ஜீவன் LIFE 58-05-19 1.இப்பொழுது சற்று நேரம் நாம் ஜெபத்திற்காக தொடர்ந்து நிற்போமாக. நம்முடைய தலைகளை தாழ்த்துவோமா? ஸ்தோத்திரிக்கப்பட்ட கர்த்தாவே, நீர் எங்களுக்கு செய்தவற்றிற்காக தேவனே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். மேலும் இன்றிரவு உம்மை ஆராதிக்கும்படிக்கு இப்பொழுது நாங்கள் திரும்பவும் வருவது எங்களுக்கு உம்முடைய மகத்தான சிலாக்கியமாய் உள்ளது... எங்களுடைய விசுவாசத்தை ஒன்று திரட்டியிருக்கையில் ஒரு அரிதான வழியில் சந்தித்து எங்களுடைய இருதயங்களை ஆசீர்வதிக்குமாறும் உம்மிடம் கேட்டுக் கொள்கின்றோம். உம்முடன் இவ்விதமான மகத்தான ஐக்கியத்தை கொண்டிராதவர்கள் யாராகிலும் எங்கள் மத்தியில் இருப்பார்களானால், அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் . உம்முடைய இரத்தத்தின் கீழ் இருக்கின்ற இரவாக இது இருக்கட்டும். நாங்கள் மிகவும் நன்றியுடன் களிகூர்ந்து அனுபவிக்கின்ற இப்பேர்ப்பட்ட சிலாக்கியத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டுமென்று இன்றிரவு நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம். ஒருவிசை உம்முடன் ஐக்கியம் கொண்டிருந்தும் அந்த சந்தோஷத்தை இழந்திருப்பவர்களை நீர் திரும்ப கொண்டுவரும்படி நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவர்களை நேசிக்கக்கூடிய ஒரு நேச பிதா இருக்கின்றார் என்றும், அவர் வழிதப்பித்திரிந்த தம்முடைய பிள்ளைகள் திரும்பி வருகையில் ஏற்றுக்கொள்வதற்காக தம்முடைய கரங்களை விரித்தவராய் நின்றவாறே காத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்களாக. 2. கர்த்தாவே, இன்றிரவு சுகமளித்தல் மிக அதிகமாக தேவையாயுள்ளவர்கள் மேல் இரக்கமாயிருப்பீராக. உம்முடைய பரிசுத்த ஆவி அவர்களுடைய வியாதிப்பட்ட சரீரத்தை சுகப்படுத்துவதாக. கர்த்தாவே, இதுவரை உம்முடைய பரிசுத்த ஆவியைப்பெற்றிராத சிலர் ஒருக்கால் இங்கு இருக்கலாம். இன்றிரவு அவர்களுக்கு நீர் உம்முடைய பரிசுத்த ஆவியை அருளுவீராக! கர்த்தாவே உம்முடைய வார்த்தையுடன் ஐக்கியம் கொள்ளத்தக்கதாகவும் அதைத் தந்தருளும். கர்த்தாவே, நானும் அதிகமாக தேவையுடையவனாய் இருக்கின்றேன். கிட்டத்தட்ட இருபதிற்கும் மேலான இரவுகள் தொடர்ந்து பிரசங்கித்ததினால் என்னுடைய தொண்டை சோர்வுற்று களைப்பாக இருக்கின்றது. ஊழியகளத்தில் பலமணிநேரங்கள் உழைத்ததினால் சிந்தையானது சோர்வுற்றிருக்கின்றது. நீர் எனக்கு உதவி செய்யும்படி நான் ஜெபிக்கின்றேன். இப்பொழுது கர்த்தாவே, நான் உம்முடைய பார்வைக்குப் பிரியமாயிருப்பனவற்றையே பேசும்படி எனக்கு உதவி செய்யும். ஏனெனில் இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். உங்களுக்கு நன்றி. 3. மோசமாக மழை பெய்துகொண்டிருக்கும் இந்த திங்கள் இரவிலும் கூட அருமையான ஜனக் கூட்டத்தை காண்பதில், இன்றிரவு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுக்குத் தெரியுமா, அங்கே கீழே தெற்கு பகுதியில் சிறு மழை, சிறிய சீதோஷ்ண மாற்றமானது ஜனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும். ஆனால் அவைகள் உங்களை தொல்லைப்படுத்துவதாக தோன்றவில்லை. நம்முடைய கர்த்தர் கடந்த சில இரவுகளாக, நம்மை சந்தித்து வருவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக சுகமளித்தல் ஆராதனையில் ஜெயங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை கேட்பதற்கு நான் சிலாக்கிமுள்ளவனாக இருக்கிறேன். சகோதரன் வேயில் என்னிடம், அவர்கள் வெவ்வேறு விதமான சுகமளித்தல்களைகுறித்து சாட்சி கூறிக்கொண்டிருப்பதாக சொன்னார். ஓ, அவர் நிஜமாயிருக்கிறார். மேலும் தொடர்கூட்டங்கள் முடிந்து நீண்ட கால கூட்டத்திற்கு பிறகு, ஸ்திரீகளும் புருஷர்களும் உங்களிடம் வந்து, "அதை நான் கொண்டிருந்தேன் என்று உங்களுக்கு தெரியுமா, அது இப்பொழுது என்னிடம் இல்லை" என்று ஊழியக்காரர்கள், மற்றும் போதகர்களாகிய உங்களிடம் கூறுவதை கவனிப்பீர்கள். இந்த இரவு கூட்டங்களில், அநேக காரியங்கள் சம்பவிப்பதை நான் காண்கிறேன். ஆனால் நீங்கள் அவ்வளவு விரைவாக அவர்களை அழைக்க முடியாது. புரிகிறதா? அது அவ்விதம் சம்பவிப்பதுண்டு, அவை யாவும் சரியாகிவிடும் என்று நாம் அறிவோம். ஆகவே நாம் அதை சற்றே விட்டுவிடலாம். அவர்களால் (சுகமளித்தல்) பிடித்துக்கொள்ளக் கூடுமானால் அது தானாகவே கிரியை செய்யும். 4. சமீபத்திய கூட்டத்தில் நடந்த ஒரு சாட்சியை இங்கு வாசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய பொருளை நான் எடுப்பதற்கு முன், அதை குறித்து பேச நான் விரும்புகிறேன். சில ஜனங்களுக்காக நான் ஜெபித்துக்கொண்டிருந்த போது அங்கு வயிற்றில் பிரச்சினை உண்டாயிருந்த ஒரு பெண்மணி கடந்து வந்தாள். அவளுக்கு வயிற்று புண்(அல்சர்) மிக மோசமாக இருந்தது. அது அவளுடைய வயிற்றினுள் உடைந்துவிட்டிருந்த காரணத்தால் இரத்தமாற்றுதலும் அளிக்கவேண்டியிருந்ததாக மருத்துவர்கள் அவளிடம் கூறினார்கள் என்று நான் நினைக்கிறேன். அவள் மிகவும் மோசமான நிலையில் இருந்தாள். சிறுகுடல் அல்சராக இருந்தது, அதுதான் மிகவும் மோசமான வகையாகும். ஆகவே அந்த ஸ்திரீயினுடைய பிரச்சனை என்னவென்றும், அவள் என்ன செய்திருந்தாள் என்பதையும் கர்த்தர் தரிசனத்தில் கூறினார். மேலும் அதன் பிறகு அது சரியாகிவிட்டது, என்றுதான் விசுவாசித்ததாக அவள் கூறினாள். இப்பொழுது, அது சரி. நீங்கள் அதை கவனியுங்கள் (நீங்கள் பாருங்கள்?) மேலும் “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், கர்த்தர் உங்களை சுகப்படுத்துவார்" என்கின்றனர். இருப்பினும் நமக்கு தெரியாது. ஆனால் யாவும் திடீரென்று மாற்றப்பட்டு, "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதோடு திரும்பி வரும். தரிசனமானது என்ன சம்பவிக்க போகின்றது என்பதைக் காணும்படி உள்ளது. ஒன்று என்ன சம்பவித்தது என்பதைக்காட்டுகிறது, மற்றொன்று என்ன சம்பவிக்க போகின்றது என்பதைக் காட்டுகின்றது. அநேக சமயங்களில் நான் மரணத்தையும் காண்பதுண்டு. ஆனால் அது சம்பவிக்கப் போகின்றது என்பதை நான் அறியும் வரை, அதை குறித்து நான் ஒன்றையும் கூறுவதில்லை. ஏனென்றால் சிலசமயங்களில் உங்கள் மீது மரணம் அறிவிக்கப்படலாம். இருப்பினும் ஜெபமானது அதை மாற்றக்கூடும். அது உங்களுக்கு தெரியுமா? வேதாகமத்தில் அது நடந்திருக்கிறது. 5. எசேக்கியா மரணப்படுக்கையிலிருந்தபோது ஏசாயா... "கர்த்தர் உரைக்கிறதாவது, நீர் மரிக்கப் போகின்றீர், நீர் படுக்கையை விட்டு வரப்போவதில்லை" என்று அங்கு சென்று அவன் கூறினபோது, அந்த தீர்க்கதரிசி எப்படி உணர்ந்திருப்பான் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்தீர்களா? அவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசியாவான், ராஜ அரண்மனைக்கு வெளிப்புறமாக சென்றான். அரண்மனையின் முக்கியஸ்தர்கள் அங்கே நின்றுகொண்டு , "ஓ மகத்தான தீர்க்கதரிசியே, நம்முடைய ராஜாவுக்கு என்ன சம்பவிக்கும்?" என்றான். "கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் மரிக்கப்போகின்றார்." அரண்மனை முற்றத்தில் மற்றும் வாயிலண்டையிலிருந்து வீரர்கள், "ஓ தீர்க்கதரிசியே, நம்முடைய மகத்தான ராஜாவைப் பற்றி கர்த்தர், என்ன சொல்லுகிறார்?" "கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் மரிக்கப்போகின்றார். அவர் படுக்கையிலிருந்து வரப்போவதில்லை". பின்பு வீதிகளிலிருந்த‌ ஏழை ஜனங்கள், "ஓ மகத்தான தீர்க்கதரிசியே, நம்முடைய அன்பான ராஜாவை குறித்து கர்த்தர் என்ன சொல்லுகிறார்?”. "கர்த்தர் உரைக்கிறதாவது, அவர் மரிக்கப்போகின்றார்." என்றவாறு தன்னுடைய சிறிய வீட்டிற்குச் சென்றான்… 6. பின்பு எசேக்கியா தன் முகத்தை சுவர் புறமாக திருப்பிக் கொண்டு மனங்கசந்து கதறி அழுது, "கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக மன உத்தமமாய் நடந்தேன் என்பதை நினைத்தருளும்." அது ஒரு அருமையான சாட்சியாகும், இல்லையா? “நான் 15 வருடங்கள் ஜீவனைக் கூட்டுமாறு வேண்டுகிறேன்”என்றான். இப்போது, தேசத்தில் மகத்தான மனிதன் யாராக இருந்தான்? அது ராஜாவாகும். மகத்தான பூமிக்குரிய ராஜா அங்கே மகத்தான பரலோகத்தின் ராஜாவுடன் பேசிக்கொண்டிருந்தான். இப்போது, "சரிதான், எசேக்கியாவே, நான் உன் விண்ணப்பத்தை கேட்டேன்", என்று ராஜாவிடம் அவர் ஏன் கூறவில்லை. 7. ஆனால், காரியங்களைச் செய்வதற்கான வழிகளை தேவன் கொண்டுள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் அதை செய்யும்படியான அவருடைய வழிகளுடன் நாம் ஒத்துழைக்க வேண்டும். கர்த்தர் அவனிடம் அவ்விதமாக பேசுவதற்கு-பேசுவதற்கான அந்த ஸ்தானத்தில் எசேக்கியா பிறந்திருக்கவில்லை. ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசி அமர்ந்திருந்த அந்த இடத்திற்கு திரும்பி சென்று, "நான் அவனுடைய ஜெபத்தை கேட்டேன், நான் 15 வருஷங்களை அவனுக்கு கூட்டுகிறேன் என்று, அவனிடம் போய் சொல்" என்றார். "கர்த்தர் உரைக்கிறதாவது, அவன் பிழைக்கப்போகிறான். கர்த்தர் உரைக்கிறதாவது, அவன் பிழைக்கப்போகிறான்" என்றவாறு அங்கு திரும்பி வருவதை பற்றி அந்த தீர்க்கதரிசி என்ன நினைத்திருப்பான். “தீர்க்கதரிசியே, அதை குறித்து என்ன? எதற்காக நீர் திரும்பி போகின்றீர்?" “கர்த்தர் உரைக்கிறதாவது, இப்போது அவர் பிழைக்கப்போகின்றார்” என்றான். அது செய்தது என்ன? ஜெபமானது காரியங்களை மரணத்திலிருந்து ஜீவனுக்கு மாற்றுகின்றது. எப்பொழுதுமே அதைச் செய்கின்றது. 8. மேலும் கர்த்தர் இந்த சிறுபெண்ணிடம், அவள் சுகமாகப்போகிறாள் என்று அறிவித்தப்போது, அவள் சுகமடைந்தாள், பாருங்கள், அவள் கர்த்தருக்கு நன்றியைக் கூறி வெளியே சென்றாள். எனவே அவள் தொடர்ந்து முன்செல்லலாம், எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தாள். அவள் சென்று சாப்பிட முயற்சித்தாள். ஓ, அவள் சுகவீனமடைந்தாள்; அதன்பின்பு ஓரிரு நாட்களில், தொடர்ந்து மோசமாகிக்கொண்டே இருந்தது, அவள் வலுக்கட்டாயமாக சாப்பிட முயற்சித்து, வாந்திபண்ணி ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதனால் அவள் கூறினாள்... சில வாரங்களுக்கு பிறகு அயலகத்தாராகிய ஜனங்கள் சிந்திக்க தொடங்கினர் ... அவளுடைய கணவன், " தேனே, நீ அவ்விதமாக சாட்சியளித்துக்கொண்டிருந்தால், நீ கிறிஸ்துவைக்குறித்த காரியத்தின் மீது ஒரு நிந்தையை கொண்டுவரப்போகின்றாய் என்று நான் நம்புகிறேன்" என்றான். அதற்கு அவள் தன் கணவனிடம் "ஆவியின் ஊக்குவித்தலுடன் நின்றுகொண்டிருந்த ஒரு மனிதனாக, அந்த மனிதன் அங்கு நின்றுகொண்டு, என்னுடைய ஜீவியத்தில் நான் செய்திருந்த காரியங்களையும், குடற்புண் எதனால் உண்டானது என்றும், என்ன சம்பவித்தது என்றும் அது- மேலும் அது என்ன நிலையில் இருக்கிறது என்றும் கூறினார் , மேலும் 'கர்த்தர் உரைக்கிறதாவது', என்று என்னிடம் கூறினார், நான் குணமாக போகின்றேன் என்பதை தரிசனமானது காண்பித்தது, நான் அதை சந்தேகிப்பேன் என நீர் நினைக்கிறீரா?" நிந்தையோ அல்லது நிந்தை இல்லாமையோ, அதை சந்தேகிப்பது தான் எனக்கு அதிக நிந்தையாக இருக்கும்" என்றாள். அவள் எவ்வளவு சரியாக இருந்தாள். 9. மேலும், பின்பு ஒருநாள் காலையில், நான் நினைக்கிறேன், ஐந்து வாரங்கள் கழித்து, நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு பிறகு, அவள் என்ன கூறினாள் என்பதை நான் மறந்துவிட்டேன். ஒரு காலை வேளையில் அவள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தனர். திடீரென்று ஒரு மிகவும் வித்தியாசமான ஒரு உணர்வு அவளை அசைத்தது. "இது என்னவாயிருக்கும்?" என்று அவள் நினைத்தாள், தான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தாள், அதன்பிறகு," நல்லது, ஒருவேளை கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பதாக இருக்கின்றது" என்று நினைத்தாள். அவள் அருமையான ஒரு கிறிஸ்தவ ஸ்திரீ ஆவாள். ஏறக்குறைய முப்பது வயது கடந்த இளம் பெண். அவளுக்கு அதிகமான பசி உண்டானது. அவள் "ஓ, நான் எவ்வளவாய் ஒரு சிறிய வறுத்த ரொட்டி துண்டை சாப்பிட விரும்புகிறேன்” என்றாள் . அவள் உட்கார்ந்து ரொட்டியை சாப்பிட்டாள். சில நிமிடங்களில் அது மேலே வந்து அவ்வாறு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த முறை அது வயிற்றினுள்ளேயே இருந்தது, அவள் நன்றாக உணர்ந்தாள். நல்லது, அவள் நினைத்தாள், அப்படியானால் குழந்தைகள் தங்களது உணவுத்தட்டில் விட்டுச் சென்ற இந்த சிறிது ஓட்ஸை நான் சாப்பிடலாம் என்று நம்புகிறேன். ஆகவே அவள் அமர்ந்து அந்த ஓட்ஸை சாப்பிட்டாள். இப்பொழுது, அமிலத் தன்மையுடைய வயிற்றில் ஓட்ஸ் என்ன செய்யும் என்று உங்களுக்கு தெரியும். அவள் ஏறக்குறைய பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் காத்திருந்தாள், அது அவளை ஒருபோதும் தொல்லைப்படுத்தவேயில்லை. எனவே அவள் அமர்ந்து தனக்கு ஒரு அருமையான சுவையான உணவை செய்ய துவங்கினாள். அவள் சில முட்டைகளை வறுத்து, ஒரு டம்ளர் காபியை எடுத்து, அவற்றை ருசித்து மகிழ்ந்தாள்.அவள் ஏறக்குறைய இருபது அல்லது முப்பது நிமிடங்கள் காத்திருந்தாள். வழக்கமாக அவள் ஐந்து நிமிடங்களில் அதை குமட்டி வாந்தி செய்து விடுவாள். 10. அவள் மிகவும் நன்றாக உணர்ந்தாள். அவள் "என்னால் இந்த அருமையான காரியத்தை என்னுள் அடக்கிக்கொண்டிருக்க இயலாது" என்றாள். ஆகவே அவள் அதே தெருவினூடாக இரவில் ஜெபம் செய்துகொண்டிருந்த தன்னுடைய அயல்வீட்டாரிடத்திற்கு சென்றாள். அந்த அயல்வீட்டாளுக்கு கழுத்தின் பக்கவாட்டில் ஒரு சதை வளர்ச்சி உண்டாயிருந்தது. பாருங்கள், அவளுடைய கணவன் பணிஒய்வு பெற்றிருந்தார். அவர்கள் தாமதமாக எழுந்திருந்தனர். தன்னுடைய வீட்டிலிருந்து சில வீடுகளுக்கு அப்பாலிருந்த அந்த வீட்டிற்கு அவள் வந்த போது, அங்கே அவர்கள் இரட்சணியசேனை கூட்டத்தை கொண்டிருந்ததைப் போல நினைத்தாள். அவளுடைய ஜீவியத்திலேயே அவ்வளவு அதிகமாக சத்தமிட்டுக் கூச்சலிடுதலை அவள் கேட்டதில்லை. அவள் "சரி, பிரச்சினை என்ன?" என்று, கேட்க உள்ளே ஓடிச்சென்று," லிடியா, காரியம் என்ன?" என்றாள். அவள் கூறினாள்," ஓ, பெர்த்தா, நான் உன்னிடம் கூற விரும்புகிறேன். சற்று முன்தான் நான் எழுந்தேன், நான் அங்கு படுத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் சிறிது நேரமாக விழித்துக்கொண்டிருந்தோம்; மிக வித்தியாசமான ஒரு உணர்வை நான் உணர்ந்தேன். நாங்கள் படுக்கை விரிப்புகளைக்கூட கலைத்து அசைத்துப்பார்த்தோம். எங்களால் அந்த சதைக்கட்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. அது மறைந்து விட்டது." நல்லது, இவள் அவளிடம் தன்னுடைய கதையை கூறினாள். அவர்கள் மிகவும் உற்சாகமடைந்து, மேலும் - மேலும் அண்டை வீட்டார் சிலரையும் அழைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்து கொண்டிருந்த என்னுடைய கூட்டங்களில் ஒன்றிற்கு வந்து, அவர்களுடைய சாட்சியையும் அளித்தனர். 11. இப்பொழுது, சம்பவித்தது என்ன? அந்த ஆசீர்வாதத்தை உரைத்த தேவனுடைய தூதனானவர் அந்த அண்டை வீட்டினூடாக கடந்து அதை உறுதிப்படுத்தினார். நீங்கள் பாருங்கள்? அவர்கள் அதை கைவிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? விட்டுவிடாதீர்கள். நீங்கள் விசுவாசியுங்கள். அதனோடு தரித்திருங்கள். தேவன் அதை நிறைவேற்றுவார். புரிகிறதா? சில சமயங்களில் தேவன் அதிவிரைவாக காரியங்களை செய்வதில்லை. தானியேல் ஜெபித்தபோது எத்தனை பேருக்கு தெரியும், அதற்கு இருபத்தெட்டு நாட்கள் எடுத்தது என்று நான் நம்புகிறேன், 'அவர் அவனிடம் வருவதற்கு முன்பே என்று தூதன் கூறினார். அது சரியா? இருபத்தொன்று நாட்கள். அது சரி. உமக்கு நன்றி, ஐயா. இருபத்தொன்று நாட்கள். அவர் அங்கு வருவதற்கு முன் இருபத்தொன்று நாட்கள் தேவைப்பட்டது: ஆனால் அவர் அவனுடைய ஜெபத்தைக் கேட்டிருந்தார். நீங்கள் விசுவாசத்தோடு தேவனை நோக்கி செல்லும் ஒவ்வொரு நேரத்திலும், தேவன் அதை அறிந்திருக்கின்றார். பாருங்கள்? வெறுமனே கவலையடைய வேண்டாம். உண்மையான முழு விசுவாசத்தையுடையவர்களாய் இருங்கள், விசுவாசித்து கொண்டேயிருங்கள். 12. இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், இன்றிரவு என்னுடைய இருதயத்திலுள்ளதாக தோன்றுகின்ற சிறிது சுவிசேஷத்தின் மாதிரியைப் போன்ற ஒரு சிறு செய்தியின் பேரில் நான் பேச முயற்சிக்க போகின்றேன், இன்றிரவு நான் “மகத்தான ஜெயவீரர்" என்பதன் பேரில் பேசப்போவதாக உங்களிடம் கூறினேன். ஏதோ ஓரிடத்தில் முன்பு ஒரு விசை இந்த செய்தியை நான் பிரசங்கித்துள்ளேன். அது தெற்கு பகுதியில் என்று நான் நம்புகிறேன். அதை செய்வதற்கு என்னிடம் அவ்வளவு போதிய சத்தம் இப்பொழுது இல்லை. ஆகவே அந்த வாக்குக்கொடுத்ததற்காக நீங்கள் என்னை மன்னிப்பீர்களாக. தேவனும் அதை மன்னிக்குமாறு நான் ஜெபிக்கிறேன், ஏனென்றால் அதை செய்வதற்கு என்னிடம் போதிய குரல்வளம் இல்லை. அது எனக்கு ஜலதோஷம் உள்ளதினாலல்ல, இது தொடர்ச்சியான இருபதுக்கும் மேலான இரவுகளாக இருக்கிறது. அந்த தரிசனங்கள் உங்களுக்கு என்ன செய்யும் என்று ஒருவரும் அறியார்கள். அவை உங்களை துண்டுதுண்டாக கிழித்துவிடுகின்றன. மன்னிக்கவும், நான் அதை செய்வதற்கு முன்பு, இன்றிரவு நாம் ஒரு சிறு கூட்டமாய் இருக்கையில், நான் அறிந்துள்ளதில் சிறந்த விதத்தில் அது என்னவென்று விளக்க முயற்சிக்க விரும்புகிறேன். அதை குறித்து நான் என்ன நினைக்கின்றேன் என்பதை நீங்கள் கேட்க விரும்புகின்றீர்களா? அது சரி. ஒரு குழந்தையின் வடிவில் சற்றே அதை நாம் எடுத்துக் கொள்வோம். 13. அங்கே அந்த நகரத்தில் ஒரு பெரிய களியாட்டப் போட்டி நடந்தது, இங்கு அமர்ந்திருக்கும் இந்த இரண்டு வலிமையான மனிதர்கள் அங்கிருந்தார்கள், நானும் அங்கு நின்று கொண்டிருந்தேன், ஆனால் உள்ளே சென்று காட்சியை பார்க்க எங்களிடம் பணமில்லை. அவர்களோ யானைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு பலமுள்ள மனிதர்கள், ஆனால் குள்ளமானவர்கள். நானோ உயரமானவன் ஆனால் மெலிந்த உடல்வாகுடைய மனிதன், மேலும் என்னால் அந்த பெரிய தண்ணீர் குவளைகளை சுமக்க முடியவில்லை. நல்லது, நாங்கள் நின்று கொண்டிருந்த அந்த இடத்தில், உயரத்தில் ஒரு சிறிய துவாரம் இருந்தது. இப்பொழுது, இந்த குள்ளமான நபர்களால் அங்கே ஏறி அந்த துவாரத்தின் வழியாக ஒருபோதும் பார்க்க இயலாது, ஆனால் என்னால் அதை செய்ய முடிந்தது. புரிகிறதா, தேவன் ஒவ்வொரு மனிதனையும் அவர் விரும்பும் விதமாக அவனை சிருஷ்டித்தார். அதை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 14. கிறிஸ்தவமார்க்கம் உயிர்த்தெழுதலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதை நாம் அறிவோம். இல்லையா... நல்லது, நீங்கள் இப்பூமியில் ஒரு கருப்பு நிற தலைமயிரையுடைய ஸ்திரீயாக இருந்து சென்றிருப்பீர்களாயின், நீங்கள் ஒரு கருப்பு நிற தலைமயிரையுடைய ஸ்திரீயாகவே உயிர்த்தெழுவீர்கள். நீங்கள் உயிர்த்தெழாமல்... நீங்கள் கூறலாம், "இப்பொழுது பாருங்கள், இதுதான் கீழே செல்கின்றதெனில், உயிர்த்தெழுதலில் அதேவிதமாகத்தான் மேலே வரவேண்டும்." இதை எடுத்துக்கொண்டு மற்றதை என்றல்ல மேலும்... அப்படியானால் அது மாற்றுவஸ்துவாகிவிடும் (வேறு சரீரமாகிவிடும்); உயிர்த்தெழுதல் என்பது அதுவல்ல. உயிர்த்தெழுதல் என்பது கீழே சென்ற அதே இயேசுவை, அதே நபரை திரும்பக்கொண்டுவருதலாகும். பாருங்கள், தேவன், சியர்ஸ் ரோபக்ஸ் நிறுவனத்தினால் (Sears and Roebucks - ஒரு பண்டைய அமெரிக்க நிறுவனம்) அலங்கரிக்கப்படுவதைப் போன்ற ஒத்திசைந்த நிறமுடைய ஒரு வீடல்ல. தேவனுக்கு காரியங்கள் உள்ளன. அவர் பலவித்தியாசமான வகைகளின் தேவனாய் இருக்கின்றார். அவர் ஜனங்களை சிவப்புநிற தலைமயிருடைய வர்களாகவும், கருப்புநிற தலைமயிருடைய வர்களாகவும் இருக்கும்படி விரும்புகிறார். அங்கே கீழே தெற்குபாகத்தில் அப்படித்தான் காணப்படுகிறது. வகைபிரித்தலை குறித்து அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தேவன் மனிதர்களை வெள்ளை நிறமுடையவர்களாய் உண்டாக்கினார். அவர் அவர்களை கருப்பு நிறமுடையவர்களாய் உண்டாக்கினார். அவர் அவர்களை மஞ்சள் நிறமுடையவர்களாகவும், பழுப்பு நிறமுடையவர்களாகவும் உண்டாக்கினார். அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அவர் சிவப்பு பூக்களையும், வெள்ளை பூக்களையும், இளஞ்சிவப்பு நிற பூக்களையும் உண்டாக்கினார். அதற்காக அவர் அவைகளை உண்டாக்கினார்... அவர் பெருமலைகளையும், சிறுமலைகளையும், வனாந்தரங்களையும், காடுகளையும், பெரிய மரங்களையும், சிறிய மரங்களையும் உண்டாக்கினார். அவர் அவற்றை எவ்விதமாக இருக்கும்படி விரும்புகிறாரோ அவ்விதமாகவே காரியங்களை உண்டாக்கினார். அதை அப்படியே தான் விட்டுவிடுவது வழியாகும். நீங்கள் இயற்கையை இடையூறுசெய்து சிதைக்கும்போது, அதை தாறுமாறாக்குகின்றீர்கள். வெறுமனே அதை அப்படியே விட்டுவிடுவது தான் சிறந்த வழியாகும். அது எப்பொழுதுமே சிறந்ததாகும். 15. மேலும் இந்த பெரிய களியாட்டப் போட்டியில் நான் இந்த துவாரத்தினூடாக நோக்கிப்பார்த்தபோது... இப்பொழுது, நான் இவ்விதமாகத்தான் அதைச்செய்தாக வேண்டும். நான் மேலே குதித்து, என்னுடைய கரங்களை எடுத்து, அதை கடும்முயற்சி செய்து பற்றிப்பிடித்தேன். நான் உள்ளே பார்த்தேன். நான் மீண்டும் கீழே வந்தேன். " சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் என்ன பார்த்தீர்கள்?" "ஒரு யானையை " "நீங்கள் பார்த்தது அவ்வளவுதானா?" 16. "இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, நீர் என்ன கூறவருகிறீர்? "இதுதான் காரியம். இயேசு பூமியில் இருந்தபோது, அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாய் இருந்தார். நாம் அளவான பங்குகளாக பரிசுத்த ஆவியை கொண்டிருக்கின்றோம். அவர் அளவில்லாமல் பரிசுத்த ஆவியை உடையவராயிருந்தார். தேவதத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரபிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. அவர் வெறுமனே ஒரு மனிதனாக மட்டும் இருக்கவில்லை; அவர் தேவனாக இருந்தார். அநேக ஜனங்கள் இன்று இவ்விதம் விரும்புகின்றனர்... நான் இந்த பொருளை அணுகுவதற்கு முன்பு சற்றே ஒரு நிமிடம் இங்கு நான் நிறுத்த விரும்புகிறேன். அநேக ஜனங்கள் வெறுமனே அவரை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்குவதற்கு விரும்புகிறார்கள். ஒன்று அவர் தேவனாக இருக்கவேண்டும் அல்லது உலகம் கண்டதிலேயே மிகப்பெரும் வஞ்சகராக இருக்க வேண்டும். 17. சிறிதுகாலத்திற்கு முன்புதான் இங்கே ஒரு ஸ்திரீயிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன்... நான் ஜனங்களுடைய மதநம்பிக்கைகளை விமர்சிப்பதில்லை, ஆனால் நான் கூறுகின்றதன் மூலம் அது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள். அவர்கள் சுகமளித்தலை விசுவாசிப்பதாக உரிமை கோருகின்றனர் , ஆனால் இயேசு வெறுமனே ஒரு தத்துவஞானி என்பதை காட்டிலும் மேலானவர் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. அதுதான் பொதுவான சுவிசேஷமாய் உள்ளது. அவர்கள் "அவர் ஒரு நல்ல மனிதர். அவரிடமிருந்தது... அவர் ஒரு நல்ல போதகர், ஆனால் அவர் தெய்வீகமானவர் அல்ல." என்றனர். ஏன், அவர்... நிச்சயமாகவே அவர் தெய்வீகமானவர் ஆவார். அவர் தீர்க்கதரிசிகளின் தேவனாய் இருந்தார். இந்த பெண்மணி என்னிடம் கூறினாள், அவள், " திரு பிரன்ஹாம், நீர் இயேசுவை குறித்து மிகவும் அதிகமாக பெருமை பேசிக்கொள்ளுகிறீர்" என்றாள். நான் கூறினேன், "நான் உங்களுடன் வேறுப்படுகிறேன் . என்னால் போதுமான அளவு பெருமை பேசிக்கொள்ளவே முடியாது." அவள் ,"அவர் ஒரு மனிதன் மாத்திரமே என நான் உமக்கு நிரூபித்தால்.... நீர் அவரை தெய்வீகமானவர் ஆக்குகின்றீர்." என்றாள். நான் கூறினேன்,"அவர் தெய்வீகமானவராயிருந்தார் " என்று. "ஓ", " அவர் ஒரு போதகராக இருந்தார்" என்றாள். நான்," அவர் தேவனாக இருந்தார்" என்றேன். மேலும் அவள் கூறினாள், “அவர் ஒரு மனிதன் மாத்திரமே என நான் வேதவாக்கியங்களைக் கொண்டு உமக்கு நிரூபித்தால், நீர் அதை விசுவாசிப்பீரா?" நான் "வேதம் அவ்வாறு கூறுமானால்" என்றேன். மேலும் அவள் ,"பரிசுத்த யோவான் 11ஆம் அதிகாரத்தில் , இயேசு லாசருவின் கல்லறையண்டை சென்றபோது, அவர் அழுதார் என்று வேதம் கூறுகிறது." என்றாள். நான் "அது சரிதான். அதனால் என்னாயிற்று?" என்றேன். அவள் கூறினாள், "பாருங்கள், அவர் அழுது கொண்டிருந்தாரானால், அவர் ஒரு மனிதனாக இருந்தார்." நான் கூறினேன்,"அவர் அழுதபோது ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதனுடைய கல்லறை அருகில் நின்று, அவர் 'லாசருவே வெளியே வா' என்றபோது, மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதன் தன்னுடைய காலுன்றி நின்று மறுபடியும் ஜீவித்தானே, அப்பொழுது ஒரு மனிதனை விடவும் மேலானவராக இருந்தார்." 18. கடந்த இரவு நாம் பிரசங்கித்தது போன்று, அவர் மலையிலிருந்து இறங்கி வந்து பசியுடன் ஏதாவதொன்றை சாப்பிட விரும்பிய போது, அவர் மனிதனாக இருந்தார். ஆனால் அவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஐயாயிரம் பேரை போஷித்த போது, ஒரு மனிதனை விடவும் மேலானதாக இருந்தார். சரி. ஓர் இரவு அந்த சிறிய படகின் பின்புறத்தில் அவர் படுத்திருந்த போது, ஒரு பாட்டிலின் மூடியைப்போல புயலில் அலைக்கழிக்கப்பட்ட போது, அவர் ஒரு மனிதனாக இருந்தார். கடலினுடைய பத்தாயிரம் பிசாசுகள் அவரை மூழ்கடிப்பதாக அவைகளுக்குள் ஆணையிட்டன. அலைகளும் கூட அவரை எழுப்பவில்லை, அவர் அவ்வளவு சோர்வாக களைப்புற்றிருந்திருந்தார். அவர் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அவர் தன்னுடைய பாதத்தை அந்த படகின் கயிற்றின்மேல் வைத்து, மேலே பார்த்து, "அமைதலாயிரு" என்றபோது, அலைகள் அவருக்கு கீழ்படிந்தன, காற்றுகள் அவருக்கு கீழ்படிந்தன, அது ஒரு மனிதனை விடவும் மேலானதாக இருக்கிறது. 19. அவர் கல்வாரியில், "என் தேவனே, ஏன் என்னை கைவீட்டீர்?" என்று கதறியபோது அவர் மனிதனாக இருந்தார். மரித்த போது அவர் ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் ஈஸ்டர் காலை வேளையில் அவர் அந்த முத்திரையை உடைத்து, கல்லை புரட்டி போட்டு, மறுபடியும் எழுந்தபோதோ, அவர் தேவனாக இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். தேவன் அவருடைய குமாரனில் இருந்தார். அவர் அளவில்லாமல் ஆவியையுடையவராயிருந்தார். நாம் தேவஆவியை சிறுபங்குகளாக கொண்டுள்ளோம். ஆனால் நீங்கள் முழு கடலிலிருந்து ஒரு சிறு அகப்பையில் தண்ணீரை வெளியே எடுப்பீர்களானால், கடலில் காணப்படும் அதே இரசாயனம் தான் அகப்பை முழுதும் உள்ள தண்ணீரிலும் இருக்கும். 20. ஆகவே கவனியுங்கள், தேவன் தன்னுடைய வரத்தை பயன்படுத்த விரும்பியபோது, அவர் இயேசுவிடம் கூறினார்... இப்பொழுது நினைவு கொள்ளுங்கள், பரிசுத்த யோவான் 5:19 -ல் அவர் கூறினார், "என் பிதாவானவர் செய்ய வேண்டியதை எனக்கு காண்பிக்கும் வரை நான் ஒன்றும் செய்யேன், பிதா செய்கிறதை நான் காண்கிறேன்", நாம் இக்கூட்டத்தில் இருக்கும் முதற்கொண்டு நீங்கள் அதை வாசித்திருக்கிறீர்களா? பரிசுத்த யோவான், "மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்." பிதா அவரை மார்த்தாள், மரியாள் மற்றும் லாசருவின் வீட்டிற்கு செல்லாதபடி வேறு ஒரு யாத்திரைக்கு அனுப்பினார். லாசரு சுகவீனம் அடைந்தபோது அவர் வரும்படிக்கு அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். அவர் அதை மறுத்து கடந்து சென்றார். அவர்கள் மறுபடியும் அனுப்பப்பட்டார்கள். அவர் அதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றார். "லாசரு மரித்து போனான். நான் அங்கே இராததினால் உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்." என்றார். இறுதியாக அவர் திரும்பினார், ஏன்? என்ன சம்பவிக்க போகின்றது என்பதை அவர் அறிந்திருந்தார். "ஆனால் நான் அவனை எழுப்ப போகிறேன்" என்று அவர் கூறினார், கல்லறையண்டையில் அவரை கவனியுங்கள். "பிதாவே, நீர் முன்னதாகவே எனக்குச் செவிகொடுத்த படியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆனாலும் இங்கு நிற்பவர்கள் நிமித்தமாக, இதை சொன்னேன். லாசருவே, வெளியே வா." அப்பொழுது அந்த மனிதன் தன்னுடைய கால்களையூன்றி நின்று மறுபடியும் ஜீவித்தான். 21. தன்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு தான் பலவீனமடைவதைக் குறித்து அவர் ஒருபோதும் கூறவில்லை. ஆனால் ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்ட போது, "என்னிலிருந்து வல்லமை புறப்பட்டது" என்றார். இவைகளில் மிகப்பெரிய அற்புதம் எது? மரித்து நான்கு நாட்களான ஒரு மனிதனை எழுப்பியதா அல்லது ஸ்திரீகளுடைய வழிபாட்டினாலுண்டான பெரும்பாட்டை நிறுத்துவதா? அவற்றுள் ஒன்று அவரை பெலவீனமடையச் செய்தது. ஏன்? அது தேவன் தன்னுடைய வரத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்தது அல்ல. அது ஒரு ஸ்திரீ தேவனுடைய வரத்தை உபயோகப்படுத்தினாள். புரிகிறதா? பிதா அவருக்கு என்ன‌ செய்ய வேண்டும் என்பதை காண்பித்தார், அவர் கடந்து சென்று அதை செய்தார். ஆனால் அந்த ஸ்திரீக்கோ மற்ற வழியில் இருந்தது.‌ இப்பொழுது," நான் ஒரு தரிசனம் கண்டேன். நீ சுகமாக போகிறாய்" என்று அவர் கூறவேயில்லை. அவர் கூறினார், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது: உன் விசுவாசம், பிதா எனக்கு காண்பித்ததல்ல, ஆனால் நீ செயல்பட்டதினால்." அது தான் அவரை பெலவீனப்படுத்தியது. 22. இப்பொழுது, இதுதான் காரியம். சரி, நீங்கள் குதித்தெழுகிறீர்கள், பாருங்கள், அதைத்தான் அந்த ஸ்திரீ செய்தாள். அது இழுக்கின்றது ; அதை முயற்சியடைய செய்கின்றது. யாராவது ஒருவர் மேடைக்கு வந்து, அங்கே நிற்கின்றனர். நீங்கள் அதை பெற முயற்சி செய்கிறீர்கள். அது வரமாக உள்ளது. யார் அதை பயன்படுத்துவது? நான் அல்ல. அது நீங்கள் தான். அதை செய்துகொண்டிருப்பது நீங்களேதான், மேலும் நீங்கள் அங்கே அமர்ந்தவாறு, "நான் அதை விசுவாசிக்கின்றேன்" என்று கூறுகையில். உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் அதை உண்மையாகவே அவ்விதம் கருதுகையில், அது வல்லமையை இழுக்கின்றது. என்ன சம்பவிக்கிறது? நான் மேலாக இழுக்கின்றேன். “உனக்கு புற்றுநோய் இருக்கிறது." அது சரி. பாருங்கள்? பின்பு நான் சுற்றிலும் பார்க்கிறேன்... அதை இன்னும் விசுவாசிக்கவில்லை. நான் அதை யூகித்தேன் என்று நீங்கள் நினைத்தீர்கள். புரிகிறதா? பாருங்கள், நான் மீண்டும் திரும்ப செல்ல வேண்டும். நான் மறுபடியும் குதித்தெழுந்து. "மேலும் உனக்கு காசநோயும் இருக்கிறது." வ்யூ. அது சரி. பாருங்கள்? அது-அது குதித்தெழுவதில்லை. அது மற்ற ஸ்தலங்களில் கிரியை செய்வது போல அமெரிக்க ஜனங்கள் மத்தியில் அது கிரியை செய்வதில்லை. ஒரு சமயம் அது ஆப்பிரிக்கா, இந்தியா முழுவதும் போல ... அவர்கள் தங்களுடைய ஊன்று கோல்களையும் மற்ற பொருட்களையும் குவித்து வைத்துவிட்டு முன் செல்கின்றனர். அவர்கள் அதை பார்த்தார்கள். அவர்கள் அதை விசுவாசித்தார்கள். புரிகிறதா? ஆனால், "இது யாவற்றையும் குறித்து என்ன?" என்று நாம் வியக்கிறோம், பாருங்கள்? இப்படிப்பட்ட அமெரிக்க கூட்டங்களில் அது தான் என்னை மடியச்செய்கின்றது. புரிகிறதா? 23.பாருங்கள், மறுபடியும் திரும்ப செல்லுங்கள். உங்களுடைய விரலின் நுனிப்பாகத்தால் அதை பிடித்துக் கொள்ளுங்கள், அதை அந்த துவாரத்தின் வழியாக கடினமாக பார்ப்பதை போன்றுதான் தரிசனமும் உள்ளது. "ஓ, நீங்கள் திருமதி இன்னார் -இன்னார். மேலும் நீங்கள் இங்கிருந்து வருகின்றீர்கள்... " என்றும், அஹ் , ஆம், ஆமாம். அது சரி. மேடையின் குறுக்கே நடந்து செல்கையில். நீங்கள் ஏற்கனவே பெலவீனமாக ஆகிவிடுகிறீர்கள். புரிகிறதா? இப்பொழுது, அவ்விதமாகத் தான் அது கிரியை செய்கின்றது. இப்பொழுது, சற்று முன் நடந்தது போன்று , ஹோட்டலிலோ அல்லது வேறு எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்திருக்கையில் என்ன சம்பவிக்கிறது? அந்த சாகஸ கண்காட்சியின் மேலாளர் அங்கே வளையத்தண்டை வந்து, அவர் " நீ எதை பார்த்துக்கொண்டிருக்கிறாய்? உள்ளே வந்து பார்க்க விரும்புகின்றாயா?" என்றவாறு, என்னை தூக்கியெடுத்து பிடித்து, "இங்குதான் இருக்கின்றது" என்றார். அவர் ஒரு மகத்தான பெரிய பலம் வாய்ந்த மனிதன்.. "இங்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கூடாரங்களை பார்த்தாயா? அவர்கள் இங்கு சென்று இதை செய்கிறார்கள் என்றும் மேலும் இங்கே இவ்விதமாகவும் மற்ற விதமாகவும் செய்கின்றனர்." என்றும் கூறுகின்றார். ஏன், நான் அவருடைய கரத்தின் மேல் அமர்ந்துள்ளேன். உட்கார்ந்து உள்ளே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். புரிகிறதா? அவர் என்னை மேலே தூக்கினார். தேவன் அதை பயன்படுத்த விரும்பும் விதமாக தரிசனங்கள் வரும்போது அவ்விதமாக தான் அது இருக்கின்றது. "குறிப்பிட்ட ஒரு ஸ்தலத்திற்குச் செல்" என்று அவர் கூறுகின்றார் . 24. இங்கு அண்மையில், உங்களுடைய செய்தித்தாளில் நீங்கள் அதை கண்டிருப்பீர்கள். டென்வர் என்னுமிடத்தில் அற்புதம் செய்யும் ஒரு மனிதனை குறித்து அசோசியேட் பத்திரிகையில் அது வந்திருந்தது என்று நான் யூகிக்கின்றேன். மர்மமானதோ அல்லது அற்புதமா என்று அவர்களுக்கு தெரியவில்லை. தேவனே அறிவார். நான் என்னுடைய அறையில் இருந்தேன். நான் அங்கே ஒரு கடிகாரமிருந்த அந்த இடத்தில் ஒரு மனிதனை கண்டேன். அவர் சக்கர நாற்காலியில் இருந்தார்; அது கீச்சென்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது. நான் அந்த பழைய கடிகாரத்தை பார்த்தேன் அது சரியாக மூன்று மணி பத்து நிமிடங்களாகியிருந்தது. நான் ஒரு பத்து சென்ட் கடையில் நின்றுக்கொண்டிருந்தேன், மேலும் நான்... "அந்த மனிதனின் அருகில் போ " என்றது. அதன்பிறகு நான் அவர் அருகில் சென்ற போது, அவர் வேதாகமத்தை பையில் வைக்க முயன்று கொண்டிருந்தார்… அதாவது, அவருடைய கரத்தில் ஒரு வேதாகமத்தை கொண்டிருந்தார். நான் அவர் அதை விசுவாசிக்கின்றாரா என்று அவரிடம் கேட்டேன். "ஆமாம் ", என்று அவர் கூறினார். மேலும் நான் அவருடைய கரத்தை பிடித்து, மேலே உயர்த்தி தூக்கினேன். அவர் சுகமாக்கப்பட்டார். நான் அவ்விடம்விட்டு வெளியே செல்லும் வழியை நோக்கினேன். 25. அவர் வந்த பின்பு, நான் ஒரு குழந்தையை கண்டேன். அது மரித்து கொண்டிருந்தது. அங்கிருந்து மருத்துவர் வெளியே வந்து கொண்டிருந்தார் . அவர் ஒரு சாம்பல் நிற காருக்குள் சென்றதை நான் கவனித்தேன். அவர் மீசை வைத்திருந்தார். அங்கு ஒரு வாசல் இருந்தது, நேரே வாசலுக்கு அப்பால் ஒரு மண்வெட்டி வைக்கப்பட்டிருத்தது. நான் அறைக்குள்ளே செல்லுகையில் என்னுடைய தொப்பியை அந்த தொலைக்காட்சி பெட்டியின் மீது வைத்திருந்தேன். அங்கு ஒரு ஸ்திரீ சிவப்புநிற கம்பளியாடை அணிந்திருந்தாள், மற்றொருவள் பழுப்பு நிற கோட் அணிந்திருந்தாள் . அவர்கள் அழுது கொண்டிருந்தனர். அவர், "அந்த குழந்தையிடம் செல்" என்றார். மேலும் நான் சென்று கரங்களை குழந்தையின் மேல் வைத்தேன். அவன் சுகமடைந்தான். நான் தரிசனத்தை விட்டு வெளியே வந்தபோது, நான் உள்ளே சென்று , என்னுடைய மனைவிடம் "தேனே, இங்கே எழுதி வைக்கப்பட்டுள்ள படி ஒரு குழந்தையையோ அல்லது சக்கர நாற்காலியிலிருக்கும் ஒரு மனிதனையோ நீ காண முடிகிறதா, காண முடிகிறதா என கவனித்துப்பார்." என்று கூறினேன். இல்லை என்றாள். நான் அலுவலகத்தை தொடர்புகொண்டு . "அங்கே எத்தனை விமான டிக்கெட்டுகள் உள்ளன?" என்றேன். "ஓ, ஐந்து அல்லது ஆறு." என்றனர் " அவற்றில் என்ன எழுதப்பட்டுள்ளது?" என்றேன் 26. அவர்கள் இங்கே வருகிறதென்றும், அங்கே செல்கிறதென்றும் இவ்விதமாக என்னிடம் கூறினார். ஒரு காரியத்தையும் என்னால் உணர முடியவில்லை. நல்லது, நான் இரண்டு அல்லது அதற்கதிகமான வாரங்கள் அதை அப்படியே விட்டு விட்டேன் என நினைக்கிறேன். சிறிது கழித்து, டென்வருக்கு வரும்படி ஒரு மனிதன் எனக்கு ஒரு டிக்கெட் அனுப்பினார், நான் டென்வருக்கு வந்த போது, நான் டென்வருக்கு செல்ல வேண்டும் என்று நடத்தப்பட்டதை நான் உணர்ந்தேன். நான் கடந்து சென்று அந்த மனிதனுக்காக ஜெபித்தேன். அவருக்கு என்ன சம்பவித்தது என்று எனக்கு தெரியாது. நான் வெறுமனே கடந்து சென்றேன். அவருக்கு காசநோய் இருந்தது, ஒரு சிப்பாயான அவர் அங்கே மருத்துவ இல்லத்தில் இருந்தார் : ஆகவே நான், "நல்லது, நான் இப்போது சற்றே காத்திருப்பேன். நாம் இங்கே இந்த நகரத்திலிருக்கிறோம். மேலும் 5:30 மணிக்குத்தான் நான் விமானத்தில் புறப்படவிருக்கிறேன். ஆகவே நான் டென்வரை சுற்றி பார்க்க போகிறேன்." என்று நினைத்தேன். ஆதலால், நான் வீதியினூடாக நடந்து சென்று கொண்டிருந்தேன், இதைப் போன்று சற்றே நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு ஸ்திரீ அழுவதை நான் கேட்டேன். நான் நோக்கிப் பார்த்தபோது, ஒரு மருத்துவர் தன் சிறிய பையை கையில் பிடித்திருப்பதை கண்டேன், "அருமையான நாள்" என்று கூறியவாறு நான் நடக்க செல்ல தொடங்கினேன். 27. "இந்த மனிதனை நான் எங்கோ பார்த்திருக்கிறேனே" என்று நான் நினைத்தேன். மீசை, சாம்பல் நிற உடை, அந்த கார் மற்றும் அவர் வாசலை கடந்து வெளியே வந்தார். நான் அவருக்கு மிக நெருக்கமாக கிட்டத்தட்ட பத்து அடி தூரத்தில் இருந்தேன். அவர் நோக்கி பார்த்தார். நான்," மருத்துவரே, எப்படி இருக்கிறீர்?" என்றேன். அவர் "எப்படி இருக்கிறீர்" என்றார். அவர் நின்று , திரும்பி பார்த்து , நினைத்தார்... அவர் ஒரு மருத்துவர் என்பது எனக்கு எப்படி தெரியும் என்று ஆச்சரியப்பட்டிருப்பார், என நான் யூகித்தேன். பாருங்கள், நான் பொறுமையாக இருந்தேன். அவர் வேறு ஒன்றும் பேசவில்லை, காரில் ஏறி சென்றுவிட்டார். "கர்த்தாவே, அந்த வாசலுக்கு பின்னால் அந்த மண்வெட்டி வைக்கப்பட்டிருந்தால், அது தான் காரியம்." என்று நான் நினைத்தேன். நான் அங்கு கடந்து சென்று பார்த்தேன். அங்கே அந்த மண்வெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதுவாகத்தானிருந்தது. நான் படிக்கட்டுகள் மேல் ஏறி நடந்து சென்று, கதவை தட்டினேன், அந்த கதவண்டையில் சீமாட்டி வந்தாள். அவள் சிவப்பு கம்பளியாடையை அணிந்திருந்தாள். மேலும் நான், "உன்னுடைய குழந்தை சுகவீனமாயிருக்கின்றது, நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றதா?" என்றேன். "ஆம், ஐயா." மேலும் "அதற்கு இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று மருத்துவர் சற்று முன்புதான் கூறினார்." என்றாள். நான் "நான் ஒரு ஊழியக்காரன். என்னுடைய பெயர் திரு.பிரன்ஹாம். உனக்கு என்னை தெரியுமா அல்லது என்னை குறித்து எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? " என்றேன். அவள், "இல்லை, ஐயா. உம்மை தெரியுமென்று நம்பவில்லை." என்றாள். நான் "நீங்கள் கிறிஸ்தவர்களா?" என்றேன். அவள், " இல்லை, ஐயா, நாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. நாங்கள் சபைக்கு செல்வதில்லை" என்றாள். "நாங்கள் அதைச்செய்தாக வேண்டும், என்பது தெரியும்" என்று கூறினாள். நான் "நான் உள்ளே சென்று, மரித்துக்கொண்டிருக்கும் உங்களுடைய குழந்தைக்காக ஒரு சிறு ஜெபம் செய்யலாமா?" என்றேன். அவள்,"நிச்சயமாக நீர் அதை செய்யலாம். ஐயா, நீர் அதை செய்வதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்." என்றாள். 28. உள்ளே நடந்தேன், ஆனால் பழுப்பு நிற மேல் அங்கி உள்ள ஸ்திரீ அங்கு இல்லை. நான் என்னுடைய தொப்பியை தொலைக்காட்சி பெட்டியின் மீது வைத்தேன், மேலும் ஒரு சில நிமிடங்கள் நான் காத்திருந்தேன். பாருங்கள், நான்... நான் ஏன் ஜெபிக்க தொடங்கவில்லை என்று அவள் வியந்தாள், ஆனால் என்னால் ஒன்றையும் கூற இயலவில்லை. நான் பழுப்பு நிற மேல் அங்கி அணிந்துள்ள ஸ்திரீக்காக காத்திருக்கவேண்டியிருந்தது. இப்போது, அது எவ்வளவு எளிமையாக இருக்கின்றது. நான் அங்கு காத்துக் கொண்டிருந்தேன், ஒரு அரை மணிநேரம் கர்த்தரை குறித்து மற்ற காரியங்களை அவளிடம் பேசிக்கொண்டிருந்தேன் என்று நான் நினைக்கின்றேன். அதன்பிறகு, சிறிதுநேரம் கழித்து, யாரோ ஒருவர் அங்கே கதவை தட்டினார்கள். மேலும் பழுப்பு நிற மேலங்கி அணிந்த அந்த ஸ்திரீ-உள்ளே வந்தாள், ஆனால் அவள் அந்த பக்கமாக உட்கார்ந்திருக்க வேண்டியிருந்தது மற்றும் சிவப்பு நிற கம்பளி உடை அணிந்திருந்த இந்த ஸ்திரீ இந்த பக்கமாய் உட்கார வேண்டியிருந்தது, அவர்கள் தங்களுடைய இடம் மாறி உட்கார வேண்டியிருந்தது. அவை யாவும் அந்த ஸ்தானத்தில் அமையும் வரையிலும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தரிசனமானது பரிபூரணமாக இருக்க வேண்டியிருந்தது. அதன் பின்பு நான் கூறினேன்," இப்பொழுது, பெண்மணியே , நான் ஏன் காத்திருந்தேன் என்று நீ வியந்திருக்கலாம். இது ஒரு தரிசனமாய் இருக்கின்றது. நான் கூறுவது என்னவென்று ஒருக்கால் உங்களுக்கு புரியாமலிருக்கலாம், ஆனால் சற்றே ஒரு நிமிடம் உன்னுடைய குழந்தையை கவனித்துப்பார்" என்றேன். அங்கு சென்று, அந்த குழந்தைக்காக ஜெபித்தேன். உடனே அந்த சிறு பிள்ளை சத்தமிட தொடங்கி முன்சென்றது. அந்த தாய் குழந்தையை தூக்கி அமர்த்தினாள். பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் பிள்ளை தரையின் மீது விளையாடிக் கொண்டிருந்தது. ஜுரம் மற்றும் அனைத்து காரியங்களும் குழந்தையை விட்டு விலகிற்று. குழந்தையில் இருந்த ஜுரத்தை எடுத்துப் போட்டார். அன்றியும் நான் அங்கே அந்த இடத்திலேயே அவர்கள் இருவரையும் கிறிஸ்துவிடம் நடத்தினேன். 29. நான் வெளியே கடந்து வீதியை நோக்கி செல்ல தொடங்கினேன்," கர்த்தாவே, உமக்கு நன்றி. இப்பொழுது நான் புரிந்துகொண்டேன்" என்று நினைத்தேன். மேலும் சிறிது தூரம்தான் சென்றிருப்பேன், "அந்த தரிசனத்தின் எஞ்சியுள்ள காரியங்கள் என்ன?" என்று நான் சிந்தித்தேன். அது ஏதோவொன்றாக இருக்கின்றது. நான் அங்கு நின்று கொண்டிருக்கையில், ஒரு கடிகாரம் மூன்றாம் மணி ஓசையை அடிப்பதை நான் கேட்டேன். நான் அந்த பத்துசென்ட் கடையின் ஓரமாக நடந்தேன், மேலும் அங்கே அந்த கோபுரதின் மேல் அந்தப் பழைய கடிகாரம் இருந்தது. "தேவனே, சரியாக இங்கே நான் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்" என்று நினைத்தேன். நான் அங்கு காத்துக் கொண்டிருந்த போது, பத்து நிமிடங்கள் கடந்தன. பத்து நிமிடங்கள் கடந்து முடிகின்ற போது, ஏதோவொன்று கீச்சென ஒலித்து கொண்டு வருவதை நான் கேட்டேன். அது ஒரு மனிதன் சக்கர நாற்காலியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார், மேலும் ஒரு பெண்மணி அவரை தள்ளிக் கொண்டிருந்தாள்: அவருடைய கரத்தில் ஒரு வேதாகமத்தை வைத்திருந்தார். பரிபூரணமாக, அதுவாகத்தான் இருந்தது. நான் "ஐயா, நீர் அந்த வார்த்தையை விசுவாசிக்கிறீரா?" என்றேன். அவர் கூறினார், "என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவசிக்கிறேன்", " நான் ஒரு கிறிஸ்தவன்" என்றார். நான் சொன்னேன், "இயேசு அவருடைய நாட்களில் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார் என்று, நீர் வாசித்துக் கொண்டிருக்கும் அந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது" என்றேன். அவர் " ஆம், ஐயா. அதைத்தான் நான் வாசித்துக்கொண்டிருந்தேன்." என்றார் . நான் "அவர் இன்றும் மாறாதவர் அல்லவா?" என்றேன். அவர் கூறினார், "ஆம், ஐயா. அவர் மாறாதவராயிருக்கிறார்" என்றார். நான் "நீர் அதை விசுவாசிக்கின்றீரா?" என்றேன். அவர் அதற்கு, " என்னுடைய முழு இருதயத்தோடும்" என்றார். நான் கூறினேன், "அப்படியானால் எழுந்து நில்லும். அவர் உம்மை சுகப்படுத்தினார்" என்றேன். 30. அவர் மேலே குதித்தெழுந்து சத்தமிட தொடங்கினார். நான் ஓடிச்சென்று , பத்துசெண்ட் கடையின் ஓரமாக, வெளியே சென்று, தெருவினூடாய் கடந்து, திரும்பி போய், ஒரு டாக்ஸியை பிடித்து, நிலையத்திற்கு சென்றுவிட்டேன். அசோசியேட் பத்திரிகையில் ஒரு பெரிய பகுதியில் "டென்வரில் மர்மமான சுகமளித்தல்." என்று பிரசுரிக்கப்பட்டது. இதுவரையிலும் அவர்களுக்கு தெரியாது. பாருங்கள்? ஆனால் தேவனாகிய கர்த்தர் அதை செய்தார். புரிகிறதா? இப்பொழுது, அது என்னை சிறிதளவு கூட பெலவீனமடைய செய்வதில்லை. ஆனால் நீங்கள் இங்கே நிற்கும்போது கடும் முயற்சி செய்ய வேண்டியுள்ளது... புரிகிறதா? அது நீங்கள் தேவனுடைய வரத்தை பயன்படுத்துவதாக உள்ளது. எனக்கு அதனுடன் ஒரு சம்பந்தமும் இல்லை. அது தேவனுடையதாகும். அது என்னுடையது அல்ல. அது தேவனுடையது. நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும் அல்லது அவர் அதை உபயோகிப்பார். அதுதான் காரியம். இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? அதுதான் பலவீனமடைய செய்கின்றது, மேலும் நீங்கள் வேதாகமத்தை கவனித்து அதை வேதவசனத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், அது மிக சரியாகவும் அப்படியே சத்தியமாக உள்ளது என்றும் காணலாம். 31. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம். ‌ கர்த்தாவே, நாங்கள் வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொண்டிருக்கையில் இப்போது எங்களோடு கூட இரும்... கர்த்தாவே , என்னால் இங்கே நிற்பதற்கு கூட இயலாமல், களைப்படைந்திருக்கிறேன். ஆனால் இப்போது வார்த்தைக்கு ஊழியம் செய்யும்படிக்கு நீர் எனக்கு உதவி செய்யுமாறு நான் வேண்டிக்கொள்ளுகிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். 32. நான் இப்பொழுது ஒரு வேத பாடத்திற்காக சங்கீதம் 63 லிருந்து வாசிக்க விரும்புகிறேன். அடுத்த 30 அல்லது 40 நிமிடங்களில் வெளியேறுவோம் என்று நாம் எதிர்பார்க்கிறோம். தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். இங்கே 2வது வசனத்தில் அந்த தீர்க்கதரிசியைக் கவனியுங்கள். இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். ஆனாலும் இன்றிரவில் என்னுடைய தலைப்பு "ஜீவன்". ஜீவன் தான் நம்மை கட்டுப்படுத்துகிறது. ஜீவன் தான் உங்களுக்கு உள்உணர்வுகளை தருகிறது. அன்றியும், உங்களுடைய ஜீவியத்தின் மூலமாகவே நீங்கள் என்னவாயிருக்கின்றீர்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்கின்றனர். 33. சமீபத்தில் நான் ஒரு அடக்க ஆராதனையில் பிரசங்கித்து கொண்டிருக்கையில், "இந்த மனிதனுடைய ஜீவியத்தை குறித்து நான் யாதொன்றும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஜீவித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் இதை சந்தித்தாக வேண்டும். இதைத்தான் நான் உங்களுக்கு பிரசங்கிக்க விரும்புகிறேன். உங்களில் ஒவ்வொருவரும்... இந்த அயலகத்தில் நீங்கள் வளர்ந்து, ஜீவித்து, மரிக்கிறீர்கள். நீங்கள் அவரைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஏற்கனவே மனதில் தீர்மானித்திருக்கிறீர்கள்." புரிகிறதா? ஜீவன் இதைப் பார்க்கிலும் மகத்தானது ஏது? நீங்கள் என்னவாக இருக்கின்றீர்கள் என்று உங்களுடைய உள் உணர்வுகள் உருவாக்குவது தான், உங்களுடைய ஜீவியமாக உள்ளது. நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறோம் என உரிமைகோருவோமானால், நாம் எப்படிப்பட்ட குணாதிசயத்தை கொண்டிருக்கவேண்டும்? இப்பொழுது, ஒரே ஒரு வித நித்திய ஜீவனானது மட்டுமே உள்ளது, அது தேவனுடைய ஜீவனாக இருக்கின்றது. வானவில்லின் ஏழு நிறங்களை போல தேவனுடைய ஏழு ஆவிகள், ஆதியிலே உண்டாயிருந்த அந்த மகத்தான ஆவிதான் அது. ஒவ்வொரு ஆவியும் அதிலிருந்து புறப்பட்டு, கீழே வருகின்றது . 34. நித்திய ஜீவன் என்பதற்கான கிரேக்க வார்த்தை "சோய்" என்ற வார்த்தையிலிருந்து வருகிறது, அதின் அர்த்தம், "தேவனுடைய சொந்த ஜீவன்." என்பதாகும். மேலும் அது தேவனில் உள்ள அன்பு "அகபோ" என்று அழைக்கப்படுகிறது, அதன் அர்த்தம், "தேவனுடைய அன்பு." என்பதாகும். நீங்கள் உங்களுடைய மனைவியிடம் கொண்டுள்ள அன்பு என்பது "ஃபீலியோ." ஆகும். ஃபீலியோ அன்பு, அது மனிதனுடைய அன்பாகும். அதனுடைய வித்தியாசம் இது தான். நீங்கள் அவற்றை மிகவுமாக குழப்பிக்கொள்கிறீர்கள், விசுவாசம் மற்றும் நம்பிக்கையை போன்று, அவை குழப்பிக் கொள்ளப்படுகின்றது. உங்களுடைய மனைவிக்காக நீங்கள் கொண்டுள்ள அந்த விதமான அன்பு ஃபீலியோ அன்பு என்று அழைக்கப்படுகிறது, அது உங்களை எரிச்சலுடையவனாக ஆக்குகிறது, ஒரு மனிதன் அவளை அவமானப் படுத்துவானானால், நீங்கள் அவனை வழியில் சுடும்படியாக செய்யும். ஃபீலியோ அன்பு அதை தான் செய்யும். நீங்கள் அவளை அந்த விதமான அன்போடு நேசிக்கிறீர்கள். ஆனால் அகபோ அன்போ அவனுடைய பாவம் நிறைந்த ஆத்துமாவுக்காக உங்களை ஜெபிக்கும்படி செய்யும். அது தான் வித்தியாசம். புரிகிறதா? 35. இப்பொழுது, அங்கே ஜீவன் இருக்கின்றது. ஒரே ஒரு நித்திய ஜீவன் தான் உள்ளது, அது தேவனுடைய ஜீவனாகும். அதை நீங்கள் பெற்றுக்கொள்ளும்போது, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஜீவன் என்று வரும்போது அதற்கு அநேக அர்த்தவிளக்கங்கள் உள்ளன. இங்கு அன்பு இருக்கிறது, அகபோ அன்பு; ஃபீலியோ அன்பு; இச்சை. கவனியுங்கள், நீங்கள் அவ்விதமாகவே கீழே சென்று, மேலும் அடிமட்டதிற்கு சென்று தாழ்வுக்கும் கொண்டு செல்லலாம். ஆனால் அவை யாவற்றுக்கும் ஒரு துவக்கம் உன்டாயிருந்தால், அதற்கு ஒரு முடிவும் உண்டாயிருக்கும். ஆனால், துவக்கமே இல்லாத ஒன்றிற்கு முடிவும் இராது. ஆகையால் தேவனுக்கு துவக்கம் என்பதே கிடையாது, அவருடைய ஜீவனுக்கும் துவக்கம் என்பது கிடையாது, அதற்கு முடிவு என்பதும் இருக்காது. மேலும், நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருப்பீர்களானால், உங்களுக்குள்ளிருக்கும், நித்திய ஜீவனுக்கு முடிவு என்பதே கிடையாது. அது என்றென்றைக்குமாய் உள்ளது. அந்த ஜீவனால் உங்களுடைய குணாதிசயமானது நிரூபிக்கப்படுகின்றது. 36. சில காலங்களுக்கு முன் தெற்கு பகுதியிலிருக்கும் அடிமைகளை விலைக்கு வாங்குபவர் ஒருவர், அநேக வருடங்களுக்கு முன்பு , அடிமைகளை விலைக்கு வாங்கும்படி சென்றார்.... அவர்கள் அந்த பழைய தோட்டங்களுக்கு சென்று, ஒரு தரகரிடத்தில் பேசுவார்கள்...., நீங்கள் ஒரு பழைய பயன்படுத்தப்பட்ட காரை விலைக்கு வாங்குவதைப்போன்றே, அவர்கள் மனித ஜீவனை, அடிமைகளாக வாங்குவார்கள். அவர்கள் சென்று இந்த பெரிய அடிமைகளை, பெரும் வலிமையான அடிமைகளை விலைக்கு வாங்கி, ஒருக்கால், அந்த மனிதர்களை, கால்நடைகளை இனஉற்பத்தி செய்வது போன்று, பெரும் ஆரோக்கியமான பெண்களிடத்தில் இனஉற்பத்தி செய்து, வலுவான மிகப்பெரிய அடிமைகளை உருவாக்குவர். சகோதரனே, அது தவறு ஆகும். அப்பொழுது... ஒரு நாள் ஒரு தரகர் ஒரு குறிப்பிட்ட அந்த பழைய தோட்டத்திற்கு வந்தார். அவர் "இங்கு உங்களிடம் எத்தனை அடிமைகள் உள்ளனர்?" என்று கேட்டார். அவர் கூறினார், "நூற்றுக்கு மேற்பட்டோர் உள்ளனர்" என்றார். "நான் அவர்களை பார்வையிடலாமா?" என்றார். "தாராளமாக", என்றார். 37. அவர் அந்த நாள் முழுதும் தங்கிருந்து, அடிமைகளின் சுபாவத்தையும், அவர்கள் அவர்களை எவ்வாறு நடத்துக்கின்றனர் என்றும், அவர்கள் நல்ல பணியாட்களா இல்லையா என்பதையும் கவனித்தார். நாள் கடந்து செல்லுகையில்... நீங்கள் பாருங்கள், அடிமைகள் தங்கள் வீட்டிலிருந்து தூரமாக அகன்றிருந்தனர், தாய் தகப்பனிடமிருந்து தூரமாயிருந்தனர். அவர்கள் ஜெர்மனி அல்லது ஆப்பிரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கி, இங்கு கொண்டு வந்து அடிமைகளாக விற்றனர். அவர்களை வேலை செய்யும்படி சில நேரங்களில் அவர்களுக்கு கசையடி கொடுப்பார்கள். அவர்களுடைய அன்புக்குரியவர்கள் கடலுக்கு அப்பால் இருந்தனர். அவர்கள் அவர்களை இனி ஒருபோதும் காண்பதேயில்லை. இங்கு அவர்கள் அடிமைத்தனத்திலேயே மரிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான், அவர்கள் வருந்தினர் மேலும் அவர்களை சாட்டையினால் அடித்து வேலை செய்ய வைக்க வேண்டியிருந்தது. 38. ஆனால் அவர்கள் ஒரு இளம் வாலிப அடிமையை கவனித்தனர். அவர்கள் அவனை அடிக்க வேண்டிய அவசியமிருந்ததில்லை, அவன் நிமிர்ந்த மார்புடன், கம்பீர முகத்துடன் நிமிர்ந்தவாறு இருந்ததை சரியாக அந்த நிமிடம் கவனித்தனர். அந்த தரகர் கூறினார், "நான் அந்த அடிமையை விலைக்கு வாங்க விரும்புகிறேன்" என்றார். அதற்கு எஜமான், "ஆனால் அவன் விற்ப்பனைக்கானவன் அல்ல" என்றார். அவர், "மற்றவர்களை விட அவனை மிக வித்தியாசமாக ஆக்குகிறது என்ன?", "பாருங்கள், ஒருவேளை மற்றவர்களுக்கு அவன் தலைவனாய் இருப்பானோ" என்றார். எஜமான் சொன்னார், "இல்லை, அவன் வெறுமனே ஒரு அடிமையே" என்றார். அவர் கூறினார் "நல்லது, நீர் ஒருவேளை மற்றவர்களுக்கு அளிப்பதை விட அவனுக்கு சிறப்பான ஆகாரம் கொடுக்கக்கூடும்" என்றார். அவர், "இல்லை. சமைக்குமிடத்தில் அவர்கள் அனைவரும் ஒன்றாக தான் சாப்பிடுகிறார்கள்" என்றார். அவர், "நல்லது, மற்றவர்களிடமிருந்து அவனை மிகவும் வித்தியாசமாக ஆக்குவது என்ன?" என்றார். அவர், "உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரையிலும் நானும் அவ்வாறுதான் வியந்துகொண்டிருந்தேன்." "அந்த பையனுடைய, தகப்பன் அவனுடைய நாட்டில் பழங்குடியினத்தின் ராஜாவாக இருக்கிறார், அவன் தான் ஒரு ராஜாவினுடைய குமாரன் என்பதை அறிந்திருக்கிறான். அவன் வீட்டைவிட்டு தூரமாக ஒரு அந்நியனாக இருந்தாலும், இருப்பினும் அவன் தன்னை ஒரு ராஜாவினுடைய குமாரனாகவே நடத்திக்கொள்கின்றான்" என்றார். இன்றிரவு சபையானது என்ன செய்ய வேண்டியிருக்கின்றது? பாவமும் பெருங்குழப்பமும் நிறைந்த குருடான உலகத்தில் இருந்தாலும் கூட , நாம் நம்மை தேவனுடைய குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் நடத்திக்கொள்ள வேண்டும். 39. நான் இந்த வேத வசனத்தை வாசித்த போது, "தீர்க்கதரிசி குறிப்பிடுவது என்னவாக இருக்கும்? இது ஒரு வழக்கத்திற்கு மாறான வார்த்தையாக உள்ளது." என்று நான் நினைத்தேன். ஜீவனை பார்க்கிலும் உம்முடைய கிருபை நல்லது. "ஜீவன் என்பதற்கு அநேக அர்த்தவிளக்கங்கள் இருந்தாக வேண்டும்", என்று நான் நினைத்தேன். இப்பொழுது நாம் மாம்சத்தில் ஜீவித்துக்கொண்டிருக்கும் இந்த ஜீவனை அது குறிப்பிட்டிருக்க முடியாது. ஏனென்றால் அந்த ஜீவனுக்கு இதயவலி உள்ளது. அந்த ஜீவனுக்கு துக்கமும் உள்ளது. மனிதர்கள் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடைய மூளையை வெளியே சிதற வைக்க விரும்பும் அளவிற்கு சில சமயங்களில் அந்த ஜீவன் மோசமாகிவிடுகின்றது. ஆகவே அவன் பேசிக் கொண்டிருக்கின்ற ஜீவன் இதுவாக இருக்க முடியாது. அவன் மற்றொரு ஜீவனை குறித்துதான் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த ஜீவனோ, ஜனங்கள் ஒரு உயரமான கோபுரத்தில் ஏறி அதிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துக்ககரமாகிவிடுகின்றது. மிக உயர்தர வாழ்க்கை நிலையை கொண்டிருக்கவேண்டிய நம்முடைய அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒரு வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் விஷம் அருந்திக்கொள்கின்றனர். ஆகவே அதற்கு வேறொரு வியாக்கியானம் இருந்தாக வேண்டும், மேலும் அது இங்கே கூறுகின்றது, "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது. என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் நான் உம்முடைய வல்லமையை கண்டேன். ஜீவனைப் பார்க்கிலும் எனக்கு உமது கிருபை நல்லது என கண்டு வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்தில் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. இன்று நாம் ஜீவியம் என்று அழைக்கின்ற இந்த வாழ்க்கையில் மிகுந்த ஏமாற்றங்கள் தான் இருக்கின்றது." 40. சில காலங்களுக்கு முன்பு நான் கனடாவில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு கூட்டத்தை கொண்டிருந்தேன். இந்த குறிப்பிட்ட கூட்டத்தில், அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட விடுதியில் ஒரு யூபிலியை கொண்டாடுவதற்கு அங்கு ஒரு அமெரிக்க குழு வந்தனர். அன்று அவர்கள் வருகையில் , அனைவரும் குடித்துக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அது கிட்டத்தட்ட என்னுடைய சொந்த நாட்டை குறித்து வெட்கமடைய செய்தது. அந்த இரவில், நான் அரங்கத்தை விட்டு புறப்பட்ட போது, இந்த மகத்தான பெரிய ஹோட்டலின் அறைக்கு சென்றுகொண்டிருதேன். நான் ஏறக்குறைய பத்து அல்லது பதினைந்தாவது மாடி வரை சென்றேன், லிப்டில் எங்கும் விஸ்கி பாட்டில்கள் குவிந்து கிடந்தன. மேலும் கீழ் வரவேற்பு முகப்பு அறையில் அவர்கள் தொடர்ந்து குடித்துக் கொண்டு இருந்தார்கள். நான் லிஃப்ட்-ன் உதவிக்கார சிறுவனிடம் "இவை அனைத்தும் என்ன?" என்று கேட்டேன். " அவன் நிச்சயமாகவே ஒரு நேரத்தை கொண்டுள்ளார்கள்" என்றான். 41. அதன்பிறகு என்னுடைய தளத்தில் நான் இறங்கி ஓரமாக நடந்துசென்றேன். அரங்கின் கடைமுனையிலிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். நான் பார்த்தபோது அங்கு இரண்டு அமெரிக்க வாலிப பெண்கள் வெறுமனே தங்களுடைய உள்ளாடைகளை மாத்திரம் அணிந்தவாறு நின்று கொண்டிருந்தனர். இருவரும் தங்களால் இயன்ற அளவு குடித்திருந்தார்கள். ஒருவேளை, விவாகமான பெண்கள், ஏனென்றால் அவர்கள் முப்பது வயது கடந்த ஸ்திரீகள், வெறுமனே உள்ளாடை மட்டுமே அணிந்தவர்களாய், ஒரு விஸ்கி பாட்டிலோடு, அந்த அரங்கினூடாக வந்து கொண்டிருந்தனர். ஆண்கள் அவர்களை அறைக்கு அறை இழுத்து கொண்டிருந்தனர். அந்த பெண்கள், சில வேடிக்கைகளை செய்து கொண்டிருந்தனர். ஒருவேளை அவர்களுடைய கணவர்கள் வீட்டில் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்திருக்கலாம். அல்லது வேலைக்கு அமர்த்தப்பட்ட யாராவது ஒருவர் அவர்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவர்களை நீங்களே கவனித்து கொள்ளும் படியாகதான் தேவன் உங்களுக்கு பிள்ளைகளை அளித்தார். அது தேவனில் உங்களுடைய கடமையாய் உள்ளது. அது பிள்ளைகளின் குற்றங்கள் அல்ல, ஆனால் அது நம்முடைய பெற்றோர்களின் குற்றமாகவே உள்ளது. சில தாய்மார்கள் அவர்களுடைய கடமையிலிருந்து விலகி அகன்று சென்றிருக்கின்றனர். அவர்களுடைய பிள்ளைகளை தானாக வளரும்படி விட்டுவிட்டு, அவர்கள் மதுபான விடுதிகளுக்கு ஓட விரும்பி, அவ்வாறு இரவு முழுவதும் தொடர்ந்து செல்ல விரும்புகின்றனர். அப்படிப்பட்ட நரம்புகோளாருடைய காலத்தில் அவர்கள் வளருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் அந்த குழந்தையை வளர்த்து, கவனித்து கொள்ளும்படியாக உங்களுக்கு கொடுத்திருக்கின்றார். 42. மேலும் இந்த ஸ்திரீகள், அவ்வாறு தள்ளாடிக்கொண்டு வருகையில், அவர்கள் இருவரும், பாதையின் நடுவில் நின்று, அவர்களுடைய சிறு பாவாடைகளை கால்களுக்கு மேலே இழுத்து தூக்கியவாறு, "ஊப்பீ" என்று கூச்சலிட்டு "இது தான் வாழ்க்கை" என்று கூறினார்கள். என்னால் அதற்கு மேல் பொறுத்திருக்க முடிவில்லை. நான் நின்று கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து நடந்து சென்று, "பெண்மணிகளே, சற்று பொறுங்கள் ஒரு நிமிடம் நான் உங்களிடம்‌ பேச விரும்புகிறேன். நீங்கள் அதை தவறாக அரத்தம் கூறினீர்கள்?. 'நாம் மது அருந்துவோம், இது தான் ஜீவியம்.' என்று சொல்லுகின்றீர்கள்? ". நான் அந்த இரண்டு பேரின் தோள்களை பிடித்தேன்; "நீ ஒரு விவாகமான பெண்ணா?" என்று கேட்டேன். "அது உமக்கு எதற்கு" என்று அவள் கூறினாள். "நான் உன்னிடம் கேட்க விரும்புகிறேன். நீ ஒரு விவாகமான பெண்ணா?" என்று கேட்டேன். அவள், "நிச்சயமாகவே, நான் பொழுதுப்போக்குக்காக வேடிக்கை செய்தேன்." என்றாள். நான் சொன்னேன், "சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்', என்று வேதம் கூறுகிறது." "நான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஊழியக்காரன். நான் இங்கே இந்த பனி அரங்கிற்கு வந்திருக்கிறேன். நீயோ அமெரிக்க தேசத்தின் பெயருக்கும் தாய்மைக்கும் நிந்தையை கொண்டு வருகிறாய். உன்னைக் குறித்து நீயே வெட்கமடையவில்லையா? உங்களுடைய கணவர்கள் எங்கே?" என்றேன். 43.அவர்கள் கண்களை உருட்டத்தொடங்கி ஒருவரை ஒருவர் பார்த்தனர். மேலும் அவர்கள் பின்னால் நழுவிச்செல்ல தொடங்கினார்கள். நான் அவர்களுடைய கரங்களை பிடித்தேன். "சற்றே ஒரு நிமிடம். நீங்கள் தேவனை சந்திக்கும் போது என்ன செய்ய போகிறீர்கள்? இன்றிரவு இந்த குடிபோதையின் குழப்பநிலையில், இந்த நிலையில் நீங்கள் மரித்தால் என்னவாயிருக்கும்? உங்களுக்கு என்ன சம்பவிக்கும்? நீங்கள் வாழ்க்கையை பெற்றுள்ளதாக சொல்லுகிறீர்கள். நீங்கள் பாவத்திலும் அக்கிரமத்திலும் மரித்து கொண்டிருக்கின்றீர்கள்" என்று நான் கூறினேன். அவர்கள் என்னுடைய கரங்களை உதறிவிட்டு விலகி, அவர்கள் அரங்கினூடே சென்று, மிகச்சொற்பமான ஏதோவொரு உடையுடன் என்னுடைய பார்வையிலிருந்து தூரே சென்றனர். அதுதான் ஜீவியம் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அது மரணம் ஆகும். ஒரு மனிதன் அதை செய்வதற்கான தாகத்தை உண்டுபண்ணுவது எது? எது ஒரு மனிதனை அப்படி செய்யும்படி விரும்ப பண்ணுகிறது? ஏனென்றால் தேவன் அவர்களை அவ்விதமாக உண்டாயாக்கியுள்ளார். தேவன் ஒரு மனிதனை தாகம் அடையும்படி உண்டாக்கினார். ஒரு மனிதன் தாகம் கொள்ளும்படி அதிகமாக காரியங்களை அவனுக்குள் உண்டாக்கினார். ஆனால் தேவன் அந்த தாகத்தை அவரில் தாகம் கொள்ளும்படியாக வைத்தார். ஆனால் சாத்தான் இதை நித்திய ஜீவனிலிருந்து மரணத்திற்கு புரட்டிப் போட்டு, அதை நீங்கள் விரும்பும் படி செய்கிறான். 44. இப்படிப்பட்ட காரியங்களுக்காக நீங்கள் ஏங்குவதன் காரணம், தேவன் இருக்க வேண்டிய இடத்தை நீங்கள் சாத்தானுக்கு கொடுப்பதினால் தான் . ஓ, அவன் அதை செய்வதில் சிறந்தவன். நீங்கள் ஏதோவொன்றிற்காக தாகம் கொள்ளத்தான் போகின்றீர்கள், ஏனென்றால் நீங்கள் தாகம் கொள்ளும்படியாகவே உண்டாக்கப்பட்டுள்ளீர்கள். தேவன் உங்களை தாகம் கொள்ளும்படி உண்டாக்கினார் , நீங்களோ அதை உலக காரியங்களோடு திருப்தி செய்துகொள்ள முயற்சிக்கின்றீர்கள். அன்றியும் நீங்கள் உலகத்தையோ அல்லது உலகத்தின் காரியங்களிலோ அன்புகூர்ந்தால் உங்களிடத்தில் தேவனுடைய அன்பு இல்லை என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த காரியத்தை குடிப்பதனாலும், திரைப்பட காட்சிகளுக்கு செல்வதாலும், சூதாட்டத்தினாலும், நடனங்களாலும் திருப்தி செய்து கொள்ள முயற்சிக்கின்றீர்கள்; அவை அனைத்தும் பாவத்தின் சம்பளமாய் உள்ளது. அதை செய்வதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. உங்களுடைய சகோதரனாக எனக்கு செவிகொடுங்கள். சாத்தான் ஏதோ சிலவற்றை உங்கள் மீது வைக்கிறான். ஆனால் நீங்களோ அதை அறிவதில்லை. 45. நம்முடைய ஜனங்களுக்கு என்ன சம்பவித்தது? நம்முடைய சபைகளுக்கு என்ன சம்பவித்தது? இன்றையதினமுதல் ஒரு வருடத்தில் இந்த நகரத்தில் ஒரு ஏழையான மனிதனும் கூட இருக்கமாட்டான் என்பதை என்னால் உங்களுக்கு காண்பிக்க முடியும். இந்த நகரத்தில் ஒரு மலிவான ஏழ்மையான வீடும் இராது. தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் அந்த ஜனங்கள் மதுபானங்களுக்கும் , பீர் மற்றும் சிகரெட்டுகளுக்கும் செலவிடும் பணத்தை எடுத்து அதை ஒருமித்து குவிப்பார்களாயின், இந்த எல்லா பொருளாதார பற்றாக்குறைவு துயரநிலைகளையும் நீங்கள் முடிவுக்கு கொண்டுவரமுடியும். அங்கே எத்தனை இருக்கிறது என்றும், ஒவ்வொரு வருஷமும் சிகரெட்டுகளுக்காக எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது என்றும் எண்ணிப்பாருங்கள். இவ்விதமான பெரிய மகத்தான வெகுமதிகள் மற்றும் காரியங்களை அரசாங்கத்திடமிருந்து பெறுவதற்குப் பதிலாக ஏன் அவற்றை கைவிட்டு விடக்கூடாது ? அன்றியும் எல்லா நேரங்களிலும், அது புற்றுநோய், புற்றுநோய், புற்றுநோயாய் உள்ளது, என்று மருத்துவர்கள் முழுவதுமாய் கூறுகின்றார்கள். இந்த அமெரிக்க ஸ்திரீகளோவெனில் அதை இடைவிடாமல் தங்களுடைய தொண்டைக்குள்ளே உறிஞ்சி இழுத்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு பகட்டான நேரம் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், இல்லையா? நான் கிறிஸ்தவர்களிடம் பேசவில்லை. தங்களை கிறிஸ்தவர்கள் என்று எண்ணிக்கொள்கின்ற உங்களிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய சபைகளுக்கு சம்பவித்தது என்ன? நாம் சற்றே அதனூடாக சென்று, பிசாசு எங்கு-எவ்வாறு-எப்படிப்பட்ட ஒரு வர்த்தகனாக இருக்கிறான் என்பதை பார்ப்போம். 46.நீண்ட காலத்திற்கு முன்பு நம்முடைய அனைத்து நவநாகரிகங்களும் பாரிஸ் பட்டணத்திலிருந்து (Paris) வந்தவைகளாக இருந்தது. இப்பொழுது அது பாரிஸிலிருந்து வருவதில்லை. அதை பெறுவதற்கு பாரிஸ்காரர்கள் ஹாலிவுட்டுக்கு வருகின்றார்கள். பரிசுத்தகூட்டத்தை சார்ந்த ஜனங்களே, நீங்கள் பட காட்சிகளுக்கு செல்வதும், அப்படிப்பட்ட மோசமான நாடகங்களை பார்ப்பதும் உங்களுக்கு தவறான காரியமாக இருந்தது; ஆனால் பிசாசு உங்களை அதிலிருந்து அகன்றுவிட செய்துவிட்டான். அவன் அதை தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்து சரியாக அதை உங்களுடைய சொந்த வீட்டிற்குள்ளேயே அமர்த்திவிட்டான். அது சரியே. சிறுவர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கியால் சுடுவதும், குத்திக் கொலை செய்வதும் போன்றவற்றையும் மற்றும் இரண்டு துப்பாக்கிகளுடன் முனையில் நின்று கொண்டிருக்கின்றவற்றையும் எல்லாம் காண்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர்கள் அந்த காரியங்களை பார்க்கின்றனர். அவர்கள் அதற்குள்ளாகவே வளர்க்கப்படுகின்றார்கள். சபை உலக காரியங்களிருந்து வெளியே வந்து தன்னுடைய ஸ்தானத்தை எடுத்து கொள்ளவேண்டிய நேரமாக இருக்கின்றது. நீங்கள் அதை அறிவீர்கள். பரிசுத்த கூட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவ ஸ்திரீகள் தலைமயிரை குட்டையாக வைத்து கொள்வது முன்பு தவறான காரியமாக இருந்தது. என்ன சம்பவித்தது? குட்டை தலைமயிரோடு நீங்கள் சபைக்குள் செல்ல முடியாதிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. முதலிலேயே அது தவறாக இருந்தது; இன்னுமாக அது தவறு தான். ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமயிரை கத்தரிப்பாளானால், அவளுடைய கணவன் அவளை விவாகரத்து செய்து அவளிடமிருந்து விலகிவிட அவனுக்கு உரிமை உண்டு என வேதம் கூறுகிறது. அது முற்றிலும் சரி. நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள்? நவநாகரிக காரியங்களை நீங்கள் பின்பற்றுவதற்காகவே தான். இப்பொழுது, இவைகளுக்கு பின்பு நீங்கள் என்னை விரும்ப போவதில்லை, ஆனால் அந்த நியாயத்தீர்ப்பு மன்றத்தில், நீங்கள் ஏதோவொன்றை கண்டு கொள்ள போகின்றீர்கள். ஒரு ஸ்திரீ தன்னுடைய தலைமயிரை கத்தரித்தால், அவள் அவளுடைய தலையை கனவீனப்படுத்துகிறாள், அதாவது புருஷன் அவளுடைய தலையாயிருக்கிறான். அவள் அவமானத்திற்குரிய ஒரு நபராய் இருந்தால், அவள் விலக்கப்பட வேண்டும். முன்னர் அது தவறாய் இருந்தது, ஆனால் ஏதோவொன்று சம்பவித்துவிட்டது. 47. பரிசுத்த கூட்டத்தை சேர்ந்த ஸ்திரீகள் இப்படிப்பட்ட சிறிய பழைய உடைகளை அணிந்து கொண்டு, அவா்கள் வீட்டு வாசலுக்கு வெளியே சென்று, தங்களுடைய வாசலில் புற்களை வெட்டிக்கொண்டும், அரைக்கால் சட்டையோடு தெருவில் மேலும் கீழும் நடந்து கொண்டும், உங்களுடைய பிள்ளைகளையும் அதைச்செய்ய அனுமதிக்கின்றீர்கள்... பின்பு, "தேவனே, எங்களுக்கு ஒரு எழுப்புதலை அனுப்பும்" என்றும் நீங்கள் சொல்லுகின்றீர்கள். தேவன் எவ்வாறு ஒரு கூட்ட அசுத்தத்தின்மேல் ஒரு எழுப்புதலை உண்டாக செய்வார்? அதை செய்ய முடியாது. நாம் ஏன் எழுப்புதலை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை இப்பொழுது கண்டு கொள்ள போகிறோம். நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள்? நீங்கள் பாருங்கள், உலகமானது கசிந்து உள்ளே ஊடுருவி தொடங்கியிருக்கிறது. தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்து கொள்கின்ற அநேக ஜனங்கள் , புதன் கிழமை இரவு ஜெப கூட்டத்திற்கு செல்வதற்கு, ஒரு சபைக்கு போவதற்கு பதிலாக, "நாங்கள் சூசியை நேசிக்கின்றோம்" அல்லது அதைப்போன்ற அர்த்தமற்ற எல்லாவித காரியங்களையும் கேட்பதற்காக வீட்டிலே தங்கியிருக்கிறார்கள். உங்களுக்குள்ளே என்ன இருக்கிறது, நீங்கள் எதற்காக தாகமாயிருக்கிறீர்கள் என்பதையே அது காண்பிக்கிறது. அது தான் உங்களுடைய குணாதிசயம், உங்களுடைய நடத்தை ஆகும். 48. ஸ்திரீகளாகிய நீங்கள், காலையில் 10 மணிக்கு ஜெப கூட்டத்தை கொண்டிருக்கவேண்டிய போது, நீங்கள் ஆர்தர் கோட்ஃபிரே ( Arthur Godfrey ) போன்ற ஏதோ பழைய தேவபக்தியற்ற காரியத்தையும் அவனுடைய அசுத்தமான நகைச்சுவை துணுக்குகளையும், மற்றும் அப்படிப்பட்ட கூட்ட பெண்களுடனான காரியங்களையும் நீங்கள் கேட்டுக்கொண்டு, பின்பு உங்களை கிறிஸ்தவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். அதுதான் உண்மை. "சகோதரன் பிரான்ஹாமே, நான் அரைக்கால் சட்டை அணியவில்லை. நான் முழுகால் சட்டைதான் அணிந்துள்ளேன்" என்று நீங்கள் கூறலாம். அது அதைவிட மோசமாயிருக்கிறது. ஒரு ஸ்திரீ ஒரு புருஷனுடைய உடைகளை தரிப்பது தேவனுடைய பார்வைக்கு அருவருப்பாக இருக்கிறது என்று வேதாகமம் கூறுகின்றது; தேவன் மாறுவதில்லை. நீங்கள் அவ்வளவு இறுக்கமான இந்த சிறிய பாவாடைகளை அணிந்து கொண்டு, வெளிப்புறம் சரீரம் தெரியும் அளவிற்கு மிக இறுக்கமாக அணிந்து தெரு வீதியில் செல்கிறீர்கள். மேலும் உங்களை நீங்களே "பரிசுத்தமான ஸ்திரீ" என்றும் அழைத்து கொள்கிறீர்கள். தேவனுடைய ஒரு குமாரத்தி அவ்விதமாக தான் நடந்து கொள்வாளா? கவனியுங்கள். "பிரசங்கியே, அவ்விதமான உடைகளை மாத்திரம் தான் அவர்கள் விற்பனை செய்கின்றார்கள்" என்று நீங்கள் கூறலாம். ஆனால் அவர்கள் இன்னுமாக தையல் இயந்திரங்களையும் தயாரித்து விற்பனை செய்கிறார்களே. நீங்கள் எந்த சாக்குப்போக்கும் கூறமுடியாது. அன்றியும், உங்களுடைய உடைகளை நீங்களே உருவாக்கி கொள்ளும் பொருட்களையும் அவர்கள் விற்பனை செய்கின்றார்கள். அது வலியை உண்டாக்குகிறது என்று எனக்கு தெரியும், ஆனால் அது உங்களுக்கு நன்மையாக இருக்கிறது. அதுதான் சத்தியமாகும். அதை தான் வேதாகமம் கூறுகின்றது. 49. அதுதான்... நீங்கள் பாருங்கள், நாம் ஒரு எழுப்புதலை கொண்டிருக்க முடியாது. அது தான் காரணம். ஓ, நிச்சயமாக, அது உங்களை கடினமாக்குகின்றது- உள்ளே செல்கின்றது-செய்கின்றது... ஆனால் அது துவக்கத்தில் தவறாக இருக்குமானால், இப்பொழுதும் அது தவறு தான். ஏதோவொன்று சம்பவித்தது. அது இந்த நிலைக்கு வந்துவிட்டது. ஒரு எழுப்புதல் உண்டாவதற்கான எந்த அஸ்திபாரமும் இல்லை. தேவன் அதை தடைசெய்திருக்கும் போது உங்களால் அதை எப்படி செய்ய முடியும்? இப்பொழுது, நீங்கள் "ஸ்திரீகளாகிய எங்கள் மீது நீர் மிகவும் கடுமையாக பேசினீர் " என்று கூறலாம். சரி, புருஷர்களே, நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். எந்த மனிதனாவது தன்னுடைய மனைவி அவ்விதமான உடைகளை அணியவும், புகை பிடிக்கவும் அனுமதிப்பானானால், நீங்கள் எதிலிருந்து உருவாக்கப்பட்டீர்கள் என்பதையே அது காட்டுகிறது. நீங்கள் ஒரு புருஷனாக இருப்பதை குறித்து நான் சிறிதளவு மரியாதையை கொண்டுள்ளேன். நீங்கள் வீட்டினுடைய தலைவனாக இருக்கவேண்டியவர்களாய் உள்ளீர்கள். என்ன சம்பவித்தது? ஏதோவொன்று தவறாக போய் விட்டது. 50.இப்பொழுது, ஸ்திரீகளே, முன்பு நீங்கள் நகத்தில் வர்ணங்களை போட்டுக்கொண்டிருந்ததில்லை, ஒருபோதுமே.... உங்களுடைய வாயில் போட்டுக்கொள்கின்ற அந்த பொருள் அது என்ன? அது என்னவாக இருந்தாலும் சரி, அதை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. நான் அதை ஒரு நகைச்சுவைக்காக சொல்லவில்லை. அது என்னவாக இருந்தாலும், நீங்கள் இடும்..உதடு - உதட்டு சாயம், அது என்னவாக இருந்தாலும் சரி. முன்னர் அதை நீங்கள் செய்வது தவறான காரியமாக இருந்தது, ஆனால் இப்பொழுதோ பெந்தேகோஸ்தே ஜனங்களாகிய உங்களிடையே நிச்சயமாகவே அது ஒரு பொதுவான காரியமாகி விட்டது. என்ன சம்பவித்தது? வயதான ஒரு மெத்தோடிஸ்ட் பிரசங்கி ஒரு சிறிய பாடலை பாடும்படி - என்னிடம் சொல்வதுண்டு. நாம் தடைக் கம்பிகளை தாழ்த்தி விட்டோம். நாம் தடைக் கம்பிகளை தாழ்த்தி விட்டோம். நாம் பாவத்துடன் சமரசம் செய்துகொண்டோம். நாம் தடைக் கம்பிகளை தாழ்த்தி விட்டோம்; செம்மறி ஆடுகள் வெளியேறி விட்டன, ஆனால் வெள்ளாடுகள் எவ்வாறு உள்ளே வந்தன? நீங்கள் தடைக் கம்பிகளை தாழ்த்தி விட்டீர்கள்.. அதுதான் அதை செய்தது, ஏனெனில் தன்னுடைய ஊழியமானது தேவனிடமிருந்து பெற்ற கட்டளை என்று எண்ணுவதற்கு பதிலாக அதை ஒரு உணவு சீட்டாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த சிறிய பிரசங்கியுடன், ஒரு பெலவீனமான பிரசங்க பீடத்தை நீங்கள் கொண்டிருந்தீர்கள். அவன் அதை குறித்து ஏதாவதொன்றை கூறினால், நீங்கள் அவனை சபைக்கு புறம்பாக்கி வெளியே தள்ளிவிடுவீர்கள். அவன் அதை குறித்து ஏதாவதொன்றை கூறவில்லை என்றால் தான் அவன் தள்ளப்பட வேண்டியவனாயிருக்கிறான். 51. சீமாட்டிகளே, கவனினியுங்கள். இது ஒரு கேலிப்பேச்சு அல்ல. ஆனால் வேதாகமத்தில், ஒரு மனிதனை சந்திக்க தனக்கு வர்ணம் பூசிக்கொண்ட ஒரு ஸ்திரீ இருந்தாள். அவ்விதமாக நீங்கள் தேவனை சந்திக்கலாகாது. அவளுடைய பெயர் யேசபேல் ஆகும். தேவன் அவளுக்கு என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் அவளை நாய்களுக்கு இரையாக்கினார். ஆகவே அதைப்போன்று தன்னை அலங்கரிக்கும் எந்த ஒரு ஸ்திரீயையும் நீங்கள் பார்க்கும் போது, "திருமதி.நாய் இறைச்சி" என்று கூறலாம். தேவனும் சரியாக அதை அவ்வாறு தான் அழைத்தார். இப்பொழுது, அது சத்தியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது ஒரு கேலிப்பேச்சு அல்ல. தேவன் கூறியதை தான் நான் உங்களுக்கு சொல்லுகின்றேன். அது என்னவாகும்? அவள் பாதாளத்தின் வேட்டை நாய்கள் "வ்யூ-வ்யூ!" என்று ஓலமிட விரும்பினாள், அதுதான் சத்தியம் என்று உங்களுக்கு தெரியும். காரியம் என்ன? ஆனால் வேதாகமத்தின் அன்பையும், தேவனுடைய அன்பையும் தவிர வேறு ஏதோவொன்று உள்ளே வருகின்றது. அங்கு தேவன் இருந்திருக்க வேண்டிய அந்த இடத்தில், அவருக்கு முதல் இடத்தையும் மற்றும் முழு இடத்தையும் கொடுக்க வேண்டிய அந்த ஸ்தலத்தில், நீங்கள் உலகத்தை உள்ளே வர அனுமதிக்கின்றீர்கள்; நீங்கள் பசியடைந்து , தாகம் கொண்டு, தேவன் நிரப்ப விரும்புகின்ற அந்த இடத்தை, உலக காரியங்களைக் கொண்டு நிரப்பி கொள்ளுகிறீர்கள். அது தான் காரியம். 52. சிறிது காலத்திற்கு முன்பு, நான் கலிஃபோர்னியாவுக்கு வண்டியை ஓட்டி சென்று கொண்டிருந்தேன். என்னுடைய சரக்கு வண்டியை ஓட்டுவதற்கு நான் ஒரு பாவியான மனிதனை கொண்டிருந்தேன். நான் அங்கு சென்ற போது, பெரிய அதிகாரிகளில் ஒருவர் வந்தார். இந்த மனிதன் சரக்கு வண்டியை நிறுத்தி, சில புத்தகங்களை இறக்கிக் கொண்டிருந்தார். நான் மற்றொரு சரக்கு வண்டியை ஓட்டினேன். இந்த மனிதன் ஒரு பாவியாக இருந்தார். அவர் ஒரு சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்தார். சபையினுடைய மகத்தான பெரிய மனிதர்களில் ஒருவர் நடந்து வந்து; "ஏன், சகோதரன் பிரன்ஹாம். நான் உங்களை குறித்து வியப்படைகிறேன்" என்று அவர் கூறினார். நான், "அது எதனால்?" என்றேன். அவர் கூறினார், "வண்டியிலிருந்து சரக்கை இறக்கிக் கொண்டிருக்கும் அந்த மனிதன் புகைத்துக் கொண்டிருக்கின்றானே" என்றார். நான் கூறினேன், "அவர் ஒரு பாவியாவார். சில நிமிடத்தில் அவர் சிறிது பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு திரும்புவார். என்னுடைய சரக்கு வண்டியை ஓட்டுவதற்கு என்னிடம் ஒருவரும் இல்லை" என்றேன். அவர் "பாருங்கள்", "எங்களுடைய ஜனங்கள் பரிசுத்தமான ஜனங்கள், எங்களால் அப்படிப்பட்டதை ஒருபோதும் சகிக்கமுடியாது" என்றார். நான் கூறினேன், "ஐயா, மன்னிக்கவும். நான் ஒருபோதும் உங்களுடைய வழியில் ஒரு இடறுதலை போட மாட்டேன்." "அந்த மனிதன் ஒரு பாவியாவான். அவன் எந்த ஒரு பணியிலும் இல்லை. நான் வெறுமனே அவனை தெருவில் கண்டு அழைத்து, அவனுக்கு ஒரு வேலை வேண்டுமா என்று கேட்டேன். அவன் 'ஆம்' என்றான், அதற்கு நான், 'நீ இந்த வண்டியை கலிஃ போர்னியாவுக்கு ஓட்டவேண்டும், நான் ஒருநாளைக்கு இவ்வளவு தருவேன் மற்றும் நீ திரும்ப செல்வதற்கும் பணம் தருவேன் ' என்றேன். சரிதான். அவன் அந்த வேலையை எடுத்து கொண்டான். 'நீ இந்த சுமையை வண்டியிலிருந்து இறக்கி வைப்பாயானாயால், வேலை முடிந்து விட்டது ,அவ்வளவு தான்' என்று நான் கூறினேன்." "அதை செய்ததற்காக நான் வருந்துகிறேன்" என்றேன். அவர் கூறினார், "பாரும், நம்முடைய ஜனங்கள் இருக்கும் இடங்களுக்கு, அவ்வாறு புகை பிடிக்கின்ற யாரையும் ஒருபோதும் மீண்டும் அழைத்து வராதீர், அல்லது நீர் அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளீர் என்பதை அவர்கள் அறியவேண்டாம்" என்றார். நான் கூறினேன், "நான் இனிமேல் கலிஃபோர்னியாவுக்கு அனுப்ப வேண்டுமானால் நிச்சயமாக ஒரு சரியான மனிதனை கவனித்து அனுப்புவேன்" என்றேன். 53.எனவே அவர் கூறினார்... நல்லது, சில நிமிடங்கள் நாங்கள் கீழே நடக்க தொடங்கினோம். நாங்கள் ஒரு பெரிய கூடாரத்திற்கு சென்றோம், மேலும் அவர் கூறினார், "சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் என்னுடைய மனைவியை சந்திக்கும்படி நான் விரும்புகிறேன்." "இந்த எழுப்புதலின் போது அவள்தான் உங்களுக்காக பியானோவை இசைக்கப்போகிறாள்" என்றார். நான் சொன்னேன் , "என்ன?" அவள் அவ்வளவாக நகவருணங்களை பூசியிருந்தாள்... அல்லது முடியை வெட்டி, உங்களுக்கு தெரியுமே, அதற்கு மேல் முடியை சிறிது சுருட்டியவாறு, அவளுடைய முகத்தில் அந்த அநேக விதமான அழகுபொருட்களையும் பூசியிருந்தாள். மேலும் கீழே பெரிய பெரிய காதணிகள் தொங்கிக்கொண்டிருந்தது, மற்றும் பார்ப்பதற்கே மிகவும் மோசமான ஒரு உடையை உடுத்தியிருந்தாள். மேலும் நான் கேட்டேன், "அவள் ஒரு பரிசுத்தவாட்டியா?" என்றேன். அதற்கு அவர் , "ஆம் ஐயா" என்றார். நான் "எனக்கு அவள் ஒரு பேயைப் போல காட்சியளிக்கிறாள்." என்றேன். நான் மீண்டும் சொன்னேன், "என்னுடைய ஜீவியத்திலேயே அப்படிப்பட்ட ஒரு காரியத்தை நான் பார்த்ததில்லை. "மேலும் நான் அவரிடம் கூறினேன், "சகோதரனே, ஏதோவொன்று தவறாக போய்விட்டது. நீங்கள் கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்கு கிறவர்களாயிருக்கிறீர்கள்." என்றேன். 54. ஏதோவொன்று தவறாக உள்ளது. தேவன் அவர்மேல் தாகம் கொள்ளும்படியாக உங்களுக்கு கொடுத்த அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த தாகத்தை, நீங்கள் அதை உலக காரியங்களுக்குள் தாறுமாறாக்கி, உலகத்தின் காரியங்களுக்காக வாஞ்சைகொள்கிறீர்கள். சபையானது எங்கே இருக்கின்றது என்று பார்த்தீர்களா? ஏதோவொன்று தவறாக இருக்கிறது. ஏதோ ஓரிடத்தில் நாம் தடைக்கம்பிகளை கீழே இறக்கிவிட்டோம். "ஓ, நான் ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறேன், நாம் கிருபையினால் இரட்சிக்கப்பட்டிருக்கின்றோம்." என்று நீங்கள் கூறலாம். அது சரிதான். நாம் கிருபையினால் தான் இரட்சிக்கப்பட்டிருக்கின்றோம், ஆனால் நீங்கள் இரட்சிக்கப் பட்டிருப்பீர்களானால், நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜீவியம் நிரூபித்துக் காண்பிக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமான கிருபையை பெற்றுள்ளதாக நீங்கள் கூறினாலும், அது ஒரு பொருட்டல்ல, அதற்கு ஏற்றவிதத்தில் உங்களுடைய ஜீவியமானது பொருந்தி ஒத்துப்போகவில்லை என்றால், நீங்கள் இதுவரையிலும் அதை பெற்றிருக்கவேயில்லை. அவ்வளவு தான். நீங்கள் ஒரு திராட்சை கொடியிலிருந்து பூசணிகளை பெற்றுக்கொள்ள முடியாது. உ-ஹூம்.‌ அது அவைகளை பிறப்பிக்காது. ஆவியின் கனிகள் உலக‌த்தின் காரியங்களினால் வருவதில்லை. இப்பொழுது, அது சத்தியம் என்று உங்களுக்கு தெரியும். பிள்ளைகளே, நான் உங்களை காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இது என்னவென்று உங்களுக்கு சொல்லவே விரும்புகிறேன்... 55.நீங்கள் ஒரு மகத்தான நேரத்தை கொண்டிருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். அங்கே நகரத்தில் உள்ளத்திலே உங்களுடைய சபைதான் பெரியது என்கிறீர்கள். உங்களுடைய சபைகட்டிட கோபுரம் நேரே விண்ணையெட்டும் உயரமுடையது. "ஓ, நாம் உள்ளத்திலே சிறப்பாக இருக்கிறோம். சிறந்த ஊதியம் பெறும் போதகரை நாம் கொண்டுள்ளோம். நம்மால் நம்முடைய போதகரை நன்றாக கவனித்து கொள்ள முடியும். நாம் மிகச் சிறப்பாக இருக்கின்றோம். நாம் சிறந்த முறையில் ஜீவிக்கிறோம். நாம் சிறந்த உடைகளை அணிய முடிகின்றது. ஒரு சிறந்த மேல்மட்ட குழுவுடன் நம்மால் தொடர்பு கொள்ளவும் முடியும்." எனலாம். உங்களால் அது முடியுமா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. எனக்கு ஏதோ ஓரிடத்தில் ஒரு தெருவீதியின் அருகே, ஒரு சிறிய பழைய சபையில் நடந்த ஒரு ஆராதனை கூட்டம் தான், நான் கொண்டிருந்ததிலேயே மிகச்சிறந்த கூட்டமாக இருக்கிறது. அங்கே உண்மையான இருதயத்தோடு ஒன்றுகூடி வருகின்ற ஒரு டஜன் ஜனங்கள்(சிறு கூட்ட ஜனங்கள்) உண்டாயிருந்தனர். அது சரியே. எந்த நேரத்திலும் நான் அங்கே இருப்பதையே விரும்புவேன். 56. ஓ, அவர்கள் அந்த தடைவரம்புகளை தாழ்த்தி விட்டதின் காரணத்தால், எவ்வளவு சுலபமாயுள்ளதென்று பாருங்கள். பெந்தேகோஸ்தே ஜனங்களாகிய உங்களின் முதலவாவது கூட்ட ஜனங்கள் நன்றாக செயல்பட்டனர். அடுத்த ஒரு கூட்டம் கூட வந்தது, அது பலவீனமடைய செய்யத் தொடங்கியது. அதன்பின் நீங்கள் ஸ்தாபனங்களை உண்டாக்கி கொள்ள துவங்கி, பழைய நிலைக்கே சென்றீர்கள். "நாங்கள் ஒருத்துவத்தை சேர்ந்தோர், நாங்கள் திருத்துவ குழுவினர். நாங்கள் ஐந்துத்துவத்தை சேர்ந்தோர்." எனலாம், நீங்கள் அப்படியாக எண்ணிக்கொண்டிருக்கும் வரையிலும், நீங்கள் ஒன்றுமே கிடையாது, அது முற்றிலும் சரியே. பாருங்கள், உங்களுடைய இருதயத்தில் அப்படிப்பட்ட எண்ணத்தை பெற்றிருந்தால், அதை வெளியேற்றி விடுங்கள். அது உங்களை அரித்து அழித்துவிடும். நீங்கள் வம்பு செய்து, குழப்பம் உண்டாக்கி, தர்க்கம் செய்து உங்களுக்கு சாதகமான சிறிய பழைய கோட்பாடுகளை பின்பற்றி சென்றிருப்பதனால், உங்களுடைய ஆத்துமாவின்மேல் துருபிடிக்க செய்யும். உங்களுடைய இருதயத்தில் நீங்கள் கிறிஸ்துவை கொண்டிருப்பீர்களானால், அது ஒருபோதும் சம்பவித்திருக்காது. நீங்கள் அனைவரும் ஒருங்கிணைத்து ஒன்றுக்கூடி ஒரு மகத்தான குழுவாக முன் சென்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது, பிசாசு ஏன் உங்களுடன் சண்டையிட வேண்டியிருக்கிறது? அவன் வெறுமனே ஓய்வாக உட்கார்ந்துகொண்டு, நீங்களே உங்களை கொலைசெய்து கொள்ளும்படி விட்டு விடுகிறான். 57. நீங்கள் அங்குதான் இருக்கிறீர்கள். தடை வரம்புகளை எங்கோ தளர்த்தி விட்டுவிட்டு உங்கள் இருதயத்திலுள்ள அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஸ்தலத்தில் புசித்துக் கொண்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய பாத்திரங்கள் இருக்க வேண்டிய அந்த இடத்தில் நீங்கள் பிசாசினுடைய அசுத்தமான பாத்திரத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். கர்த்தருடைய பாத்திரங்கள் நீதியின் கனிகளாகிய சமாதானம், நீடியபொறுமை, நற்குணம், தயவு, பொறுமை, சாந்தம் போன்றவற்றால் நிறைந்தது. பிசாசின் பாத்திரமோ சுயநலம், பேராசை, ஸ்தாபன பிரிவினைகள், ஒருவருக்கொருவர் சண்டையிடுதல் ஆகியவை. அதனால்தான் நீங்கள் காதணிகளை அணிந்துகொண்டும், தலைமுடியை கத்தரிப்பதும், நக வருணங்களையும், முக சாயங்களை பூசிக்கொண்டும் மற்றும் அப்படிப்பட்ட எல்லா காரியங்களையும் செய்கிறீர்கள். அதுதான் காரணமாகும். அதுதான் அதை செய்தது. இப்பொழுது நாம் எங்கே இருக்கின்றோம்? இது தான் சத்தியம் என்று உங்களுக்கு தெரியும். இன்று நமக்கு ஒரு புதிய சபை அவசியமில்லை. இன்று நம்முடைய தேவை ஒரு புதிய சுவிசேஷகர் அல்ல. நமக்கு இன்று தேவைப்படுவதெல்லாம் பண்டைய பரிசுத்த பவுலின் நாட்களிலுண்டாயிருந்த எழுப்புதலும், பரிசுத்த ஆவியும், பிரசங்கபீடம் முதற்கொண்டு வாயில்காப்போன் அறைமட்டுமாய் ஒரு முழுமையான தூய்மையாக்குதல் தான் அவசியம். அது சரியே. பெருக்கி வெளியேற்றி, சுத்தம் செய்யப்படுதல்... அது வெட்டினாலும் வெட்டாவிட்டாலும் , உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க யாரோ ஒருவர் எழும்பி நிற்பார். அது சரிதான். தேவனுடைய வார்த்தையானது, இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது என்று எபிரெயர் நான்காம் அதிகாரத்தில் (4:12) கூறப்பட்டுள்ளது. 58.ஆனால் சம்பவித்தது என்ன? பின்பு, பிசாசு உங்களுடைய அந்த தாகத்தை திருப்திபடுத்த முயற்சிக்கிறான். "பாருங்கள், ஜானுக்கு ஒரு நல்ல உத்தியோகம் கிடைத்து விட்டது. தேவனுக்கு ஸ்தோத்திரம். நாம் அந்த பரிசுத்த உருளையின் சபையை விட்டு விலகி சென்று இந்த ஒன்றிற்கு சென்றுவிட்டோம்." நீங்கள் எங்கு சென்றுவிட்டீர்கள் என்று பார்த்தீர்களா? எல்லாம் சரி, பின்னர். மற்றொரு காரியம் என்னவென்றால். பிசாசு அதை தொலைக்காட்சி பெட்டியை கொண்டு, குடிப்பழக்கத்தை கொண்டும், சூதாட்டத்தை கொண்டும், அவபக்தியான உடைகளாலும், சுயநலத்தினாலும் திருப்திபடித்திக் கொள்ளும்படி முயற்சிக்கிறான். நான் சிறிது காலத்திற்கு முன்பு இங்குள்ள ஒரு சபைக்கு சென்றேன். நான் ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தும்படி அவர்கள் விரும்பினர். மேலும் அந்த பிரசங்கி , சுமார் இருபது நிமிடங்கள் பிரசங்கித்த பின்பு, அவர்களை வெளியே செல்ல அனுமதிக்க, அனைத்து டீக்கன்மார்களையும் வெளியே சென்று சிகரெட்டுகளை புகைக்க அனுமதிக்க வேண்டியிருந்தது. சகோதரனே, அங்கே நாங்கள்-நாங்கள் ஓர் இரவு ஒரு எழுப்புதல் கூட்டத்தை கொண்டிருந்தோம், மேலும் அடுத்த இரவு நான் வெளியே தள்ளப்பட்டேன். ஆனால் எப்படியாயினும் அதை குறித்து அவர்கள் கேட்டிருக்கின்றனர். இரத்தப்பழியானது என்னுடைய கைகளை விட்டு அகன்று விட்டது. கிறிஸ்து இன்று இப்பூமியில் இருந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அவர் - அவர் இரண்டுக்கும் அதிகமான கயிறுகளை பின்னி முறுக்கி "என்னுடைய வீட்டை கள்ளர் குகையாக்கினீர்கள்"என்று:அடித்து தள்ளியிருப்பார். 59. அந்த தாகத்தை தணிக்க பிசாசு செய்ய முயற்சிக்கின்ற மற்றொரு காரியம் என்னவென்றால், "பாருங்கள், நான் மிகவும் பக்தியுடையவன்" என்பதுதான். சிறிது காலத்திற்கு முன்பு ஒரு பெண்ணிடம், இங்கு மேடையில் பேசினேன், நான், "நீ ஒரு கிறிஸ்தவளா?"என்றேன். அவள் "நான் உமக்கு புரிந்து கொள்ளும்படி கூறுகிறேன்; ஒவ்வொரு இரவும் நான் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுகிறேன்." என்றாள். கிறிஸ்தவம் என்று அவர்கள் அழைத்துக்கொள்வதின் பலம் அவ்வளவுதான். நீங்கள் ஒரு பெரும் நெருப்பை உண்டுபண்ணி எரித்தாலும் சரி, பரிசுத்த ஆவியும் அக்கினியும் உங்களுடைய இருதயத்திற்குள்ளே பற்றியெரியாத வரையில் அது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது. மேற்கு கரையோரங்களில் உள்ள ஒரு மனிதனிடம் நான் கேட்டேன்"ஐயா, நீர் ஒரு கிறிஸ்தவனா?" என்றேன். நான் சரியாக அங்கே அவரை பிடித்து அவருடைய முகத்தை நோக்கி கூற விரும்பினேன். அவர் கூறினார், "நான் ஒரு அமெரிக்கன்."என்றார். நான் கூறினேன், "அதற்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை, ஒரு காரியமும் இல்லை" என்றேன். ஒரு பன்றி கூண்டினுடாக நடந்து கொண்டிருப்பது உங்களை ஒரு பன்றியாக மாற்றாது. அந்த நிச்சயமான ஒரு காரியமாகும். நீங்கள் மறுபடியும் பிறந்தாக வேண்டும், அதன் பின்பு உங்களுடைய பழக்கவழக்கங்கள் வித்தியாசமானதாக இருக்கின்றன. 60. நீங்கள் எப்பொழுதாவது காகத்தையும் புறாவையும் எடுத்திருக்கிறீர்களா? பேழையில் அவை இரண்டுமே ஒரே மரக்கொம்பில் தான் அமர்ந்திருந்தன. ஒன்று பறந்து செல்லும் அதே இடத்திற்கு மற்றதும் பறக்க முடியும், ஆனால் காகமானது அவிழ்த்துவிடப்பட்ட போது திருப்தி அடைந்து, வெளியே சென்று, புழு பூச்சிகளும் மற்ற காரியங்களும் அரித்துகொண்டிருந்த ஒரு பழைய மரித்த பிணத்திலிருந்து மற்றொறு பிணத்திற்கு பறந்து, அவற்றின் மேல் உட்கார்ந்து கொண்டது; அதற்கு எந்த பிரச்சினையும் உண்டாயிருக்கவில்லை. ஆனால் புறாவிற்கோ தன்னுடைய பாதத்தை ஊன்றி நிற்க இடமில்லாதிருந்தது. அது திரும்பி வர வேண்டியிருந்தது. அதனால் அந்த பழைய துர்நாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. உங்களுக்கு தெரியுமா, அந்த பறவைகளில் இருப்பதிலேயே காகம் தான் மிகப்பெரிய மாய்மாலமான ஒன்றாகும். நீங்கள் புறாவை எடுத்து கொண்டால், அது ஒரு கோதுமை நிலத்தில் பறந்து கோதுமையை உண்ணும். ஒரு காகமோ ஒரு பழைய மரித்த பிணத்தின்மேல் பறந்து சென்று தன்னுடைய வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு, இங்கு கடந்து வந்து கோதுமையும் புசிக்கும். ஆனால் புறாவினால் அந்த கோதுமை நிலத்திலிருந்து மரித்த சடலத்திற்கு வர இயலாது. இல்லை, ஐயா. குமட்டலுண்டாக்குகின்ற ஒன்றிருக்குமானால் அது மாய்மாலம் செய்வதுதான். அவ்வாறு இருப்பதை பார்க்கிலும் நான் ஒரு நாத்திகனாக இருந்துவிடுவேன். ஆனால் ஒரு பழைய மாய்மாலக்காரனோ சபைக்கு சென்று, தனக்கு மட்டுமே எல்லாம் தெரிந்ததை போன்று பாவித்து கொண்டு, தன்னை ஒரு பெரிய ஆளாக காண்பித்து, உலக காரியங்களுக்காக பாவனை செய்து, "பாருங்கள், உங்களுடைய குறுகிய மனப்பான்மை போதகரை விட, என்னுடைய போதகர் பறந்த மனப்பான்மையுடையவர்" என்பான். பழுதடைந்து, பரிதாபகரமான நிலையிலிருப்பவர்களே, உங்களை என்ன கூறுவதென்று தெரியவில்லை. உங்களுடைய முடியை பிடித்து உலுக்கி, உங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கின்ற, பண்டைய பாணியிலான ஒரு போதகர் தான் உங்களுக்கு தேவை. யேசபேல் அவளுடைய போதகரை வெறுத்தாள். எலியாதான் அவளுடைய போதகன் ஆவான், ஆனால் என்ன சம்பவிக்க போகின்றது என்பதை அவன் அவளிடம் கூறினான். அவள் எப்படியாயினும் செவிகொடுக்க வேண்டியதாய் இருந்தது. அவள் அவனை போதகராக ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் தேவன் அவனை அங்கு போதகராக அனுப்பினார். அவன் தேவனுடைய போதகனாக இருந்தான். 61.இப்பொழுது, என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். காகமானது, அதனால் எதை வேண்டுமானாலும் தின்று, அவற்றை ஜீரணிக்க முடியும். ஆனால் புறாவோ வித்தியாசமாக உண்டாக்கப்பட்டுள்ளது. அது ஒரு வித்தியாசமான படைப்பு ஆகும். ஒரு புறாவிற்கு எந்த வித பித்தப்பையும் இல்லை. அதனால் அவற்றை ஜீரணிக்க முடியாது. அன்றியும் ஒரு மறுபடியும் பிறந்த ஒரு கிறிஸ்தவனால் உலகத்தின் காரியங்களை புசிக்க இயலாது. அவனுக்கு அதன்பின்னர் பித்தப்பை என்பதே கிடையாது. அது அவனை கொன்று விடும். அந்த மரித்த பிணத்தின் மேல் அந்த காகம் உட்கார்ந்திருக்கும் வரையில், ஒரு புறா அதனுடன் சேர்ந்து போஜனம் உண்ணுவதை நீங்கள் பார்க்கவே முடியாது. "ஓ, நான் வெறுமனே அவர்களோடு அந்த நீச்சல்குள அறைக்கு சென்றேன். அங்கே தீங்கானதொன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை." பரிசுத்த ஆவியானவர் அதை விட மேலானதை உங்களுக்கு போதிக்கிறார். மேலும் பின்னர் பிசாசோ அதை திருப்தி படுத்த விரும்புகிறான். "நான் பக்திவாய்ந்தவன். நான் ஒரு சபையை சேர்த்துள்ளேன்" என்று நீங்கள் கூறலாம். அதற்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. தேவனுக்காக நீங்கள் உங்களுடைய இருதயத்தில் கொண்டுள்ள அந்த தாகத்தை, ஒரு சபையை சேர்வதன் மூலம் திருப்தியடைந்து கொள்ளும்படி பிசாசு முயல்கிறான். அவ்வாறு உங்களை விசுவாசிக்க செய்யும் அளவிற்கு அது ஒரு பெரிய பொய்யாக இருக்கின்றது. சபையில் சேருவதற்கும் அதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நீங்கள் இந்த நகரத்திலுள்ள எல்லா சபையையும் சேர்ந்து கொள்ளலாம், அப்படியிருந்தும், ஒரு மார்டின் பறவை தன்னுடைய கூட்டுக்குள் போவதைப்போன்று நீங்கள் பாதாளத்துக்கு செல்லக்கூடும். நீங்கள் அவர்களின் ஒவ்வொரு சபையையும் சேர்ந்து கொண்டிருந்தாலும். 62. நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால் அன்றி, இங்கே ஏதோவொன்று சம்பவித்து, அது உலகத்தின் காரியங்கள் பேரிலுள்ள உங்களுடைய எல்லா பசியையும் மாற்றிவிட்டதை தவிர, அல்லது ... உங்களுடைய சகல அன்பையும் பக்தி அர்ப்பணிப்பையும், எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு கொடுத்து விடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் கூடே வரமுடியும். உங்களுடைய ஆவி அவருடைய ஆவியுடன் சாட்சியிடுகையில், உங்களுடைய ஜீவியமானது, அதற்கு ஒத்திசைந்து இணங்குவதை, உங்களால் கூற முடியும். ஆம். "ஓ, கர்த்தாவே, என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்கிறது. நான் உம்மைக் காண வாஞ்சிக்கிறேன்," தாவீது, சபையானது விலகி செல்லுகின்றதை கண்டபோது, "நான் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் உம்மை பார்த்தது போல, உம்மை நான் பார்க்க வாஞ்சிக்கிறேன்." தூய்மையானது, பரிசுத்தமானது. "என்னுடைய தாகம்... வறண்டதும், விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. 63. தாவீது ஒரு வேட்டைக்காரனாக இருந்தான். அவன் காட்டு விலங்குகளை கையாண்டிருந்தான். அவைகள் எப்படிப்பட்டவையாக இருந்தன என்பதை அவன் அறிந்திருந்தான். நீங்கள் வெறுமனே காட்டு மிருகங்களை உன்னிப்பாக கவனிப்பீர்களானால் அதன் மூலம் அநேக காரியங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். காட்டு மிருகங்களை உற்று கவனிப்பது எனக்கு பிரியமான காரியமாகும். இன்று நான் வெளியிலே சென்றிருந்தேன், சாலையின் ஊடாக வண்டியை ஓட்டி கொண்டு , ஒரு மான் அல்லது வேறு ஏதாவதொரு மிருகத்தையோ நோட்டமிடும்படி கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் அவற்றை உன்னிப்பாய் கவனிப்பீர்களானால் அவைகளுக்குள் தேவனை எவ்வாறு பார்க்க முடியும் என்பதை காணலாம். மேலும் தாவீது, அவர்களுடைய அந்த தேசத்தில் எவ்வாறு ஏராளமான மான்கள் உண்டாயிருந்தன என்பதை கவனித்தான், இங்கே நாம் ஓநாய்கள் என்று அழைக்கின்ற காட்டு நாய்களும் அந்த தேசத்தில் அநேகம் உண்டாயிருந்தன. அவன் கூறினான் "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" என்றான். ஒரு வெளிமான், மானானது, நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல... 64. இப்பொழுது, வேட்டைக்காரர்களாகிய உங்களில் சிலருக்கு கூறுகிறேன், நீங்கள் ஒரு மானுக்கு காயம் உண்டாக்கியிருந்தும், அது தண்ணீரண்டை மட்டும் செல்ல நேருமானால், நீங்கள் அதை பிடிக்கவே முடியாது. அது தொடர்ந்து தண்ணீரை குடித்துக் கொண்டேயிருக்கும், மேலே சென்று, மீண்டும் சுற்றி வளைந்து திரும்ப வரும். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அதை பின் தொடர்ந்து செல்லலாம். அது சரியாக அந்த தண்ணீரண்டை மீண்டும் திரும்பி வரும். அது அந்த தண்ணீரை விட்டு ஒருபோதும் அகன்று செல்லவே செய்யாது. ஆனால் அது தண்ணீரண்டை மாத்திரம் கிட்டிச்சேரவில்லையென்றால் , நீங்கள் உடனடியாகவே அதை பிடித்துக்கொள்வீர்கள். அப்பொழுது, தாவீதுனுடைய காலத்திலும், அது பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் மற்றும் நான் வேட்டையாடுகின்ற பல இடங்களிலும் உள்ளது போலவே, அந்த ஓநாயை நீங்கள் கவனிக்கலாம். அங்கே வெளியே ஒரு சிறிய மானானது நின்று கொண்டிருக்கின்றது, பருவ வயதுடைய (teenage) ஒரு சிறு இளம் பெண், அல்லது ஒரு இளம் வாலிப பையனோ, அல்லது ஒரு மனிதனுடைய அன்பானவளோ, அவனது மனைவியோ, அல்லது ஒரு பெண்ணினுடைய கணவனோ தோற்றமளிப்பதை போன்ற ஒரு குறிப்பிடத்தக்க காட்சியை போன்றிருக்கிறது. மேலும் உங்களுக்கு தெரியுமே, அவர்கள் இன்று அதை "ஓநாயின் ஊதல்" என்று அழைக்கின்றனர், ஓநாயினுடைய சத்தம். 65. சற்று முன்பு, நான் அதை தான் நீங்கள் புரிந்துகொள்ளும் படி கூற முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஸ்திரீகளே, ஏன் நீங்கள் அவ்வாறு அலங்கரித்துக்கொண்டு, அப்படியாக நடந்து கொள்கிறீர்கள்? நான் அந்த பொருளிலிருந்து விலகிச்செல்வதற்கு முன்பு, உங்களிடம் சிலதை கூறட்டும். நியாய தீர்ப்பு நாளன்று, என்ன சம்பவிக்க போகின்றது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் விபச்சாரம் செய்த குற்றத்திற்காக நிற்க போகிறீர்கள். "ஏன், நான் என்னுடைய கணவனுக்கு ஒரு லீலி புஷ்பத்தைப் போன்று பரிசுத்தமானவளாயிருக்கிறேன். சகோ.பிரன்ஹாம், நான் ஒருபோதும் தீட்டுப்பட்டதேயில்லை" என்று நீங்கள் கூறலாம். நாம் அது எவ்வாறென்று பார்ப்போம். " ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று" என்று இயேசு கூறியுள்ளார். அவர் அப்படித்தானே கூறினார் ? சரி, நீங்கள் அந்த பழைய ஆபாசமாக காட்சியளிக்கும் உடையை உடுத்திக் கொண்டு தெருவில் நடந்து செல்லும் போது, ஒரு மனிதன் உங்களை கண்டு உங்கள் மீது இச்சை கொள்வானானால், அந்த பாவி தான் விபச்சாரம் செய்ததற்காக கணக்கு ஒப்புவிக்க வேண்டும், மேலும் அவன் யாருடன் அதைச் செய்தான்? தங்களுடைய தோற்றத்தை அவ்விதமாக அவனிடம் காண்பித்தது யார்? குற்றவாளி யார்? நீ தான் குற்றவாளியாவாய். நீ அவ்விதமாக அவனுக்கு முன்பாக அங்கே உன் தோற்றத்தை காண்பித்தாய், ஆகவே அந்த பாவியுடன் விபச்சாரம் செய்த குற்றத்தை உடையவளாயிருக்கிறாய், நியாயதீர்ப்பு நாளில் நீ அதற்காக கணக்கு ஒப்புவித்தாக வேண்டும். 66.நான் இங்கே ஒரு கூடாரத்தை அமைத்து இவ்வாறான காரியங்கள் சிலவற்றின் மீது, சிறிது நேரம் பிரசங்கிக்க விரும்புகிறேன். நீங்கள் அந்த காரியங்களை மேலோட்டமாக கடந்து சென்று விடுகிறீர்கள். இயேசு கூறினார், "ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கின்ற எவனும்..." நீங்களோ உங்களுடைய தோற்றத்தை அங்கே வெளியரங்கமாக காண்பித்தீர்கள். ஒருக்கால், தார்மீக ரீதியாக கூறினால், ஒரு பிசாசினுடைய ஆவி உங்களை அவ்வாறு உடையணிந்து அவ்வாறு நடந்துகொள்ள செய்ததனால், நீங்கள் மாசில்லாதவர்களாயிருக்க கூடும், நீங்கள் அப்படியாக உங்களுடைய தோற்றத்தை வெளிக்காண்பித்த காரணத்தால், ஒரு பாவி உங்களுடன் விபச்சாரம் செய்ய அனுமதித்ததினால், நீங்கள் குற்றவாளியாக இருக்கிறீர்கள். இயேசு அதை தான் கூறினார். அதை குறித்து அவரிடம் பேச வேண்டுயிருக்கிறது. அன்பான சகோதரியே, அதனால் தான் நான் உங்களுக்கு சொல்லுகின்றேன். அன்பான சகோதரனே, அதனால் தான் நான் உங்களுக்கு சொல்லுகின்றேன். இந்த தேசத்திற்கு என்ன சம்பவித்து விட்டது? ஓ, ஒரு குண்டுமே சுடாமல் பிசாசு அதை கைப்பற்றிவிட்டதை நீங்கள் காணவில்லையா? அவன் சபையை கைப்பற்றி விட்டான். அவன் நவீன கல்வியினூடாகவும் அறிவியலின் வழியாகவும் தந்திரமாக வந்து, சரியாக உள்ளே நுழைந்து அவைகளை இதனோடு தன்னுடைய கரங்களுக்குள்ளாக எடுத்துக் கொண்டான். ஸ்திரீகள் அதை உணராமல், இங்கே வெளியே செல்கின்றனர். சிறிது நேரத்திற்கு முன்பு எங்களுடைய ஹோட்டல் ஜன்னலருகிலிருந்து பார்த்தேன், ஒரு சிறிய இளம்பெண், ஒரு கைத்துப்பாக்கியை துடைப்பதற்கு தேவையான அளவு துணியை விடவும் குறைவான அளவு துணியை அணிந்து கொண்டு, ஒரு சிறு குழந்தையை கைகளில் வைத்து- கொண்டு, உருண்டு சென்று கொண்டிருந்த ஒரு சக்கரத்தின் மூடியின் பின்னாக ஓடிக்கொண்டிருந்தாள். ஒரு - ஒரு - ஒரு குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணியா அது? அந்த பரிதாபமான சிறு குழந்தை, எதற்குள்ளாக வளர்க்கப்பட போகிறது? 67. நான் வனவிலங்கு பாதுகாவலர் பணியிலிருந்த போது ,ஒரு நாள் இரயிலில் வந்து கொண்டிருந்தேன், அங்கே ஒரு ஸ்திரீ அவளுடைய கால்களை குறுக்கே மடித்தவாரு அமர்ந்து, புகை பிடித்துக்கொண்டிருந்தாள், அந்த சாம்பலை ஊதி - தட்டிக் கொண்டிருந்தாள், அது அவளுடைய குழந்தையின் கண்களில் விழுந்துகொண்டிருந்தது. நான் அருகே நடந்து சென்று ; "பெண்ணே, சிகரெட்டு சாம்பலை இடுவதற்கான தட்டாக உபயோக்கிக்கவா தேவன் அந்த குழந்தையை உனக்கு கொடுத்தார்?" என்று கேட்டேன். ஆனால் அப்படிப்பட்ட காரியங்களை கேட்க உலகமானது விரும்புவதில்லை. பாதி நேரம், ஜனங்கள் அமர்ந்து அதை கேட்க கூட பிசாசு விடமாட்டான். உலகத்தின் காரியங்களால், மிகவும் அசுத்தமாகி, கேடுள்ளவர்களாகி, அவ்வளவாக சிந்தையை இழந்தவர்களாய், மிகவும் மாசடைந்து விட்டதால், அவர்களுக்கு மனசாட்சியே என்பதே இருப்பதில்லை. "கடைசி நாட்களில், அவர்கள் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்; தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்: இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. பற்-பற்பல பாவங்களால் இழுப்புண்டு, அறிந்துணராதிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்" என்று வேதம் கூறுகிறது, நம்முடைய பொதுசமூகங்கள் இழுப்புண்டிருக்கின்றன. 68.சபையானது நகர முடியாத அளவுக்கு, முடங்க தக்கதாக, உங்களுடைய பொதுசமூகங்கள், அவற்றில் அநேக காரியங்களை கொண்டுள்ளது. அது என்ன நன்மையை செய்திருக்கிறது? உங்களுக்கு தேவையானதெல்லாம், ஒரு ஜெப கூட்டமும், மற்றும் ஒரு பீட அழைப்பும் தான் தேவையாக உள்ளது. அங்கே அந்த சிறிய அப்பாவித்தனமானவர்கள், என்னவென்பதை அறியாமலேயே அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். பிரசங்கிகளே, உங்களுக்கு என்னவாகிவிட்டது? விழித்து கொள்ளுங்கள். சகோதரனே, தேவன் அதற்கு உன்னை கணக்கு ஒப்புவிக்கும்படி பிடிப்பார். அதை பிரசங்கியுங்கள். உங்களுடைய சொந்த கையிலிருந்து இரத்தபழியை அகற்றி கொள்ளுங்கள். அங்கே வெளியே செல்லுங்கள், அவர்கள், இந்த வாலிப பிரசங்கிகள் "வ்யூ-வ்யூ!" என்று குதூகல கூச்சலிடுவதையே விரும்புகின்றனர். என்ன சம்பவித்திருக்கிறது என்று பாருங்கள். 69. ஒரு சிறிய மான், வயலில் மேய்ந்து கொண்டு நிற்கின்றது, அதை ஒரு ஓநாய் பார்க்கின்றது. அது அதனால் ஈர்க்கப்பட்டது. இப்பொழுது, அந்த ஓநாய் ஒரு கொல்லுகின்ற மிருகமாகும், மேலும் ஊளையிடக்கூடிய அந்த ஓநாயும் ஒரு கொலைபாதகனாக இருக்கின்றது, சகோதரியே, அது மற்ற ஓநாயை விட மோசமானதாகும் . ஆகவே ஓநாய் ஒரு சூழ்ச்சி திறனைக் கொண்டுள்ளது. அது மானை கவ்வி பிடிக்கும் போது, அதற்கு இரண்டு இரத்த கோரை பற்கள் உள்ளன. அது ஓடுகின்றது... எங்களுடைய கன்றுகுட்டிகளையும் மற்றவைகளையும் கொண்டுவருமாறு செல்கையில், பல முறை நான் என்னுடைய குதிரையின் மேலிருந்து அவைகளை சுட்டிருக்கிறேன், அவைகள் தங்களால் இயன்ற அளவுக்கு அவ்வளவு வேகமாக அவை ஓடுவதை கவனித்திருக்கிறேன், அது நேரே இந்த சிறிய மானண்டை ஓடி, அதன் மேல் பாய்ந்து, குதித்து, இவ்வாறு அதன் காதின் சற்று பின்னால் உள்ள பகுதியில் தனது அந்த இரத்த கோரை பற்களால் கடித்து, அதன் உடல் பாரத்தை செலுத்தி சுற்றி வீசி அலட்டுகிறது: அது தொண்டையை முழுவதுமாய் அறுத்து பிளந்து விடும். அந்த குட்டி மான் ஓரிரண்டு முறை தடுமாறி தாவி குதித்த பின்பு, அவ்வளவுதான் அது மரித்துவிடும். அதன் பின்பு சில நிமிடங்களில் அது முழுவதுமாக காட்டு நாய்களால் (coyote ஒரு வகை ஓநாய் - தமிழாக்கியோன்) சூழப்பட்டிருக்கும். அவை (coyote ) காடுகளில் வாழ்கின்ற ஒரு வகை ஓநாய் ஆகும். தங்களுக்கான எலும்புகளை கடித்தெடுத்துக்கொள்கின்றன... 70. மேலும் அந்த இடத்தை அது கடிக்க நழுவ விடுமானால் ,அது கவ்வி பிடிக்கும்படியான வேறொரு இடம் உள்ளது. அது சரியாக விலாவின் பின்புறமுள்ள வயிற்றின் பக்கவாட்டு பகுதியாகும். இப்பொழுது, அந்த விலாபுறமான வயிற்று பகுதியானது மானின் உடல் எடையின் மையத்தில் உள்ளது. பின்னங்கால் பகுதியானது முன்னங்கால் பகுதியைவிட அதிக பாரமுடையது, மற்றும் அது ஏறக்குறைய நடு பாதியில் அமைந்துள்ளது; ஆகவே அந்த ஓநாயினால் அந்த பகுதியை கவ்விப்பிடிக்க கூடுமானால், அதனால் அந்த மானை அசைத்து உலுக்க முடியும். அது அதை வசமாக கவ்விக்கொள்ளுமானால், எப்படியாயினும் அதனால் அந்த மானை கீழே தள்ள முடியும், அந்த ஓநாய் , திரும்பும் போது மானின் தொண்டையை கவ்வ முடியவில்லையென காணுமானால், அது அதன் விலாவின் பக்கவாட்டு பகுதியை கவ்விப்பிடுக்கும். மேலும் அந்த மான் மிகவும் சமர்த்தியமானதாக இருக்குமானால், அது குறிப்பிட்ட விதத்தில் உடலை முறுக்கி திருப்ப முடியும், அப்பொழுது அந்த ஓநாய் வாய் நிறைய கறியை கடித்து பறித்துவிடும். அப்போது இந்த சிறிய மானுக்கு இரத்தம் ஒழுக தொடங்கும். ஆனால் அது வேகமாக செயல்படுமானால், அதனால் தப்பித்துக் கொள்ள முடியும்... 71. ஓ, அருமை சகோதரியே, அருமை சகோதரனே, இன்றிரவு அது உங்களை எங்கே கவ்விப் பிடித்துக் கொண்டுள்ளது என வியக்கிறேன்? அங்கே பெண் ஓநாய்களும் இருக்கின்றன என்பது நினைவிருக்கட்டும். உன்னுடைய முதல் ராக்-அண்ட்-ரோல் கும்மாளத்தில் சற்றே கலந்துகொண்ட இங்கிருக்கும் சிறு பெண்ணே, அது உன்னை எங்கே கவ்வி பிடித்திருக்கிறது. அங்கேயிருக்கும் சிறு பெண்களே, எல்விஸ் பிரெஸ்லி போன்ற பழைய அழுகிப்போன அசுத்தமான காரியங்களின் மேல் உங்களுடைய ஆத்துமா இச்சித்துக்கொண்டிருக்கிறது. நான் இங்கே, இந்த மூலையில் வெளியே சென்று முப்பது நிமிடங்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்தால், ஒருவேளை சமாதானத்தை குலைத்ததற்காக நான் சிறையில் அடைக்கப்படலாம். எல்விஸ் பிரெஸ்லி அங்கே நின்றுகொண்டு அப்படிப்பட்ட பழைய ஆபாசமான பாடல்களை பாடமுடியும், அதற்கு இளம் பெண்பிள்ளைகள் ஓடிச்சென்று தங்களுடைய உள்ளாடைகளை களைந்து அதை அவனிடம் தூக்கி வீசுகின்றனர், அவன் அதில் தன் கையொப்பத்தை இட்டுக்கொடுக்கிறான். அவனால் அங்கே நிற்க முடிகின்றது, அவன் பாடுவதற்காக, அவர்கள் நீதிமன்ற, காவல்துறையை கொண்டு அவர்களை-ஜனங்களை தள்ளி அகற்றுகின்றனர் . 72. உலகமானது எந்த நிலைக்கு வந்துவிட்டது என்பதையே அது காண்பிக்கிறது. "இயேசுவை தூக்கியெடுத்து சிலுவையில் அறைந்து கொள்ளும், பரபாசை எங்களுக்கு தாரும்." என்று அவர்கள் கூறின போதே, உலகமானது தன்னுடைய தீர்ப்பை கொடுத்து விட்டது. எல்விஸ் பிரெஸ்லிக்கும் எனக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசமே உள்ளது... அவனுடைய ஊரில் நான் தங்கியிருந்திருக்கிறேன், உங்களுக்கு தெரியுமா, அவனுடைய போதகரையும் மற்றவர்களையும் எனக்கு தெரியும். அவன் ஒரு பக்திவாய்ந்தவன் என்று அவர்கள் கூறினர். எல்விஸ் பிரெஸ்லிக்கும் யூதாஸ்காரியோத்துக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசமே உள்ளது என்பதுதான் தேவனுடைய வேதத்துடன் என்னுடைய கருத்தாகும். யூதாஸ் முப்பது வெள்ளி காசுகளை பெற்றுக்கொண்டான். எல்விஸ் ஏகப்பட்ட காடிலாக்ஸ் கார்களையும், இரண்டு அல்லது மூன்று மில்லியன் டாலர்களையும் பெற்றுக்கொண்டான். அது தான் வித்தியாசமாகும். அவர்கள் இருவருமே பிசாசுக்கு விற்றுப்போட பட்டவர்கள். அது முற்றிலும் சரியே. இங்கு எல்லா காரியங்களும். டென்னெசி எர்னி ஃபோர்டு, போன்ற எல்லோரும், மரிக்க போகின்ற ஒரு கன்றுக்குட்டியைப் போல தங்களுடைய கண்களை உருட்டிக்கொண்டு, நின்று ஒரு பக்திபூர்வமாக பாடலை பாடுகிறான். பின்பு பகல்நேரத்தில் அப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று, அவ்வாறாக ஆபாசமாக நடந்துகொண்டும், அந்த ஸ்திரீகள் மீது கரங்களை போட்டு கொண்டும், அவ்விதமாக நடந்துகொள்கிறான்... மேலும் நீங்களோ அத்தகைய காரியங்களுக்காக உங்களுடைய தொலைக்காட்சியை இயக்கி, உங்களுடைய பிள்ளைகள் அந்த ஸ்திரீயை பார்க்கும்படி அனுமதிக்கிறீர்கள். திறந்த வேதாகமதோடு, ஒரு பண்டைய பாணியிலான ஜெப கூட்டம்தான் உங்களுக்கு அவசியமாக உள்ளது. அது சரிதான். 73. உங்களில் சில சபைகள்... மற்றொரு நாள் நான் இங்கு ஒரு குறிப்பிட்ட நகரத்திலுள்ள ஒரு ஒய்.எம்.சி.ஏ-விற்கு (YMCA - கிறிஸ்தவ வாலிபர் சங்கம்) சென்றேன். மாறாக அதாவது , அதிலிருந்து தெருவின் குறுக்கே இருந்தேன். என்னுடைய திரையை உயர்த்தி பார்த்தபோது, அங்கே சிறு பெண்பிள்ளைகள் இருந்தனர். பதினாறு வயதுடைய பெண்பிள்ளைகள் , அவர்களுக்கு இந்த பூகி-ஊகி ( Boogie - Woogie) , அல்லது ராக்-அண்ட்-ரோல் இசை நடனங்களை கற்று கொடுத்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு மிஷனரி ஆவேன். ஸ்திரீகள் வருணம் பூசிக்கொள்வது, ஒரு அஞ்ஞான பழக்கவழக்கத்திலிருந்து வந்தது என்பதை என்னால் எந்த ஒரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிரூபிக்க முடியும். அஞ்ஞானிகள்தான் அதை செய்கின்றனர். மேலும் பூகி-ஊகி மற்றும் ராக்-அண்ட்-ரோல் இசை -நடனங்கள் என்பது அஞ்ஞானிகளின் ஒரு ஆப்பிரிக்க நடனமாகும். பிசாசு எவ்வாறு உள்ளே வந்து, அதை பளபளப்பாக மெருகூட்டியிருக்கிறான் என்பதை நீங்கள் காணவில்லையா? 74. அந்த பழைய சார்லி பார்லிகான் ஒரு பழைய குடிகாரனாயிருந்தான். ஏதோ ஒரு இடத்தில் பயங்கரமான தோற்றமளிக்கும் பயமுறுத்தும் பூச்சாண்டிபொம்மை போல இருந்தான். ஆனால் இன்றோ அவன் முழுவதும் மெருகூட்டப் பட்டவனாயிருக்கிறான். அவன் ஒவ்வொரு காரின் முன்பாகத்திலும் மற்றும் ஒவ்வொரு குளிர்சாதன பெட்டியிலும் ஒட்டப்பட்டு அமர்ந்திருக்கிறான். அவன் இன்னும் அதே பிசாசாக தான் இருக்கிறான். ஓ, ஆமாம். சபையானது முன்பு ஒரு பரிசுத்தமான ஸ்தலமாக இருந்தது. அங்கு செல்லும் ஜனங்களும், பரிசுத்தமுள்ள ஜனமாக இருந்தனர், ஆனால் இன்று அவர்களை பாருங்கள், பார்ப்பதற்கு ஒரே மாதிரியான உடை அணிந்துகொள்கின்றனர் , ஒரே மாதிரியான தோற்றமளிக்கின்றனர், ஒரே மாதிரியாக செல்கின்றனர், ஒருவரிலிருந்து மற்றவரை எவ்வித வித்தியாசமும் சொல்ல முடியாது, அவை யாவும் நாயை-நாய் சாப்பிடுவதாகவே உள்ளது. 75. கவனியுங்கள், அந்த சிறிய மான், அது தப்பித்து செல்கையில்...இப்பொழுது, நான் இப்பொழுது முடித்து விடுகிறேன். இது நேரமாகி விட்டது என்று நீங்கள் நினைப்பதாக நான் ஊகிக்கிறேன். ஆனால் அந்த சிறிய மானானது நழுவி தப்பி செல்லும் போது, அதற்கு இரத்தம் கசிந்து கொண்டிருப்பதனால், சம்பவிப்பது என்ன? அது தாகமடைய தொடங்குகிறது. அது தண்ணீரை கண்டுபிடித்தாக வேண்டும். அதை தான் தாவீது கூறினான் , "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல." அது காயமடைந்து விட்டது. அதிலிருந்து அதனுடைய ஜீவன் கசிந்து போய்க்கொண்டிருக்கிறது. மானானது நீரோடைகளை வாஞ்சித்து கதறுவது போல். தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகின்றது. அந்த சிறிய மானால் தண்ணீரை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், அது மரித்து போய்விடும். ஆனால் அதனால் தண்ணீரை மாத்திரம் கண்டுபிடிக்க கூடுமானால், அந்த மான் பிழைத்து கொள்ளும். 76.தேவனே, இன்றிரவு இங்கிருக்கும் ஒவ்வொரு ஆத்துமாக்களும் சாத்தானால் ஏற்பட்ட காயங்களை கண்டு கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, ஒவ்வொருவரும், உங்களை குறித்துள்ள விவர பட்டியலை எடுத்து கொள்ளுங்கள். அவன் உங்களை எங்கே காயப்படுத்தியிருக்கிறான் என்று பாருங்கள். "ஆனால், சகோதரன் பிரான்ஹாம், நான் அவ்வழிகளில் முழுவதுமாக சென்றுவிடவில்லையே...?..." என்று நீங்கள் கூறலாம். பிள்ளையே, நீ காயமடைந்திருக்கிறாய். உன்னுடைய ஆத்துமா தேவனுக்காக தாகம் கொண்டிருக்கிறதா? "தேவனே, நான் உம்மை கண்டடைந்தாக வேண்டும், அல்லது மரிக்க வேண்டும். தேவனே, நீர் இல்லாமல் என்னால் தொடர்ந்து முன் செல்ல இயலாது. என்னால் இனி புசிக்கவோ அல்லது தூங்கவோ முடியாது. நான் உம்மை பெற்றுக்கொண்டாக வேண்டும், கர்த்தாவே, அல்லது அழிந்துபோய் விடுவேன்." சபையானது அப்படிப்பட்ட நிலைமைக்கு வரும் போது, தேவன் அவருடைய சபைக்கு திரும்பி வருவார். தேவன் சபைக்கு திரும்பி வருவார்... ஓ, மானானது நீரோடைகளை தாகத்தால் வாஞ்சித்து கதறுவது போல, தேவனே, என் ஆத்துமா உம்மை தாகத்தால் வாஞ்சித்து கதறுகின்றது. நாம் சற்றே ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். 77. இரக்கம் நிறைந்த தேவனே, இன்றிரவு இந்த ஜனங்களை, எங்கள் யாவரையும் கண்ணோக்கிப் பாரும், கர்த்தாவே, உலகத்தினாலுண்டான அந்த காயங்களையும், தழும்புகளையும் பாரும். கர்த்தாவே, இங்கே உட்கார்ந்திருக்கும் இந்த பரிதாபகரமான சிறு பெண்களை பாரும். இந்த ஆண்களை பாரும். தேவனே, என்ன ஒரு பரிதாபமான நிலை, என்ன ஒரு வெட்கக்கேடான நிலை. கர்த்தாவே, அவர்களை, நிச்சயமாகவே நேசிக்க கூடிய, உம்முடைய தாசனாகிய எனக்கு, நீர் உமது பிரசன்னத்தை வெளிப்படுத்திக்காண்பிக்க, ஒரு வரத்தின் மூலம் அவர்களுடைய இருதயத்தின் எண்ணங்களையும் மற்ற காரியங்களையும் நான் அறியும்படி நீர் அனுமதிப்பீரானால், இந்த செய்தியானது இன்றிரவு, வரவேண்டிய தேவை உண்டாயிருந்தது என்பதையும் நீர் எனக்கு அறிவித்திருப்பீர், என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும் . தேவனே, இன்றிரவு இங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளை கண்டுக் கொள்ளும்படி தந்தருளும். அவர்கள் காயமடைந்துள்ளனர். ஒருக்கால், அவர்களில் சிலர் நீண்டகாலம் சபை அங்கத்தினர்களாக இருந்தும், தலைமயிரை கத்தரித்துக் கொண்டும், முக சாயம் பூசுபவர்களாகவும், தங்கள் மனைவிகளை அவ்வாறு சென்று புகைபிடிக்க அனுமதிக்கின்ற புருஷர்களாகவும் இருக்கக்கூடும், மேலும்... தேவனே, எப்படிப்பட்ட ஒரு காயமடைந்த சபையாக இருக்கிறது. என்ன ஒரு பெலவீனமான சரீரமாக உள்ளது. தேவனே, சரியாக இப்பொழுதே அவர்கள் தாகம் அடைவார்களாக. "என்னையே அப்படியே எடுத்து கொள்ளும். கர்த்தாவே, என்னை மன்னியும். இன்னும் ஒருவிசை மாத்திரம் சோதித்துப்பாரும். நான் செவ்வையாகி விடுவேன், கர்த்தாவே. என்னுடைய காரியங்களை சரி செய்து கொள்ளுவேன். இன்னும் ஒரு வாய்ப்பை மாத்திரம் தாரும்." அதை அருளும் கர்த்தாவே. அவர்கள் அசலான மான்களாக இருப்பார்களாயின், உம்முடைய இருதயத்திற்கேற்ற உம்முடைய மான்களாக இருப்பார்களாயின், அவர்கள் இப்பொழுது நிச்சயமாகவே அந்த நீரோடையண்டை வருவார்கள். 78. நாம் நம்முடைய தலைகளை தாழ்த்தி இருக்கையில், பாதாளத்திலிருந்து வந்த இந்த பழைய வேட்டை நாய் உங்களுக்கு காயம் உண்டாக்கியிருப்பதை, உங்களுடைய வழித்தடத்தை ஊளையிட்டு பின்தொடர்ந்து, இன்றிரவு நீங்கள் இருக்கின்ற அந்த அசையமுடியாத நிலையில் உங்கள் யாவரையும் பிடித்திருப்பதை, நிச்சயமாகவே நீங்கள் காண்கிறீர்களா, என வியக்கிறேன். வியாதியஸ்தரின் சுகத்திற்காக நான் ஜெபிக்கும்போது, என்னுடைய ஜெபத்தை தேவன் கேட்கிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால், உங்களுடைய ஆத்துமாவைக்க குறித்து என்ன? நீங்கள் இங்கே வந்து, என்னுடைய கரங்களை குலுக்கி, இங்கு நிற்பீர்களா, நாம் ஜெபிப்போமா? நீங்கள் காயமடைந்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும், கட்டிடத்தை விட்டு, மேல்மாடி பகுதியினூடாக, இறங்கி வாருங்கள். நீங்கள் காயமடைந்திருக்கவில்லை என கூறாதீர்கள். உங்களுடைய பிரசன்னம் அதை காண்பிக்கிறது. ஒன்றுமே இல்லாமல், வெறுமனே நான் மாத்திரம்....(நீங்கள் இங்கே வருவீர்களா, நான் உங்களுடைய கரத்தை குலுக்கட்டும்.) அந்த...(தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக.) அந்த உத்தமமான இருதயத்தையுடைய, ஒரு சிறிய சீமாட்டி, இங்கே அமர்ந்திருக்கிறாள். தூய்மையாக தோற்றமளிக்கும் சிறு பெண்மணி. இல்லை, அவள்... ஒரு நிமிடம் இங்கே எழுந்து நிற்பாயா, சகோதரியே. நாம்... சரியாக சற்றே கீழே வாருங்கள். அது சரி. மேல் மாடியில் இருந்து வெளியே வாருங்கள். நாங்கள் காத்திருப்போம். 79. நான் உங்களுக்கு சத்தியத்தை கூறினேன் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்களை தரம் தாழ்த்துவதற்காக நான் அவ்வாறு கூறினேன் என்றா நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்? இல்லை, ஐயா. சகோதரனே, நான் அவ்வாறு செய்வேனாகில், இங்கே நிற்பதற்கு நான் தகுதியற்றவனாவேன். அது சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நான் அறிந்திருப்பேனானால், அதை நான் என்னுடைய இருதயத்திலிருந்து உங்களுக்கு கூறினேன். உங்களுக்கு அது தேவையாயிருக்கிறது என்பதால்தான் அதை நான் உங்களுக்கு சொன்னேன். நீங்கள் நேசத்திற்குரிய ஜனங்களாக இருக்கிறீர்கள். உங்களுடைய வாழ்வாதாரத்தின் ஒரு பங்கை, என்னுடைய பிள்ளைகளுக்கு உணவளிக்கும்படி, கடந்த இரவு நீங்கள் எனக்கு அளித்தீர்கள். சரியில்லாத ஏதோவொன்றை உங்கள் மீது வீசி எறியத்தக்கதாக ஒரு மாய்மாலக்காரனாக நான் இங்கு வருவேன், என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்னுடைய இருதயத்தில் நான் எச்சரிக்கப்பட்டதால் தான் நான் இங்கு வருகிறேன். அதனால் தான் நான் வருகிறேன். இப்பொழுது, நீங்கள் குற்றவுணர்வுடையவர்கள் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களில் அதிகமான ஜனங்கள், இப்பொழுது சரியாக இங்கே வந்திருக்க வேண்டும். நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும். நீங்களே உங்களை நோக்கி பாருங்கள். நீங்களே உங்களைக் குறித்து சிந்தித்து பாருங்கள். நீங்கள்தான் அதற்கு உத்தரவாதி. நீங்கள் அவ்வாறு தொடர்ந்து செல்ல விரும்புவீர்களானால், அதுவும் உங்களை பொறுத்ததுதான். நாம் மீண்டும் ஒருவிசை பாடுகையில், நான் உங்களிடம் மன்றாடி, கிறிஸ்துவை உங்களுக்கு அளிக்கிறேன். (சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.) (சகோதரன் பிரன்ஹாம் ஒலிபேசியை விட்டு அகன்று சென்று ஜனங்களை ஆசீர்வதிக்கிறார் - ஆசி.) ...?... ஒவ்வொரு கறையையும் சுத்திகரிக்கின்ற உமது இரத்தத்தின் அண்டை, தேவாட்டுக்குட்டியே நான் வருகிறேன்! நான்... 80. நீங்கள் தவறாக இருக்கின்றீர்கள் என்று ஒப்புக்கொள்ள விரும்புகிறீர்களா? சபை அங்கத்தினர்களே, இவர்கள் இங்கே நின்று கொண்டிருக்கையில், நான் இதை கூறும்படி ஏவப்பட்டதாக உணருகிறேன். "சகோதரிகளே, அது அவ்வளவு மோசமானது என்று நான் கருதவில்லை" என்றேன். அதற்கு அவர்கள், " தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரன் பிரன்ஹாம், அது தான் எங்களுக்கு தேவை." என்றனர். சரி, இங்கிருக்கும், ஒவ்வொருவரும் இன்றிரவு தேவனுக்கு முன்பாக நீங்கள் இதை கொண்டு செல்கிறீர்களா? "இயேசுவே, இப்போது நான் உறுதி படுத்தப்பட்ட விதமான, என்னுடைய இந்த நிலையில் என்னை முத்திரையிடும். என்னுடைய கருத்துக்களும் மற்றும் யாவுமே இப்பொழுது இருக்கும் இந்த வண்ணமாகவே இருப்பதாக. நியாயத்தீர்ப்பில் நான் உம்மை சந்திக்கையில், இப்போது இருக்கின்ற என்னுடைய அதே நிலையில், நியாயத்தீர்ப்பில் நான் உம்மை சந்திக்க நேர்ந்தாலும் தொடர்ந்து இருப்பதாக." அதை குறித்து என்ன? நீங்கள் இப்பொழுது இருக்கும் இந்த விதமாகவே இருக்கும்படி இயேசு உங்களை முத்தரிக்க நீங்கள் விரும்புகின்றீர்களா? உங்களுடைய கருத்துகளும், உங்களுடைய சிந்தனைகளும், நீங்கள் குற்றவாளிகள் அல்ல என்ற உணர்வு, அல்லது எதுவாயினும், அவர் அவ்விதமாகவே உங்களை சந்திப்பாராக, நீங்கள் இப்பொழுது கொண்டுள்ள அந்த ஆவியோடும், நீங்கள் இப்பொழுதிருக்கும் நிலையிலும், அவர் நியாயத்தீர்ப்பில் சந்திப்பாராக. இப்பொழுது நாம் நம்முடைய தலைகளை அமைதியாக தாழ்த்தி இருக்கையில், அதை குறித்து சிந்தியுங்கள். கிறிஸ்துவின் நாமத்தில், இங்கே வாருங்கள். ஏதோ ஒரு விதத்திலாவது உங்களுடைய ஆத்துமாவில் குற்றவாளிகளாக உணருவீர்களானால், இப்பொழுதே இங்கே பலிபீடத்தண்டை வாருங்கள். மெத்தடிஸ்டுகளே, நீங்கள் வாருங்கள். பாப்டிஸ்டுகளே, நீங்கள் வாருங்கள். பெந்தெகொஸ்துகளே, நீங்கள் வாருங்கள். பிரஸ்பிடேரியன், லூத்தரன், நசரேயன், புனித யாத்திரிகர், கத்தோலிக்கர்கள், நீங்கள் யாராயிருப்பினும் சரி, வாருங்கள். கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் என்மேல் இருக்கிறார், இந்த இடமானது எழும்பி நின்று கொண்டு, இந்த நடைபாதைகளில் ஏறி, இறங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லுகிறார். இப்பொழுது, நீங்களே நியாயந்தீர்த்துக்கொள்ளுங்கள். 81. நாம் ஜெபம் செய்வோம். கர்த்தாவே, அவைகளை நான் கூற வேண்டும் என்பதை நான் உணர்ந்ததினால் அந்த வார்த்தைகளை நான் கூறினேன், என்னுடைய ஜீவியத்தில் முன்பு ஒருபோதும் அவற்றை குறித்து சிந்தித்ததில்லை. என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் அதை நான் உணர்ந்ததுமில்லை. கர்த்தாவே, நீரே என்னுடைய நியாயதிபதியாக இருக்கிறீர். ஆனால் இந்த ஜனங்களை நான் நேசிப்பதினால் தான் அதை நான் கூறினேன், அவ்வாறு கூறும்படியாக உம்முடைய ஆவி என்னை எச்சரித்திருந்தது. அவர்கள் பிரியமான ஜனங்கள். அவர்கள் தயவுள்ளவர்களாயிருக்கின்றனர். அவர்கள் பாரம்பரிய காரியங்களை ஆதரிக்கின்றவர்களாக உள்ளனர், அவர்களில் அநேகர் சற்று அலட்சிய மனநிலையை கொண்டிருக்கின்றனர், இருப்பினும் அருமையான ஜனங்கள் ஆவார்கள். ஆனால், கர்த்தாவே, அந்த இருள் இப்பொழுது இந்த வழியில், ஜனங்களிடம் தொங்கிக்கொண்டிருப்பதை காண்கையில், தேவனே, அவர்களை தங்களுடைய இருக்கைகளிலிருந்து எழுப்பி, உமக்கு முன்பாக அவர்கள் அறிக்கை செய்யும்படி அவர்களை இங்கே கொண்டு வருவீராக. அதை அருளும் கர்த்தாவே. மரித்தோருக்கும் ஜீவனுள்ளோருக்கும் இடையில் நான் நின்றுகொண்டு பரிந்துவேண்டுகையில், உம்முடைய ஊழியக்காரனுடைய ஜெபத்தை கேட்பீராக. ஊனுக்குள் செல்லத்தக்கதாக நேரே வெட்டுகின்ற, கடுமையாக வெட்டுகின்ற பிரசங்கமாக இது உள்ளது, ஆனால் தேவனே என்னுடைய நியாயாதிபதியாக இரும், அதை கூறும்படியாக நீர் என்னுடைய உதடுகளில், வைத்ததினால் நான் அதை பேசினேன். பிதாவே, ஜனங்கள் சரியாக இப்பொழுதே அதை புரிந்து கொள்வார்களாக. என்னை தாமே, நீர் ஏற்றுக்கொள்வீர், வரவேற்று, மன்னித்து, சுத்தம் செய்து, விடுவிப்பீர்; உம் வாக்குத்தத்தை, நான் விசுவாசிப்பதால் அது சரி. அது சரியே. நீங்கள் இப்பொழுது கீழ்ப்படிவீர்களானால். நான் மாத்திரம், தாமதித்து (இப்பொழுது இந்த வார்த்தைகளை கவனியுங்கள்.) தாமதிக்காமல்...(என் ஆத்துமாவிலிருந்து களைய, எதை களைவதற்கு?)...ஒரு இருளான கறையும் இல்லாதவாறு. ஒவ்வொரு கறையையும் தன் இரத்தத்தால் சுத்தம் செய்கின்ற உம்மண்டை தேவாட்டுக்குட்டியே வருகின்றேன்! வருகின்றேன்! நான் மாத்திரம்… ஓ, சகோதரனே, சகோதரியே, அதுதான் வழியாகும், சரியாக வெளியே வாருங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் சரி அல்லது நீங்கள் யாராயிருந்தாலும் சரி. சரியாக வாருங்கள். உங்களுடைய ஜீவியத்தில் ஏதோ ஒரு கறை இருக்குமானால், இதுதான் அந்த நேரம். நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன். தேவன் உங்களுக்கு ஏதோ ஒன்றை செய்யப்போகிறார். 82. உங்களில் எத்தனை பேர் பரிசுத்த ஆவிக்காக நாடிக்கொண்டிருந்தும், இதுவரையிலும் அதை பெற்றுக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்? இதுவே உங்களுடைய நேரமாக உள்ளது. நாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் மேல்மாடியில் இருந்து உள்ளே ஒன்றுகூடி வந்து கொண்டிருக்கின்றார்கள். இதுவே உங்களுடைய தீர்மானத்தின் நேரமாக உள்ளது. நீங்கள் தேவனிடத்தில் கடந்து வந்து, அந்த பண்டைய பாணியிலான அறிக்கையை செய்வீர்களா? நீங்கள் கடந்து வந்து, "தேவனே, நான் குற்றமுடையவனா யிருக்கிறேன். தவறு செய்ததை குறித்து நான் குற்றவாளியாக இருக்கின்றேன். என்னை மன்னியும், தேவனே. இன்றிரவு உம்முடைய விசாரிப்பிற்குள்ளாகவும், நம்பிக்கைக் குள்ளாகவும் என்னை எடுத்து கொள்ளும். நான் உம்மை சேவிப்பதாக, உமக்கு வாக்கு கொடுக்கிறேன்" என்று கூறுவீர்களா. ஒவ்வொரு கறையையும் தன் இரத்தத்தால் சுத்தம் செய்கின்ற உம்மண்டை, ...வருகின்றேன்! வருகின்றேன்! நாம் இன்னும் ஒரு விசை இதை பாடிக் கொண்டிருக்கையில், ஊழியகாரர்கள் இங்கே மேடைக்கு கடந்து வரும்படி நான் விரும்புகிறேன். இங்கிருக்கும் அனைத்து ஊழியகாரர்களும், சற்றே ஒரு நிமிடம் என்னோடு கூட இங்கே மேடைக்கு வாருங்கள். ... ஒரு மன்றாட்டுமே இல்லாமல், ஆனாலும் உம்முடைய இரத்தம் எனக்காக சிந்தினதால், அதை நீர்... (உங்களிடம் பேசி, அழைத்துக் கொண்டிருக்கும் அந்த மெல்லிய சத்தம் கேட்கிறதா?) உம்மண்டை வருகின்றேன்...(இப்பொழுது, இங்கே பக்கமாக சுற்றி முன்னோக்கி நடந்து வாருங்கள்.) ... நீர்...(இப்போது சரியாக கூடுவீர்களா...?...) செய்வீர்... 83. அங்கு பின்னால் நீங்கள் முடித்துவீட்டீர்களா? உங்களுடைய ஆத்துமாவின் மேல் எதுவுமேயில்லை என்பதை குறித்து நீங்கள் நிச்சயமுடையவர்களாய் இருக்கிறீர்களா? நீங்கள்- நீங்கள் விரும்பினால் நடைபாதைகளினூடாய் வெளியே வரலாம். மாறாக நீங்கள் அதை இங்கேயே சரிசெய்து கொள்ளவில்லையா? இன்றிரவுதான் உங்களுடைய கடைசி இரவாக இருக்குமானால் என்னவாயிருக்கும்? காலை வேளைக்கு முன்பாக நீங்கள் மாரடைப்பிலோ அல்லது வேறு ஏதோவொன்றின் காரணமாகாவோ செல்ல நேரிட்டால் என்னவாயிருக்கும்? இன்றிரவு உங்களுடைய கார் விபத்தினால் நொறுங்கி போகுமானால் என்ன சம்பவிக்கும்? மருத்துவர் அதிகாலையில் கடந்து வந்து, உங்களுடைய நாடி துடிப்பை பரிசோதிக்கையில் , நீங்கள் ஏற்கனெவே மரித்திருப்பீர்களானால், அது என்னவாயிருக்கும். இப்பொழுது வாருங்கள். இப்பொழுதே அதை சரிசெய்து கொள்ளுங்கள். நண்பர்களே, வேண்டாம் - உங்களுடைய ஆத்துமாவோடு சூது விளையாடாதீர்கள் . அப்படியே... 84. மேலே மாடியில் இருந்து, கீழே நடந்துவருவதற்கு தூரமாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால், எழுந்து நின்று கொள்ளுங்கள். அங்கேயே எழுந்து நின்றவாறு , "தேவனே, என்னுடைய ஆத்துமாவில் நான் ஏதோவொன்றை கொண்டுள்ளேன்" என்று கூறுங்கள். சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ஐயா, கவனியும், ஒருவேளை உம்முடைய ஜீவியத்தில் நீர் அநேக மகத்தான காரியங்களை செய்திருக்கக்கூடும், ஆனால் நீர் செய்ததிலேயே ஒரு மிக பெரிய தொடக்க காரியம் அது தான். நீங்கள் அதை செய்யத்தக்க அளவு தைரியமுள்ள புருஷர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் எழுந்து நின்று, "நான் தவறாயிருக்கிறேன். தேவனே, என்னை மன்னியும்" என்று கூறுவீர்கள், என்னும் நம்பிக்கை எனக்குள்ளது. எழுந்து நிற்கும் புருஷர்கள். வாலிப ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, உம்மை , உம்மை. சுற்றியிருக்கும் யாவரையும். பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரி. நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருவீர்களானால், எழுந்து நில்லுங்கள். எழுந்து நில்லுங்கள். "தேவனே, நான் - நான் தவறாயிருக்கிறேன். நான் என்னையே குறித்து வெட்கமடைகிறேன். இப்பொழுது என்னுடைய பாவங்களை நான் அறிக்கை செய்ய விரும்புகிறேன். நான் - நான் தேவனோடு சரியாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறுங்கள். நொறுகுண்ட ஆவியுடன், விம்மித் தேம்பி, அழுதுகொண்டிருப்பவர்களே, கேளுங்கள். கண்ணீரோடே விதைக்க போகிறவன், இரண்டத்தனையாய் எடுத்துக் கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான். 85. இப்பொழுது, எல்லோரும் எழுந்து நிற்போம். இப்போது, நம்முடைய கரங்களை உயர்த்தி ஒவ்வொருவரும் இதை செய்வோம். இந்த ஜெபத்தை செய்வோம்; "தேவனே, என்னை குறித்து நான் வெட்கமடைகிறேன். நான் இதை செய்ததற்காக வருந்துகிறேன். கர்த்தாவே, எனக்கு உதவி செய்யும். என்னை மன்னியும். நான் குற்றமுடையவனாயிருக்கிறேன். அந்த குற்றத்தை வெளியே எடுத்துப் போடும். நான் என்னுடைய தலைமயிரை சவரம் செய்திருந்தால் , உம்முடைய கிருபையினால், அதை நான் மறுபடியும் வளரும்படி விடுவேன். நான் இந்த முகச்சாய பொருட்களை என்னுடைய முகத்திலிருந்து கழுவிவிடுகிறேன், அதை ஒருபோதும் மீண்டும் நான் பூசிக்கொள்ள மாட்டேன். அசுத்தமாக தோற்றமளிக்கும் பழைய சிறிய உடைகளாகிய அவைகளை நான் ஒருபோதும் மறுபடியும் அணிய மாட்டேன். ஒரு உத்தம ஸ்திரியை போன்று, நான் உடுத்திக் கொள்ளுவேன். நான் இந்த உலகத்தில் இருந்தாலும், எல்லா காரியங்களுமே வித்தியாசமாக இருந்தாலும், அந்த அடிமை இருந்தது போல, நான் என்னை தேவனுடைய குமாரத்தியைப் போன்று நடத்திக் கொள்ளுவேன். " என்று கூறுங்கள். விநோதமான ஜனங்கள், விநோதமான காரியங்கள்... 86. புருஷராகிய உங்களை குறித்து எவ்வாறுள்ளது? பெண் சிநேகிதியை உடைய ஆண்பிள்ளைகளே, ஆண்சிநேகிதர்களை உடைய பெண்பிள்ளைகளே, நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தால், தேவனுடைய பிள்ளைகளை போன்று உங்களை நடத்தி கொள்ளுங்கள். வித்தியாசமாக இருங்கள். உலகம் உங்களை அதை காண விரும்புகின்றது - அதை உங்களில் காண விரும்புகின்றது. இப்பொழுது, நாம் நம்முடைய கரங்களை உயர்த்தி, நம்மை மன்னித்தருளும்படி தேவனிடம் வேண்டிக்கொள்வோம். ஒவ்வொருவரும் தங்களுடைய கரங்களை உயர்த்தியவாறு... நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தி இருக்கையில், இங்கிருக்கின்ற இந்த ஊழியக்காரரிடம் நான் கேட்க போகிறேன், இங்குள்ள சகோதரனிடம், அவர் நம்மை ஜெபத்தில் நடத்துவாரா என்று, இங்கேயுள்ள உள்ளூர் மனிதர்களில் ஒருவரான, சகோதரன் மெக்கிளவுட் (McCloud)... சரி. இப்பொழுது நாம் தேவனை நோக்கி பார்க்கையில், நம்முடைய தலைகளை தாழ்த்துவோம். உத்தமமாக இருங்கள். சந்தேகம் கொள்ள வேண்டாம் . தேவன் உங்களை மன்னிப்பதாக வாக்களித்துள்ளார், அவர் அதை செய்வார். சரி. இப்பொழுது, சகோதரன் மெக்கிளவுட் ஜெபம் செய்கையில், நம்மை தாழ்த்துவோமாக. [சகோதரன் மெக்கிளவுட் ஜெபிக்கின்றார்: எங்கள் பரலோக பிதாவே...-- ஆசி.] கர்த்தாவே! [... உம்முடைய வார்த்தைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம்...] ஆம், கர்த்தாவே! [... இன்றிரவு நீர் எங்களுக்கு அதை அவ்வளவு கிருபையாக அளித்தீர்...] ஓ! [... எங்களுடைய சகோதரன் பிரான்ஹாமின் மூலமாக. கர்த்தாவே, இன்றிரவு அது செழிப்பான நிலத்தை கண்டடையும் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்...] கர்த்தாவே அதை தந்தருளும்! [... கர்த்தாவே, அது கனிகளை கொண்டு வரட்டும், அமெரிக்காவுக்கு தேவையான இந்த எழுப்புதல், நியூ இங்கிலாந்துக்காக (New England) க்காக நாங்கள் ஜெபித்து கொண்டிருக்கின்ற இந்த எழுப்புதல் , கர்த்தாவே, இந்த இரவில் தொடங்கட்டும்...] அதை ஒவ்வொரு இருதயத்திலும், தந்தருளும் கர்த்தாவே. கர்த்தாவே, அதை தந்தருளும்! [... உம்முடைய நாமத்தினால் அழைக்கப்பட்ட, உம்முடைய ஜனங்கள், அதை தொடங்கட்டும்...] தேவனே! [... தங்களுடைய பாவங்களை அறிக்கை செய்து, தங்களுடைய தீய வழிகளிலிருந்து திரும்பதக்கதாக, நீர் எங்களுடைய தேசத்தை சொஸ்தமாக்குவீராக.] ஆம், கர்த்தாவே, இன்றிரவு, அதை அருளும்! [தேவனே, எங்கள் ஒவ்வொருவரையும், கர்த்தாவே, நாங்கள் இதற்குமுன் ஒருபோதும் தாழ்த்தாத அளவிற்கு நீர் எங்களை தாழ்த்திக்கொள்ள செய்யும். தேவனே, இன்றிரவு எங்களுடைய தீய பாவங்களிலிருந்தும், எங்களுடைய தீய வழிகளிலிருந்தும், எங்களுடைய சுற்றி அலைந்துதிரிதலில் இருந்தும் , எங்களுடைய பின் மாற்றத்திலிருந்தும், எங்களை சுத்திகரியும். எங்களுடைய இருதயங்களை ஆராயும்; எங்களுடைய சிந்தனைகளை சோதித்து உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே எங்களைச் சுத்தம் செய்யும். தேவனே, இன்றிரவு நாங்கள் உம்முடன் உடன்படிக்கை செய்கிறோம், கர்த்தாவே...] ஆமென். *******