செல்வாக்கு 63-11-14 1. நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய்; நம்பிடுவாய், நம்பிடுவாய், யாவும் கைகூடும், நம்பிடுவாய்; 2. நம்முடைய தலைகளை நாம் வணங்குவோம். எங்கள், பரலோக பிதாவே, நம்பிடுவாய் என்ற இந்த பாடலுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்! காக்காய் வலியுள்ள அந்த பையனிடமாய் நம்முடைய கர்த்தர் வருகின்றதை சற்று நோக்குங்கள், வந்து ''நீ விசுவாசிப்பாயானால் எல்லாம் கூடும். ஏனென்றால் விசுவாசிக்கிறவர்களால் எல்லாம் கூடும். கர்த்தாவே எங்களுடைய அவ்விசுவாசத்தை இன்றிரவு உதவி செய்யும் என்பதே எங்களுடைய ஜெபமாயிருக்கிறது. எங்களோடு இருக்கின்ற உம்முடைய சமூகத்திற்காகவும், உம்மை நேசிக்கவும் உம்மை விசுவாசிக்கவும் செய்கின்ற ஜனங்களுக்காகவும் அவ்வளவு நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். இப்பொழுது அறிகிறோம், அறியப் போகிறோம் என்றல்ல, இப்பொழுது கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே அவர் நம்மை உயர்த்தி இருக்கிறார். இன்றிரவு நம்முடைய இராஜாவோட கூட உட்கார்ந்து கொண்டிருக்கிறவர்களாய், அவரோடு கூட ஏற்கெனவே ஸ்தானத்தில் பொருத்தமாய் உட்கார வைத்திருக்கிறார். ஓ உமக்குள் எங்களுக்கு உண்டாயிருக்கும் நிச்சயித்திற்கும், அவருடைய வாக்குதத்தங்களுக்கும் அது ஒரு போதும் தவறி போகாது. அவைகள் எப்பொழுதும் சத்தியமாய் இருக்கிறதென்று அறிந்திருக்கின்றபடியினால், நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். இன்றிரவு நீர் எங்களை சந்திக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். பரிசுத்தாவியானவர் தாமே தேவனுடைய வார்த்தையை எடுத்து எங்களுடைய தேவைக்கு ஏற்றார் போல் எங்கள் இருதயங்களுக்கு பகிர்ந்தளிப்பாராக. இன்றிரவு நாங்கள் எங்கள் வீடுகளுக்கு போகும் போது, ஒரு நாளிரவு எம்மாவூரிலிருந்து வந்தவர்களோடு சேர்ந்து நாங்களும் "வழியிலே அவர் நம்முடனே பேசிக் கொண்டிருந்தபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா" என்று சொல்லும்படி செய்யும்? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 3. நீங்கள் உட்காரலாம், கிறிஸ்துவை பற்றின காரியங்களில் உங்களோடு ஐக்கியப்படவும் உங்களோடு பேசவும் மறுபடியுமாய் இன்றிரவு இங்கே வந்தமைக்காக நான் மிக்க மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். இங்கு வந்ததில் இதைத் தவிர வேறு நோக்கமில்லை ஆனால் அப்படி செய்வதென்பது அவருடைய வார்த்தையில் நாம் ஐக்கியப்படுவதேயாகும். 4. உங்கள் யாவரையும் ஒவ்வொரு இரவும் அதிக நேரம் காக்க வைக்கிறதினால் என்னை மன்னிக்கவும். யாரோ ஒருவர் சொன்னார் ''இங்கே ஜனங்கள் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கெல்லாம் சபையை விட்டு போய் விடுவார்களென்று" ஆனால் நானோ தென் தேசத்தான். ஒருவிதமாக வேக்குறைவாய் இருக்கும். என்னால் அவ்வளவு வேகமாய் சிந்திக்க முடியாது என்னுடைய நேரத்தை அதனோடு கொண்டு செல்ல வேண்டியவனாயிருக்கிறேன். 5. ஆனால் நிச்சயமாக உங்களிடத்தினின்று இங்கே கிடைக்கின்ற, தேவனை விசுவாசிக்கின்றவர்களின் அருமையான ஒத்துழைப்பிற்காக, நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்களுடைய அருமையான ஒத்துழைப்பு. பரிசுத்தாவியானவருக்குங்கூட உங்கள் மத்தியில் அசைவாடுவதற்கு சுலபமாக ஆக்குகிறது. இது போன்று எனக்கு எல்லா இடங்களிலும் விசுவாசிக்கின்ற ஜனங்கள் கிடைக்க விரும்புகிறேன். தேவன் என்ன செய்தாலும் சரி, அவர் எவ்வளவுதான் வரங்களை அங்கே காட்டினாலும் சரி, நீ அதை விசுவாசிக்க வேண்டும். புரிகின்றதா, ஏனென்றால் நீ அதை விசுவாசிக்கவில்லையென்றால் அது பிரயோஜனமற்றது. 6. ஒரு நேரத்தில், இன்னொரு தேசத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் போது அவருடைய சொந்த ஊருக்கு வந்தார். அவர்களோ "நீர் இன்னின்ன இடத்தில் இன்னின்னக் காரியஞ் செய்தீர் என்று நாங்கள் கேள்விப்பட்டோம்" என்றார்கள். ஆனால் அதற்கு பின்பு அநேக வல்லமையான கிரியைகளை அவரால் செய்ய முடியவில்லை. இப்பொழுது, நமக்கு அந்த விதமாகச் சொல்ல விருப்பமில்லை. ஆனால் அந்த விதமாகதான் வேதம் அதை சொல்லுகிறது. அவரால் செய்ய முடியவில்லையென்று. "அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தமாக அவரால் அநேக வல்லமையான கிரியைகளை செய்ய முடியவில்லை''. 7. தேவனுடைய வல்லமையானது, உனக்கு அதிலுள்ள விசுவாசத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறது. புரிகின்றதா? அதற்கிருக்கின்ற ஒரே கட்டுப்பாடு, உன்னுடைய விசுவாசமாய் இருக்கிறது. அதை விசுவாசிக்கிறவர்களால் எல்லாக் காரியங்களும் கைகூடும் புரிகின்றதா? பரலோகத்தில் ஒரு மகா பெரிய தேவன் இருக்கிறார். நம்மால் மட்டும் அவரால் தொடர்பு கொள்ள, அவரோடு சேர தக்கதான, நேரடியான இணைப்பு இருக்கக் கூடுமானால் எல்லா காரியங்களும் கைகூடும். புரிகின்றதா? ஆனால் நாம் அவரோடுகூட தொடர்பு கொண்டவர்களாய் இருக்க வேண்டும், எங்கேயும் நிலையாய் நின்றுவிடாமல், நமக்கும் தேவனுக்குமிடையே ஒரு தெளிவான தொடர்பு உள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்படியிருக்கும் நிலையில் "நீ ஒரு மலையை பார்த்து அசைந்து போ என்று சொல்லி, உன்னுடைய இருதயத்தில் சந்தேகப்படாமல் நீ சொன்னதை விசுவாசிப்பாயானால்" அது சம்பவிக்கும் என்று அவர் சொல்லுகிறார். நீ பொய் என்று சொல்ல முடியாது. பிசாசு அவ்வளவு இலேசாய் பொய் சொல்லுகிறதில்லை, ஆகவே நீ அதை பொய் என்று சொல்ல முடியாது. ஆனால் நீ உண்மையாக அதை அறிவாயானால், அப்போது அது சம்பவித்தேயாக வேண்டும். அது அப்படி ஆகத்தான் வேண்டும். 8. ஆகவே நாம் இங்கே இருந்து கொண்டு அவரை ஆராதிக்கிறோம். அவர் நம்முடைய ஆத்துமாவிற்கு அருமையானவரும், பதினாயிரம் பேரிலும் சிறந்தவருமாயிருக்கிறார் உங்களோடுக்கூட இன்றிரவு இங்கே இந்த அருமையான ஐக்கியத்தின் நேரத்தில், இங்கே உட்கார்ந்திருப்பதற்கு நாங்கள் நிச்சயமாக சந்தோஷமாயிருக்கிறோம். 9. இப்பொழுது, வார்த்தையை வாசிக்க, அந்த இடங்களை குறித்துக் கொள்ள விரும்புகின்ற உங்களுக்கு, நான் தெய்வீக சுகத்தைக் குறித்து அதிகமாக பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன் ஆகவே இன்றிரவு கொஞ்சம், பேசும் பொருளை ஒருவிதமாக மாற்றலாம் என்ற என்ற கருத்துள்ளவனாய் இருக்கிறேன். சரியாக அப்படியே மாற்றுவதென்றல்ல, அதனுடைய ஓட்டத்தை மாற்றுகிறதாகும். ஏனென்றால், நீ ஒரு வார்த்தையை வேதத்தில் மாற்று அதனோடுகூட மற்ற வார்த்தைகள் முடியாது. ஏனென்றால் தொக்கி நிற்கின்றபடியால், சம்மந்தப் பட்டிருக்கின்றபடியால், எல்லா வேத வார்த்தைகளும் ஒன்றாய் கட்டப்பட்டிருக்கிறது. 10. ஒரு வேளை மார்க்கத்திற்கு எதிராய் காணப்படுமாயின் மன்னிக்கவும், அந்தவித அர்த்தங் கொள்ளும்படியாய் நான் சொல்லவில்லை. ஆனால் அது ஒரு குறுக்கெழுத்துப் போட்டி போன்றிருக்கின்றது, உங்களுக்கு தெரியுமா நாங்கள் பழைய நாட்களில் இந்தவிதமான குறுக்கெழுத்துப் போட்டிகளை எல்லாம் வெட்டி சேகரித்துக் கொண்டு பின்பு உட்கார்ந்து அவைகளை எப்படி ஒன்று சேர்ப்பது என்பதைக் குறித்து யோசித்துக் கொண்டு இருப்பது வழக்கம். அதற்கு பின்பு அந்தப் பக்கத்தில் அந்த குறுக்கெழுத்து போட்டி எங்களுக்கு சரியாக வர எங்களுக்கு அந்த பக்கத்தில் ஏதாவது வைத்திருக்க வேண்டும். அப்படி உன்னிடம் ஒன்றும் இல்லையென்றால் உன்னால் அதை செய்து முடிக்கவே முடியாது. 11. அந்த விதமாகத்தான் வேத வார்த்தைகள் இருக்கின்றன. கல்விமான்களின் கண்களுக்கும் ஞானிகளின் கண்களுக்கும் மறைக்கப் பட்டிருக்கும் வண்ணமாக அது வெட்டப் பட்டிருக்கின்றது. புரிகின்றதா! அவர்கள் பரிசேயர்களும் சிறந்த பண்டிதர்களுமாயிருக்கிறார்கள். (அதை) அவர், அவர்களுடைய கண்களுக்கு மறைத்து, கற்றுக் கொள்ளக்கூடிய பாலகருக்கு வெளிப்படுத்துவார் என்பதற்காக தேவனுக்கு இயேசுவானவர் நன்றி செலுத்தினார். 12. உங்களுக்கு உங்களுடைய உதாரணம் வேண்டுமானால், உங்களுடைய மாதிரிகளை ஒதுக்கி வைக்க, வேத வார்த்தைகள் எதனோடு கூட சேர்ந்து போகிறது என்று காண, இயேசுவை இங்கேயே வைத்துவிட்டு போய் அவரை கவனித்துக் கொண்டு அதை வேதத்தில் பொருத்திப் பாருங்கள். அந்த முழுகாரியமும் சரியாக வெளிவந்து உங்களிடத்தில் இருக்கிறது, ஏனென்றால் அது இயேசுகிறிஸ்துவை பற்றின வெளிப்படுத்தலாய் இருக்கிறது பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் இரண்டும், எல்லாம் இயேசுவை பற்றி பேசுகின்றது. புரிகின்றதா, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, ஏனென்றால் அவரே இந்த மீட்பின் புத்தகமாயிருக்கிறார். அவரே வார்த்தையாயிருந்தார், அவரே வார்த்தையாயிருக்கிறார், அது அவராகத் தான் இருக்க வேண்டும், உங்களுக்கு புரிகின்றதா. ஆகவே மனிதவர்க்கத்திற்கான சுகமளித்தல், மீட்பின் வாக்குதத்தங்கள், எல்லா காரியங்களோடும், தேவனால் இசைவாய் சேர்க்கப்பட்டிருக்கிறது, இயேசுகிறிஸ்துவாகிய இவரே இந்த முழு மீட்பின் புத்தகமாய் இருக்கிறார். இப்பொழுது உங்களுக்கு அது விளங்குகின்றதா? இந்த புஸ்தகம், தேவனால் ஒன்றாக சேர்க்கப்பட்ட இயேசு கிறிஸ்துவாயிருக்கிறது. பாருங்கள்? மீட்டுக் கொண்டார், அவர் ஒரு மானிடனாய் வந்து, நம்மை ஒவ்வொரு வாக்குதத்தமும் அவருக்குள் உனக்காக இருக்கிறது, ஏனென்றால், அவரே மீட்பராய் இருக்கிறார். 13. இன்றிரவு நாம் பழைய ஏற்பாட்டில், நமக்கு ஒரு தலைப்பை எடுக்கும்படியாக, நாம் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 6-ம் அதிகாரத்திற்கு திருப்புவோம். 14. ஏசாயாவினால் எழுதப்பட்டது எனக்கு பிடித்தமாய் இருக்கிறது. அவன் ஒரு பெரிய தீர்க்கதரிசி வேதாகமத்திற்கு முகவுரை போன்று, முழு வேதாகமத்தையும் ஏசாயா எழுதியிருக்கிறான் என்பதை நீங்கள் எப்பொழுதாவது அறிந்ததுண்டா? அவன் அதை செய்தான். ஏசாயா, சிருஷ்டிப்பில் ஆரம்பித்து, புத்தகத்தின் மத்தியில் யோவான் ஸ்நானகன் வருகிறான், கடைசியில் ஆயிர வருஷ அரசாட்சி வருகிறது. வேதாகமத்தில் 66 புத்தகங்களும் ஏசாயாவின் புத்தகம் 66 அதிகாரங்களையும் கொண்டதாயிருக்கின்றது. ஆகவே இது வேதாகமத்திற்கு நிச்சயமாக ஒரு முன் நிழலாயிருக்கிறது. இப்பொழுது நாம் ஏசாயா 6ம் அதிகாரத்தை வாசிப்போம். உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில் ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கக் கண்டேன், அவருடைய வஸ்திரத் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிலிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டு சொன்னார்கள். கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத் தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, அதினால் என் வாயைத் தொட்டு, இதோ; இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவர்த்தியானது என்றான். பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன்" 16. இதிலிருந்து ஒரு பொருளை எடுக்க விரும்புகின்றேன். நாம் அதை பெயர் சொல்லி அழைக்க வேண்டுமானால் செல்வாக்கு என்று அழைக்கலாம். செல்வாக்கு என்பது ஒரு பெரிய காரியம். வேத வார்த்தைகளில் "எல்லா மனிதர்களாலும் வாசிக்கப்படும் நிருபங்களாய் நாம் இருக்கிறோம்" என்று சொல்லப்பட்டிருக்கின்றது. 17. நாம், கிறிஸ்தவர்களாக இருக்கின்றபடியால், நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்பதை எப்பொழுதும் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அதாவது எல்லா மனுஷருக்கும் நாம் பரிபூரண உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நீங்களும், உங்களுடைய உடன் மனிதருடன் உங்களால் உண்மையாய் இருக்க முடியவில்லையென்றால், நிச்சயமாக தேவனோடும் உங்களால் உண்மையாய் இருக்க முடியாது. ஆகவே நாம் ஒருவருக்கொருவர் சேவை செய்வதே நாம் தேவனுக்கு செய்யும் சேவையாகும். உன்னோடு நான் எந்த அளவிற்கு உண்மையுள்ளவனாய் இருக்கிறேனோ அந்த அளவிற்கு தான் நான் தேவனிடத்திலும் உண்மையாய் இருக்க முடியும். அதே விதமாகவேதான் நீங்கள் என்னிடத்திலிருப்பதும், நம்முடைய எல்லா காரியங்களிலும் நாம் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர் களாயிருக்க வேண்டும். 18. யாரோ ஒருவர் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார் நீங்கள் ஒருவேளை அதை நினையாமலிருக்கலாம். ஆனால் அங்கே உன்னை கவனித்துக் கொண்டிருக்கும் கண்கள் இருக்கின்றன. உன்னுடைய ஜீவியம் வேறு யாருக்கோ முன்மாதிரியாக இருக்கப் போகின்றது. ஒருகால் அது ஒரு சிறு பிள்ளையாய் இருக்கலாம். அந்த பிள்ளை ஒருகால் இன்னொரு (Finny) பின்னியோ, மூடியோ, (Moordy) அல்லது யாரோவாய் வளரலாம். நமக்கு தெரியாது ஆனால் உன்னுடைய ஜீவியம் இன்னொருவனுக்கு முன் மாதிரியாய் இருக்கிறது. 19. இன்றிரவு நாம் இங்கே உட்கார்ந்து இந்த காரியத்தை குறித்து தியானிக்கிறோமென்றால் இது ஒரு பெரிய ஐக்கியமாய் இருக்கின்றது. இதை ஏனென்றால் இன்று மத்தியானம் வெறுமையாய் வாசிக்கும் போதே, நான் அதை தியானித்துக் கொண்டிருக்கும் போதே, நான் தேவன் எவ்வளவு மகத்துவமுள்ளவராய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 20. இன்று காலையில் நானும் என் மகனுமாய் இக்கட்டிடங் களை சுற்றி நடந்தபோது, அவ்வளவு ஜனங்கள் இருந்தார்கள். டைம் ஸ்கொயர் என்ற இடமட்டும் போயிருந்தோம். ஏனென்றால் அதை உடைத்துப் போட போகிறார்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தபடியினால், நான் நினைக்கிறேன். வேலையெல்லாம் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டது. ஆகவே நான் அதை பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் சில புகைப்படங்களை எடுத்தோம். ஜனங்களோ திரண்டுக் கொண்டிருந்தார்கள்! நான் என் மகன் பில்லியிடம் “அவர்கள் எங்கே போகிறார்கள்? அதிலென்ன அவசரம்? இதோ இங்கே நமக்குக் கீழாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்; இங்கே நமக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்; இவ்வளவு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவசர அவசரமாக எல்லோரும் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்?" என்றேன். 21. நாங்கள் அங்கே நின்றவாறு "ஒவ்வொரு மனுஷருடைய எண்ணங்களையும் தேவனால் எப்படி அறிய முடியும்" என்று நினைத்தோம்? கோடிக்கணக்கானவர்கள் இப்பூமியிலிருக்கிறார்கள். இருந்த போதிலும் உன்னுடைய கண் இமைகளை நீங்கள் அசைக்கும் ஒல்வொரு நேரத்தையும் அவர் அறிந்திருக்கிறார்; அவர் எப்படி அறிந்திருக்க முடியும். அவர் எல்லையற்றவர். 22. உனக்கு வெறுமனே அதை அறிந்து கொள்ள விரும்புவாயானால் வெறுமனே அதை திருப்திபடுத்த, எப்பொழுதாவது அது உன்னுடைய மனதிற்கு வருமாயின், வெளியே எழுந்து போய், நட்சத்திரங்களை நோக்கி மேலே பாருங்கள். எப்படி அவையெல்லாவற்றையும் அவர் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாயிருக்கிறது; அப்படியானால் இது எவ்வளவு ஒரு சிறிதான வேலை என்று நீங்கள் பாருங்கள். ஒரு தூரதிருஷ்டி கண்ணாடியின் வழியாகதான் 120 மிலியன் ஒளி வருஷங்களின் தூரத்தில் இருக்கின்ற அந்த நட்சத்திரங்களை காண முடியும். உங்களுக்கு தெரியும் ஒளி வேகம் எவ்வளவு பாய்கிறது என்று. ஏன்? 9 வரிசைகளில் நீ வேண்டுமானால் நியூயார்க் பட்டணத்தை சுற்றி ஓட வைக்க முடியும். ஆனால் நீ அதை மைல்கள் கணக்காய் கணக்கிட முடியாது. இந்த பக்கத்தில் காணப்படுகின்ற நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு சமமாய், அதை தாண்டி நட்சத்திரங்கள் பாலமோர் மேடு (Mount Palamour) வில்சன் மேடு (Mount Wilson) என்று கலிபோர்னியாவில் உள்ளது போன்று இருக்கலாம். அவைகளைக் காணக்கூடும். 23. அவர் எவ்வளவு மகத்தானவர் என்றும், அவர் எப்படி பூமியை பிடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் சிந்தித்துப் பாருங்கள்! அந்த நட்சத்திரங்களில் ஒன்று அதனுடைய ஸ்தானத்லிருந்து அசையுமானால், லக்ஷஷோப லக்க்ஷ கணக்கான மைல்களுக்கு அப்பால், அது பூமியைப் பாதிக்கும். அந்த முழு சூரிய அமைப்பும் அதனதன் ஸ்தானத்தில் இருக்க வேண்டும். அந்த விதமாக, தேவன் மனிதனை உண்டாக்கின எல்லா காரியங்களும், தேவனுக்குக் கீழ்படிகின்றது. ஆனால் தேவன் மனிதனை, உண்டாக்கிய போது, மனிதன் அவனுக்கு அறிந்துள்ளக் காரியங்களைக் காட்டிலும் இன்னும் அதிகமாக அறிந்துக் கொள்ள விரும்புகிறான். உங்களுக்குப் புரிகின்றதா. நாம் மட்டும்தான் நிலைதவறி இருக்கிறோம். இருக்கிறோம். அவைகள் ஸ்தானத்தில் இருக்கின்றன. ஒன்றோடொன்று இசைந்து போகும் படியாய் அவைகள் ஸ்தானத்தில் தான் இருக்க வேண்டும். 24. ஓர் எடுத்துக்காட்டாக, சந்திரனானது அதன் ஸ்தானத்தை விட்டு எப்பொழுதாவது அசையுமானால், ஒரு சில நொடிகளில் பூமியானது தண்ணீரினால் நிரம்பி இருக்கும். ஒருவிதமாக அது சந்திரனுக்கு ஒரு காவல் நாய் போன்று. அது கடந்து போகக் கூடாதபடி அவர் அதற்கு எல்லையைக் குறித்திருக்கிறார். சந்திரனானது தன் முகத்தை பூமியின் பக்கமாயிருந்து திரும்பும் போது அலைகள் வருகின்றது. சந்திரன் மட்டும் அதனை சுற்றிலுமாக அந்த பக்கத்தை பிடிக்காதிருக்குமாயின், அது பூமியை மூடி விடும். ஆகவே சந்திரனானது நின்று, அடுத்த பக்கத்தை நோக்கிப் பார்க்கும்படியாக தன் முதுகை திருப்புகிறது. இதோ உடனே தண்ணீர் மிகவும் வேகமாக உள்ளே வருகின்றது. உடனே சந்திரன் மறுபடியும் திரும்புகிறது. அவன் யேகோவாவின் ஊழியக்காரன். நின்று, மறுபடியும் தன் ஸ்தானத்திற்கு போகிறது. ஏனென்றால் அது யேகோவாவின் பரிபூரண அசைவைக் காணுகின்றது. 25. ஓ! சபையிலிருக்கின்ற நாம், கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாக, அந்தவிதமாக இசைந்து கிரியை செய்ய கூடுமானால் ஜீவிக்கின்ற தேவனுடைய பெரியதும் மகத்துவ வல்லமையுமான சபையானது எல்லாம் ஒரே (Array) அணியாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும். அது அற்புதமாயிருக்குமல்லவா? சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும் தன் தன் ஸ்தானத்திலிருந்துக் கொண்டு, கிரியைச் செய்து கொண்டு, ஒவ்வொரு வரமும் அதனதன் ஸ்தானத்திலும் ஒவ்வொரு வரமும் ஒன்றுக்கொன்று உதவிச் செய்து கொண்டு, ஒவ்வொரு அங்கத்தினனும் அடுத்தவனுக்கு உதவிச் செய்துக் கொண்டு இருப்பது, அது அற்புதமாய் இருக்கும். அதைத்தான் நாம் காண விரும்புகிறோம். ஆனால் அது சரியாயிருக்குமாயின், ஒரு நாளில் நாம் அதைக் காண்போம். 26. இப்பொழுது. இந்த வாலிபன், உசியா, இராஜாவா யிருந்தான். அவன் மந்தை மேய்க்கும் பையனாயிருந்தான்; அவனுக்கு வெளிப்புற காட்சிகள் மிகவும் பிடிக்கும். உசியாவின் ஜீவியத்தின் செல்வாக்கு ஏசாயாவின் ஏசாயாவின் ஜீவியத்தை பற்றிக் கொண்டதாயிருந்தது. ஏசாயாவும்கூட ஒரு வாலிபன், ஒரு வாலிப தீர்க்கதரிசியாயிருந்தான். நீங்கள் அந்தக் கதையை வாசித்திருக்கிறீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் 2 நாளாகமம் 26ஐ வாசியுங்கள், அது உங்களுக்கு சொல்லும். எப்படி அவன் தன்னுடைய 16வது வயதினில், அவனுடைய நீதிமானாகிய தகப்பன் மரித்த பின்பு, அவர்கள் அவனை எடுத்து இஸ்ரவேலின்மேல் இராஜாவாக ஆக்கினார்கள். 16 வயதினில் அவன் ஆட்சி புரிய ஆரம்பித்தான். அவனுடைய பெற்றோரின் ஜீவியத்தின் செல்வாக்கு (Influence) அவன் மேல் இருக்கின்றதை கண்டான். அவனுக்கு முன்பாக அவனுடைய தாய் ஒரு தெய்வ பக்தியுள்ள ஸ்திரீயாயிருந்தாள். அவனுடைய தகப்பன் ஒரு தெய்வ பக்தியுள்ள மனிதனாய் இருந்தான். அப்படி இருந்ததினால் அந்த செல்வாக்கு (Influence) அந்த பிள்ளையின் பேரில் அமர்ந்து சரியானதை நடக்கும்படி செய்தது. 27. நான் உங்களுக்குச் சொல்லுவேன். நான் நினைக்கிறேன் இன்றைக்கு தேசமுழுவதுமாக இளம் பிள்ளைகளின் குற்றங்கள் அவ்வளவு அதிகமாய் இருக்கிறது. ஆனால், உண்மையாக, நான் நினைக்கிறேன். அது வீட்டில்தான் துவங்கி இருக்க வேண்டும் என்று. பெற்றோர்கள் அதை அப்படியே விட்டு விட்டிருப்பார்களென்று நான் நினைக்கிறேன். அந்த பிள்ளை மட்டும், ஒரு நல்ல, பழையவிதமான, தெய்வீக வீடாய் இருக்குமாயின், நான் தேச முழுவதுமாக என்று சொல்ல மாட்டேன். நிச்சயமாக இல்லை. ஆனால் அது அந்த பிள்ளைக்கு சரியான விதமான செல்வாக்கை கொடுத்திருக்கும். நான் நினைக்கிறேன். அநேக நேரங்களில் வீடுகளில் தான் பிள்ளைகளை தவறாக வளர்க்கிறார்கள். தங்களிஷ்டப்படி வீதியில் திரிய விடுகிறார்கள். அவர்களுடைய தாயானவள் அல்லது தகப்பன் மது அருந்தும் கடையில் இருக்கும்போது, அந்த பிள்ளை தன்னைத் தானே நடத்திக் கொள்ளுகிறது. இந்த பிள்ளையைக் குறித்து அக்கரை எடுப்பது கிடையாது. இன்னொரு காரியம், அந்த பிள்ளையை எடுத்து அதை நேசிப்பது கிடையாது. அதனிடம் பாசங்காட்டுவதில்லை. அது வாலிபமாய் இருக்கிறது. நேசமும் மரியாதையும், அதற்கு சொல்லித்தர வேண்டும். வேதம் வாசிக்க சொல்லிதர வேண்டும். 28. சூசன் வெஸ்லியைக் குறித்து நினைக்கிறேன். அவளுக்கு 17 பிள்ளைகளென்று நினைக்கிறேன். அது சரியென்று நினைக்கிறேன். ஆனால் அவள் இரண்டு அல்லது அதிகமான மணி நேரம் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க நேரம் உண்டாக்கிக் கொண்டாள். அவளுடைய சின்ன ஆடையின் ஓரத்தை சுற்றிலும், அந்த பையன்கள் சுற்றிலும் முழங்காலில் இருந்தார்கள். அவர்களுக்குள்ளிருந்து உண்டாக்கப்பட்டது தான் ஒரு ஜானும் ஒரு சார்லசும். அவர்கள் தான் உலகத்தின் போக்கை மாற்றி, அந்த நாளில் உலகத்தை இரட்சிப்புக்குள் ஆக்கினவர்கள். அவளுக்கு ஆடைகளை துவைக்கவும், உலர வைக்கவும் இயந்திரங்கள் உண்டாயிருந்ததில்லை. இன்றைக்கு நமக்கு இருப்பது போன்று பாத்திரங்கள் கழுவ இயந்திரம், இன்னும் மற்றவைகள், ஒரு வேலைக்காரி அவளுக்கு இல்லை. அவளாகவே தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியவளாய் இருந்தாள். இருந்தாள். இருந்தபோதிலும் அவளுக்கு நேரம் இருந்தது. ஏனென்றால் சில பிள்ளைகளின் மேல் அவளுடைய ஜீவியத்தின் செல்வாக்கானது இருந்தது. அது முடிவிலே உலகத்தின் போக்கையே மாற்றி விட்டது. நான் நினைக்கிறேன் அதுதான் பழங்காலத்து தாய், பழங்காலத்து வீடு, ஜெபமும் வேதத்தை அறிந்து கொள்ளுதலும் அங்கே இருந்தது. 29. நான் நினைக்கிறேன், ஆபிரகாம் லிங்கென், தன்னுடைய பருவம் வரும் வரைக்கும் தனக்கே சொந்தமாக ஒரு புத்தகத்தை யும் உடையவனாயில்லை. ஆனால் வேத புத்தகமும், பாக்ஸின் இரத்த காட்சிகளின் புத்தகம் (Foxe's books of Mantrys) என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை..... மோட்சயாத்திரை (Pilgrim progress) புத்தகம் என்று நினைக்கிறேன். அதையும் வேதாகமத்தையும் (Pilgrim progress) உடையவராயிருந்தார். பாருங்கள் அது எந்தவிதமான குணவானை உருவாக்கிற்றென்று. 30. நான் திடீரென்று உங்கள் வீட்டுக்குள் வந்து நீங்கள் எந்தவிதமான படங்களை உங்கள் வீட்டு சுவரில் மாட்டியிருக்கிறீர்கள் என்று நான் பார்க்கட்டும். நான் உங்களை வீடுகளுக்கோ அல்லது அலுவலங்களுக்கோ போய் எந்தவிதமான இன்னிசையை கேட்கிறீர்கள் என்று பார்க்கட்டும். புரிகின்றதா? நீங்கள் என்ன படிக்கின்றீர்கள், நீங்கள் எதை நோக்கிப் பார்க்கிறீர்கள், இதைக் கொண்டு உனக்குள்ளாக என்ன இருக்கின்றது என்பதை என்னால் சொல்ல முடியும், ஏனென்றால் இவைகளால் தான் அது போஷிக்கப் படுகின்றது. புரிகின்றதா? நாம் மட்டும் நம்முடைய வீடுகளை சற்று நன்றாக வைத்துக் கொள்வாவோமானால் நம்முடைய பிள்ளைகள் ஓடிப் போக விரும்ப மாட்டார்கள். காரியங்களை அவர்களுக்காக அதிகமாக்குங்கள், அவர்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு வீடாய் இருக்கும்படியாய் ஒரு நல்ல வசதியான வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் எப்பொழுது வீட்டிற்கு போவோம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த விதமாகத்தான் ஒரு வீடு இருக்க வேண்டும். 31. அவ்விதமான ஒரு வீட்டினில் தான் உசியா வளர்க்கப் பட்டிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். தெய்வ பயமுள்ள பெற்றோர்களுடைய ஜீவிய செல்வாக்கின் (Influence) காரணமாகத் தானிருக்கவேண்டும். அவன் இராஜாவாக ஆக்கப்பட்டவுடனே, எல்லா புகழ் கருத்துக்களை, அரசியல் வித்தியாசங்களையும் அவன் ஒதுக்கி விட்டு, அவனுடைய மனதை ஒரு காரியத்தின் மீது வைத்தான். அதாவது எப்படியாயிருந்தாலும் சரி, தேவனுக்கு சேவை செய்ய வேண்டும். இப்படிப்பட்டதான அரசியல்வாதிகள் பலர் நமக்கு தேவையாய் இருக்கிறது. தான் தேவனுக்கு சேவை செய்யப் போகிறேன் என்பதை அவன் தீர்மானித்தவனாய் இருந்தான். ஏனென்றால் அந்த விதமாகத்தான் அவன் வளர்க்கப் பட்டான். அவன் தேவனுக்கு சேவை செய்து ஜீவிக்கும்படியாக, அவனுடைய தகப்பனுடைய ஜீவியம் சரியானதொரு செல்வாக்கை (Right Influence) அவனுக்குக் கொடுத்தது. 32. அவனுடைய இராஜ்ஜியம் அவ்வளவு பெரிதாயிருந்தது, நான் நினைக்கிறேன் சாலமோனுக்கு அடுத்தபடியாக என்று, சாலமோனுடைய இராஜ்ஜியத்திற்கு அடுத்தபடியானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவன் அவனை எப்படியாய் ஆசீர்வதித்தார்! 33. அந்த வாலிப தீர்க்கதரிசியாகிய ஏசாயாவுக்கு இது ஒரு பெரிய ஜீவிய செல்வாக்காக (Influence) இருந்தது. அப்படிப் பட்டதான நேரத்தில் ஏசாயா தேவாலயத்தில் அல்லது அந்த தேசத்தில் இருந்தான். சரியான ஒரு முடிவை எடுத்த, சரியான காரியத்தை செய்த, சரியான காரணமும் சரியான நோக்கமும் கொண்ட ஒரு மனிதனை தேவன் தேவன் எப்படி ஆசீர்வதிக்கிறார் என்பதனை காட்டும்படியான ஒருவனாய் அவன் காணப்பட்டான். 34. சரியான பலனை அது கொடுக்கவில்லையென்று சில நேரங்களில் நீங்கள் நினைக்கலாம். ஆனால் நிச்சயமாக அது பலனை கொடுக்கின்றது. நீங்கள் கிழக்காகவும் மேற்காவும் ஒரே நேரத்தில் போக முடியாது. நீ இடது பக்கமாகவும் வலது பக்கமாகவும் ஒரே நேரத்தில் போக முடியாது. அந்த வழியாக போய்க் கொண்டிருக்கிறேன் என்று ஒரு வேளை நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் அப்படி போகவில்லை. ஆகவே நீங்கள் உங்கள் மனதையும், கண்களையும், காரணங்களையும், நோக்கங்களையும் உங்கள் ஜீவியத்தில் சரியான காரியத்தில் வைப்பீர்களானால், நீங்கள் சரியான காரியத்தோடு வெளி வருவீர்கள். நீங்கள் தவறி போகமுடியாது. புரிகின்றதா? அந்த ஒரே வழிதான். இன்னொரு வழியாக அதை செய்யும்படியாக நீங்கள் எவ்வளவுதான் தூண்டப்பட்டாலும், உன்னுடைய தலையை அந்த பக்கத்தினின்று திருப்பிக் கொண்டு சரியானது எதுவோ அதை செய்யுங்கள். நீங்கள் செய்கிறது சரி என்று அறிந்திருக்கிறீர்கள்; நீங்கள் மேலானதாய் உணருவீர்கள், நீங்கள் மேலாய்தான் இருக்கிறீர்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதுவே நீங்கள் சரியானதாய் வெளி வருவீர்கள். நீங்கள் மேற்கு பக்கமாக போக ஆரம்பிக்கும் போது, நீங்கள் வடக்கு பக்கமாக போய்க் கொண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் மேற்கு பக்கமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். அதே விதமாகத்தான் இருக்கின்றது, சரியானதும், தவறானதும். 35. ஏசாயா இதைக் கண்டான். தேவன் அவனை ஆசீர்வதித்ததை அவன் கண்டான். சுற்றிலுமுள்ள தேசங்களிலெல்லாம் எகிப்திற்கும் அவனுடைய கீர்த்தி சென்றுவிட்டது. தேசங்கள் யாவும் அவனோடு யுத்தம் வேண்டாம் என்று எப்படி சொன்னது, ஏனென்றால் அவர்கள் தேவன் அவனோடு கூட இருக்கின்றதை கண்டார்கள். அவனுக்கு சமாதான காணிக்கைகளை, ஆட்டுமந்தைகள் முதலான காரியங்களை அவனுக்கு அனுப்பினார்கள். சமாதானம் உண்டாயிருப்பதற்காக அதை அவனுக்குக் கொடுத்தார்கள். அவனும் ஒரு நல்ல மனிதனாய் இருந்தான். 36. ஒரு தேசமோ அல்லது ஜனமோ, அல்லது ஒரு சபையோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரோ, எவ்வளவுதான் குறை கூறினாலும், நீங்கள் மட்டும் சரியான காரியத்தைச் செய்வீர்களேயானால், உங்களை நிச்சயமாய் மதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் உங்கள் பேரில் மரியாதை இருக்கும். அது உண்மை என்பதை நான் கண்டறிந்தேன் புரிகின்றதா? உத்தமமாயும் நேர்மையாயும் இரு. ஜனங்கள் உனக்கு மரியாதை செலுத்துவார்கள். அவர்கள் தவறாக இருந்தாலும், அவர்கள் இன்னமும் உனக்கு மரியாதைக் கொடுப்பார்கள், ஏனெனில் அவர்கள் வெறும் மானிடர் தானே. நாம் யாவரும் மானிடர்தான், தவறு என்றும் சரியானது என்றும் ஒன்று உண்டு என்று நாம் யாவரும் அறிந்துள்ளோம்' நாம் அதை எடுக்கத்தான் வேண்டும். 37. உசியாவிற்கு இப்படிப்பட்டதான தரம் இருந்தது. செல்வாக்காய் அவன் ஜீவியம் மற்றவர்களுக்கு ஒரு பெரிய (influence) இருந்தது போன்று ஏசாயா தீர்க்கதரிசிக்கு இருந்தது, 38. பின்பு, அந்த உசியா பிரதான ஆபத்தான ஒரு தவறை அவன் செய்தான், மற்றும் அநேகர் செய்தது போன்றே. சகலமும் பாதுகாப்பிற்குள் இருக்கிறது என்ற உணர்வு வந்தபோது, அந்த சகல காரியங்களும் நிலைக்குள்ளான போது அவனுடைய கரத்திற்குள் இருக்கின்றது என்ற உணர்வு அவனுக்கு வந்தபோது, அவன் தன்னுடைய ஆவியில் மேட்டிமை, பெருமிதங் கொண்டான். மேட்டிமை படும்படியாக அவன் உயர்த்தினான். தன்னை இப்பொழுது இங்கே நம் யாவருக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு இருக்கின்றது. 39. அதுதான் தொந்தரவாக ஆயிற்று என்று நீங்கள் அறிவீர்கள். நான் கிறிஸ்தவர்களிடத்தும் ஊழியக்காரர்களிடத்தும் பேசிக் கொண்டிருக்கிறேன், இந்த காரியங்களைக் குறித்து நான் உண்மையாய் இருக்க விரும்புகிறேன். இங்கே தான் அநேக ஊழியக்காரர்களும் கூட தவறு செய்கிறார்கள். இந்த ஊழியக்காரர்களைக் குறித்தும், அவர்களுடைய நடவடிக்கைகளைக் குறித்தும், மற்ற காரியங்களைக் குறித்தும் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஒரு வேளை அவர்களில் சிலர், தாங்கள் செய்யக்கூடாத காரியங்களையும் செய்துக் கொண்டிருக்கலாம். சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு, அவர்கள் நல்ல மனிதர்களும், அற்புதமான கர்த்தரால் கிறிஸ்தவர்களும், எடுத்து உபயோகப்படுத்தப் பட்டவர்களுமாய் இருக்கிறார்கள். முடிவிலே அவர்கள் தங்களை சுற்றிலும் ஒரு இராஜ்ஜியத்தை கட்டிக்கொண்டு அல்லது அதிகமான வரவேற்ப்பை பெற்றவர்களாய் அநேக ஜனங்கள் அவர்களுடைய கூட்டங்களுக்கு போகிறவர்களாய் இருப்பார்கள். இந்நிலையில் அவர்கள் கவலையீனமாகி ஒரு விதமாக மேட்டிமையடைகின்றனர். ஜனங்கள் கைகளை தட்டி, எழும்பி நின்று அவர்களை புகழுதல்-நாம் உண்மையாக அப்படி செய்யக் கூடாது. 40. நமது மத்தியில் பெரிய மனிதன் என்று யாருமில்லை. நாம் யாவரும் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். பாருங்கள் தேவன் நம்மில் சிலரை ஒரு மாதிரியாகவும், சிலரை வேறு விதமாகவும் அப்படியா உண்டாக்கி இருக்கிறார். ஏன், அவர் என்னை விரலோடும் கண்ணோடும் மற்றவைகளோடும் உண்டாக்கினார். சரி, நாம் ஒருவரையொருவர் தெளிவாய் உணர்ந்தவர்களாய் இருக்க வேண்டும். நம்மை பெரியதாய் நினைத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் நாம் யாவரும் ஒரே தேவனிடத்தில்தான் இணைக்கப் பட்டிருக்கிறோம். நாம் யாவரும் ஒரே மரத்தினின்று வெளி வந்தவர்களாய் இருக்கிறோம். புரிகின்றதா? 41. அநேக நேரங்களில் நாம் பார்க்கிறோம், ஊழியக்காரர்கள் தங்களுக்கு எல்லாம் பாதுகாவலாயிருக்கிறது என்ற உணர்வுக்கு வந்து தொடர்ந்து நடத்திக் கொண்டு வரும்போது, முதலாவது நாம் அறிகின்ற காரியம் என்னவென்றால், அவர்கள் செய்யக் கூடாத காரியத்தை செய்வார்கள். அநேக நேரங்களில் நாம் யாவரும் அறிவோம், நீதிமானும் நல்லவனுமான மனிதர்கள் அவ்விதமான நிலைக்கு வந்து, அநேக சமுக சம்மந்தமான காரியங்களில் அவர்கள் கலந்துக் கொண்டு, ஒரு சிறு மதுவை ஒவ்வொரு பொழுது சாப்பிட்டு உலகத்தோடு சிக்கிக் கொள்வார்கள். நான் நினைக்கிறேன், இந்நாட்களில் நம்முடைய சபைகளில்கூட காரியம் அதுதான். நம்முடைய பெந்தேகோஸ்தே அசைவோடும்கூட காரியம் இப்படிதான் இருக்கின்றது என்று நான் நினைக்கிறேன். 42. முதலாவதாக, நான் இதை தெளிவாய் சொல்லட்டும் புரிகின்றதா? பெந்தேகோஸ்தே சபையை குறித்து நான் சொல்ல நீங்கள் கேட்டீர்கள். நான் ஒரு பெந்தேகோஸ்தே. ஆனால் இங்கே, ஒரு வேளை இன்றிரவு இந்த நியூயார்க்கில் பெந்தேகோஸ்தே ஜனங்களே இல்லையென்றால், நான் இந்த செய்தியை யாரிடத்தில் போய் பிரசங்கிப்பேன். புரிகின்றதா? பெந்தேகோஸ்தே ஜனங்களை நான் பாராட்டுகின்றேன். அவர்கள் என்னுடைய சகோதரர்களும் சகோதரிகளுமாய் இருக்கிறார்கள். 43. ஆனால் இருந்தபோதிலும் என்னுடைய சகோதரனிடத்தில் என் பிள்ளையிடத்தில் அல்லது என் மனைவியிடத்தில் அல்லது எதுவாயிருந்தாலும் நான் ஏதாவது தவறைக் காணும் போது, சரியானது சரியானது தான். ஒரு சரியான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை திருத்துவார்கள். 44. நான் நினைக்கிறேன் இன்றைக்கு நம்முடைய சபைகளினுடே இருக்கின்ற தவறு என்னவென்றால், நாம் மற்றவர்களை போன்று அதிகமாக இருக்க பிரயாசிக்கின்றோம். புரிகின்றதா? நாம் வேறு யாரோ ஒருவரை போன்று நடிக்க பிரயாசிக்கிறோம். நாம் அவர்களுடைய வழக்கங்களை எடுக்க ஆரம்பிக்கின்றோம். 45. ஆரம்ப நாட்களிலே பெந்தேகோஸ்தே ஜனங்கள் எப்படி இருந்தார்கள் என்பது எனக்கு ஞாபகமில்லை. அவர்கள் அநேக வருடங்களுக்கு முன்னர் என்பது உண்மைதான். அவர்களுடைய கடைசி அசைவு அசுசா வீதியிலிருந்து தான். ஆனால் நான் அதனுடைய சரித்திரத்தை எடுத்தேன். நான் அநேக புத்தகங்களை படித்தேன், அவர்களுடைய அந்நாட்களின் மனிதர்கள் சிலரிடம் பேசி இருக்கிறேன். லூசியானாவிலுள்ள ஷிரிவோ போர்டிலுள்ள ஒருவரிடம் ஒரு சந்திப்பு இப்பொழுது ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அவர் இப்பொழுது அங்கிருப்பார். அவர்தான் அசுசா வீதியில் முதல் நபர். இந்த தேசத்தில் அதுதான் பெந்தேகோஸ்தின் ஆரம்பமாயிருந்தது, ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்னர் என்று நான் நினைக்கிறேன். லாஸ் ஏன்ஜெல்ஸிலுள்ள ஆங்குலஸ் தேவாலயம், மக் பெர்ஸன் தேவாலயத்தில் 50வது ஆண்டு கூட்டத்தில் பேசினேன். பெந்தேகோஸ்தினரின் 50வது ஆண்டு பொன் விழாவில் பிரசங்கித்தேன். 46. ஆனால் அது முதற்கொண்டு, சபைக்குள்ளாக அநேக சிறு காரியங்கள் ஊர்ந்து உள்ளுக்குள் வந்தன, ஏனென்றால் சபையானது ஒவ்வொரு நாளும் உலகத்தோடு தோள்கள் உராயப்பட வேண்டியதாயிருந்தது. மீண்டும் இதே காரியத்திற்கு வருகிறேன் என்றல்ல. பாருங்கள் என்னுடைய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்குமே. அநேக முறைகள், அநேக வருஷங்களுக்கு முன்னர் நான் அன்றிரவு சொன்னது போன்று, சகோதரிகள் தலைமயிரை வெட்டிக்கொள்வது தவறாக இருந்தது. அது ஒரு பெந்தேகோஸ்தே காரியமாயிருந்தது. அவர்கள் அது போன்ற காரியங்களை செய்யக் கூடாது. இப்பொழுது, ஆனால் அது என்ன? நாம் நம்முடைய தேசத்தின் பல பாகங்களுக்கு செல்வோமானால், நம்முடைய பெந்தேகோஸ்தே சகோதரிகள் பிரபல்யமான மயிர் வெட்டி கொள்ளுதல், வாடர்-எட் முடிவெட்டு (Water head haircuts) போன்று வெட்டிக் கொண்டிருக்கின்றதைக் காணலாம். நீங்கள் அவர்களுக்கு அதைக் குறித்துச் சொல்லலாம். அவர்கள் அழகு சாதனங்களை (Make-up) உபயோகிக்கின்றனர். அவர்கள் ஆண்களை போன்று ஆடைகளை அணிகின்றனர். 47. "இப்பொழுது சகோ. பிரன்ஹாம், நீர் பெண்களை குற்றம் பிடிக்கிறீர்" என்று சொல்லலாம். 48. இப்பொழுது ஒரு நிமிஷம் இருங்கள் நான் ஆண்களை பிடிக்கிறேன். அவளை அந்த விதமாய் செய்ய அனுமதிக்கின்ற சகோதரன், அவன் தன் வீட்டின் மேல் அதிகாரியல்ல புரிகின்றதா? புரிகின்றதா? புரிகின்றதா? 49. நீங்கள் அப்படி செய்யக்கூடாது. ஆனால் அது என்ன? நாம் மற்றவர்களோடு தோளோடு தோள் உராய்கிறோம், குருமார்கள் பள்ளியிலிருந்தோ ஏதோ ஒரு பெலவீனமானது உள்ளே வந்திருக்கின்றது, அதை குறித்து வித்தியாசமான கருத்தை உடையதாயிருக்கிறது. ஆனால் பரிபூரண உதாரணம் ஒன்று இருக்கின்றது, அது என்னவென்றால், வேதத்திற்கு திரும்புவது. வேதம் அதை குறை கூறுகிறது பாருங்கள். அது சரியல்ல. 50. பின்பு நாம் மற்ற காரியங்களை பார்க்கிறோம். உங்களுக்கு தெரியுமா. ஹோலினஸ் கூட்டத்தாருக்கு பயாஸ்கோப், சினிமா படம் போவது தவறாக இருந்தது. இப்பொழுதோ, அவர்கள் எல்லா நேரத்திலும் போகிறார்கள். புரிகின்றதா? பின்பு, சாத்தான் ஒரு காரியத்தை துரிதமாய் செய்தான். அதாவது நேராக உங்களுடைய வீடுகளிலேயே டெலிவிஷனைக் கொண்டு வைத்தான், பாருங்கள், அதை அங்கேயே கொண்டு வந்து பதித்து விட்டான். ஆனால் இப்படிப்பட்டதான காரியங்கள் எல்லாம் தவறானவைகளாய் உபயோகப் படுத்தப்படுகிறது. 51. சரி, அது என்ன? பாருங்கள், அது கொஞ்ச கொஞ்சமாய் தொடர்ந்து வருகிறது. நீங்கள் அறிந்த முதல் காரியம் என்னவென்றால், அது வெறுமனே உன்னை பிடித்து விட்டது. அது உன்னை சுற்றிக் கொண்டு வளருகின்ற ஒரு கொடியை போன்றது. நீங்கள் அந்த கொடியை அப்புறப்படுத்தி இயேசு உங்களை சுற்றிக் கொள்ளும்படியாய், வார்த்தை உங்களை சுற்றிக் கொள்ளுபடியாய் அதனோடு கூட இருங்கள். அப்பொழுது பாருங்கள் நீங்கள் நேராய் வளருவீர்கள். அது கோணலானது. அது உங்களை பாதையினின்று வெளியே இழுத்து விடும். கிறிஸ்து உங்களை மேலாக இழுக்கிறார். அது உன்னை பக்கவாட்டில் இழுக்கிறது. 52. பின்பு, நீங்கள் ஒரு ஸ்திரீ அல்லது ஒரு ஊழியக்காரனின் மனைவி அல்லது ஒரு ஊழியக்காரன் ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்யக் காணும் போது அவனுடைய முழு சபையும் “சரி எங்கள் போதகர் அப்படி செய்கிறார். போதகரின் மனைவி இப்படி செய்கிறாள். நாங்கள் ஏன் இதை செய்யக் கூடாது?" என்பார்கள். பாருங்கள். நீங்கள் வேறு ஒருவரை ஆண்டுக் கொள்ளும் செல்வாக்காய் (Influence) அவர்களை சரியான பாதையில் நடத்தவும், சரியான காரியங்களை செய்யவும் ஏவுகிறீர்கள். 53. நீங்கள் அதிகமாக மேட்டிமையடையும் போது, அந் நேரமே நீங்கள் கீழ்நோக்கிப் போகும் பாதையில் இருக்கிறீர்கள் என்று நாம் கண்டறிந்தோம். பாருங்கள், நீங்கள் மேட்டிமையடையும் போது. 54. இந்த உசியா இராஜா மேட்டிமையடைந்தான். ஏனென்றால், எல்லாம் பாதுகாவலாய், அவனை சுற்றிலுமுள்ள எல்லா காரியங்களும் சௌக்கியமாய் இருந்தது. என்று நாம் பார்க்கிறோம். அவனுக்கு ஒரு தேசம் இருந்தது. எல்லா தேவைகளும் சந்திக்கப்பட்டன. தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார். அவனுக்கு பெரிய திராட்சைத் தோட்டங்களிருந்தன. ஆட்டு மந்தைகளும், சுரங்கங்களும், எல்லா ஆஸ்தியுமுடையவனா யிருந்தான். எல்லா தேசங்களும் அவனோடு சமாதானமாயிருந்தது. தான் விரும்புகின்ற எதையும் செய்யலாம் என்கின்ற அளவிற்கு அவன் மேட்டிமையடைந்திருந்தான். பெருமையடைந்திருந்தான் 55. ஒரு ஊழியக்காரனின் ஸ்தானத்தை தான் எடுத்துக் அவன் கொள்ளும் அளவிற்கு அவன் மேட்டிமையடைந்தான். அவன் தேவாலயத்திற்குள் பிரவேசித்து தூபகலசத்தை எடுத்துக் கொண்டு பலிபீடத்தண்டைக்கு சென்றான். அவன் அப்படிச் செய்தபோது, ஆசாரியன் அவன் பின்னாக ஓடி, அதை அவன் செய்யக்கூடாது என்று அவனுக்குச் சொன்னான். அவன் அப்படி திருத்தப்பட்டப்போது, எவ்வளவு தாழ்மையாய் இருக்க வேண்டுமோ அவ்வளவு தாழ்மையாய் இருக்கவில்லை. அவன் மேட்டிமையடைவதற்கு முன்பாக இருந்திருக்குமாயின் "அது சரிதான், நான் அதை செய்ய எனக்கு உரிமையில்லை" என்று சொல்லி தூபகலசத்தை கீழே வைத்திருப்பான் அல்லது அந்த ஊழியத்தை செய்யும்படியாக நியமிக்கப்பட்ட ஆரோனின் வழியாக வந்த ஆசாரியனிடத்தில் கொடுத்திருந்திருப்பான். 56. இந்த முழு சுவிசேஷ வர்த்தகர்களோடு நான் அதிகம் இங்கே பிரயாணம் செய்திருக்கிறேன். அவர்களில் அநேகர் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களுடைய காலை ஆகார கூட்டங்களில் சனிக்கிழமை ஞாயிற்றுகிழமை காலையில் எங்கோ, பேச வேண்டியிருப்பதால், எங்கே? ஸ்டாட்லர் ஹோட்டல் (Statler Hotel) என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ஏற்கெனவே 1700 சீட்டுகளை அந்த காலை ஆகாரத்திற்காக விற்று விட்டதாக என்னிடம் சொன்னார்கள். 57. சில நாட்களுக்கு முன்பு, நான் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் அந்த வியாபாரிகளை மேடையில் ஏற்றி அவர்களுடைய கருத்துக்களை எடுத்து சுவிசேஷத்தை பிரசங்கிக்கிறார்கள். "அது தவறு'' என்று நான் சொன்னேன். அது நிச்சயமாக தவறுதான். அதிலே தொடர்ந்து, அவர்கள் சொல்வதை வார்த்தையின்படியாய் சரியாக இருக்க வைக்க எங்களைப் போன்ற பிரசங்கிமார்களுக்கு கடினமாயிருக்கும். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய நியமிக்கப்படாத வியாபாரிகளை தங்களுடைய கருத்துக்களை கொண்டு வருவது போன்ற காரியங்களை தவிர்க்க விடுங்கள். "நீங்கள் அதை செய்யக்கூடாது" என்று நான் சொன்னேன். 58. இன்னொருவனுடைய ஸ்தானத்தை எடுக்க ஒருபோதும் பிரயாசியாதே. தேவன் உன்னை ஒரு விதமாக உண்டாக்கியிருக்கிறார், அவ்விதமாகவே நீ இரு. நிச்சயமாக, நீ எந்தவிதமாக இருக்கின்றாயோ அவ்விதமாகவே இரு. இன்னொருவனைப் போன்றவாறு இருக்க பிரயாசியாதே. தேவன் உலகத்திற்கு அனுப்புகின்ற வரங்களை அதுதான் பாழாக்குகிறது. நாம் அநேக மாமிச போலிகளை பார்க்கிறோம். இன்னொருவனை பார்த்து அதே மாதிரியாக பாவனைச் செய்கிறவர்களை நாம் பார்க்கிறோம். 59. ஸ்திரீ ஊழியக்காரிகளைப் பார்த்து சொன்னது போன்று திருமதி மக்பெர்ஸன் (Mcpherson) ஜீவித்துக் கொண்டிருக்கும் போது, அவள் அணிந்தது போன்று எல்லா ஸ்திரீ ஊழியர்களும் அந்த இறைக்கைகளை போன்று அணிந்தனர். அல்லது அது எதுவாயிருந்தாலும் சரி. அவர்களுடைய வேதங்களை அவள் வைத்திருந்த விதமாகவே வைத்திருந்தார்கள். அவள் செய்த எல்லாக் காரியங்களையும் இவர்கள் செய்தார்கள். 60. இன்றைக்கு நமக்கு அநேக பில்லிகிரஹாம்கள் இருக்கின்றதை நாம் கவனிக்கிறோம். ஆனால் நீங்கள் பாருங்கள். தேவன் ஒரே ஒரு பில்லிகிரஹாமை தான் உண்டாக்கினார். அவ்வளவுதான். 61. பில்லிகிரஹாம், ஒரல் ராபர்ட்ஸ் அல்லது அந்த புகழ் பெற்ற மனிதர்களில் ஒருவரை போன்று தான் நீங்களும் அவ்வளவு முக்கியமானவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் ஸ்தானத்தை விட்டு விலகி போகும் வரைக்கும், நீங்களும் அவ்வளவு முக்கியமானவர்களாய் தான் இருக்கிறீர்கள். அதற்கு பின்பு, ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவனாகின்றாய், நீங்கள் இந்த மனிதர்களுக்கு ஒரு தடங்கலாய் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கும் தேவனுடைய இராஜியத்திற்கும் தடையாயிருக்கிறீர்கள். உங்களுடைய ஸ்தானத்தில் தரித்திருங்கள். புரிகின்றதா? தேவன் உண்டாக்கின விதமாய் அப்படியே இருங்கள். பாருங்கள், அப்பொழுது நீங்கள் சரியான விதமாய் கிரியை செய்வீர்கள். 62. பவுல் சொன்னது போன்று, அது ஒன்றும் புதிதானதல்ல, பவுல் அதே காரியத்தை கையானது கண்ணைப் பார்த்து, நான் கண்ணாயிராதபடியினால் அல்லது காதானது மூக்கைப் பார்த்து, நான் இனி காதாய் இருக்க மாட்டேன். ஏனென்றால் நான் மூக்கல்ல" என்று போதித்து சொன்னான். உங்களால் அப்படி செய்ய முடியாது. பாருங்கள், இவைகளெல்லாம் இசைவாய் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரே சாதனமாய் இயங்குகிறது. 63. நாம் இன்னொருவரைப் போன்று பாவனைச் செய்ய முயற்சிக்கக் கூடாது. நீங்கள் என்னவோ அப்படியே இருங்கள். அந்த விதமாகத்தான் தேவன் உங்களை உண்டு பண்ணியிருக்கிறார். நீங்களாகவே உங்களை இவ்விதமாய் உண்டாக்கிக் கொள்ளவில்லை. நினைவிருக்கட்டும், ஊழியக்காரர்களாகிய நாங்கள் எவ்வளவுதான் பில்லிகிரஹாமுடைய ஸ்தானத்தை எடுக்க விரும்பினாலும், நம்மாலும் அதை செய்ய முடியாது, பில்லிகிரஹாமும் நம்முடைய ஸ்தானத்தை எடுக்க முடியாது. பாருங்கள், ஒவ்வொருவராக, நாமும், செய்யவேண்டிய ஏதோ இருக்கிறது. ஒரு சாதாரண சிறு மனிதன், ஒரு வேளை இக்கட்டிட பொறுப்பாளனாய் இருக்கலாம். அந்த சிறு ஸ்திரீ ஒரு வீட்டில் இருக்கும் மனைவியாயிருக்கலாம். இன்றைக்கு இந்த பூமியின் மேலிருக்கும் மகா பெரிய ஊழியக்காரனாயிருந்தாலும் சரி, உன்னுடைய ஸ்தானத்தை எடுக்க முடியாது. நீங்கள் இருக்கின்றவிதமாய் உங்களை உருவாக்கினதில் தேவன் ஒரு நோக்கத்தை உடையவராய் இருக்கிறார். தேவன் உன்னை உண்டாக்கின விதத்தில் நீங்கள் அவருக்கு சேவை செய்யுங்கள். புரிகின்றதா. நான் நினைக்கிறேன். நாம் மட்டும் அந்த விதமாகச் செய்வோமானால், சக்கரமானது மிகவும் சுலபமாக சுழலும், ஆம், மேட்டியடைந்தவர்களாய் இல்லாமல், நாம் மட்டும் அதை செய்வோமானால் அப்படியே ஆகும். 64. யாரோ, யாருக்கோ ஏதோ காரியத்தை வேத பிரகாரமாக சொல்லும் போது. நாம் அது சரியென்று அறிந்து, நம்மை தாழ்த்தி “நான் தவறாய் தான் இருந்தேன். நீங்கள் என்னை மன்னியுங்கள். அந்த விதமாய் நான் நினைக்கவில்லை. எனக்கு அது தெரியாது. ஆகவே நான் அதை செய்வதை நிறுத்தி விடுகிறேன்' என்று சொல். அப்படி செய்வதற்கு பதிலாக அநேக நேரங்களில் நாம் உசியா செய்தது போன்று செய்கிறோம். அவனை தடை செய்வதற்கு அவன் தன்னை மிகவும் பெரியவனென்று நினைத்துக் கொண்டான். பாருங்கள் அவன் இராஜாவாயிருந்தான். வார்த்தை இதைதான் சொல்லுகிறது, சத்தியம் என்று கூட ஊழியக்காரனை பார்த்து சொல்ல கூடாதபடிக்கு தாங்கள் அதிக முக்கியமானவர்கள் என்று தங்களை அவ்விதமாய் நினைத்துக் கொள்ளுகின்றனர். அந்த விதமான ஊழியக்காரர்களை நான் அநேக நேரங்களில் கண்டிருக்கிறேன். "அற்புதங்களின் நாட்கள் கடந்து போயிற்றா" 65. தேவன் அற்புதங்களை எங்கே நியமித்திருக்கிறார் என்று என்னால் காட்ட முடியும். அவர் எப்பொழுது அதை எடுத்துப் போட்டார் என்று உங்களால் எனக்குச் சொல்ல முடியாது. புரிகின்றதா? அவர் வரங்களை நியமித்தார். அவர் அதை எடுத்துப் போட்டார் என்பதை உங்களால் ஒரு போதும் காண முடியாது பாருங்கள் அது வேத வார்த்தைகளில் இருக்கின்றது. "நீங்கள் உலகமெங்கும் போய், சர்வசிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், எவ்வளவு காலம்?" எல்லா உலகத்திற்கும், எல்லா சிருஷ்டிகளும் கேள்விப்படுமட்டாய், அதனை கேட்கின்ற அத்தனை பேருக்கும் விசுவாசிக்கின்றவர்களை இந்த அடையாளங்கள் தொடர்ந்து வரும். பாருங்கள் - வேறு ஏதோ ஒன்றை அதற்கு ஈடாக வைக்க முடியாது. அவர் சொன்னதை அப்படியே எடுங்கள் அது சரியாயிருக்கும். நாம் நம்முடைய வழிகளை கையாள முயற்சிக்குமட்டாய், அது நன்றாய் கிரியைச் செய்யாது. 66. அங்கே தான் இஸ்ரவேலர்கள் தங்களுடைய மிகவும் (Rashel) மூடத்தனமான தவறை செய்தார்கள். எப்பொழுது. கிருபையானது அவர்களுக்கு ஒரு அக்கினி ஸ்தம்பத்தையும், தூதனையும், ஒரு பலியையும் கொடுத்து அவர்களை விடுவித்து, அவர்களுக்கொரு தீர்க்கதரிசியை அனுப்பியிருந்த போது, அவர்களை பின்தொடரவும், வழியில் தீர்க்கதரிசியை முன்னின்று ஒரு நடத்தவும் அக்கினி ஸ்தம்பத்தை அனுப்பியிருந்த போது அவர்கள் யாத்திராகமம் 19ம் அதிகாரத்திற்கு வந்த போது, கற்பனைக்கு பதிலாக அவர்கள் கிருபையை மாற்றிக் கொண்ட போது, அவர்கள் அந்த (Rashel) மூடத்தனமான தவறை ஒரு போதும் செய்யாத தவறை செய்தார்கள். புரிகின்றதா? ஆனால் தாங்களாகவே செய்யத்தக்கதான ஏதோ அவர்களுக்கு தேவையாயிருந்தது. 67. அந்த விதமாகத்தான் நாம் இருக்கிறோம். டாக்டர் பட்டம் நமக்கு இருக்கத்தான் வேண்டும் அப்படியானால் உன்னிடம் தகுதி இல்லை. நீங்கள் சபை காரியங்களுக்குள் போக முடியாது. அவ்வளவு தான். ஆகவே, நாம் அந்த காரியத்தை ஆராய்ந்து பார்த்து அது தேவனுடையதா இல்லையா என்று கண்டறிய வேண்டும். 68. உசியா அவ்வளவாய் மேட்டிமையடைந்தான், எப்படியிருந்த போதிலும் அவன் அதை செய்யத் தான் போகிறான் என்று கண்டறிந்தோம். அந்த தூப கலசத்தை படக்கென்று எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அந்த ஆசாரியர்கள் சொன்னக் காரியங்ளெல்லாம், அவனுக்கு ஒரு வித்தியாசத்தையும் கொண்டு வரவில்லை, எப்படியாயினும் அதை செய்யும்படியாய் உள் பிரவேசித்தான்! வேத வார்த்தைகளுக்கு அது முரணாயிருந்தது. அவன் அதை செய்வதும் வேத வார்த்தைகளின் படியாயில்லை. 69. நீயோ அல்லது நானோ இன்னொருவனைப் போன்று பாவனை செய்வது வேத வார்த்தையின்படியாய் இல்லை. அது சரி. ஆகவே நீ என்னவோ அப்படியே இரு. நீ நல்லவனாய் இரு. மற்றவர்கள் உன்னைக் காணும்படியாக உன்னுடைய நோக்கத்தை நிறைவேற்று. நீ ஒரு வீட்டிலிருக்கும் மனைவியாயின் உண்மையான ஒருவளாய் இரு. நீ ஒரு புருஷனாயின் உண்மையான புருஷனாய் இரு. புரிகின்றதா. நீ ஒரு சபை கண்காணியாயின் உண்மையானவாய் இரு. அல்லது ஒரு பிரசங்கியாயின், என்னவாயிருந்தாலும் உண்மையாய் இரு. ஆனால் இன்னொருவனின் ஸ்தானத்தை எடுக்காதே. 70. பின்பு வார்த்தை இந்த காரியத்தில் உன்னை நிராகரிக்கின்றதென்றால், நீ கடிந்துக் கொள்ளப்பட்டதாய் உணருவாயானால், அப்பொழுது மனந்திரும்பு. அவ்வளவு தான். அதாவது சரியாக்கிக் கொள். செய்வதற்குள்ள ஒரே ஒரு காரியம் அதுதான். 71. ஆனால் உசியா அந்த விதமாக செய்ய விரும்பவில்லை. அவனுக்கிருந்த வண்ணமாய் தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார். இருந்த போதிலும் அவ்விதமாக செய்யலாம் என்ற உணர்வு உண்டாகவேயில்லை. எப்படி இருந்தாலும் அவன் அதை செய்யத் தான் போகிறான் என்று அவன் நினைத்தான், ஏனென்றால் எல்லாம் அவனுக்கு இருந்தது. அந்த சமயத்தில் அவனுக்கு அவர்கள் பேரில் ஒரு விதமான கோபம் தான் உண்டானது. கர்த்தருடைய வார்த்தையை அவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தவர்கள் மீது கோபமூண்டது. 72. அவன் அப்படி செய்தபோது எப்படியாயினும், அதனை எடுத்துக் கொண்டு வேகமாய் உட்பிரவேசித்தான். அவனுடைய முகத்தில் குஷ்டரோகம் வந்தது என்று நாம் கண்டறிந்தோம். அவன் மரிக்குமட்டும் குஷ்டரோகியாயிருந்தான். இனி அவன் ஒரு போதும் தேவனுடைய வீட்டிற்குள் பிரவேசியாதபடியாயிற்று தேவனுடைய கரத்தை அவன் கண்ட பின்பும், தேவன் அவனுக்கு அவ்வளவு நல்லவராயிருந்தும், அவர் அவனுக்கு இருந்த அவ்வளவுக் காரியங்களையும் செய்திருந்தும், அந்த மனிதன் தனிமையாக்கப்பட்டு, குஷ்டரோகியாய் மரித்தான். 73. இப்பொழுது, நாம் அதை செய்யலாம். நாம் அநேக காரீயங்களைக் கண்டிருக்கிறோம், ஆனால் தேவன் நம் மேல் நியாயதீர்ப்பைக் கொண்டு வர ஒரு முடியாத பத்திரமான (Secure) நிலையில் இருக்கிறோம் என்று ஒரு போதும் நினைக்க வேண்டாம். புரிகின்றதா? 74. ஞாபகமிருக்கட்டும். வேறு ஒருவரையும் போன்று பாவனைச் செய்யாதே. நீ என்னவோ அப்படியே இரு. தேவன் உன்னை ஒரு பெந்தேகோஸ்தேவாக உண்டாக்கி இருப்பாரானால், நீ ஒரு உண்மையான பெந்தேகோஸ்தாய் இரு. அதை குறித்து வெட்கப்படாதே. நான் ஒரு மானிடவர்க்கமாய் இருப்பதற்கு வெட்கப்படவில்லை. நான் ஒரு அமெரிக்கனாக இருக்க வெட்கப்படவில்லை. ஒரு ஊழியக்காரனாயிருக்க நான் வெட்கப்படவில்லை. நான் பிரசங்கிக்கின்ற சுவிசேஷத்தை குறித்து நான் வெட்கப்படவில்லை. 75. அநேகர் நான் புத்திசுவாதீனமற்றவன் யென்று நினைக்கிறார்கள் என்று அறிவேன். சில வருஷங்களுக்கு முன்பாக மரித்த நீதிமானாகிய என் தாயாரும் கூட அப்படி நினைத்தார்கள். நான் முதலாவதாக பரிசுத்தாவியை பெற்ற போது, அதைக் குறித்து அறிந்தவர்கள் எங்கள் ஊரிலேயே ஒருவருமில்லை. நான் வெறுமனே ஒரு உள்ளூர் வாலிப பாப்டிஸ்ட் பிரசங்கியாய், 20 வயது உள்ளவனாயிருந்தேன். ஆனால் நான் பரிசுத்தாவியை பெற்ற போது என்னுடைய தாயார், இந்த பையனுக்கு மூளை கெட்டுபோயிற்று' என்று சொன்னாள். புரிகின்றதா? தாயார் அதை குறித்து என்ன நினைத்தாலும் அக்கரையில்லை. அந்த விலைமதிக்க முடியாத முத்தை நான் பெற்று விட்டேன். அவளுக்கு அந்த வண்ணமாய் தோன்றலாம். ஆனால் எனக்கோ அது அப்படியாயிருந்தது. அது நான் தேவனில் கண்ட ஒரு அசலான மூலப்பொருளாய் (Genuine) இருந்தது. 76. ஏனென்றால், நான் ஒரு சிறு பையனாயிருக்கும் போதே, இது கர்த்தருடைய வார்த்தை. அது ஒரு போதும் மாறாது என்று விசுவாசித்தேன். "வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் என்னுடைய வார்த்தையோ மாறாது. அவை ஒருபோதும் ஒழிந்து போகாது" என்று இயேசு சொன்னார். அதற்கு ஈடாக வேறு ஒன்றையும் வைக்க முடியாது, அது எழுதப்பட்ட விதமாகவே இருக்கிறது. அந்த விதமாகவே தான் நாம் விசுவாசிக்கின்றோம். அதனோடு ஒன்றையும் கூட்டவும் வேண்டாம். அல்லது அதிலிருந்து எடுக்கவும் வேண்டாம். உங்களுக்கு தெரியும். வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் ஒருவன் இவைகளோடு ஒரு வார்த்தையைக் கூட்டினாலும் அல்லது இதிலிருந்து இந்த புத்தகத்திலிருந்து எதையாவது எடுத்துப் போட்டாலும் (என்ன?) அவன் மேல் வாதைகள் விழும். என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அது இருக்கின்ற வண்ணமாக இருக்க விடுங்கள். அந்த வண்ணமாக அதை விசுவாசியுங்கள். தேவன் அதை கனப்படுத்துவார். 77. இப்பொழுது, அவன் அடிக்கப்பட்டான். ஏனென்றால் அவன் பெருமையில் தன்னை அதிகமாய் உயர்த்தினான். தான் ஒரே ஒருவன் தான் இருக்கிறேன் என்ற உணர்வு, தான் என்ன விரும்புகின்றானோ அதை செய்வேன். ஒருவராலும் என்னை தடைச் செய்ய முடியாது என்ற உணர்வுக்குள் வந்து விட்டான். 78. நம்மிடம் ஒரு சகோதரன் இருந்தான். அதிக நாட்களுக்கு முன்பல்ல; அவனுக்காக நான் மிகவும் வருத்தப் பட்டேன். பார்க்கப் போனால் எல்லாருமே அவன் மேல் குறை கூறினார்கள். அவன் ஏதோ தவறானதை செய்கிறான் என்று எல்லோரும் குறை கூறினர். பத்திரிகைகளும் அதை குறையாக கூறினது. ஆனால் நான் அந்த மனிதனை குறை கூறினதைக் குறித்து சிந்திக்கலானேன். நான் உண்மையாகவே அவனுக்காக பேசினேன். நான் அவனோடு ஒத்துப் போகவில்லை. ஆனால் அதை எழுதி பத்திரிகையில் வெளியிட்ட அந்த மனிதன், அதில் இந்த மனிதன் தான் இந்த எல்லா வித்தியாசமான காரியங்களையும் சொன்னதாகவும், இவைகளை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தான். 79. ஒரு நாள் இரவு மினியோ போலிஸ் கூட்டத்தில் அந்த பத்திரிகையின் எழுத்தாளன் வந்திருப்பதாக எனக்கு அறிவிக்கப் பட்டது. கிறிஸ்தவ பத்திரிகையில் (Christian Magazine) இப்பொழுது தான் அது வெளியாயிற்று. அந்த மனிதனை அவர்கள் சுட்டிக்காட்டி அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறானே அவன் தான் என்றார்கள். இந்த ஊழியக்காரன் ஏதோ தவறாக எழுதினதாக, இந்த மனிதன் எழுதாத ஒரு புத்தகம் அவன் எழுதினதாக அந்த பத்திரிகையில் அவன் (Article) எழுதி யிருந்தான். எனக்கு அது தெரியும். ஒரு பெண்மணி அந்த புத்தகத்தை எழுதியிருந்தாள். அவளை எனக்குத் தெரியும். அது பிசாசுகளின் கடிகள் (Biting of Devils) என்ற புத்தகம். 80. சரி ஒரு காரியம் நான் சொல்லுவேன். ஒருகால் அந்த ஊழியக்காரன் சொல்லுகின்றதை நான் ஒப்புக் கொள்ளாமலிருக்கலாம். ஆனால் நான் நினைக்கிறேன். அந்த பத்திரிகையின் ஆசிரியர் இந்த மனிதன் தான் இதை எழுதினான் என்று சொல்வதைக் காட்டிலும், அவன் எழுதிக் கொடுத்த காரியத்தை பிரசுரிப்பதற்கு முன்னர் நன்றாக வாசித்திருந்திருப் பானேயானால் நலமாயிருந்திருக்கும். அவன் அப்படிச் செய்யவில்லை என்று நான் அறிவேன், பாருங்கள். அப்படியானால் அந்த ஊழியக்காரனைக் சொன்னக் குறித்து காரியங்களில் இன்னும் அநேகம் தவறாயிருக்கும் என்று நான் அஞ்சுகின்றேன். அதற்குப் பிறகு நான் “ஒருவனை இரட்சிப்புக்குள் கொண்டு வரும்படி பிரயாசிக்கின்ற வேறு ஒருவனை தொந்தரவு செய்வதைக் காட்டிலும், ஒருவனை இரட்சிப்புக்குள் கொண்டு வர நான் பிரயாசிப்பதில்; என்னை தவறாக கருதப்படுவதை மேலாக எண்ணுகிறேன்” என்று சொன்னேன். 81. நான் அந்த மனிதனின் ஸ்தானத்தை எடுத்துக் கொள்வேனேயொழிய, எந்த நேரத்திலும் அவனைக் குறை கூறவோ அல்லது மற்றவன் யாரோ கட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றதை, அப்படி அதில் அவர்கள் ஏதோ பிழையோ அல்லது தவறோா செய்திருந்தாலும் கூட அதை கிழித்தெறிய பிரயாசிக்க கவனிக்க வேண்டும். நான் மாட்டேன். ஆகவே நாம் செய்கின்ற காரியங்கள் மற்றவர்களின் ஜீவியத்தை கண்டு கொள்ளும் செல்வாக்காய் இருக்க வேண்டும் (Influence) என்பதை கவனிக்க வேண்டும். 82. இந்த மனிதன் தான் மேட்டியமையடைந்த பின்பு, அவன் குஷ்டரோகத்தினால் பீடிக்கப்பட்டது அந்த வாலிப தீர்க்கதரிசிக்கு ஒரு பெரிய பாடமாயிற்று. இது அவனுக்கு ஒரு பெரிய பாடமான படியினாலே, தேவன் தம்முடைய மனிதனை அந்த ஸ்தானத்திற்குத் தெரித்தெடுக்கிறார் என்று இவன் கண்டறிந்துக் கொண்டான். புரிகின்றதா? மனிதன் தனக்குத் தானே தெரிந்து கொள்ள முடியாது. தேவன் தம்முடைய மனிதனை தெரிந்தெடுக்கிறார். நீ என்னவாக இருக்கின்றாயோ அதை தேவன் உனக்கு கொடுக்கிறார். புரிகின்றதா? தேவன் அவருடைய மனிதனைத் தெரிந்து கொள்ளுகிறார். அவன் இன்னொருவனுடைய ஸ்தானத்தை எடுக்க பிரயாசிக்கக் கூடாது. ஒரு முன் மாதிரிக்காக தன் கண்ணை ஒரு மனிதன் மேல் வைக்கக் கூடாது என்ற ஒரு பெரிய பாடத்தை ஏசாயா கற்றுக் கொண்டான். அவன் தன்னுடைய கண்களை தேவன் பேரில் வைக்க வேண்டும். 83. இப்பொழுது, அது நாம்தான். எந்த மனிதனாயிருந்தாலும் தவறு செய்வது இயல்பே. அவன் தவறுகிறவனாய் தான் இருக்கிறான். ஏனென்றால் அவன் மானிடன். அவன் தேவனுடைய நியமனங்களில் (Violation) மீறுகிறவனாயிருக்கிறான். அவன் அநேக காரியங்களுக்கு கட்டுப்பட்டவனாயிருக்கிறான். ஏனென்றால் சாத்தான் அவனைச் சோதிக்கின்றான். அவன் ஒரு மானிடன் தானே. தேவன் எப்பொழுதாவது தம்முடைய கரத்தை உயர்த்துவாரானால், அவன் விழுந்து விடுவான். அவ்வளவு தான். "ஓ சாத்தானால் அப்படி செய்ய முடியாது" என்று அநேகர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். 84. ஆம், நீ மட்டும், தேவன் தம்முடைய கரத்தை ஒரு முறை உயர்த்தும்படியாய் விடு. என்ன சம்பவிக்கிறதென்று கவனி! "தேவனே, அவனை அனுப்பாதேயும். என்மேல் கிருபையாயிரும். அவனை என்னிடத்திலிருந்து தூரமாய் வையும்" என்று தொடர்ந்து வேண்டிக் கொள்ளுகிறேன். உங்களுக்குத் தெரியுமா? கர்த்தருடைய கிருபை எனக்கு தேவை. நாமெல்லாருக்கும் அது தேவை. 85. அந்த நல்ல இராஜாவின் கரத்தின் மேல் ஏசாயா பலமாய் சார்ந்தவனாய் இருந்தான் என்று நாம் இங்கே பார்த்தோம். இப்பொழுது, அந்த கரம் அவனை விட்டு எடுக்கப்பட்டாயிற்று. அந்த இராஜா மரித்து போனான். அதுவும் குஷ்டரோகத்தோடு கூட வெட்கத்தோடு மரித்து போனான். இந்த நாட்களில், இராஜா மேட்டிமை அடைந்தபடியினாலே, அவனுடைய இளைஞனான குமாரன் அவன் ஸ்தானத்தை எடுத்தான். ஜனங்கள் பயங்கரமான முறைகேடானவைகளுக்குள் போய்விட்டார்கள் என்று நாம் பார்க்கிறோம். 86. அங்கே ஒரு உண்மையான தேவபக்தியுள்ள தலைவன் இல்லாமற் போனபடியினாலே, ஜனங்கள் ஒரு முறை கேடானவைகளுக்குள் நுழைய ஆரம்பித்தனர். இன்றைக்கு நம்மோடும், நம்முடைய தேசத்திலும், நம்முடைய சபைகளிலும், காரியங்களிலும், நிலைமை அதே தான். நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய யாரோ, ஒரு தெய்வபக்தியுள்ள தலைவன் நமக்கு அவசியமாயிருக்கிறது. 87. மனிதனை நோக்கிப் பார்க்க முடியாது என்பதை ஏசாயா அறியும்படியாய் அவர் அனுமதித்தார். ஆகவே ஏசாயா ஒரு நாள், அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவனுக்கு ஒரு பெரிய உத்தரவாதம் உண்டாயிருக்கிறது என்று அறிந்தபடியினால் அவன் எல்லாவிதத்திலும் சோர்வுற்றவனாய், ஜெபம் செய்வதற்காக அவன் தேவாலயத்திற்குள் சென்றான். நாம் யாவரும் செய்யத்தக்கதாக, அது ஒரு நல்ல காரியமாய் இருக்கிறது. அவன் ஜெபம் செய்யும்படியாய் தேவாலயத்திற்குள்ளாக போனான். 88. அவன் பலிபீடத்தண்டையில் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியினால் உடனேயே அவன் ஒரு தரிசனத்திற்குள்ளானான் என்பதை நாம் கவனித்தோம். அவன் தரிசனத்திற்குள்ளான போது, அவன் மேல் நோக்கிப் பார்த்து, இராஜாவாகிய, தேவன், தூரத்தில், உயரத்தில் உன்னதமான அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கண்டான். அவருடைய வஸ்திரத்தின் தொங்கல் அந்த ஸ்தலம் முழுவதையும் நிரப்பிற்று. அப்பொழுது அவன் ஒரு உண்மையான முன்மாதிரியைக் கண்டான். தன்னுடைய நம்பிக்கை முழுவதையும் வைக்கத்தக்கதான ஒருவரை அவன் கண்டான். அதனால் அவன் ஒருபோதும் குஷ்டரோகியாக மாட்டான். ஒரு போதும் தவறாத ஒருவரை அவன் கண்டான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவர் ஏசாயாவினிடத்தில "பார் உன்னுடைய நம்பிக்கையை ஒரு மனிதனின் மேல் வைத்தாய், அது தவறி போயிற்று. ஒரு முன்மாதிரிக்காக இந்த மனிதனை நோக்கிப் பார்த்தாய். அவன் தவறிப் போனான். இப்போது மேல் நோக்கிப் பார், என்னை நோக்கிப்பார், நானே மாறாத தேவனாயிருக்கிறேன்'' என்று சொல்வது போன்றிருக்கிறது. 89. இன்றைக்கு அதைத்தான் நாம் செய்யவேண்டியவர் களாய் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அவருடைய ஊழியக்காரர்களாய் அவரையே நோக்கிப் பார்க்க வேண்டும். இயேசுவே நம்முடைய முன்மாதிரி. விசுவாசத்தை துவக்குகிறவருமாகிய அவரையே நாம் நோக்கிப் பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 90. இப்பொழுது இந்த தரிசனத்தில் தேவன் உயரமான ஒரு சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கின்றவராய் இவன் கண்டதாக நாம் கண்டறிந்தோம். பின்னர் அவன் இன்னொரு காரியத்தைக் கவனித்தான். அவரைச் சுற்றிலும், அவர் இருந்ததான அந்த தேவாலயத்தைச் சுற்றிலும், பரலோக சேராபீன்கள் இருந்ததைக் கவனிக்கவும். 91.அந்த வார்த்தைகளை நீங்கள் ஆராய்வீர்களானால், நான் நினைக்கிறேன், அது ஒன்றோ அல்லது இரண்டோ முறை தான் வேதத்தில் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவைகள் கேருபீன்களல்ல. ஆனால் அவைகள் கேருபீன்களுக்கு அடுத்தது. ஏதோ தூதர்களை போன்று, இருந்தாலும், அவைகள் தூதர்களுமல்ல. அது ஒரு தூதன் தான், ஆனால் அது ஒரு விசேஷமான நபர். அவைகள் என்ன? வேதத்தில் அவைகள் பலிப்பொருளை எரிக்கின்றவைகள். அவைகள் பலியை உள்ளே கொண்டு வருகின்ற அல்லது நடத்துகின்ற அல்லது பரிசுத்தத்திற்குள் போகும்படியாக ஒரு பாவிக்கு வழியை உண்டுபண்ணுகின்றவைகளாய் இருக்கின்றது. இந்த சேராபீன்கள் பலியை எரிக்கின்றவைகள். அது அவசியமாயிருக்கிறது. அதுதான் அவைகளுடைய கடமை. 92. ஏசாயா தரிசனத்தில் இருக்கும் போது அவைகள் இங்கே ஆலயம் முழுவதுமாய் அதனூடாக பறந்துக் கொண்டிருந்தன அந்த ஆலயம் முழுவதும் புகையினால் நிறைந்தது. அவர்கள் ஒன்றோடொன்று பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" என்று கூப்பிட்டுச் சொன்னது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் " தவறிப் போக்ககூடாத ஒன்று ஏதோ அங்கே இருக்கின்றது. அதுதான் உங்களுக்கு முன் மாதிரி. நீங்கள் நோக்கிப் பார்க்க தக்கதான இராஜா அங்கே இருக்கிறார். சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என்று சொல்வது போலுள்ளது. 93. அவைகள் ஆறு செட்டைகள் கொண்ட சிருஷ்டிகள் என்று இங்கே நாம் பார்க்கிறோம். அவைகளுக்கு ஆறு செட்டைகள் இருந்தமைக்கான காரணத்தை நாம் ஆராயப்போகிறோம். இரண்டினை தங்கள் முகத்தின் மேலும், இரண்டினை தங்கள் கால்களின் மேலும் இரண்டினைக் கொண்டு பறந்துக் கொண்டும் இருந்தன என்று நாம் கண்டறிந்தோம். 94. இப்பொழுது, முதலாவதாக கவனியுங்கள். அவைகள் கர்த்தருடைய சமுகத்தில் பணிவிடை செய்யும் ஆவிகள். அதுதான் அவைகளின் கடமை "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்" என்று கூப்பிட்டுக் கொண்டேயிருக்கும். அவைகள் இரவு பகலாய், அவருடைய சமுகத்திற்கு முன்னின்று பலிப்பொருள் அங்கே வைக்கப்பட்டிருக்க “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று கூப்பிட்டுச் சொன்னது. 95. நீங்கள் ஒரு காரியத்தை இங்கே கவனிக்கவும் சிந்திக்கவும் வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அந்த சேராபீன்கள் இரண்டு செட்டைகளை தங்கள் முகத்தின் மேல் வைத்திருந்தது. அவைகள் ஏன் செட்டைகளை தங்கள் முகங்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்? ஏனென்றால் அவர்கள் தேவனுடைய சமுகத்தில் இருக்கின்றன. சற்று சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த தூதர்களே அவருடைய சமுகத்தில் இருக்க தங்கள் முகங்களை மூடிக் கொள்ள வேண்டியதாய் இருக்கின்றதென்றால், நம்மைக் குறித்து என்ன? தங்கள் முகங்களின்மேல செட்டைகளை வைத்துக் கொள்ளுதல், மரியாதையை குறிக்கின்றது 96. ஆனால் இன்றைக்கு, பயபக்தியென்பதே இல்லாமலிருக்கின்றது. பயபக்தியை பார்ப்பதே கடினமான காரியம். தேவனைப் பற்றின மரியாதை அவர்களிடத்தில் இல்லவே இல்லை. காலை தூக்கி அந்த கம்பியின் மேல் வைத்து, நின்று கொண்டு தேவன் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக என்று பாடுகிறார்கள். அவர்கள் அவ்விதமாக செய்வது மிகவும் பயங்கரமான ஒரு காரியம். 97. இன்று ஓரிடத்தில் போய் ஒரு சாண்ட்விக் (Sand wich) கொடுங்கள் என்று கேட்டேன். அந்த சிறிய பெண்மணி, அவளைக் குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்று நான் நினைத்தேன். அவளுடைய கண்களுக்கு கீழாக (Cankered) அரித்துப் போனது போன்று காணப்பட்டது. அவளை சுற்றிலும் நீலம் பூத்திருந்தது. அவள் மேல் ஆடை கொஞ்சம் தான் அவள் இருந்தது. உமக்கு என்ன வேண்டும் என்றாள். 98. "எனக்கு ஒரு சாண்ட்விக்கும், ஒரு டம்ளர் மோரும் கொடுங்கள்'' என்று சொன்னேன். அவள் எதன் மீதோ "போர்போன்" என்று சொன்னாள். 99. நான் 'இல்லை மாதே நீ என்னை தவறாக புரிந்துக் கொண்டாய், நான் மோர் வேண்டும் என்று சொன்னேன்' என்றேன். அதற்கு அவள் 'ஓ! உமக்கு ஏதாவது குடிக்க வேண்டுமா” என்றாள்? நான் "எனக்கு மோர் வேண்டும்'' என்றேன், 100. அவள் "உமக்கு அவைகள் தேவையில்லையா... நாங்கள் இரவில் இன்னின்ன காரியங்கள் கொடுப்போம்" என்றான். "நான் ஒரு ஊழியக்காரன்" என்று சொன்னேன். 101. அவள் "நல்லது. எங்களுடைய கத்தோலிக்க பாதிரிகள் இங்கே உள்ளே வந்து குடித்து விட்டு என்று போவார்கள்' சொன்னாள். 102. "ஸ்திரீயே நான் ஒரு கத்தோலிக்க பாதிரி அல்ல. ஸ்திரீயே எனக்கு ஒரு டம்ளர் மோர் வேண்டும்" என்று நான் சொன்னேன். அது அந்த பெண்ணை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது என்னவென்றே அவளுக்கு தெரியவில்லை. புரிகின்றதா? 103. உலகமானது அப்பேர்ப்பட்ட ஒரு நிலைமைக்குதான் போய் விட்டது. ஒரு பாதிரி உள்ளே வந்து குடித்து விட்டு போவானேயானால், அவனுடைய சபையாரும் குடிக்க ஒரு உரிமையுண்டாயிருக்கிறது. அங்கே தான் இருக்கிறது உங்களுடைய எடுத்துக்காட்டு, புரிகின்றதா? ஓ! அப்பா எப்பேர்ப்பட்ட ஒரு ஊழலுக்குள் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆலய பீடம் துவங்கி நமது வீடு வரை சுத்தம் பண்ணபடுதல் அவசியமாயிருக்கிறது. ஆம் ஐயா. நமக்கு அவசியம் அது தேவையாய் இருக்கிறது. உலகத்தின் ஊழல் எப்படி இருக்கிறது! 104. இவர்களுக்கு பயபக்தியுமில்லை, மரியாதையுமில்லை! இன்றைக்குள்ள ஜனங்கள், அவர்களுக்கு தேவனிடத்தில் மரியாதையே கிடையாது. அவர்களுக்கு பயபக்தியே கிடையாது அவர்கள் அவருடைய நாமத்தை வீணிலே வழங்குகிறார்கள். அவலட்சணமான விகட ஜோக் துணுக்குகளை சொல்லுகிறார்கள். ஊழியக்காரர்களும் கூட அதை செய்கிறார்கள். ஒரு கேலியை, தமாஷ் நீங்கள் கேட்டால் பரவாயில்லை. என்று நான் எண்ணுகிறேன். ஆனால் நீதிக்கும் பரிசுத்தத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஊழியக்காரர்கள் இருக்க வேண்டும். அதன் காரண மாகதான் நாம் இன்றைக்குள்ளதை தாண்டி போக முடியாதவர்களாய் இருக்கிறோம், என்று நான் நினைக்கிறேன். நாம் போகவில்லை. நமக்கு அதில் இருக்க வேண்டிய உத்தமத்துடன் நாம் இதுவரையிலும் வரவில்லை. இந்நிலையில் நீங்கள் தொடர்ந்து மேலும் மேலும் போய்க் கொண்டே இருப்பீர்களேயானால், நமக்கு இருக்கின்ற அந்த ஒரு துளி உத்தமத்தையும் இழந்து போவோம் என்பது உங்களுக்கு தெரியுமா. அதை குறித்து ஏதோ காரியம் இருக்கின்றது. 105. தேவன் உன்னை ஒவ்வொரு மணி நேரமும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். நீங்கள் நித்திரையாய் இருக்கும் போது அவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, ஜனங்கள் இதை செய்வதற்குள்ள காரணம் என்னவென்றால், நான் நினைக்கிறேன் அவருடைய சமூகத்தை குறித்த உணர்வு இல்லாதிருக்கின்றபடியால் புரிகின்றதா. ஆனால், அப்படியிருந்த போதிலும் அவர் அங்கே இருக்கிறாரா அல்லது இல்லையா என்று நீ நினைத்தாலும், இல்லையென்றாலும், அவர் அங்கே தான் இருக்கிறார். நீ பார்க்கின்ற ஒவ்வொரு அசைவையும் அவர் அறிவார். அதைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிவார். ஆனால் நாம் அதை உணர்ந்திருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். 106. நாம் ஒரு சிறு பாடல் பாடுவதுண்டு, நான் முதன் முதல் பெந்தகோஸ்துகள் மத்தியில் வந்தபோது, அவர்கள் ஆத்துமாவின் உண்மையான தங்குமிடம் போகும் பாதையெல்லாம் உன்னை கவனித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கண் உண்டு. நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அந்த பெரிய கண் விழிப்பாயிருக்கிறது உன்னை கவனித்துக் கொண்டிருக்கின்ற ஒரு கண் உண்டு என்று அவர்கள் பாடினார்கள். அந்த பாடல் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? இப்பொழுது அது உண்மையாயிருக்கின்றது. 107. தேவனது எவ்விடத்திலுமுள்ள சமூகம் (Omni Presence) நீ என்ன செய்கிறாய், என்ன நினைக்கிறாய் என்று அறியும். ஒரு நேரத்தில் நான் தரிசனத்திற்குள் இருந்தேன். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இன்னொரு தூதனிடம் (being) பேசிக் கொண்டிருந்தேன். அந்த தூதன் "நீ இந்த பூமியில் பேசுகின்ற உன்னுடைய சத்தத்தைக் காட்டிலும், உன்னுடைய எண்ணங்கள் பரலோகத்தில் பலமாய் தொனிக்கின்றது" என்று சொன்னான். நீ என்ன நினைக்கிறாய் என்று அவர் அறிவார். நான் இதை செய்கிறேன். அதை செய்கிறேன் என்று நீ ஒருவேளை சொல்லலாம் ஆனால் பாருங்கள், உன்னுடைய இருதயத்தின் ஆழத்தில், நீ வித்தியாசமாய் நினைத்தால், நீ ஏதோ தவறு செய்கின்றவனாய், இருக்கின்றாய். நீ என்னவாய் இருக்கின்றாயோ அப்படியே இருக்க வேண்டும், பாருங்கள், உன் இருதயத்தில் இருக்கின்றதை தான் உன் வாய் பேச வேண்டும். புரிகின்றதா? ஆக, ஜனங்கள் தேவனுடைய சமூகத்தை உணருகிறதில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். 108. தேவனுடைய இருதயத்திற்கு இசைந்தவனான தாவீதைப் போன்று அவர்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு தெரியுமா? "தேவன் எப்பொழுதும் எனக்கு முன்பாக இருக்கிறார்" என்று அவன் சொன்னான் அவன் எங்கு போனாலும், தேவன் அவனுக்கு முன்பாக இருக்கிறார் என்பதை அவன் நினைவு கூறுகிறான். “அவர் என்னுடைய வலது பக்கத்தில் இருக்கிறார், நான் அசைக்கப்படமாட்டேன்” ஏனென்றால் தேவன் அவனுடைய வலது பக்கத்திலிருக்கிறார். 109. பயபக்தி! நாம் ஒருவரையொருவர் கனப்படுத்த வேண்டும். ஒருவருக்கொருவர் ஒரு சகோதர சகோதரி முறையில் மரியாதை செலுத்த வேண்டும். மரிக்க முடியாத அன்பினால் ஒருவரில் ஒருவர் அன்பு கூறுங்கள். 'சரி! என்னால் அது முடியாது' என்று சொல்லுகின்றாய். அப்படியானால் இங்கே கொஞ்ச அதிக நேரம் தரித்து இருங்கள், அப்பொழுது நீங்கள் கூட ஜனங்களை நேசிப்பீர்கள், உங்கள் மேல் அன்பு கூராதவர்களை நேசிப்பீர்கள். உங்களை நேசிக்காதவர்களை, உங்கள் இருதயத்தின் ஆழத்திலிருந்து உங்களால் நேசிக்கக் கூடுமானால், அது உண்மையாகவே ஒரு நல்ல கிறிஸ்தவ அடையாளமாய் இருக்கிறது. நேசிக்காதவர்களை நேசியுங்கள் 110. "உங்களை சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா" என்று இயேசு சொன்னார். ஆனால், பாருங்கள், அன்பாயிராதவர்களிடத்தில் நீங்கள் அன்பாயிருக்க தான் வேண்டும். தீமை செய்கிறவர்களுக்கு நீங்கள் நன்மை செய்யுங்கள். எப்பொழுதும் அதை நினைவில் வையுங்கள். தேவன் உன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை எப்போதும் உங்கள் முன்பாக வையுங்கள். நியாபகமிருக்கட்டும், நீ தேவனுக்கு பொல்லாதவனாய் இருந்த போது தேவன் உனக்கு நல்லவராயிருந்தார். “நீ பாவியாயிருக்கும் போதே கிறிஸ்து உனக்காக மரித்தார்! 111. இப்பொழுது, அவைகளுடைய முகத்தின் மேல் இரண்டு செட்டைகளிலிருந்தது, ஏனென்றால். அவைகள் தேவனுடைய சமூகத்தில் இருந்தன, பயபக்தியை குறிக்கின்றது என்பதை இப்பொழுது நாம் பார்த்தோம். ஒரு பரிசுத்த சேராபீன், ஒரு விசேஷ மூடியினால் அதனுடைய முகத்தை மூடிக் கொள்ள வேண்டியதாயிருந்தால், பாவம் ஒன்றையும் அறியாதது, பாவமே செய்யாதது, ஆனால் இருந்த போதிலும் பரிசுத்த தேவனுடைய சமூகத்தில் தன்னுடைய முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டியதானால், ஒரு மாய்மாலக்காரன் அந்த நாளிலே என்னச் செய்யப் போகிறான்? பின்மாற்றக்காரன் அந்த நாளிலே என்ன செய்யப் போகிறான்; தேவனற்றவன் அந்த நாளிலே என்னச் செய்யப் போகிறான். நீ அவரை சந்தித்தாக வேண்டும். 112. ஒரே ஒரு காரியம்தான் இருக்கின்றது. "அவர் ஒன்றும் என் முகத்தை மூடிக் மூடிக் கொள்ளும்படியாய் எனக்கு செட்டைகள் கொடுக்கவில்லை," என்று நீ சொல்லலாம். ஆனால் உன் முகத்தை நீ மூடிக் கொள்ளும்படியாக அவர் தன்னுடைய சொந்த இரத்தத்தை உனக்காக சிந்தினார். அது சரிதான். மனித வர்க்கத்திற்காக அவர் வைத்திருக்கின்ற அவருடைய ஒரே மறைவு இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தமாயிருக்கிறது. 113. இப்பொழுது இரண்டாவதாக, அவைகளுடைய இரண்டு பாதங்களையும் அவைகள் மூடிக் கொண்டது. அது தாழ்மையைக் குறிக்கின்றது. ஓ! ஒரு வார்த்தையிருக்கிறது இன்றைக்கு அநேக ஜனங்களுக்கு அது காணாமற்போன ஒரு வார்த்தையாயிருக்கிறது. அவருடைய சமூகத்தில் தாழ்மை, அவருடைய சமூகத்தில் நம்மை தாழ்த்துதல். 114. பரிசுத்த ஆவியானவர் என்னுடைய அறைக்குள்ளாக வந்து செய்து காட்டினதை நான் கண்டிருக்கிறேன். வேதத்தில் அவர் செய்வார் என்று சொல்லியிருந்த சாரியங்களை, வகையறுத்தலை, அவர் செய்தார். ஜனங்கள் எழுந்து நின்றதையும் வெளியே நடந்து கண்டிருக்கிறேன் போனதையும் நான் அச்சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஜனங்கள் உட்கார்ந்துக் கொண்டு, பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு அதைக் கேலி செய்துக் கொண்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். 115. ஒரு நாள் எனக்கு நினைவிருக்கின்றது, ஒரு ஊழியக் காரன் அவனுடைய கூட்டத்தைச் சேர்ந்த 28 பேரை அழைத்துக் கொண்டு உட்கார்ந்துக் அது வந்து கொண்டிருந்தான். அர்கன்சாசிலுள்ள, ஜோனஸ்பரோவில் நடந்தது. 116. அவர்களிடத்தில் காக்காய் வலி பிடித்த ஒரு பையன் இருந்தான். அது ஒரு பிசாசு. இது ஒரு பிசாசுதான். அதுதான் அது. இதை செய்கிறது எதுவென்று வைத்தியர்களுக்கு தெரியாது, அது ஒரு பிசாசு. ஒரு துணியினால் சுற்றப்பட்ட வஸ்துவை வைத்திருப்பார்கள். வலி வரும்போது அதை அவன் வாயின்மேல் போடுவார்கள், ஏனென்றால் அவன் நாக்கை கடித்து அசைப் போடுவான். அவர்கள் அந்த பையனை மேடையின் மீது கொண்டு வந்தார்கள். இந்த மேடையின் மீதிலேயே அவனுக்கு அந்த வலி வந்து விட்டது. ஒரு சிறு (exite) பரபரப்பு உண்டானவுடனேயே ஆக இந்த அவர்கள் எல்லாரும் ஓரிடமாய் கூடி விடுவார்கள். நான் ஆரம்பிக்கும்போது பையனுக்காக ஜெபிக்கும்படியாய் நான் "எல்லாரும் பயபக்தியுடன் தலைகளை தாழ்த்துங்கள்” என்று சொல்லிவிட்டு அவனுக்காக ஜெபித்தேன். அந்த ஆவி அவனை விட்டு போகவில்லை. 117. நான் சுற்றிலும் பார்த்தேன். ஒரு சிறு குழு ஓரிடத்தில் உட்கார்ந்துக் கொண்டிருக்கின்றதை கண்டேன். நான் "உங்கள் தலைகளை தாழ்த்துவீர்களா? நீங்கள் கீழ்படியத்தான் வேண்டும்" சொன்னேன். என்று 'அது தான் எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளை. ஜனங்கள் உன்னை நம்பும்படியாய் செய், பின்பு நீ ஜெபிக்கும்போது உத்தமமாய் இரு' என்று சொல்லியிருந்தார். நான் "உங்கள் தலைகளை தாழ்த்துவீர்களா" என்றேன்? அந்த ஆள் என்னைப் பார்த்து சிரித்தான். 118. ஆகவே நான் சுற்றி திரும்பினேன். ஆனால் இந்த ஆவியோ, இந்த பையனை விடவில்லை. இங்கே நூற்றுக் கணக்கானவர்கள் இப்பொழுது உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கின்ற கூட்டத்தைப் போன்று ஐந்து மடங்கு ஜனங்கள் அன்றிரவு அங்கே இருந்தார்கள். 28,000 பேர் இருந்ததாக அவர்கள் கூறினார்கள். அங்கே அவர்கள் எல்லாரும் இருந்தார்கள். 119. அதன் பின்பு பின்பு நான் 'ஐயா நான் இதை செய்ய மாட்டேன்' என்று சொன்னேன். தெய்வீக சுகத்தை விசுவாசியாத அதைப் பார்த்து கேலி சிரிப்பு சிரிக்கின்ற ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவர்கள் அவர்கள். 120. ஆகவே நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்த ஏழைப் பையன். அவன் தொண்டையே போய் விட்டது. அவனுடைய தாயார் சத்தமிட்டு கத்தி அழ ஆரம்பித்துவிட்டாள். அந்த பையன் விழுங்க பிரயாசித்துக் கொண்டு, காரியங்கள் அப்படியே நடந்துக் கொண்டிருந்தது. 121. நான் "பரலோக பிதாவே இந்த நிரபராதியான பையன் அந்த குற்றமுள்ள குழுவினிமித்தமாக துன்பப்படும்படி விடாதேயும். அது உம்முடைய வார்த்தை. நான் உண்மையாயிருந்து அவர்களுக்குச் சொன்னேன். எத்தனையோ காக்காய் வலிக்காரர்கள் கூட்டங்களில் சுகமடைந்துள்ளனர். நிரபராதியான பையன் கஷ்டப்படும்படி விடாதேயும். இந்த தாயும் வந்தார்கள். நான் தகப்பனும் அவனை இங்கே கொண்டு கிருபைக்காக ஜெபிக்கிறேன்'' என்று சொன்னேன். 122. பின்பு நான் திரும்பி "கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால், விசுவாசத்தைக் கொண்டு, சர்வவல்லமையுள்ள தேவனால் எனக்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டளையின்படி, இந்த பிசாசு இவனை ஆண்டுக்கொண்டு இருக்க முடியாது. பிசாசே நீ சுயாதீனமாய் இருக்கின்றாய். கீழ்படியாதவர்கள், கீழ்படியாமலேயே இருந்தால், அப்பொழுது நீ அவர்களிடம் போவதற்கு சுயாதீனமாய் இருக்கின்றாய், ஆனால் அந்த பையனை விட்டு வெளியே வா" என்று சொன்னேன். 123. 28 பேரும், அவர்கள் பாஸ்டருடன், காக்காய் வலியால் பீடிக்கப்பட்டு கீழே விழுந்து வட்டமாக வட்டமாக தரையில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். எனக்கு தெரிந்த மட்டில் அவர்கள் இன்னமும் அதை உடையவர்களாயிருக்கிறார்கள். 124. பாருங்கள், பயபக்தியற்றவர்களாய் நாம் இருக்கக் கூடாது. உங்களை நீங்கள் தாழ்த்த வேண்டும். உங்களில் எத்தனை பேர் என்னுடைய கூட்டங்களில் இருந்து அப்படிப்பட்ட காரியங்களைத் சம்பவிக்கக் கண்டிருக்கிறீர்கள்? ஏன் புரிகின்றதா? ஆம் நிச்சயமாக ஐயா. 125. ஒருமுறை என்னை மயக்கத்துக்குள்ளாக்கும்படி (hypnotize) ஒரு மனிதனைக் கொண்டு வந்தார்கள். உங்களில் அநேகருக்கு அது ஞாபகமிருக்கும், என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அவனை சேனைகள் தங்கும் பாளயங்களுக்குக் கொண்டு போய் போர்சேவகர்கள் மயக்கமுறும்படிச் செய்து அவர்களை ஒரு நாயைப் போன்று குரைக்க வைப்பார்கள். என் மூலமாய் கொஞ்சம் ஆக, நான் பெரிய வேடிக்கையை காணலாமென்றிருந்தார்கள். அரங்கத்தில் இருந்தேன். அங்கே அவர்கள் இவனைக் கொண்டு வந்தார்கள். ஜெபவரிசை ஆரம்பித்த உடனேயே நான் அசுத்த ஆவி எங்கேயோ இருக்கிறதென்று உணர்ந்தேன். 126. நீங்கள் எப்பொழுதும் அப்படிப்பட்டவர்களையோ, அந்த சந்தேகத்தையோ சுட்டிக் காட்டலாம். எனக்கு தெரியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். உன்னால் அதை உணர முடியும். அது வித்தியாசமானது. 127. அதற்கு பிறகு அது எங்கிருக்கிறது என்று என்னால் சொல்லக் கூடியதாயிருந்தது. ஆனால் அந்த மனிதன் எங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறான் என்று என்னால் பார்க்க முடியவில்லை, கொஞ்சம் கழித்து, நான் அதை கண்டு பிடித்தேன். அது என்னவென்று கண்டேன். இருளானது அவன் மேல் தொங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். நான் அதை சொல்ல விரும்பாமல். அவன் பக்கமாக திரும்பி, பிசாசின் மகனே, இதைச் செய்யும் படியாய் உன் புத்தியில் ஏன் இதை பிசாசு போட்டான்? அவன் எனக்குள்ளாக இருந்து ஏதோ இதை செய்த காரணத்தினால், இதை சொல்லிற்று "அவர்கள் உன்னை இங்கிருந்து தூக்கிக் கொண்டு போவார்கள்" என்றேன். அவன் இன்னமும் கைகால் விழுந்தவனாய் இருக்கிறான். புரிகின்றதா? "அவனிடத்தில் வாரும்" என்று கடிதத்தின் மேல் கடிதம் வந்தது. 128. “எனக்கு தெரிந்த ஒரே ஒரு காரியம் மனந்திரும்புவது பாருங்கள். நான் அதை செய்யவில்லை. அது தேவனுக்கு முன்பாக காணப்பட்ட உன்னுடைய பயபக்தியின்மையாய் இருக்கிறது’’ என்று நான் சொன்னேன். புரிகின்றதா? இப்போது நீ அதை செய்யாதே. 129. இந்த தேவனுக்கு முன்பாகவுள்ள பரிசுத்தம், இது ஒரு விதமான போலி என்று அநேகர் நினைக்கிறார்கள், அல்லது தெரியாத ஒரு ஜனக்கூட்டம், ஏதோ விதமான மத பிரிவு அல்லது ஏதோ காரியம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சகோதரனே நான் ஒரு நிச்சயமானதை சொல்லட்டும். அதிகமான போலியான கேலியான காரியங்கள் அங்கே இருக்கலாம். நான் ஒரு சாதாரண மனிதன். நான் நியாயந்தீர்க்க வேண்டியவனல்ல, நான் வெறுமனே பிரசங்கிக்க வேண்டியவன். ஆனால் அங்கே ஒரு அசலான போலியில்லாத, பரிசுத்தாவியானவர், அசலான பரிசுத்தாவியின் அப்போஸ்தல வல்லமை இருக்கிறது. அந்நிய தேசங்களிலும், மாந்திரீக வைத்தியர்களிடத்திலும் பிசாசுகள் எழும்பி சவாலிடும். இந்த காரியங்களை குறித்து உங்களிடம் சொல்லுவதினால் நான் பேச வேண்டிய பொருளை விட்டு விலகி போகிறேன். என்ன? பரிசுத்த ஆவியானவர் ஒரு முறையாகிலும் அதை செய்யாமல் தவறி போனதை நான் ஒரு போதும் கண்டதில்லை. ஒவ்வொரு நேரத்திலும் அவர் அதை செய்கிறார். 130. இப்பொழுது கவனியுங்கள், அவைகள் தங்களால் தங்கள் பாதங்களை மூடுதல், தாழ்மையை குறிக்கிறதாயிருக்கிறது. நாம் தலை வணங்கி இருக்க விரும்புகிறதில்லை. நாம் யாரோ ஒருவர் என்று நினைத்துக் கொள்ள விரும்புகிறோம். 131. இங்கே எனக்கு ஞாபகமிருக்கின்றது, நான் ஒரு சிறிய பழம் பொருட்காட்சி அரங்கத்திலிருந்தேன். அங்கே 150 பவுண்ட் எடையுள்ள ஒரு மனிதனின் சரீரம், ரசாயனப்படி அதன் மதிப்பு என்ன என்று அங்கே எழுதி வைத்திருந்தான். 150 பவுண்ட் எடையுள்ள மனிதனின் சரீரத்தின் ரசாயன மதிப்பு 84 சதங்கள் என்றும் அவனிடம் சற்று சுண்ணாம்பு சத்து இருக்காத அளவிற்கு அவனிடம் ஒரு கோழிக் கூண்டிற்கு லேசாக வெள்ளை அடிக்கப் போதுமான அளவு கூட இருக்காத அளவிற்கு அவனிடம் இருக்கிறது. 150 பவுண்ட் எடையுள்ளவன். மொத்த இரசாயன பொருள்களின் மதிப்பு 84 சதங்கள் (பைசாக்கள்) தான். 132. அதை நோக்கிப் பார்த்துக் கொண்டு அங்கே இரண்டு வாலிபர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்தேன் அப்பொழுது அவர்களிலொருவன் ''ஜான் பார்க்கப் போனால் நம்முடைய பெறுமானம் ஒன்றுமேயில்லை." நமக்கு இருக்கிறதா? அதற்கு அவன் "நமக்கு பெறுமானம் இல்லை" என்று யூகிக்கிறேன் என்றான். 133. நான் "சரி பையன்களா, அது உண்மை தான். பாருங்கள் இரசாயன பொருள்களில் உன்னுடைய பெறுமானம் அவ்வளவு இல்லை. ஆனால் உங்களுக்குள்ளாக ஒரு ஆத்துமா இருக்கின்றது, பாருங்கள், அது லட்சக்கணக்கான உலகங்கள் பெருமானமுள்ளது புரிகின்றதா''? அதுதான் சரி. 134. இருந்த போதிலும், நாம் அதைக் குறித்து அக்கரை காட்டுகிறோம். இந்த 84 பைசாக்களில் நாம் பெருமை பாராட்டுகிறோம். அதை 500 டாலர்கள் மதிப்புள்ள மிங்க் கோட்டால் (Mink Coat) சுற்றி, மூக்கை ஆகாயத்தில் நீட்டிக் கொண்டு, ஏதோ காரியம் செய்கின்றதாக நினைத்துக் கொள்ளுகிறோம். நான் இதை ஏதோ வேடிக்கையாக சொல்லவில்லை. இது ஒரு வேடிக்கையல்ல. இது வெறுமனே நாம் என்னவாயிருக்கிறோம் என்பதைத் தான் சொல்லுகிறது. 135. நம்மிடம் தாழ்மையில்லை. நமக்கு அப்படி இருக்க விருப்பமில்லை, ஜனங்களுக்கும் இல்லை. சபையிலிருக்கும் ஒரு உண்மையாகவே நன்றாக ஆடை அணிந்த ஜனங்களிடம் நீங்கள் சில நேரம் போய் பாருங்கள்; அவர்கள் உள்ளே வருவார்கள், நீங்கள் சரியான விதமாக ஆடை அணியாமல் இருப்பீர்களானால், அவர்கள் உன்னை பார்த்து விட்டு பேச ஆரம்பித்து விடுவார்கள், உங்களுக்கு தெரியுமா. கிறிஸ்துவத்தை சொல்லிக் கொண்டு அவர்கள் அப்படி செய்யக் கூடாது. நான் நினைக்கிறேன் அது வெறுமனே தங்களை அப்படி அழைத்துக் கொள்கிறதேயொழிய அதை உடையவர்களாயல்ல, ஏனென்றால் தேவனோடு கொண்ட ஒரு உண்மையான பண்டய அனுபவமுள்ள, ஒரு டுக்ஸடே (tuxedo) கோட் அணிந்த மனிதன் ஒரு மேலாடையை அணிந்துள்ளவன் மேல் தன் இரண்டு கைகளையும் போட்டு, "சகோதரனே" என்று சொல்வான். நான் அதை உண்மையாக விசுவாசிக்கிறேன் அது உண்மை தான். ஒரு காலிகோ ஆடையுடன் ஒரு பட்டு வஸ்திரம் தரித்து வந்தவரை "சகோதரியே" என்று அழைக்கும். ஆம் ஐயா, ஏனென்றால் அது ஆடைகளல்ல, அது அந்த நபருமல்ல. அது உள்ளே இருக்கின்ற தான கிறிஸ்துவாயிருக்கிறது. நாம் நம்மை தாழ்த்த வேண்டும். 136. இந்த தூதர்கள் அல்லது சேராபீன்கள் தங்கள் பாதங்களை மூடிக் கொள்ளுகின்றன என்று நாம் கண்டறிந்தோம். 137. மோசே, அவன் தேவனுடைய சமூகத்திலிருக்கும் போது, அங்கே பின் பக்கமாக முட்செடி பற்றி எரியும் போது, அக்கினி ஸ்தம்பத்தண்டை நின்ற போது, அவனை கவனியுங்கள், தேவன் பேசினார். யாருக்காவது தெரியுமா அந்த அக்கினி ஸ்தம்பம் கிறிஸ்துவென்று, அவர் தானே உடன்படிக்கையின் தூதன். "மோசே எகிப்தை வேண்டாம் என்று விட்டு விட்டான். எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை மேலாக கருதினான்.'' ஆகவே, அது உடன்படிக்கையின் தூதனாயிருந்தது. அவர் பற்றியெரிகின்ற புதரின் பக்கத்தில், ஏன் மோசேக்கு முன்பாக தோன்றின போது "உன்? பாதரட்சைகளை சுழற்றி போடு" என்று ஒரு சத்தம் சொல்லிற்று. உன்னுடைய பாதம் பாருங்கள். "உன் கால்களில் இருக்கின்ற பாதரட்சைகளை சுழற்றிப் போடு: நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி." அந்த பாதரட்சைகளை கழற்றினதின் மூலமாக மோசே தன்னை தாழ்த்தினான். 138. அதே அக்கினி ஸ்தம்பம் ஓர் நாள் தமஸ்குவிற்கு போகும் வழியில் பவுலுக்கு தோன்றினது. 139. நினைவிருக்கட்டும், இயேசுவானவர் பூமியின் மேலிருந்த போது ஓர் நாள் அவர்கள் சொன்னார்கள், பரி யோவான் 6ம் அதிகாரம், அவர்கள் நீரூற்றிலிருந்து, தண்ணீர் குடித்துக் கொண்டு களிகூர்ந்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவர் "கன்மலையிலிருந்து வருகின்ற தண்ணீர் நானே, பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த ஜீவ அப்பம் நானே" என்று அந்த விதமாக சொன்னார். 140. அவர்களால் அதை விசுவாசிக்கக் கூடாமற் போயிற்று அவர்கள் "ஏன், இப்பொழுது எங்களுக்கு தெரியும் நீ ஒரு பிசாசு என்று? நீ ஒரு பைத்தியக்காரன்" அதற்கு புத்தி சுயாதினமற்றவன். என்று அர்த்தம். உனக்கு இன்னும் ஐம்பது வயதிற்கு மேலாகவில்லை ஆனால் நீ சொல்லுகின்றாய் நான் ஆபிரகாமை கண்டேனென்று சொன்னார்கள். அவர் "ஆபிரகாம் இருப்பதற்கு முன்பிலிருந்தே நான் இருக்கிறேன். ஆம், நான் இருக்கிறவராக இருக்கிறேன்" என்று சொன்னார். 141. இப்பொழுது நாம் அதை காண்கிறோம், அதாவது "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். நான் தேவனிடத்திற்கு போகிறேன்" என்று இயேசு சொன்னார். இந்த அக்கினி ஸ்தம்பமானது, மாம்சமாக ஆனபோது, தேவன் பிதாத்துவத்தில் இருந்து குமாரத்துவத்திற்கு வருகின்றதாகும். அதன் பின்பு அவர் இந்த குணாதீசியத்திற்குள் (attributes) வந்தார். மூன்று குணாதீசியங்கள், பிதா, குமாரன், பரிசுத்தஆவி, தேவன் மாமிசத்தில் வெளிப்பட்ட போது அவர் "நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். நான் தேவனிடத்திற்கு போகிறேன்" என்று சொல்லி, அவர் உயரே ஏறி போனார். 142. தர்சு பட்டணத்தானாகிய பவுல், தமஸ்குவிற்கு போகின்ற வழியிலே, ஒரு ஒளியினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தான். அவன் அப்படி விழுந்த போது, மேலே நோக்கிப் பார்த்தான். ஒரு யூதன் அது ஒரு அக்கினி ஸ்தம்பமாய் இல்லாதிருந்திருக்குமாயின் எதையும் பார்த்து "ஆண்டவரே” என்று அழைக்க மாட்டான். அவன் அந்த ஒளியைக் கண்டான், கண்டு, ‘“ஆண்டவரே நீர் யார்” என்று கேட்டான்? அவர் "சவுலே முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்" என்றார். அதற்கு அவன் "ஆண்டவரே நீர் யார்" என்றான்? அவர் “நான் இயேசுவாய் இருக்கிறேன்” என்றார். பாருங்கள் மறுபடியுமாக அக்கினி ஸ்தம்பம். 143. பவுலைக் கவனியுங்கள், தூசியிலே தன்னைத் தாழ்த்தி னான் பாருங்கள் தேவனுடைய சமூகத்திலே. தாழ்மை! நிற்க முடியாமல் கீழே விழுந்து, முதுகு தரையில்பட தரையிலிருந்து மேலே நோக்கிப் பார்த்தான். 144. அங்கே அசைவாடிக் கொண்டிருந்த அந்த அக்கினி ஸ்தம்பம், அவன் அதை கண்டு புரிந்து கொண்டான். கமாலியேலின் பாதத்தருகே உட்கார்ந்து படித்த ஒரு போதகன், கமாலியேல் அந்த நாட்களின் ஒரு மகா பெரிய போதகன், தேவன் அவருடைய ஜனங்களை ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் அவர்களை வழி நடத்தினார். என்று அவன் அறிந்திருந்தான். அந்த அக்கினி, அக்கினி ஸ்தம்பம், மாமிசமாக ஆக்கப்பட்டு, அவர்கள் மத்தியில் வாசம் பண்ணி, அவர்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். நான் தேவனிடத்திலிருந்து வந்தேன். தேவனிடத்திற்கு திரும்பப் போகிறேன், இங்கே அவர் இருந்தார். இன்னமும் கர்த்தராகிய இயேசு என்ற பெயரில் இருக்கிறார். 145. பின்பு அதற்கு சற்று முன்னர், தீர்க்கதரிசிகளில் மிகப் பெரியவனான யோவான் ஸ்நானகனை பார்க்கிறோம். எல்லா தீர்க்கதரிசிகளும் அவர் வருகிறார் என்று உரைத்திருக்கிறார்கள். "இவர் தான் அவர்" என்று சொன்னான். ஆனால் யோவானோ யோவான் அவன் அவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினான். ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டு, தண்ணீரில் நின்றுக் கொண்டிருக்கும் போது "ஒரு நேரம் வந்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது அன்றாட பலி தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்டு ஒரு மனிதன் பலியாய் கொடுக்கப்படுவான்" என்று சொல்லிக் கொண்டிருந்தான். யோவான், தான் மேசியாவை காணப் போகிறேன் என்ற நிச்சயத்தை உடையவனாய் இருந்தான். 146. யோவான் அழைக்கப்பட்டபோது அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியனாயிருந்தான். பண்டய நாட்களில் வழக்க மாக ஒரு பையன் தன் தகப்பன் செய்த வேலையை தொடர்ந்து செய்பவனாயிருப்பான். சாதாரணமாக பார்க்கப் போனால் அவன் ஆசாரியனாய் இருந்திருப்பான். ஆனால் யோவான் ஒருபோதும் பள்ளிக்கு போகவில்லை. ஏனென்றால் யோவான் தன் தாயின் கர்ப்பத்திலிருந்தே "பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய்" பிறந்தான். 147.எலிசபெத் கர்ப்பம் தரித்த போது, அந்த பிள்ளையானது அவளது கர்ப்பத்தில் செத்துக் கிடந்தது. மரியாள், காபிரியேல் தூதனால் சந்திக்கப்பட்டு அவளுடைய நெருங்கிய உறவினளாகிய எலிசபெத், கர்ப்பமுறும் பருவத்தை கடந்தவள், கர்ப்பம் தரிப்பாள் என்று அறிவிக்கப்பட்டாள். மரியாள் அவளை சந்திக்கும்படியாய் சென்றிருந்தாள். அவளோ தன்னை மறைத்துக் கொண்டாள்; அவள் மிகவும் கவலையாயிருந்தாள், ஏனென்றால் பிள்ளையானது 6 மாத காலமாய் அசைவில்லாதிருந்தது அது சற்று குறைவான நிலைமையிலிருந்தது. ஆக அவள் மரியாள் வருவதை கண்டு, ஓடிப் போய் அவளை சந்தித்து அணைத்துக் கொண்டாள். அவள் பேச ஆரம்பித்தாள். அவன் "எனக்கு தெரியும் அவள் ஒரு தாயாக போகிறாள்" என்றாள். அவள் "ஆம் நானும் கூட தாயாக போகிறேன்'' என்றாள். ஓ நீயும் யோசேப்பும் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்'” "இல்லை இல்லை. இன்னும் எங்களுக்கு திருமணமாகவில்லை." "நீ ஒரு தாயாக ஆகப் போகிறாயா?" 148. "ஆம், பரிசுத்தாவியானவர் என் மேல் நிழலிட்டு, என்னிடத்திலிருந்து பிறக்கப் பிறக்கப் போகின்ற அந்த பரிசுத்தமான காரியத்தைக் குறித்து என்னோடே பேசி, என்னிடத்திலிருந்து தேவனுடைய குமாரன் பிறப்பார், நான் அவருக்கு "இயேசு'' என்று பெயரிட வேண்டும் என்று சொன்னார்." என்றாள். 149. முதன் முறையாக "இயேசு" என்ற வார்த்தை ஒரு மனித வாயினால் பேசப்பட்டவுடனேயே, இதுவரையிலும் தன்னில் ஜீவனைப் பெற்றிராத ஒரு பிள்ளை, அதனுடைய தாயின் கர்ப்பத்திற்குள் ஜீவனைப் பெற்று சந்தோஷத்தினால் துள்ள ஆரம்பித்தது. "இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்துவின்'' நாமம் ஒரு மரித்த பிள்ளைக்கு ஜீவனைக் கொண்டு வரக் கூடுமானால், பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டிருக்கிறேன் என்று உரிமை பாராட்டுகின்ற ஒரு மறுபடியும் பிறந்த சபைக்கு என்னக் காரியத்தைச் செய்யும் புரிகின்றதா? 150. இது எந்தவிதமான ஒரு பையனாய் இருக்க வேண்டும்? வருகின்றதான மேசியாவை அவன் அறிவிக்க வேண்டியவனாய் இருந்தான். அப்படி அவன் செய்வான் என்று மல்கியா 3 சொல்லுகிறது. "இதோ என்னுடைய தூதனை எனக்கு முன்பாக நான் அனுப்புகிறேன்.” 151. அவன் மட்டும் அந்த ஆசாரிய பள்ளிக்கு சென்றிருந் திருப்பானேயாயின், அங்கிருக்கும் சில ஊழியர்கள் "இப்பொழுது யோவான் நீ மேசியாவை அறிமுகப்படுத்த வேண்டியவனாய் இருக்கிறாய். உனக்கு தெரியும் இங்கு இருக்கின்ற அந்த ஜோ மாமாவை அல்லது அந்த Jim சாமியாரை (Father Jim) அல்லது அவர்களில் சிலரை உனக்கு தெரியும். மேசியாவாக இருக்க அவர்களுக்கு தேவையான குணாதீயசங்கள் எல்லாம் இருக்கின்றது. அவர்களில் ஒருவர்தான் மேசியா." என்று சொல்லியிருப்பார்கள். யோவான் அங்கே மனிதனுடைய (Infulence) செல்வாக்கினால் நடத்தப்பட்டிருப்பான். 152. அவன் வனாந்திரத்திற்குள்ளாக போய், தேவனோடு கூட இருந்தான். எனக்கு தெரிந்துள்ள குருமார் பள்ளிகளில் அது தலைசிறந்ததாய் இருக்கிறது. ஏனென்றால், மற்றவர்கள் வந்து அவனிடம் சொல்லிக் கொடுக்கவும், சில பெரிய சமுதாய காரியங்களில் கலக்க வைக்கவும் கூடாதபடி, அவனுடைய வேலையானது முக்கியமானதாயிருந்தது. பாருங்கள், அவனுக்கென்று ஒரு வேலை இருந்தது. அவன் ஏதோ ஒரு காரியத்திற்கென்று பிரித்தெடுக்கப் பட்டவனாயிருந்தான். மேசியா பூமியின் மீது இருக்கின்றார் என்று அவன் வெளியே வந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கும் போது அவன் அதை அறிந்திருந்தான். 153. அந்த ஞானிகள், பாபிலோனிலிருந்து பார்த்து அந்த மூன்று நட்சத்திரங்கள் வரிசையில் இருக்கக் கண்ட போது, மேசியா பூமியிலிருக்கிறார் என்பதின் அடையாளம் அது தான் என்று அவர்கள் அதிக நிச்சயமாயிருந்தார்கள். அக்காரணத்தினால் தான் அவர்கள் ''யூதர்களுக்கு இராஜாவாக பிறந்தவர் எங்கே இருக்கிறார்" என்று கேட்டார்கள்? அதற்குண்டான பதிலை சபையானது உடையதாயில்லை, இன்றைக்கும் கூட அவர்கள் உடையவர்களாயில்லை. வேதம் தான் அதை உடையதாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தை தான் அதை உடையதாயிருக்கிறது. அது தான் சரி. 154. மேசியாவை அறிமுகப்படுத்த வேண்டியவன் யோவான் தான் என்று நாம் கண்டறிந்தோம். அவன் மட்டும் தானே மேசியாவை ஒரு அடையாளத்தினால் அறிந்துக் கொள்ளக் கூடியவனாய் இருந்தான்; அந்த விதமாகத் தான் அவன் மேசியாவை அறிந்துக் கொண்டான். அந்த ஒரே விதமாகத் தான், வேத வார்த்தைகளின்படியான ஒரு அடையாளத்தின் மூலமாகத் தான் தேவன் தம்மை தெரியப்படுத்துகிறார். அவன் கவனித்து வந்தான் அவன் அங்கே நின்றான். அவர்கள் "நீர்தான் மேசியாவா" என்று கேட்டார்கள். 155. அவன் "இல்லை. அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்பதற்குக் கூட நான் பாத்திரன் அல்ல" என்றான். அவன் அவர் ஒருவர்.... உங்கள் மத்தியில் ஒருவர் நின்றுக் கொண்டிருக்கிறார் என்றான். 156. ஓ! நான் எழுச்சி அடைந்துள்ளேன் என்று நினைக்க வேண்டாம்! நான் எங்கே இருக்கிறேன் என்று நான் அறிவேன். ஆனால் "உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார்" அதை குறித்து நான் சிந்திக்கும் போது, நல்ல விதமான ஒரு உணர்வு கொள்ளுகிறேன். நான் அதை இன்றிரவு சொல்லுகிறேன். இந்த கடைசி நாட்களில் ஊற்றப்படும் என்று வாக்குத் தத்தம் செய்யப்பட்ட பரிசுத்த ஆவியானவர், அங்கே அவர் உங்கள் மத்தியில் இருக்கிறார். அவருடைய அடையாளத்தை நான் தொடர்ந்து காணுகிறேன் அவர்தான் மேசியா என்று நானறிவேன். ஏனென்றால் அவர் இன்னமும் மேசியாவின் அடையாளத்தை செய்துக் கொண்டிருக்கிறார். 157. அவன் அவர்கள் மத்தியில் நின்று. '"உங்கள் மத்தியில் ஒருவர், இருக்கிறார். அவருடைய பாதரட்சைகளை தொடவோ, அதன் வாரை அவிழ்க்கவோ நான் பாத்திரன் அல்ல. பரிசுத்தாவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுக்கின்றவர் அவரே" என்று சொன்னான். 158. ஒரு நாள், அவர்கள் மத்தியிலிருந்து ஒரு சாதாரண மனிதன் வெளியே வந்தார். யோவான் மேல் நோக்கிப் பார்த்து இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கின்ற தேவாட்டுக் குட்டி” என்று சொன்னான். அவன் அப்படி செய்த போது அவன் கண்டான். அவன் "ஒரு அடையாளம் அவரை தொடர்ந்து வந்தபடியால் நான் அவரை அறிந்துக் கொண்டேன்'" என்றான். பூமியின் மேல் மிகவும் பெரிய இரண்டு மனிதர்கள், முகத்துக்கு முகம் நின்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை இங்கே கவனியுங்கள். 159. மிஷினரி பாப்டிஸ்ட் சபையில் என்னை பிரதிஷ்டைச் செய்த டாக்டர் ராய் டேவிஸ் என்று எனக்கு நினைவிருக்கிறது. அவர் "உனக்கு தெரியுமா; அங்கே என்ன நடந்தது பில்லி, என்ன நடந்தது" என்று சொன்னார். 160. யோவான் “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா” என்று சொன்னான்? யோவானின் தாழ்மையை கவனியுங்கள். அவன் “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா” என்று சொன்னான்? மேசியாவும், அவருடைய தீர்க்கதரிசியும் அங்கே இருந்தார்கள். அந்த நாட்களின் மூல காரியமும், வேதத்தினுடைய மூல காரியமும் அங்கே நின்றுக் கொண்டு, ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யோவான் தாழ்மையுடன் "நான் உம்மால் ஞானஸ்நானம் பெற வேண்டியவனாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா," என்றான்? 161. இயேசு "இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது" என்றார் யோவான் அவருக்கு இடங்கொடுத்தான். 162. டாக்டர் டேவிஸ் எனக்கு ஞாபகமிருக்கிறது. ஒருகால் இப்பொழுது அவர் இங்கிருக்கலாம். டாக்டர் டேவிஸ் உங்கள் பேரில் நான் இதை சுமத்தவில்லை. அவர் சொன்னார் முதலாவதாக இயேசு யோவானுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். ஏனென்றால், யோவான் இன்னும் ஞானஸ்நானம் பெறாதவனாயிருந்தான். பின்பு யோவான், இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்று சொன்னார். அது எனக்கு ஒரு போதும் சரியாய் வரவில்லை. 163. ஒரு நாள் பரிசுத்தாவியானவர் பக்கத்தில் இருக்கும் போது, ஒரு தரிசனத்தில் அது என்னவென்று நான் கண்டேன். ஆமென் 164. வார்த்தை வந்ததான தீர்க்கதரிசியாகிய யோவானும் இயேசுவும் எதிர் எதிராய் நின்றுக் கொண்டிருந்தார்கள் வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்தது. அவர் 'இப்பொழுது இடங்கொடு, அது ஏற்றதாயிருக்கிறது' இந்தவிதமாக நாம் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அதுதான் அந்த ஆட்டுக்குட்டி என்றும் அது அடிக்கப்படுமுன்னே கழுவப்பட வேண்டுமென்றும் தீர்க்கதரிசி அறிந்திருந்தான். ஆமென். ஆகவே அவன் அதை செய்தான். புரிந்துக் கொண்டீர்களா? அது வார்த்தையாயிருந்த படியினால், அது தீர்க்கதரிசியாகிய அவனிடத்தில் தான் வர வேண்டியிருந்தது. 165. (ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேசுகிறாள். ஒரு சகோதரன் வியாக்கியானம் சொல்லுகிறான்) ஆமென். 166. யோவான் தீர்க்கதரிசி. வார்த்தையானது அவருடைய தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்தது. வார்த்தை சரியாக தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்தது. ஏற்றதாயிருக்கிறது "அதன் அர்த்தம்” எல்லா நீதியையும் நாம் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது.'" 167. "ஓ" இப்பொழுது நான் பேசும் பொருளை விட்டு விலகி ஒரு நிமிஷம் எல்லா நீதியையும் நாம் நிறைவேற்றுவது எப்படி நமக்கு ஏற்றதாயிருக்கும் என்று பேசலாம் போலிருக்கிறது! ஏற்ற வேளை இங்கிருக்கிறது, நாம் எல்லா நீதியையும் நிறைவேற்ற வேண்டும். என்ன செய்ய வேண்டுமென்று நமக்கு தெரியும் பாருங்கள், நாம் அதை செய்யத்தான் வேண்டும், அது சரியே, உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 168. கவனியுங்கள், கர்த்தருடைய சமூகத்தில் யோவான் தன்னை தாழ்த்தினான் என்று நாம் பார்த்தோம். 169. என்னுடைய சகோதரனே, சகோதரியே, நண்பனே, காரியம் என்னவென்றால், உன்னுடைய சிறுமை அதனுடைய தன்மையைக் குறித்து நீ உணர்வுள்ளவனாயிருந்தல். புரிகின்றதா? நான் எவ்வளவு பெரியவன் என்ற உணர்வு உள்ளவனாய் இராதே. நீ எவ்வளவு சிறியவன் என்ற உணர்வுள்ளவனாயிரு. நீ சிறியவன். நாம் எல்லாரும் அந்த விதமாகத்தான் இருக்கின்றோம். நாமில்லாமல் எல்லாம் தேவனால் செய்ய முடியும், ஆனால் தேவனில்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. புரிகின்றதா? புரிகின்றதா? அவரில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது, நாமில்லாமல் அவரால் செய்ய முடியும். 170. அவருடைய கரங்களுக்குள் இருக்கக் கூடிய ஒரு மனிதனை கண்டு பிடிக்க தேவன் பிரயாசிக்கின்றார். அதை அவர் செய்ய எப்பொழுதும் முயற்சிக்கிறார். நீங்கள் கவனியுங்கள் எப்போது ஒரு அவர் ஏசாயாவை கண்டு பிடித்தார், எப்போது அவர் ஒரு ஏரேமியாவைக் கண்டு பிடித்தார் என்று வேதத்தினூடாக பாருங்கள். அதன் பின்பு, ஓருநாள் சிம்சோனை கண்டு பிடித்தார். ஆனால் சிம்சோன் தன்னுடைய பலத்தை தேவனுக்கு கொடுத்தான். ஆனால் அவனுடைய இருதயத்தையோ தெலீலாளுக்கு கொடுத்தான். 171. நீ உன்னுடைய எல்லாவற்றையும் தேவனுக்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கின்றாய்; உன்னுடைய பயபக்தி; உன்னுடைய மரியாதை; நீ யாரோ அதையெல்லாம் அவருக்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கின்றாய். ஒன்றுமில்லாதவனாய் இரு, நீ எவ்வளவு சிறியவன் என்று பார், அதைதான் நாம் செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அதுதான் உண்மையான தாழ்மை. அந்த வண்ணமாய்த்தான் அந்த சேராபீன்களும் அவருடைய சமூகத்தில் இருக்கின்றன. பாருங்கள் பயபக்தியினால் அவைகளினுடைய முகங்களும் தாழ்மையினால் கால்களையும் மறைத்துக் கொண்டன. 172. இப்பொழுது, மூன்றாவதாக, அவைகளால் பறக்க முடிந்தது. அவைகள் அவைகளை கிரியைக்குள்ளாக்கின, இரண்டு செட்டைகள் அவைகளுக்கு இருந்தன. 173. தேவன் எப்பேர்ப்பட்டதான ஒரு ஊழியக்காரனை, பயபக்தியுள்ள, தாழ்மையுள்ள, கிரியையிலுள்ள ஊழியக்காரனை ஆயத்தப்படுத்தி இருக்கிறார். என்பதனை, தம்முடைய தீர்க்கதரிசிக்கு காட்டுகிறார். அவரை நோக்கிப் பார்க்கின்றதான ஒரு உண்மையான தேவ ஊழியக்காரனாப் அவைகள் இருந்தன. மேட்டிமையடைந்ததினால் விழுந்து போன ஏசேக்கியாவை அவன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் ஒரு ஊழியக்காரன் அவருக்கு முன்பாக இருக்கின்ற ஊழியக்காரர்கள், பயபக்தி யுள்ளவனும், தாழ்மையுள்ளவனும், கிரியை செய்கிறவனுமாயிருக்கிறான். அவருடைய ஊழியக்காரர்கள் அந்த வண்ணமாகத் தான் உடுத்தியிருக்க வேண்டும். பயபக்தியையும், தாழ்மையையும் பிதாவின் வேலையில் தொடர்ந்து ஈடுபாடுள்ளவனுமாய் உடுத்தியிருக்க வேண்டும். ஆம் ஐயா, பயபக்தியாய், தாழ்மையாய் கிரியை செய்துக் கொண்டும் இருக்க வேண்டும். 174. நேற்று இரவு நாம் பேசின, அந்த கிணற்றண்டை காணப்பட்ட ஸ்திரீயைப் போன்று இப்பொழுது, ஒரு சிறிய முன் குறிக்கப்பட்ட வித்து அவளுடைய இருதயத்தில் இருந்தது. ஆனால், அதன் பேரில் ஒளிபட்ட மாத்திரத்தில், அவர் மேசியா என்று அவள் கண்டாள். அவள் கிரியை செய்வதற்கு அதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை அவள் கையில் இருந்த தண்ணீர் குடத்தைக் கூட அவள் மறந்து விட்டாள். எவ்வளவு சீக்கிரத்தில் அவள் கிரியைக்குள்ளானாள் என்பதை அது காட்டுகிறது. அவள் ஜனங்களுக்கு சொல்லி ஆக வேண்டும் அவள் மற்ற யாருக்காவது சொல்லியாக வேண்டும். அவள் மேசியாவைக் கண்டேன் என்ற நிச்சயத்தை உடையவளாயிருந்தாள். அவள் பட்டிணத்திற்குள்ளாக ஓடி, ஜனங்களுக்கு அறிவிப்பதில் அவள் சீக்கிரத்தில் கிரியைக்குள்ளானாள் 175. இரவெல்லாம் மீன் பிடித்து விட்டு, அதன் கரையில் உட்கார்ந்திருந்த அவன்,பேதுரு. இயேசுவானவர் அவனுடைய படகை கடன் கேட்டு கரையிலிருந்து சற்று தண்ணீருக்குள் தள்ளிச் சென்று, ஜனங்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தார். பின்பு அவர் சீமோனை நோக்கி "கடலின் ஆழத்தில் உன் வலையைப் போடு" என்றார். அவன் வலையை ஆழத்தில் போட்டான். 176. சீமோன் "நான் ஒரு மீன்பிடிப்பவன். சந்திரனும் மற்ற அடையாளங்களும் சரி என்று எனக்கு தெரியும். எப்பொழுது மீன்கள் ஓடுகின்றன என்று நான் நான் அறிவேன். அறிவேன். நான் இந்த குட்டையண்டைதான் பிறந்தேன். நான் இரவெல்லாம் மீன் பிடித்து ஒரு சிறு மீன்குஞ்சு கூட கிடைக்கவில்லை ஒன்றுகூட கிடைக்கவில்லை" என்றான். அவன் "அங்கே மீன்களேயில்லை. ஆனால் உம்முடைய வாக்கின்படி" (அங்கே தான் இருக்கின்றது காரியம்) "நான் வலையைப் போடுகிறேன்" என்றான். 177. நம்மால் காரியங்கள் இப்படியாய் தான் இருக்கும் என்று அறிய முடியாது, ஆனால் தேவனால் கூடும். நீங்கள் அதை விசுவாசிக்கத்தான் வேண்டும். பாருங்கள் தேவன் அறிவினால் அறியப் படமாட்டார். கல்வியினால் அறியப்பட மாட்டார். அவர் விசுவாசத்தினால் அறியப்படுபவர். விசுவாசத்தினால் மட்டும். 178. உம்முடைய வார்த்தையின்படியாய்! எனக்குத் தெரியும் அங்கே மீன்கள் இல்லை என்று. ஆனால் உம்முடைய வார்த்தையின்படி "வலையைப் போடு மீன்கள் அங்கே உண்டு" என்று நீர் சொல்வீரானால் 'நீர் அவைகளை, விசுவாசம் அவைகளை அங்கே கொண்டு வைக்கும். அவ்வளவு தான். நான் வலையைப் போடுகிறேன். 179. இங்கே உட்கார்ந்துக் கொண்டு வியாதியாயிருக்கின்ற ஜனங்களுக்கு தேவனிடமிருந்து உதவி தேவையானால் "நான் ஜெப வரிசையினூடாக கடந்து வந்திருக்கிறேன். நான் எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். ஆனால் உம்முடைய வார்த்தையின் படியாய் நான் வலைனைப் போடப் போகிறேன். நான் இப்பொழுதே வருகிறேன். நான் அதை பெற்றுக் கொள்ளப் போகிறேன். நான் அவருடைய சமுகத்தில் இருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்வீர்களானால், அதை தாழ்மையோடு, உத்தமத்தோடு, பயபக்தியோடு அதை உணர்ந்துக் கொள்வாயானால், வலையை போடு. இதை இறுக பற்றிக் கொள். தேவன் அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆகவே அது அவ்வண்ணமே தான் இருக்கும்! 180. அவன் ஒரு மீன்பிடிப்பவனாய் இருந்தபடியினால், ஒரு படகு நிறைய மீன் பிடிக்க வேண்டுமானால் அது என்னவாயிருக்கும் என்று அவன் அறிந்த மாத்திரத்தில், "இனிமேல் நீ மனுஷரை பிடிக்கிறவனாயிருப்பாய்" என்று இயேசு சொன்ன மாத்திரத்தில், அவன் ஒரு ஏழை மனிதன், ஆனால் சீக்கிரத்தில் அவன் கிரியைச் செய்தான். அதற்கு அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவன் தன்னை தாழ்த்தி கிறிஸ்துவுக்கு முன்பாக தாழ விழுந்து ''ஆண்டவரே என்னை விட்டு போய் விடும். நான் ஒரு பாவமுள்ள மனிதன்" என்றான், “என்னால் உம்முடைய சமுகத்திற்கு முன்பாக நிற்க முடியவில்லை" என்றான். 181. அதே காரியத்தை ஏசாயா செய்தான். "நான் பாவ உதடுகளுள்ள மனிதன். பாவ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவன்” என்று சொன்னான். எப்பேர்ப்பட்ட ஒரு நிலைமைக்கும் அவன் இருந்தான்! 182. பேதுரு அதே காரியத்தைச் சொன்னான். அவன் தன்னை தாழ்த்தினான். முகங்குப்புற தாழ வணங்கி ஆண்டவரே என்னை விட்டு போய் விடும் என்று கேட்டுக் கொண்டான். அவர் பேதுருவே பயப்படாதே இப்பொழுதிலிருந்து "நீ மனுஷரை பிடிக்கிறவனாயிருப்பாய்" என்று சொன்னார். உடனடியாக அவன் கிரியையில் இறங்கினான். 183. ஒரு நேரம், இயேசுவானவர் சுகமாக்கின ஒரு குருடன் இருந்தான். அவன் கிரியையில் இறங்க அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவன் அவருடைய கீர்த்தியை பரப்பும் கிரியையில் இறங்கினான். யாரோ வந்து "ஏன், உன்னை சுகமாக்கினது யார்?'' என்றார்கள். ஆசாரியன் கேட்டான். யார் தன்னை சுகமாக்கினது என்று அவன் அவனுக்குச் சொன்னான். 184. முதலாவதாக அவர்கள் அவனுடைய தாயையும் தகப்பனையும் விசாரித்தார்கள். அவர்கள் பயந்தார்கள். ஏனென்றால் யாராவது இயேசுவை அறிக்கையிட்டால், அவர்களை ஜெபாலயத்திலிருந்து புறம்பாக்கிப் போடுவார்கள். அவர்கள் அதை அவர்களுடைய மகனின் மீதே போட்டு விட்டார்கள். அவன் வயது வந்தவனாயிருக்கிறானே, அவனையே கேளுங்கள்” என்று சொல்லி விட்டார்கள். அவனோ "நசரேயனாகிய இயேசு என்ற ஒருவர் என்னை சொஸ்தமாக்கினார்" என்றான். 185. “ஏன், தேவனுக்கு துதியை செலுத்து. நாங்கள் இருக்கிறோம். இந்த நசரேயனாகிய இயேசுவை குறித்து நாங்கள் ஒன்றும் அறியோம். அவன் ஒரு பாவி. அவனுக்கு எந்த துதியையும் செலுத்தாதே, அதெல்லாவற்றையும் தேவனுக்கு கொடு. அவன் எங்கிருந்து வந்தான் என்று எங்களுக்கு தெரியாது” என்று அவர்கள் சொன்னார்கள். 186. இந்த குருடான மனிதன் அவர்களை கேட்கும்படியாக ஒரு நல்ல கேள்வியை உடையவனாயிருந்தான். அவன் "இது ஒரு மகா பெரிய விநோதமான காரியம். நீங்கள் எல்லாரும் இன்றைய ஆவிக்குரிய தலைவர்களாயிருக்கிறீர்கள். நான் குருடனாய் பிறந்தேன். இந்த மனிதன் என் கண்களைத் திறந்தான். இருந்த போதிலும் அவர் எங்கிருந்து வந்தார் என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள், பாருங்கள் இப்பொழுது இது ஒரு விநோதமான காரியமாயிருக்கிறது." என்றான். 187. நான் அதே காரியத்தை சொல்லலாமா? அதே தேவன் தான் கடைசி நாளில் தம்முடைய சபையின் மேல் வருவேன் என்று வாக்சளித்திருக்கிறார். அவர்களிடத்தில் அதற்கு பதில் கிடையாது. பெற்றுக் கொள்ளுகிறவன் எவனோ அவனிடத்தில் பதிலிருக்கும். 188. "அவர் ஒரு பாவியோ இல்லையோ, என்னால் அதை சொல்ல முடியாது. ஆனால் எனக்கு ஒரு காரியம் தெரியும். நான் குருடனாய் இருந்தேன், இப்பொழுதோ காண்கிறேன்" என்றான். 189. ஒரு சமயம் நான் பாவியாயிருந்தேன். தேவனுடைய கிருபையினால் நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏதோ சம்பவித்தது என்று நான் அறிவேன். ஏதோ சம்பவித்தது. நீங்கள் அதை பரிசுத்த உருளை அல்லது என்னவாய் வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அது என்னை 30 வருடங்களுக்கு முன்பாக இரட்சித்தது. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. ஆகவே நான் அநுபவித்துக் கொண்டிருக்கிறேன். யாரோ ஒருவர் "உனக்கு புத்திக் கோளாறு வந்துவிட்டது" என்றார். 190. நான் "அப்படியானால் என்னை தனியாக விட்டு விடுங்கள். நான் அந்த வழியிலிருந்ததைக் காட்டிலும் இந்த வழியில் இன்னும் மேலாக இருக்கிறேன். ஆகவே நான் இருக்கின்ற விதமாக இருக்க என்னை விட்டு விடுங்கள். இந்த விதத்தில் நான் மேலாக உணருகிறேன். மேலாக இருக்கின்றேன். இன்னும் நான் அதிகமாகச் செய்ய முடியும்.'' ஆம் ஐயா என்று சொன்னேன். 191. அவன் உடனடியாகவே கிரியைக்குப் போய் விட்டான். ஆம் ஐயா. அவருடைய புகழை அவன் எல்ல இடத்துக்கும் பரப்பினான். 192. "இதோ நான் என் வாக்குத்தத்தத்தை அனுப்புகிறேன். என் பிதாவின் வாக்குதத்தத்தை உங்கள் மேல் அனுப்புகிறேன். ஆனால் நீங்கள் காத்திருங்கள்" என்று இயேசு சொன்னார். 'பரத்திலிருந்து வரும் பலத்தினால் நீங்கள் தரிப்பிக்கப் படுமட்டாக எருசலேமிலே காத்திருங்கள்' என்று சொன்னார். தேவன் வாக்குதத்தத்தை காத்துக் கொண்டார் என்று பெந்தேகோஸ்தே நாளன்றே கண்டார்கள். 193. முதல் ஜெப வரிசையல்ல,அல்லது முதல் முறையாக வரிசையில் வருவதல்ல, ஆனால் அது சம்பவிக்குமட்டாய் அங்கேயே தரித்திருப்பது, பார்த்தீர்களா. "நடக்குமட்டும்" ஒரு நாள் இரண்டு நாள் அல்லது 10 வருடங்களல்ல “அது சம்பவிக்குமட்டும்” அது மட்டும் தரித்திரு! 194. அவர்கள் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்ட போது உடனடியாக அவர்கள் கிரியைக்குள்ளானார்கள்; வீதிக்கு வந்து சத்தமிட்டுக் கொண்டு, குடித்து வெறித்தவர்களைப் போன்று நடந்துக் கொண்டு, பல பாஷைகளில் பேசிக்கொண்டும் இருந்தார்கள். என்னமாய் தொடர்ந்து போனார்கள்! உடனடியாக அவர்கள் கிரியைக்குள் ஆயினர். அவர்கள் தங்களை தாழ்த்தினவுடன் உள்ளே போய் கதவையடைத்துக் கொண்டு, தேவனுடைய வார்த்தையின் பேரில் காத்துக் கொண்டிருந்தார்கள். 195. ஓ! நாம் என்ன கண்டோம் நண்பர்களே! நேரம் ஆகிக் கொண்டே போகிறது என்று நானறிவேன். நான் இன்னமும் அதிகம் உங்களை காக்க வைக்க விரும்பவில்லை. ஆனால் பாருங்கள்! இந்த கடைசி சில வருஷங்களில் நாம் கண்ட காரியங்கள் நம் ஒவ்வொருவரையும் கிரியைக்குள்ளாக ஆக்கியிருக்க வேண்டும். நம்மை கிரியை செய்கிறவர்களாக ஆக்கியிருக்க வேண்டும். என்ன? முதலாவது நம்மை பயபக்தியாக்கி, தாழ்த்தி, கிரியைக்குள்ளாக்குகிறது. அன்பானது நம்முடைய இருதயங்களுக்குள்ளாய் எரிந்துக் கொண்டு, அழிந்து கொண்டிருக்கின்ற ஒரு உலகத்தைக் காணும் படியாக முடிந்தவரை பிரயாசிக்கின்றது. எனக்கு தெரிந்த மட்டில், பரலோகத்திலிருந்து அக்கினி விழுவதற்கு முன்னர் சபையானது பெற்றுக் கொள்ள வேண்டிய கடைசி அடையாளத்தையும் தேவன் செய்திருக்கக் கண்டிருக்கிறது. வனாந்திரத்தில் காணப்பட்டதான அதே அக்கினி ஸ்தம்பம், பரி. பவுலை வழியில் சந்தித்து கீழே விழத் தள்ளிய அக்கினி ஸ்தம்பம், இங்கே அதே மேசியாவில் செய்த அதே காரியங்களை இங்கு செய்ய நாம் புகைப்படமாய் எடுத்து வைத்திருக்கின்றதாகும். 196. ஒரு பூசனி கொடியின் ஜீவனை எடுத்து தர்பூசனி கொடியில் போட்டால், அது பூசனிக்காயைத் தான் விளையச் செய்யும். ஒரு திராட்சக் கொடியின் ஜீவனை எடுத்து பியர் மரத்தில் போட்டால், ஜனங்கள் அது திராட்சைப் பழங்களைத் தான் கொடுக்கும். ஏனென்றால் அதற்குள்ளாக இருக்கும் ஜீவன் அது தான். 197. நாம் கண்டு அறிந்திருக்கின்ற இதை உலகமெங்கிலுள்ள ஆயிரமாயிரமானவர்கள் அறிந்திருப்பார்களேயானால் நலமாயிருக்கும். விஞ்ஞானம் அதை நிரூபிக்கிறது. எல்லா இடங்களிலும் புகைப்படங்கள் எடுக்கப் பட்டிருக்கிறது. அது இங்கே இப்பொழுது இருக்கிறது. அது அவ்வளவு உண்மையாய் இருக்கிறது. அது இப்பொழுது இங்கே இருக்கிறது. அது இயேசுகிறிஸ்துவாகிய நபரிலே இருந்த போது செய்த அதே காரியங்களை அதே ஜீவனைக் கொண்டு வரவில்லையென்றால், அவருடைய சபையில் அதே காரியங்களை அது செய்யவில்லையென்றால், அப்பொழுது அது தவறானதாயிருக்கிறது. ஆனால் அது அதே ஜீவனைக் கொண்டு வருமாயின், அப்பொழுது அது இஸ்ரவேலரை வழி நடத்தின அதே அக்கினி ஸ்தம்பமாய் தான் இருக்க வேண்டும். அது நம்மை வாக்குதத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்லுகின்றது. "என்னுடைய பிதாவின் வீட்டினில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு" என்ற வாக்குதத்தத்தை அவர் நமக்கு கொடுத்திருக்கிறார். அது நம்மை அங்கே நடத்துகிறது. அது முழுவதுமாக ரூபகாரப்படுத்தப்பட்ட தேவனுடைய வெளிப்பட்ட வார்த்தையாயிருக்கின்றதை நாம் காணுகின்றோம். முடவன் நடக்கிறான். செவிடர் கேட்கிறார்கள். குருடர் காணுகிறார்கள். மரித்தோர் எழுப்பப்படுகிறார்கள் இருதயத்தின் நினைவுகள் மறைக்கப்பட முடிகிறதில்லை. அது நேரடியாக வெளியே சொல்லப்படுகிறது, அவர் செய்த அதே கிரியைகள் இவை. அது என்ன, ஏதோ மனிதனா? அது மேசியா! அது மேசியா, தேவன், பரிசுத்தாவி அதே நபர். அது நம்மை கிரியைக்குள் கொண்டு போக வேண்டும். 198. பெந்தேகோஸ்தே சபையானது, அதை குறைக் கூறுவதற்கு பதிலாக, இழந்து போனதும் மரித்துக் கொண்டிருக்கிறதுமான ஜனங்களிடத்தில், எல்லா இடத்திலும் தாழ்மையோடும் அன்போடும் கிரியையிலிருந்து கொண்டு அதை எடுத்துக் காட்ட பிரயாசிக்க வேண்டும். நாம் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். நாம் அவரை நேசிக்க வேண்டும். நம்மை தாழ்த்தி, நம்மை பயபக்தியுள்ளவர்களாக்கி, பயபக்தியுடனும் தாழ்மை யுடனும் அந்த சேராபீன்களை போன்று நம்மை கிரியையில் ஆக்கியிருக்க வேண்டும். இந்த கடைசி நாட்களில் வாக்களிக்கப்பட்டதும் தெளிவாக ரூபகாரப்படுத்தப்பட்டதுமாய் அது இங்கே இருக்கிறது நாம் அதை காணுகின்றோம். இயேசு அப்படிச் சொல்லியிருக்கிறார். அது சம்பவிக்கும் என்று சொல்லியிருக்கிறார். அது எரிக்கப் பட்டு போவதற்கு முன்னர் இதோ அது இங்கே இருக்கிறது. அவருடைய வருகையின் அந்த அடையாளம். அவருடைய வருகை யானது மிகவும் சமீபத்திலிருக்கின்றது என்று நிரூபிக்கிறது. அது எந்த நேரத்திலும் வரலாம். சபையானது இப்பொழுதே எடுத்துக் கொள்ளப்படுவதற்கு, ஒன்றும் தடையாய் இருக்கவில்லை. 199. நினைவிருக்கட்டும், மிருகத்தின் முத்திரை இன்னொரு பக்கத்தில் இருக்கிறது. பாருங்கள். கொள்கை தவறிய நிலைமை. அப்பொழுது அது ஒரு சபையாய் உள்ளே வருகிறது. இப்பொழுது பொறுங்கள், ஒருகால் நான் ஏதோ சொல்லியிருக்கலாம். அது நான் அதை காணுகின்றதான விதம். புரிகின்றதா. கவனியுங்கள். 200. வார்த்தை வார்த்தையின்படியாய் அது ஏற்கெனவே நிறைவேறியாயிற்று. அது நம்மை கிரியையில் ஆக்கியிருக்க வேண்டும். நம்மால் இயன்ற அளவிற்கு, தேவனுடைய இராஜ்ஜீயத்திற்குள் ஒவ்வொரு காணாமற்போன ஆத்துமாவையும் நாம் கொண்டு வந்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், இந்நாட்களிலொன்றில் நீங்கள் அவர்களை கொண்டு வரத்தான் போகிறீர்கள், அப்போது அது ஒரு நன்மையும் செய்யாது. கத வானது அடைக்கப்பட்டு போகும், அதற்கு மேல் ஒன்றும் இருக்கப் போகிறதில்லை. அவர்கள் மூளையறிவில் எல்லாவற்றையும் சரி படுத்தினவர்களாய், உணர்ச்சிக்குள்ளாகி, சத்தமிட்டு, மேலும் கீழுமாக குதித்து இவைகளை உரிமை பாராட்டலாம்; உங்களுக்கு தெரியுமா ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகை எண்ணெய் வாங்க வந்த போது, அவள் அதை பெற்றுக் கொள்ளவில்லை. இந்த கடைசி நாட்களின் சரித்திரத்தில், பிரஸ்பிடேரியன்கள்? லூதரன்கள், மற்றயாவரும், பெந்தேகோஸ்தே செய்திக்கு வர முயற்சிக்கின்ற ஒரு நேரத்தை நீங்கள் எப்போதாவது கண்டிருக்கிறீர்களா? இயேசு என்ன சொன்னார்? "அவர்கள் எண்ணெய் வாங்க வந்த போது, அது வேளையாயிருந்தபடியினால் மணவாட்டியானவள் உள்ளே போய் விட்டாள்'' புத்தியுள்ள கன்னிகைகள் உள்ளே சென்றனர். ஆனால் அவர்களுக்கோ எண்ணெய் கிடைக்கவில்லை. அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. அவ்வளவுதான். அது வேதவார்த்தைகளின் படியாய்தான் இருக்கிறது. 201. நீங்கள் இந்த அடையாளங்களையும், இந்த மற்றக் காரியங்களையும் பாருங்கள், அவருடைய வருகைக்கு இவைகளெல்லாம் பொருத்தமாய் அமைந்துள்ளது. 202. அவர் ஏழாம் ஜாமத்தில் உள்ளே வருகிறார். சிலர் முதலாம் ஜாமத்தில், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஜாமத்தில் நித்திரையிலாழ்ந்தார்கள். ஏழாம் ஜாமத்தில் ஒரு சத்தம் "இதோ மணவாளன் வருகிறார்" என்று உண்டானது. ஏழாவது சபைக்காலம், அதுதான் ஜாமம், அதை கவனித்ததான காலம். இது லவோதிக்கேயா சபையின் காலம், அதன் முடிவினில். ஆமென். கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்கள் ஏன் விழித்தெழக்கூடாது, முடிவானது நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் தூங்குகிறீர்கள்? 203. ஆனால், நினைவில் வையுங்கள், லவோதிக்கேயா காலத்திலுள்ள சபையானது வெதுவெதுப்பாகி விடும். நீ ஐஸ்வரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும் சொல்லுகிற படியால், அவர், நீ நிர்வாணியும், குருடும், தரித்திரனும் பரிதபிக்கப்படத்தக்கவனுமாய் இருக்கிறாய் ஆனால் அதை அறியாமலிருக்கிறாய் என்று சொன்னார். "நான் உன்னை வாந்திப் பண்ணிப் போடுவேன்" என்றார். 204. இங்கே நாம் இப்போது எல்லாக் காரியங்களின் முடிவிலும், சரித்திரத்தின் முடிவிலும், நாகரீகத்தின் முடிவிலும் இருக்கிறோம். நீங்கள் அதைக் காணலாம். வீதியை நோக்கிப் பாருங்கள். 205. மோட்டார் வண்டியை ஓட்டிக் கொண்டு என்னை இங்கே கொண்டு வந்த கார் டிரைவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் "இங்கே ஒரு மனிதன் சுய புத்தியாய் நடந்துக் கொள்ளுகின்றதை நான் கண்டால், அவன் ஒரு அந்நியன் என்று எனக்குத் தெரியும்" என்று சொன்னான், புரிகின்றதா? இப்பொழுது, உங்களுடைய டாக்ஸி டிரைவர்களில் ஒருவன் அதை சொன்னான். 205. அது இங்கு மட்டுமல்ல, ஆனால் எல்லா இடத்திலுமுண்டு, எல்லாவற்றிர்க்கும்; மனிதன் எவ்வளவு கொடூரமாய் இருக்கிறான். எல்லா விதமான பொல்லாத காரியங்களும் அவர்கள் செய்துக் கொண்டிருக்கின்ற காரியங்களுக்கும் முடிவு. உலகமானது தலைக் கீழாக்கப்பட்டிருக்கிறது. வீதிகளை நோக்கிப் பாருங்கள். அதை சற்று நோக்கிப் பாருங்கள் ஓ! எல்லா இடத்திலும் இருக்கிறது! அமெரிக்காவில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும், ஏன், இது ஒரு நவீன சோதோம். 207. எரிக்கப்படுவதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. அவ்வளவு தான். அது சுத்தமாக்கப்படும். தேவன் அதைச் செய்வார். அவருடைய கற்பனையின்படி அது அவசியமாயிருக்கிறது. ஒரு தானிய குஞ்சமானது (Tassel) தன்னுடைய ஜீவகாலத்தை முடித்தபிறகு, அது அழிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. ஒரு புஷ்பமானது தன் ஜீவியத்தை ஜீவித்த பிறகு அது மரிக்க வேண்டியதாயிருக்கிறது. நாகரீகமானது, அதன் காலத்தை ஜீவித்து முடித்தாயிற்று. சபைக் காலமானது ஜீவித்து முடிந்தாயிற்று. ஸ்தாபனங்கள் ஜீவித்து முடிந்தாயிற்று. 208. இது இணைகின்ற நேரம். அங்கே ஒரு ஐக்கிய தேசம் இருக்கின்றது. ஐக்கிய சபை, ஐக்கிய முயற்சி. அது எதின் அடையாளமாய் இருக்கிறது? கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் இணைகின்றனர். அது தான் காரியம். அதெல்லாம் நிழலும், மாதிரிகளுமாய் இருக்கின்றது. எல்லாக் காரியங்களும் இணைக்கப்பட விரும்புகின்றது, ஆகவே அதுவே ஒரு அடையாளம். கிறிஸ்துவானர் தம்முடைய மணவாட்டியுடன் இணைக்கப்படும் தருவாயில் இருக்கிறார். ஒரு கல்யாண விருந்து (Wedding Supper) ஆகாயத்தில் நடக்கப் போகின்றது. ஆகவே அவருடைய அடையாளங்கள் அருகாமையிலிருக்க நாம் காணும் போது, இது சபையை கிரியைக்குள்ளாக தூக்கி எரிய வேண்டியிருக்கிறது. இந்த காரியங்களெல்லாம் நமக்கு அடையாளங்களாய் இருக்கின்றன. எல்லா இடத்தும். ஓ! நாம் கிரியையிலிருக்க வேண்டும். 209. நாம் பழைய நாட்களின் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவைப் போன்று, சுயமாய் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுகின்ற மனிதன் என்ன நிலைமைக்கு வருகிறான் என்று நாம் பார்க்கிறோம். நாம் எதை பார்க்கிறோம், எழும்பி வருகின்ற இந்த ஸ்தாபனங்கள் "நீங்கள் எங்களை சார்ந்தவர்களாய் இராதபடியினால், நீங்கள் அதிலேயே இல்லை" என்று சொல்லுகிறார்கள், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று நாம் பார்க்கிறோம். அவர்கள் என்ன இழந்து போகிறார்கள்? அவிசுவாசத்தோடு, பாவகுஷ்ட ரோகத்தினால் பீடிக்கப்பட்டது போன்று, தேவனுடைய வார்த்தையின் மேலுள்ள அவர்களுடைய பிடிப்பை அவர்கள் இழந்து போனார்கள். இந்த ஜனங்களில் சிலர் முயற்சிக்கிறார்கள், அவர்கள் பறிமாறிக் கொள்ளுகிறார்கள். தேவனுடைய வார்த்தையின் மேலுள்ள அவர்களுடைய பிடிப்பை இழந்து, அதற்கு பதிலாக கொள்கைகளை பற்றிக் கொள்கின்றனர். அவர்களுக்குள் அவர்கள் என்னத்தை பெற்றுக் கொண்டார்கள் ஒரு குஷ்டரோக குழப்பம். அது சரி தான். 210. பழைய உசியாவைப் போன்று, அபிஷேகம் பண்ணப் பட்ட ஸ்தானத்தை எடுக்க முயற்சித்தல். ஒரு டாக்டர் பட்டமோ அல்லது ஏதோ இருக்கின்றதேயொழிய வேறொன்றும் உடையவர்களாயில்லை. தேவன் ஒரு டாக்டர் பட்டத்தை பார்க்கிறதில்லை; தாழ்மையுள்ள இருதயத்தை, அவரை விசுவாசிக்கின்ற யாரையோ அவர் தேடுகிறார். ஆனால் நாமோ ஒரு மனிதனை எடுத்து, அவனை அத்தியட்சனும், மேற்பார்வையாளனும், பிஷெப்புகளுமாக கல்வி போதித்து ஒரு தெய்வீக பொறுப்பை ஏற்க, மாம்சீக கல்வியை அவனுக்கு கொடுக்கின்றோம். அந்த ஸ்தானத்தை எடுக்க நமக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவையாக இருக்கிறது. பரிசுத்தாவியானவரே நம்முடைய உபாத்தியாயர். இந்த கடைசி நாட்களிலே இந்த வேளையின் அடையாளமாய் அவரே தம்மை தாமே அறியப்படுத்துகின்ற ஒருவராயிருக்கிறார். ஆனால் நாமோ. தன்னை உயர்த்திக் கொண்ட ஏசேக்கியாவைப் போன்று, அவர்களுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம். 211. தரிசனத்தின் விளைவுகள் தீர்க்கதரிசிக்கு என்ன செய்தது என்று பாருங்கள். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன், கர்த்தருடைய வார்த்தை வரதக்கதான ஒரு பாத்திரமாயிருந்தான். அவன் தெரிந்துக் கொள்ளப்பட்டனும், தீர்க்கதரிசியாக பிறந்தவனுமாயிருந்தான். முடிவிலே, வாளால் துண்டாக வகுக்கப்பட தன் ஜீவனை கொடுத்தவனுமாய் இருந்தான். ஆனால் இந்த மகா பெரிய தீர்க்கதரிசியான இவன், பரத்திலிருந்து வந்த தரிசனத்தில் அதன் ஒழுங்கினை கண்ட போது, தேவன் எப்படி தம்முடைய மனிதனை ஆயத்தப்படுத்துகிறார் என்பதை கண்டு பிடித்தான். ஏன், தீர்க்கதரிசியானவனே, தான் ஒரு பாவி என்று அறிக்கை செய்யும்படியாக ஆக்கினது. 212. நாமோ பெரியவர்களாகவும், ஒருவிதமாக காலரை திருப்பி அணிந்து கொள்ளுகிறவர்களாகவும், ஒருவிதமான ஆடைகளை அணிந்து கொள்ள விரும்புகிறோம். நீங்கள் பாருங்கள் அது நம்மை அவ்வளவு பரிசுத்தமாயும் பயபக்தியாயும் இருப்பது போன்று காணச் செய்கிறது. நம்மிடம் பரிசுத்தம் கிடையாது நம்மால் பரிசுத்தமாயிருக்க முடியாது. பரிசுத்தம் தேவனுடையது புரிகின்றதா? நிச்சயமாக. அது ஒன்றும் ஒரு பரிசுத்த சபையல்ல. ஒரு பரிசுத்த மலையல்ல; அது ஒரு பரிசுத்த தேவன். அது சரி பரிசுத்த ஒரு பரிசுத்த தேவன், அது ஜனங்களிலுள்ள தேவன். பேதுரு மறுரூபமலையை "பரிசுத்த மலை" என்று குறிப்பிடுகிறான், அதனுடைய அர்த்தம் பரிசுத்த தேவன் அந்த மலையின் மேல் இருந்தார் என்பதாகும். அதை இப்பொழுது பாருங்கள். ஆனால் அது ஒரு பரிசுத்த தேவன், தேவனுடைய சமூகம் தான் அதை பரிசுத்தமாக்குகின்றது. 213. நமது மத்தியிலிருக்கின்ற தேவனுடைய சமூகமே பரிசுத்தத்தை கொண்டு வருகின்றதேயொழிய, என்னுடைய பரிசுத்தமல்ல, ஆனால் அவருடைய பரிசுத்தம். அவருடைய சமுகமே பரிசுத்தத்தை கொண்டு வருகின்றதாயிருக்கிறது. நாம் நம்மை தாழ்த்த கடமைப்பட்டுள்ளோம், நம்மை பயபக்தியால் தாழ்மையால் மூடிக் கொண்டு, ''கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய இராஜ்ஜியத்தில் என்னை ஏற்றுக் கொள்ளும்" என்று சொல்லுங்கள். அவருடைய பரிசுத்தம், நம்முடையதல்ல. பரிசுத்த ஆவி! 214. நான் "அசுத்த உதடுகள் உள்ள மனிதன்" என்று அறிக்கையிட்டு, அதை செய்யும்படியாய் அவனை ஆக்கியது. ஒரு தீர்க்கதரிசி! தேவனே, அப்பேர்ப்பட்டதான ஒரு தரிசனம் எங்களுக்கு தேவையாயிருக்கிறது! தேவையாயிருக்கிறது! அவன் அங்கே மேலாக நோக்கிப் பார்த்தபோது இந்த தேவனுடைய சுத்திகரிக்கும் வல்லமையைக் கண்டான். 215. இப்பொழுது தேவன் அதை எப்படி செய்தார் என்பதை கவனியுங்கள். அவர் அந்த சேராபீன்களில் ஒன்றை அனுப்பி, குறட்டை எடுத்து பலிபீடத்திலிருந்து ஒரு தணல் வீசும் கரித்துண்டை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு, ஏசாயாவின் தலையை பின்னிட்டு சாய்த்து அதனால் அவனுடைய உதடுகளை தொட்டு தொட்டு "உன் அக்கிரமம் நீங்கிற்று" என்று சொன்னது. 216. அதன் பின் ஏசாயா ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டான். நல்ல ஒருவேளை இதை உள்ளே போடலாம். ஒருகால் மிகவும் பொருத்தமாயில்லாமல் இருக்கலாம். ஆனால் நான் அப்படி இருக்கிறது என்று நம்புகிறேன். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளை அக்கினியால் சுத்திகரிக்கிறார், வேத சாஸ்திரத்தின் மூலமாயல்ல அல்லது ஏதோவிதமான ஏதோ விதமான புத்தகங்களினாலல்ல, என்பதை நீங்கள் கவனித்தீர்களா? புரிகின்றதா? அவர் தம்முடைய ஜனத்தை அக்கினியால் சுத்தம் பண்ணுகிறார்; பரிசுத்தாவியும் அக்கினியும்; கொள்கைகள் அல்லது புத்தகங்கள் அல்லது கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்களினாலோ, பல ஜெபங்களினாலோ இல்லை மற்றக் காரியங்களின் வேறு பிரிதலினால் சுத்தம் பண்ணுகிறதில்லை. அவர் அவர்களை பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட தணல் நெருப்பினால் சுத்தம் பண்ணுகிறார். அந்த விதமாகத்தான் அவன் அவனை ஒழுங்குக்குள்ளாக்குகிறார். ஆம். ஆம் ஐயா. ஆரம்பத்திலே தேவன் அவ்விதமாகத்தான் அவருடைய தீர்க்கதரிசிகளை சுத்தம் பண்ணினார். 120 பேர் மேல் அறையில் இருந்த போது, பரிசுத்தாவியினால் ஊற்றப்பட்ட அக்கினிமயமான நாவுகள் அவர்கள் மேல் அமைந்தன. அவர்கள் சுத்தமாக்கப்பட்டு, சேவைக்கு ஆயத்தமாயிருந்தனர். அந்தவிதமாகத்தான் தேவன் சுத்தம் பண்ணுகிறார். கற்றுக் கொள்வதனாலல்ல, ஒரு B.A; அல்லது D.D. Ph'D. பட்டம் பெறுவதனால்ல, ஆனால் பரத்திலிருந்து பரிசுத்த அக்கினியை பெற்றுக் கொள்வதனால், அது உன்னுடைய உதடுகளின் பொய்யை, உனக்குள்ளாயிருக்கும் மாம்சீகமானதை எடுத்துப் போட்டு, அந்த காரியங்களை, மேலாக வெளி கொண்டு வரும் வீணான உலக காரியங்களை அது எரித்துப் போட்டு, அங்கே அவருடைய சமுகத்தை வைத்து, அந்த நபரால் ஜீவிக்கும்படி செய்யும். தேவன் தம்முடைய சபையை சுத்திகரிப்பது பரிசுத்த அக்கினியை கொண்டு தான். ஏசாயா அதை கற்றுக் கொண்டான். தேவன் அறிவினால் சுத்திகரிக்கிறதில்லை என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். அவர் பரிசுத்தாவியினால் சுத்தமாக்குகிறார். 217. அவன் எப்படி இருக்கிறான், ஒழுங்காக ஆக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசி எப்படியிருக்கிறான் என்று பாருங்கள். இப்பொழுது அவர் அவனுடைய உதடுகளைச் சுத்தமாக்கினார், அவனுடைய அக்கிரமத்தை நீக்கினார். அதன் பின்பு அவன் அறிக்கை செய்த பின்பு, தன்னை தாழ்த்தின பின்பு, அவன் தேவ சமுகத்தை கண்ட மாத்திரத்தில் "நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன்" என்று சொன்னான். 218. நான் சொல்லுகின்றதை கவனித்துக் கொண்டு வருகிறீர்களா? நாம் இப்பொழுது என்ன அறிந்துக் கொண்டோம் நாம் தேவனுடைய சமுகத்திலிருக்கிறோம். அது சரி. நாம் இப்பொழுதே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மால் அதை உள்கிரகித்துக் கொள்ள முடியாது, ஆனால் நாம் இப்பொழுது அவருடைய சமுகத்தில் இருந்துக் கொண்டு, தேவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் இங்கு இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அவர் இங்கே இருக்கிறார். 219. நான் உங்களுடைய சகோதரன். ஆனால் அவர் "நான் செய்யும் கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்" என்றார். அவர் சொன்னது அதுதானா? சரி. அவர் இங்கு இருப்பாரானால், அவருடைய ஆவி இங்கே இருக்கிறது அது தான் அவர் இருக்கிறது. அப்படியானால் நம்மால் நம்முடைய எண்ணங்களை அவரிடத்தில் ஒப்படைக்கக் கூடுமானால், நம்முடைய எண்ணங்களை நம்மை விட்டு அகற்றிவிட முடியும். இதற்கு எந்த எண்ணமுமில்லாதிருக்கின்றது போன்று, அப்படியானால் இன்னொரு சத்தம் இதன் மூலமாக பேசக்கூடும். அந்த விதமாகத் தான். நம்மால் மட்டும் நம்மை வெறுமையாக்கக் கூடுமானால் அப்படியாகும். அதில் தான் இருக்கிறது இரகசியம், உங்களை நீங்கள் அப்புறப்படுத்துங்கள். உங்களுடைய சொந்த எண்ணங்களை அப்புறப்படுத்துங்கள். உங்களுடைய சொந்த வழிகளை அப்புறப்படுத்துங்கள், அப்பொழுது தேவன் உனக்குள் அசைவார். அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாத, இயேசு. கிறிஸ்துவாயிருப்பாரானால் அதை நீ விசுவாசிக்கிறாயா? நீ இப்பொழுதே அதை விசுவாசித்து அது உண்மையா இல்லையா என்று பார். 220. இங்கே எனக்கு நேராக உட்கார்ந்துக் கொண்டிருக்கும் கொண்டே இருக்கிறேன். இந்த சிறு ஆளை நான் கவனித்துக் உன்னிடத்தில் ஜெப அட்டை இல்லை. நீ தான், நீ தான், நீ இங்கே எதற்காக உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாய் என்று தேவன் எனக்கு சொல்வாரானால், நீ அதை விசுவாசிப்பாயா? அது ஒரு ஆவிக்குரிய தொல்லை. நீ அதில் எல்லாம் சிக்குண்டிருக்கிறாய், என்ன செய்வதென்றே உனக்கு தெரியவில்லை. அது சரி என்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. சரியாய் எல்லாம் முடிந்து விட்டது. நான் என்ன சொன்னேனோ அந்த வார்த்தையை எடு, எல்லாம் முடிந்து விட்டது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 221. அந்த கருத்த ஸ்திரீ, அங்கே பின்னால் உட்கார்ந்துக் கொண்டு, அவனை நோக்கிப் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள், அவளுக்கு இருதய வியாதி. தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நிச்சயமாக. நீ அதை விசுவாக்கிறாயா? சரி, உன்னுடைய சுகத்தை நீ பெற்றுக் கொள்ளலாம். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், என்று விசுவாசிக்கிறாயா? 222. அந்த மனிதன், கையை உயர்த்தினவாறு இருக்கின்ற அந்த வெள்ளை மனிதன், நான் தேவனுடைய தீர்க்கதரிசி, அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கின்றாயா? உன்னை எனக்கு தெரியாது. நீ எனக்கு ஒரு அந்நியன். உன்னிடம் ஜெப அட்டை, அல்லது ஏதாவது உண்டா? நீ இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கின்ற ஒரு சாதாரண மனிதன், சரி ஐயா, உம்முடைய தொண்டையில் ஒரு வித வளர்ச்சி இருக்கிறது. அது சரியா? அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா? உன் முழு இருதயத்தோடு என்னை நீ விசுவாசிக்கின்றாயா? உனக்கு இன்னுமொன்று இருக்கிறது. உன்னுடைய இருதயத்தில் பெண்ணை பற்றினது, ஒரு பாரம் இருக்கிறது. அது ஒரு சிறு உன்னுடைய பேரப்பிள்ளை. அவளுக்கு ஒரு கை சரியாயில்லை. அவருக்கு ஒரு கை சரியாயில்லை. அது சரி. அது ஒரு நல்ல தொடர்பு இருக்கிறது. ஒரு நிமிடம். அது உண்மைதானா? நீ கனக்டிகட்டிலிருந்து வருகிறாய், உன்னுடைய பெயர் வில்சன். உன்னுடைய முதற்பெயர் ஆர்ட், ஆர்ட் வில்சன் (Art Willson) அது முற்றிலும் சரி. அது உண்மையா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ("ஆமென்" என்று சபையார் கூறுகின்றனர்) சரி. 223. இங்கே நேராக ஒரு ஸ்திரீ உட்கார்ந்துக் கொண்டிருக்கிறாள், ஒரு கருத்த பெண், ஒரு மஞ்சள் நிற கோட் அணிந்துள்ளது போன்று தோன்றுகிறது. அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உன்னிடம் ஜெப அட்டை உண்டா? உன்னிடம் ஜெப அட்டை. இல்லையா? உன்னிடம் இல்லை. நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கின்றாயா? நான் முற்றிலும் ஒரு அந்நியன். நாம் இரண்டு இனமான ஜனம். ஆனால் நீ ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது நீதான். ஆம். தேவன் உனக்குள்ள தொந்தரவை எனக்கு சொல்லுவார் என்று விசுவாசிக்கின்றீரா? உனக்கு ஒரு கட்டி இருக்கிறது. அது சரி உன்னுடைய இருதயத்திலும் கூட ஏதோ இருக்கிறது. நீ ஜெபித்துக் கொண்டிருக்கிறாய். அது ஒரு நண்பன், அவனுக்கு சிறுநீரகக் கோளாறு. அது உண்மையென்றால் உன்னுடைய கரத்தை உயர்த்து. சரியா இப்பொழுது உன்னுடைய வேண்டுதலை பெற்றுக்கொள். 224. உங்களுடைய விசுவாசத்தை நான் சவாலுக்கிழுக்கிறேன்! அது என்ன? தீர்க்கதரிசியானவன் தான் தேவனுடைய சமுகத்தில் இருக்கிறான் என்று கண்ட போது, அவன் தன்னைத் தாழ்த்தினான் பாருங்கள். முதலாவதாக அவன் தன்னை தாழ்த்தினான், அதன் பின்பு அக்கினி அவனை சுத்திகரித்தது. அக்கினி அவனை பரிசுத்தப்படுத்தின பின்பு அவன் பரிசுத்தமாக்கப் பட்ட ஏசாயாவானான். "யார் என் காரியமாய் போவான்" என்று உரைக்கிற தேவனுடைய சத்தத்தை அவன் கேட்ட மாத்திரத்தில் "இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும்" என்று அவன் கிரியைக்குள்ளானான். அக்கினி தணல் தீர்க்கதரிசியை தொட்ட போது, சுத்தமாய் அதி சுத்தமாய் அது அவனை ஆக்கினது தேவ சத்தம் "எங்களுக்காக யார் போவான்" என்ற கேட்ட போது "எஜமானே இதோ இருக்கிறேன் என்னை அனுப்பும்" என்று பதிலுரைத்தான். 225. ஆமென். பரிசுத்தாவி ஏசாயாவை சுத்தம் பண்ணின ஏசாயாவின் பின்பு, சுத்தமான அழைப்பு அதுவாயிருந்தது. அவனுக்கு குருமார் பாடசாலை அனுபவம் அவசியமில்லாதிருந்தது அவனுக்கு எந்த புத்தக அனுபவமும் அவசியமாயில்லை. அவன் தேவனுடைய அக்கினியால் சுத்தமாக்கப்பட்டு, சேவைக்கு அழைக்கப்பட்டான். அது என்ன? அவன் தேவனை கிரியையில் கண்டவுடன் அவன் கிரியைக்குள்ளானான். 226. நாம் தேவனை கிரியையில் காணுகிறோம். சபையானது என்பதின் கிரியையில் இறங்கி, தேவன் என்னவாயிருக்கிறார் எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டிய நேரமாயிருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் தங்களுடைய தவறுகளையும் மற்றக் காரியங்களையும் அறிக்கையிட விரும்புகிறீர்கள். "தேவனே என்னை சுத்தம் பண்ணும்" என்று சொல்லுங்கள். அக்கினி தணல் தீர்க்கதரிசியை தொட்ட மாத்திரத்தில்! 227. நாம் எழும்பி நிற்போம். நான் இங்கேயே நிறுத்துகிறேன். நேரமாகின்றது. இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 228. உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். நினைவிருக்கட்டும், அவன் தேவனைக் கண்ட பிறகு! அதோ மறுபடியும் வந்திருக்கிறது. ஆமென். இப்பொழுது என்ன வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். எதுவும் சம்பவிக்கலாம். அக்கினி தணல் தீர்க்கதரிசியை தொட்ட போது சுத்தமாய் அதிசுத்தமாய் அது அவனை ஆக்கிற்று தேவசத்தம் "எங்களுக்காக யார் போவான்" என்று கேட்ட போது 'இதோ இருக்கிறேன் என்னை அனுப்பும்” என்று பதிலுரைத்தான் பேசும் என் ஆண்டவரே ஓ! பேசும் என் ஆண்டவரே பேசும் உமக்கு நான் பதில் சொல்ல தீ விரிப்பேன் பேசும் என் ஆண்டவரே ஓ! பேசும் என் ஆண்டவரே பேசும் "என்னை அனுப்பும் ஆண்டவரே" என்று பதிலுரைப்பேன் ஓ! லக்க்ஷகணக்கானோர் பாவத்திலும், வெட்கத்திலும் மரித்துக் கொண்டிருக்க ஓ! அவர்களுடைய பரிதாபமான, கசந்த கதையை கேளும். ஓ! சகோதரரே தீவிரியும், அவர்களை காப்பாற்ற தீ விரியும் சீக்கிரமாய் பதிலுரையும் எஜமானே இதோ இருக்கிறேன். பேசும் என் ஆண்டவரே ஓ! பேசும் என் ஆண்டவரே பேசும், உமக்கு நான் பதில் சொல்ல தீவிரிப்பேன் பேசும் என் ஆண்டவரே ஓ! பேசும் என் ஆண்டவரே பேசும். "என்னை அனுப்பும் ஆண்டவரே” என்று பதிலுரைப்பேன். 229. இந்த பாடலை நாம் வாய்க்குள்ளாகவே பாடும் போது நம்முடைய சுரங்களை நம்முடைய இருதயத்தின்மேல் வைப்போம். உங்கள் அறிக்கைகளைச் செய்துக் கொண்டு "கர்த்தாவே நான் அசுத்த உதடுகளுள்ள ஒரு மனிதன்," "நான் அசுத்த உதடுகளுள்ள ஸ்திரீ" என்று சொல்லுங்கள். ஒரு உண்மையான அறிக்கையிடுதல் உண்மையான நமக்கு ஒரு நமக்கு உண்டாயிருக்கட்டும். எழுப்புதல் உண்டாயிருக்கட்டும். முதலாவது சுத்தமாகுங்கள், கவனியுங்கள், முதலாவதாக ஜனங்கள் சுத்தமாக வேண்டியவர் களாயிருக்கிறார்கள். அக்கினி அவனை தொட்டது உடனே அவன் கிரியைக்குள்ளானான். தேவனே என் இருதயத்திற்குள் எனக்கு எனக்குள் எதையாவது வையும். ஒரு வைராக்கியம் தாரும். என்னிடத்தில் அது இல்லை கர்த்தாவே, உம்முடைய அன்பையும் அக்கினியையும் எனக்குள்ளாக போட்டு பின்பு என்னை அனுப்பும் பொழுது உங்கள் அறிக்கைகளை செய்யுங்கள். தேவனை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். பேசும் என் ஆண்டவரே! பேசும் என் ஆண்டவரே! ஓ, பேசும் உமக்கு பதில் சொல்ல தீவிரிப்பேன். பேசும் என் ஆண்டவரே! பேசும் என் ஆண்டவரே! பேசும் "என்னை அனுப்பும் ஆண்டவரே' என்று பதிலுரைப்பேன் சுத்தமாய் அதிசுத்தமாய் அது அவனை ஆக்குகிறது. தேவசத்தம் நமது காரியமாய் யார் போவான் என்று கேட்ட போது "இதோ இருக்கிறேன் என்னை அனுப்பும்'' என்று பதிலுரைத்தான். 230. "பேசும்" அவருடைய சமுகத்தில் உண்மையான தாழ்மையுடனும் இனிமையுடனும், பயபக்தியுடனும் இரு, இப்பொழுது தேவன் உன் இருதயத்தில் பேசட்டும். ஒவ்வொரு பாவியும், ஒவ்வொரு பரிசுத்தவானும் இது நம் யாவருக்கும், இது எனக்குதான், இது எல்லாருக்கும். இங்கே இருக்கின்றது அவருடைய சமுகம் அவர் செய்வேன் என்று சொன்னது இங்கே தான், நாம்பெற்றுக் கொள்வோம் என்று அவர் சொன்ன அடையாளம் இங்கே அவர் இருக்கிறார். இசையானது இனிமையாக முழங்கிக்கொண்டிருக்கும்போது, நாம் நம்முடைய தவறுகளை அறிக்கை செய்வோம். "நான் ஒன்றுமில்லை, இருந்த போதிலும் கர்த்தாவே, என் இருதயத்தோடு பேசும். முதலாவதாக என்னை சுத்தம் பண்ணும் கர்த்தாவே, பரிசுத்தாவியை அனுப்பி என்னை சுத்தம் பண்ணும். நான் உம்முடைய சமூகத்திலிருக்கிறேன் என்று அறிவேன். நீர் அசைகிறது போன்று ஏசாயா கண்டவாறு நான் காணுகின்றேன். இந்த ஸ்தலமுழுவதும் இப்பொழுது, புகையினாலல்ல முழுவதும் ஒளியினால். முழுவதும் மகிமையினால் நிறைந்திருக்கிறது". 231. ஓ! தேவனாகிய கர்த்தாவே, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இவைகள் எங்கள் சிந்தையில் இருக்கும் போதே, மிகவும் மேன்மையாக உயர்த்தப்பட்ட ஜனங்களுக்கு என்ன சம்பவித்தது என்று பார்த்தோம். இவைகளெல்லாம் எங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இரட்சிக்கப்பட்டவர்களுக்கு, தாழ்மை ஜெபம் என்பதன் அர்த்தம் என்னவென்று பார்த்தோம். 232. பரலோக பிதாவே, இப்பொழுது இங்கே குழுமியுள்ளோர்களுக்காகவும் எனக்காகவும், நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே உம்மை போன்றதாய் காணபடாத எதையும் நீர் என்னிலிருந்து எடுத்துப்போடும். கர்த்தாவே நீர் என்னில் வாசமாயிருக்க வேண்டும். உம்முடைய ஆவி எனக்குள் எல்லா வற்றிலும் முதலிடம் பெற்றதாயிருக்க வேண்டும். நீர் அவ்வளவு முழுமையாய் என்னில் ஜீவித்து, இனி நான் நானாயிராமல், வெறுமனே உமக்குள் நடப்பதும், பேசுவதும், ஜீவிப்பதுமாக இருக்க விரும்புகிறேன். அதை அளியும் கர்த்தாவே. இதோ நான் இருக்கிறேன். என்னை சுத்தம் பண்ணும் கர்த்தாவே இந்த சபையை சுத்தம் பண்ணும் கர்த்தாவே, எங்கள் யாவரையும் சேர்த்து சுத்தம் பண்ணும், வியாதியை எடுத்துப் போடும். பாவத்தை எடுத்துப் போடும், அவிசுவாசத்தை எடுத்துப் போடும் அவையெல்லாவற்றையும் எடுத்துப் போடும். பரிசுத்தாவியானவர் தாமே வந்து பலிபீடத்திலிருந்து ஒரு அக்கினி தழலை எடுத்து, ஒரு புதிய பெந்தேகோஸ்தே நெருப்பு பொறியோடு இங்கிருக்கின்ற ஒவ்வொரு இருதயத்தையும் சுத்தம் பண்ணட்டும். எங்களை எடும் கர்ததாவே, நாங்கள் உம்முடையவர்கள், நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். அதை எங்களுக்கு அளியும் பிதாவே. பேசும் என் ஆண்டவரே பேசும் "என்னை அனுப்பும் ஆண்டவரே” என்று பதிலுரைப்பேன். 233. கிறிஸ்துவுக்கு தங்கள் ஜீவியங்களை அர்பணிக்க விரும்புகிறவர்கள், அர்பணிக்கிறவர்கள், அர்பணித்தவர்கள் இப்பொழுது புதியதாய் அளியுங்கள், உங்களையும் அவருடைய சமுகத்தில் உங்களைத் தானே அர்பணிக்க விரும்புகிறவர்களும் அளியுங்கள். 234. நான் கண்டதை இப்பொழுது நான் கூப்பிட ஆரம்பிப் பேனேயானால், இப்பொழுதே இங்கிருக்கின்ற ஒவ்வொருவரையும் நான் எடுக்க வேண்டியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களை நான் அறிவேன். 'இது எல்லாவிடத்துமில்லாமல் நான் எழும்பி நின்று ஒரு தேவ ஊழியனாய் அதை சொல்ல மாட்டேன் என்று நீங்கள் யாவரும் அறிவீர்கள். ஒரு புதிய பெந்தேகோஸ்தை ஆரம்பிக்கக் கூடிய நிலைமையில் நீங்கள் இப்பொழுது இருக்கிறீர்கள். நண்பர்களே இது நிச்சயமாக உண்மை. 235. நீங்கள் வெறுமனே தாழ்த்துங்கள். உங்கள் முகங்களை மூடுங்கள், உங்கள் பாதங்களை மூடுங்கள், அவரிடமாய் நெருங்குங்கள். தலைகளை தாழ்த்தி, உங்கள் அறிக்கைகளை செய்து, விசுவாசியுங்கள். உங்களுக்கு அதை செய்ய விருப்பமா? அப்படியே செய்ய வேண்டுமானால் நாங்கள் "பேசும் என் ஆண்டவா" என்று பாடிக் கொண்டிருக்கும் போது, உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பேசும் என் ஆண்டவா. பேசும் என் ஆண்டவா பேசும் நான் உமக்கு பதில் சொல்ல தீவிரிப்பேன். ஓ! பேசும் என் ஆண்டவா பேசும் என் ஆண்டவா.