக்கிறோம் என்ற நம்பிக்கைக்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். நம்முடைய மகத்தான தளபதி நமது மத்தியில் இருக்கிறார். ராஜாவின் ஜெய கம்பீர சத்தம் பாளையத்தில் இருக்கிறது. கர்த்தருடைய மகத்தான வல்லமையும், அவருடைய மகத்தான இரக்கத்தையும், காண்பதற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது பயபக்தியுடன் தலை வணங்குவோம். சகோதரர் கிராண்ட்.