குடும்பம் THE FAMILY அன்பு மற்றும் குடும்ப ஒற்றுமை அவர் தம்முடைய குடும்பத்துடன் வாழ்ந்திருத்தல். ஆதியாகமம் 2ல் அவர் மனிதனை உண்டாக்கியவுடன், அவர், ''நான் யா-ஹு-வா - ஹ் , யாஹு, யேகோவா" (y-a-h-u , j-u-V-u-h) என்றார். அதன் அர்த்தம் என்ன? "தம்மில் தாமே வாழ்கின்றவர், தம்மிலிருந்து தம்மையே உண்டாக்கி, தம்முடைய குமாரனாக இருக்கத்தக்கதாக உண்டாக்கிய அவரேயாகும் அல்லது தம்முடைய தற்காலிகமான, அல்லது ஒரு குட்டி, சிறிய நபர், "மகிமை! ஏன்? அவர் மனிதனை ... யேகோவா என்றால் ஒரு மனிதனை குட்டி தேவனாக கொடுத்தவர் என்பதாகும். ஏனென்றால் அவர் தான் பிதா, தேவன். மற்றும் அவர் மனிதனை ஒரு குட்டி தேவனாக உண்டாக்கினார். ஏனென்றால் அவர் இனிமேலும் தம்மில் தாமே வாழ்கிறவர் என்றில்லாமல் இருப்பதற்காகவே, அவர் தம்முடைய குடும்பத்துடன் வாழ்கின்றார். ஏலா, ஏலா ஏலோஹிம், இப்பொழுது, இப்பொழுது அவர் யே கோவாவாக இருக்கின்றார். யேகோவா என்றால் "தம்முடைய குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர்" என்பதேயாகும். இப்பொழுது, பூமி முழுவதின் மேலும் அதிகாரத்தை யுடையவனாக இருக்கும்படிக்குத் தான் தேவன் மனிதனை உண்டாக்கினார். அவன் பூமியின் மேல் ஆளுகையைக் கொண்டிருந்தான். ஆகவே பூமியானது மனிதனின் ஆளுகைக்குள்ளாக இருந்தது. அது வேதபூர்வமானது அல்லவா? அப்படியானால் பூமியானது அவனுடைய ஆளுகைக்குட்பட்டது என்றால் அவன் பூமி முழுவதற்கும் தேவனாக இருந்தான். அவன் பேசினால் போதும், அது அவ்வாறே நடக்கும், அவன் இதைப் பேசினால் அது அவ்வாறே நடக்கும். இதோ காரியம், தேவனாகிய யேகோவா, ஒரு காலத்தில் தம்மில் தாமே இருந்து தம்மிலே வாழ்ந்திருந்தவர் இப்பொழுது தம்முடைய குடும்பத்துடன், தம்முடைய சிறு பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக் கின்றார். உங்களுக்கு புரிகின்றதா? (எபேசியர் (நிருபம்) யோசுவா புஸ்தகத்திற்கு இணையானது. தேவனுடைய நோக்கம் - தம்முடைய குடும்பத்தோடு ஒன்றாயிருத்தல் அது தான் தேவனுடைய நோக்கமாகும். எல்லாவற்றிற்கும் மேலானவராக, பிதாவாகிய அவருடைய நோக்கம் என்னவென்றால் தம்முடைய குடும்பத்துடன், பூமிக்குரிய குடும்பமாகிய ஆதாம் மற்றும் ஏவாளுடன் ஒன்றாயிருக்க வேண்டும் என்பதே. குடும்பமாக அல்லது தேவனுடன் ஒன்றாயிருக்கும்படி அவர்களுக்கு இருந்த ஒரே வழி என்னவென்றால் தேவனுடைய சுபாவம் அவர்களுக்குள் இருப்பதே ஆகும். ஆகவே தேவனுடைய சுபாவம் அவர்களுக்குள் இருந்ததால் தான். அவர்கள் குடும்பமாக இசைந்திருக்க ஏதுவாக இருந்தது. ஆகவே அவர்கள் இருவரும் மற்றும் தேவனும் சேர்ந்து எல்லாரும் ஒன்றாக ஆகினர். அது ஒரு அழகான காட்சியாக இருக்கின்றதல்லவா, தேவன் தம்முடைய குடும்பத்தில் இருந்து, எல்லாவற்றிற்கும் மேலான பிதாவாக இருத்தல்! மரணம் இல்லை, துக்கம் இல்லை, பெருந்துயரம் எதுவும் இல்லை; சொல்லி முடியாத சந்தோஷம் மாத்திரமே இருக்கும். நோய்வாய்ப் படவே முடியாது, பெருந்துயரம் கொள்ளவே முடியாது, அப்படியே தேவனுடன் ஒன்றாயிருத்தல்! என்னே ஒரு காட்சி! ஏனெனில், தேவனுடைய சுபாவம் அப்படியே இந்த மக்களுடன் இருந்தது. ஆதலால் அவர்கள் செய்ததென்ன, அப்படியே தேவனை பின்தொடர்ந்து சென்று கொண்டிருத்தலே, அப்படியே தேவனும் இவர்களுடன் இருந்து எல்லோரும் ஒன்றானார்கள். ஒன்றாயிருத்தல் 11.02.1962 சிறந்த வேலைப்பாடு - ஒற்றுமை மிகுந்த ஒரு குடும்பம் கவனியுங்கள். குடும்பம் என்கின்ற அந்த மகத்தான சிறந்த வேலைப்பாடு கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தாலொழிய அது உண்மையாக குடும்பமாக இருக்கவே முடியாது. அவர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்க வேண்டும். மனைவி ஒரு புறமாக இழுத்துக் கொண்டு மற்றும் கணவன் மற்றொரு பக்கமாக இழுத்துக் கொண்டு அவர்கள் ஒற்றுமையாக இல்லாவிடில், அவர்களுடையது ஒரு நல்ல குடும்பமே அல்ல. அப்படி இருப்பதானது ஒரு பயங்கரமான குடும்பமாக அமையும். ஆனால் இருவரும் இசைந்து ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூறுவார்களானால் அது தான் உண்மையான ஒரு குடும்பமாகும். இப்பொழுது அந்த விதமான ஒரு குடும்பம் தான் தேவனுடைய சிறந்த வேலைப்பாடாக இருந்தது. இங்கேயுள்ள எல்லா உண்மையான குடும்பமும் அதைத்தான் பிரதிபலிக்கின்றன. பாருங்கள்? இப்பொழுது அந்த சிறந்த வேலைப்பாடான குடும்பம் மறுபடியுமாக வந்துள்ளது - கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் வருவதற்காக ஆயத்தமாயுள்ளனர். இரண்டாவது ஆதாம் இரண்டாவது ஏவாள் தங்கள் வீட்டிற்கு மறுபடியும் திரும்பி வருவதற்காக இப்பொழுது ஆயத்தமாயுள்ளனர். ஆகவே முழு காட்சியும் மீட்பைக்குறிக்கின்றது. எங்கே அது இருந்ததோ அதை மறுபடியுமாக திரும்பக் கொண்டு வருதலாகும். சிறந்த வேலைப்பாடு 05.07.1964 குடும்பத்தை ஒன்றாக வைத்துக்கொள்ள கிருபை அவசியம் புருஷன் தன் மனைவியை தெரிந்தெடுக்கையில் அவளிடமாக, “நீ ஒரு நல்ல பெண்ணாக இருந்தால், நீ வீட்டை நன்றாக கவனித்துக் கொண்டால், நீ எனக்கு உண்மையாக இருந்தால், நீ என்னுடைய ஆடைகளை சுத்தமாக வைத்துக்கொண்டால், நமக்கு பிள்ளைகள் பிறக்கையில் நீ அவர்களுக்கு ஒரு நல்ல தாயாக இருந்தால், நீ காரியங்களை ஒழுங்காக செய்தால், நீ செய்தால் தான் உனக்கு ஒரு நல்ல வாழ்ககை வாழத்தக்கதாக என் கைகளில் இரத்தம் வரும் நிலை வரைக்கும் நான் உழைப்பேன்” என்று கூறுகிறான். பிறகு அந்த பெண் தவறிப் போய், சோம்பேறித்தனமாக வாழ்ந்து, வேலையும் செய்யாமல், எந்த ஒன்றுமே செய்யாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று சற்று நினைத்துப் பாருங்கள்? அந்த குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அவசியம் கிருபை மட்டுமே. கிருபையின் செய்தி 61-0827 அவிசுவாசமும் விசுவாசமும் கலந்திருத்தல் - மோசமான இல்லம் - ஒற்றுமை இல்லாதிருத்தல் ஆகும் அகசியா ஆகாபின் குமாரனாயிருந்தான். அவன் வெதுவெதுப்பான குடும்பமாயிருந்த ஒரு குடும்பத்தில் வளர்க்கப்பட்டவனாயிருந்தான். அது முழுமையான கிறிஸ்தவ வீடாக இல்லாதிருந்தது. அவன் தாய் ஒரு புறஜாதிப் பெண்ணாவாள். அவனுடைய தந்தை ஐக்கியத்தினின்று புறம்பான ஒரு திருமணத்தை செய்திருந்தான். விசுவாசியல்லாத ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டான். அவ்விதமான ஒரு திருமணமானது எந்த ஒரு பிள்ளையையும் சரியாக வளர்க்கப்பட முடியாத ஒரு மோசமான இல்லமாகச் செய்து விடுகின்றது. அது என்னவென்றால் அவிசுவாசமும் விசுவாசமும் ஒன்றாக இணைய முயற்சி செய்யும் போது அவ்விதம் அமைந்து விடுகின்றது. ஆகவே, இப்பொழுது தகப்பனானவன் விசுவாசத்தில் மிகுந்த பலம் பொருந்திய ஒரு மனிதனாக இருப்பானானால், ஒருக்கால் குழந்தை சரியாக வளர்க்கப்பட ஒரு தருணம் இருந்திருக்கலாம். ஆனால் அகசியா அவ்வாறு இல்லை. அவன் சரியான விசுவாசத்தைக் கொண்டவனாக இல்லை. தேவன் ஒருவர் இருக்கின்றார் என்பதை அவன் அறிந்திருந்தான். யேகோவா என்பவர் இருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே அவன்... தன்னுடைய தாயின் தேவர்களை, இன்னும் பிறவைகளை அறிந்திருந்தான். இதனால் அவன் மிகவும் குழம்பிப் போயிருந்தான். அவனுடைய தகப்பனுடைய இறப்பிற்குப் பிறகு, இந்த பிள்ளை இந்த விதமான சூழ்நிலையில், மிகவும் குழம்பிப் போயிருந்தான். ஒரு வழி மற்றும் மற்றொரு வழியில் இருந்தான். இன்றைக்கு தேசங்களின் சூழ்நிலையானது அவ்வாறே இருக்கின்ற தல்லவா! குடும்பத்தில் ஒருவர் இந்த வழியில் இருக்கின்றார் மற்றவர் வேறு வழியில் இருக்கின்றார். மேலும் இன்னொருவர் மற்றொரு வழியிலும் இன்னொருவர் மற்றுமொரு வழியிலும் உள்ளனர். இதனாலே தான் இன்றைக்கு குற்றம் புரிகின்ற சிறுவர் அநேகரையும், இன்னும் கிறிஸ்தவத்தின் கீழ் அநேக பலவிதமான காரியங்களையும் நாம் பிறப்பித்துக் கொண்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது ஏனென்றால் ஒற்றுமை இல்லாதிருத்தலே ஆகும். உண்மையான வெளிவரும்படியான அழைப்பும் மற்றும் தேவனுக்காக நிற்பதென்பது இல்லாதிருக்கின்றது. ஏன்? 06.06.1963 தம்முடைய சொந்த குடும்பமொன்று அமைய வேண்டுமென்ற அன்பின் விருப்பம். இதோ, தேவனுடைய அன்பின் தெளிவான விவரணம் இங்கே வைக்கப்படுகின்றது. தம்முடைய சொந்த குடும்பமொன்று, குமாரர்கள் நிறைந்த ஒரு குடும்பம் - தம்மைப் போன்றிருக்கின்ற குமாரர்கள் இருக்க வேண்டுமென்று அவர் அன்பினாலே விருப்பங் கொண்டார். அவருக்கு முன்பாக மனித இனமானது ஒரு கையளவு களிமண்ணாக இருந்துக் கொண்டிருந்தது. அந்த அதே கையளவு களிமண்ணாக இருந்து கொண்டிருந்தது. அந்த அதே கையளவு களிமண்ணைக் கொண்டு அவர் இப்பொழுது பாத்திரங்களை கனமான காரியத்துக்கும் கனவீனமான காரியத்துக்கென்றும் உண்டாக்கப் போகின்றார். தெரிந்து கொள்ளுதலானது அவருடைய சொந்த தெரிந்து கொள்ளுதலாக இருக்கப் போகின்றது. தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் அவருடைய ஆவியினாலே பிறந்து தங்களுடைய நடைகளை அவருடைய சாயலின்படியே அமைக்கத்தக்கதாக அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். அவர் தம்முடைய நீடிய பொறுமை, தயவு மற்றும் இரக்கம் இவைகளைக் கொண்டு அவர்களைக் கடிந்துக் கொள்கின்றார். தம்முடைய ஆணி கடாவப்பட்ட கரங்களைக் கொண்டு அவர்களை சிட்சிக்கின்றார். சில சமயங்களில் இந்த குயவன் தாம் செய்கின்ற பாத்திரத்தை தாம் விரும்புகின்றபடியே முற்றிலும் சரியாக உருவாக்கப்படும்படி அதை முழுவதுமாக உடைக் கின்றார். ஆனால் அதைச் செய்வது அன்பாகும். அது தான் அவருடைய அன்பாகும். அவருடைய அன்பை காண்பிக்க இந்த வழியைத் தவிர வேறே ஒரு ஒழி இல்லவேயில்லை. வேறொரு வழியென்பது இருக்க முடியாது. லவோதிக்கேயா சபைக்காலம் அன்பு குடும்பத்தை இணைக்கும் உங்களுடைய சொந்த சுபாவமாயில்லாதிருக்கிற ஒன்றை உங்களால் நேசிக்க முடியாது. அன்பு அன்போடு தான் இணைய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை அடைய வேண்டுமென்றால், கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் அன்பு கூரத்தான் வேண்டும் நேசிக்கப்பட ஏதோ ஒன்று இருக்கத்தான் வேண்டும். நீங்கள் நேசிக்கின்ற மனைவியாக இருக்கக் கூடிய ஒரு பெண்ணை நீங்கள் எல்லாவிடங் களிலும் தேடுகின்றீர்கள். அவளும் தான் நேசிக்கப் போகின்ற கணவனைத் தேடுகின்றாள். சபையும் அதன் நிலையும் - 05.08.1956 உண்மையான குடும்ப அன்பானது இல்லாது காணப்படுகிறது அவர்கள் தங்களுடைய மார்க்கத்திற்காக ஞாயிற்றுக் கிழமை காலை சுமார் இருபது நிமிடங்களுக்கு சபைக்குச் செல்கின்றனர். மேய்ப்பர் சுமார் முப்பது நிமிடங்களுக்கு பிரசங்கம் செய்வதால் அவர் நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு விளக்கம் அளிக்க அழைக்கப்படுகிறார். அது என்ன? குடும்ப வாழ்க்கையானது முடிவு பெற்றுக்கொண்டிருக்கின்றது. தகப்பனும் தாயும் ஒருவரிலொருவர் அன்புகூர்ந்து, போற்றிப் பேணி, மற்றும் கனமளித்து வருவது ஒருகாலத்தில் வழக்கமாயிருந்தது. அவள் மிகவும் வயதாகி, தலை மயிர் நரைத்துப் போய், தோல் சுருங்கிப் போய் அவளுடைய முகம் உள்வாங்கி அவளுடைய மூக்குக் கண்ணாடி அவளுடைய மூக்கிற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தாலும், அவள் இளமையாக அழகாக இருக்கும் போது அப்பா எப்படி நேசித்தாரோ அப்படியே இப்பொழுது நேசித்தார். ஆனால், இன்றைக்கோ. நான் சற்று கடுமையாக இதைக் கூற விரும்பவில்லை , இன்று அவள் சிறிது வயது சென்றாலும் கூட அவளைத் தள்ளிவிட்டு ஒரு புதிய மாடலழகியை அவன் இந்த இடத்தில் வைத்துக் கொள்கிறான். கார்களையும் மற்ற பொருள்களையும் மாற்றுவது போலத் தான் இதுவும் காணப்படுகின்றது. உண்மையான குடும்ப அன்பானது இன்னுமாக இல்லாதது போலக் காணப்படுகின்றது. ஏதோ ஒன்று சம்பவித்து விட்டது. குடும்ப ஜீவியமானது குறுகிக் கொண்டே போகின்றது. நீண்ட வருடங்களுக்கு முன்பாக நாம் கொண்டிருந்த அந்த பழைய அமெரிக்க குடும்ப ஜீவியமானது நம்மிடையே இல்லாமல் போகின்றது. வரலாற்றிலிருந்து அவரை வெளியே எடுத்தல் 01.10.1958 ஒருவரோடொருவர் நெருக்கமாயிருக்கும் குடும்பம் எந்த ஒரு மனிதனும் அவனுடைய குடும்பமும், ஒரு சரியான, அருமையான, உயர் குணமுள்ள, கீழ்ப்படிதலுள்ள குடும்பமாயிருக்குமென்றால் அது ஒருவரிலொருவர் நெருக்கமாயிருக்கின்ற ஒன்றாயிருக்கும். அது எந்த ஒரு குடும்பமாக இருந்தாலும் சரி. அவர்கள் சற்று விலகத்தக்கதாக குடும்பத்தில் ஏதாவதொன்று இருக்குமானால், அது சரியாயல்லாத ஒன்றாக அது இருக்குமானால், அந்த குடும்பத்தில் எங்கோ ஒரு பிளவு இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் ஒன்றாயிருக்க வேண்டும், தந்தை தாயுடன் ஒன்றாயிருக்கவேண்டும். தாய் தந்தையுடன் ஒன்றாயிருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோருடன் ஒன்றாயிருக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளுடன் ஒன்றாயிருக்க வேண்டும். எல்லோரும் ஒரே இசைவுடன் இருக்க வேண்டும். அவ்விதமான ஒன்றை நீங்கள் காணும் போது, நீங்கள் ஒரு அருமையான காட்சியை நீங்கள் காண்பீர்கள். ஒன்றாயிருத்தல் - 11.02.62 அன்பு அசட்டை செய்யப்படுதல் இன்றைக்கு உலகம் ஏதோ ஒன்றிற்காக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய சிறிய அருமையான மனைவி, தன்னை நேசிக்கும்படியாக அவள் ஒருவருக்காக எதிர்பார்த்திருந்தாளென்றும். அவள் உங்களுடைய இருதயத்திற்கு இனியவளாகவும் மற்றும் மனைவியாகவும் இருப்பாளென்றும் உங்களிடம் கூறின போது நீ உன்னுடைய கணவனிடம் வாக்களித்த போது அவனும் தான் நாளெல்லாம் வேலை செய்து மிகவும் களைத்துப் போய் சோர்வாக உள்ளே வருகையில், அவனும் ஒருவருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளே வருகையில் தன் கரங்களாலே அவனை அணைத்து அவனுடைய தலையை மெல்ல வருடிக்கொடுத்து தான் அவனை எவ்வளவாக நேசிக்கின்றாள் என்றும் அவனிடம் கூறுகின்ற ஒரு மனைவியை எதிர்பார்க்கின்றான். அன்பு அசட்டை செய்யப்படுதல் தான் குடும்பங்களில் பிரிவினையை உண்டாக்குகின்றது. அது தான் சபை களிலும் பிரிவினையைக் கொண்டு வருகின்றது. அன்பு அசட்டை செய்யப்படுதல், நாம் அன்பைக் கொண்டவர்களாக இருக்கத்தான் வேண்டும். அவருக்கு செவி கொடுங்கள் 10.03.1957. மனைவிகள் நம்முடைய இருதயத்திற்கு இனியவர்கள் - குடும்பத்தில் அது மாறாதிருக்கின்ற ஒன்று உங்களுடைய இருதயத்திற்கு இனியவள் வந்திருந்தார்கள் என்று நான் யூகிக்கின்றேன். அவளைக் குறித்து அவ்விதமாகத்தான் நீங்கள் உணருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அவள் இன்னுமாக உங்கள் இருதயத்திற்கு இனியவள் தான். அந்த விதமாகத் தான் நாமும் ... கிறிஸ்தவர்களாகிய நாமெல்லாரும் நம்முடைய மனைவிகளைக் குறித்து அவ்விதமாகத் தான் உணருகிறோம் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் இன்னுமாக நம்முடைய இருதயத்திற்கு இனியவர்கள் தான். நம்முடைய மனைவிகளைக் குறித்து எப்பொழுதும் அவ்விதமாகவே நாம் உணர்கிறோம் என்னும் அவ்விதமானஉணர்வு என்னுடைய குடும்பத்தில் மாறாது என்றும் உங்களுடைய குடும்பத்திலும் அவ்விதமாகவே இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். ஆம், இந்த போராட்ட போராட நம்முடனே கூட இருந்து நமக்கு உதவுகிறார்கள். ஆம், நமக்கு அவர்கள் அவசியப் படுகின்றார்கள். நான் அவர்களைக் குறித்து மிகக் கடின விமர்சனங்கள் அநேகம் கூறியிருந்த போதிலும், அவர்களைப் புண்படுத்த வேண்டுமென்று நான் அவ்விதமாக கடினமாகக் கடிந்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் சுவிசேஷ வரிசையில் சரியாக நிற்கும்படிக்குத்தான் நான் அவ்விதமாகக் கூறினேன். மேலும் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அது சாத்தானுடைய கருவியாகும், அதைக்கொண்டு தான் அவன் கடுமைாக பிரயாசப்பட்டு கிரியை செய்கிறான். அது தான் அவனுடைய முதல் முதலான கருவியாகும். அவன் அது முதற்கொண்டு மாறவில்லை . அவன் சரியாக அதிலேயே தரித்து நின்றுக்கொண்டிருக்கிறான். அவன் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நம்முடைய சகோதரி களுக்காக தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருப்பது தான். ஆம், அவர்களும் நமக்காக ஜெபிக்கின்றார்கள். நாம் இருவரும் ஒன்று சேர்ந்து, நம்முடைய முதன்மையான படைத்தலைவர் கிறிஸ்து இயேசுவுடன், தோற்கடிக்கப் படாத சேனையாக, அவருடைய வார்த்தை நமக்கு முன் சென்று நமக்கு வழியை உண்டாக்குகையில் அதில் அணிவகுத்து முன்னேறிச் செல்வோமாக. விடாமுயற்சி - 20.05.1962 2. குடும்பத்தில் உள்ள மரபு வழிக்காரியங்கள் மற்றும் சிக்கலான நிலைகள் இப்பொழுது, இந்த சிறு பையனின் பெற்றோர்கள், அவனுடைய தாய் ஜெர்மானிய தேசத்தாள். ஜெர்மானிய தேசத்தாரின் பிரதிபலிப்பு இவனில் இல்லை. ஆனால் அந்த குடும்பத்தில் மரபு வழிக்காரியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால், அவர்கள் உட்கார்ந் திருக்கையில் அவர்களுடன் நீங்கள் பேசுவீர்களானால் அவர்கள் அப்படியே உங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டே யிருப்பார்கள். அவர்களிடம் ..... இந்த சிறு பெண்ணின் சகோதரி. இந்த பையனின் தாய், அவளுடைய சகோதரி, அநேக காலை வேளைகளில் தெருவில் நான் நடந்து வந்திருக்கிறேன், இந்த இளம் பெண் அங்கே வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருப்பாள். நான் அவளைப் பார்த்து "உங்களுக்கு காலை வணக்கம்'' என்பேன். அவள் அப்படியே என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பாள். அப்பொழுது நான் நின்று, "இது அருமையான காலை வேளையன்றோ" என்பேன். அப்பொழுது அவள் அறிவுத்திறம் வாய்ந்த பெண்ணாவாள். அப்பொழுது நான் நின்று "என்றாவது ஒரு நாள் வந்து எங்களை சந்திக்கலாமே" என்று கூறுவேன். அவள் எழுந்து நின்று பார்த்துக் கொண்டேயிருப்பாள். ஆம், அவளுடைய சகோதரர்களும் அவ்விதமாக உள்ளார்கள். அவளுடைய தந்தையும் தாயும்கூட அந்த விதமாகத்தான் உள்ளனர். நம்பமுடியாதது ஆனாலும் உண்மையான ஒன்று 01.08.1963 இப்பொழுது, இந்த சிறு பையனிலுள்ள தாய் மற்றும் தந்தை யினுடைய மரபு அணுக்களானது, இவர்கள் எவ்வளவாக மனந்திரும்பியிருந்தாலும் சரி, இவர்கள் சேர்ந்து இந்த பையனுக்கு அளித்திருக்கும் மாம்சமாகவே இன்னுமாகவே இருக்கின்றது. ஆகவே, இந்த பையன் தனக்குள்ளாக ஒரு சிக்கலான மனநிலையை கொண்டவனாக இருக்கின்றான். அவனுடைய தாயின் குடும்பத்திலிருந்து வந்திருக்கின்ற ஒரு மரபு குணம், அதென்னவென்றால் அவர்கள் மன்னிக்க மாட்டார்கள், செய்த காரியத்திற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டார்கள். அந்த விதமாகத் தான் அந்தப் பையனும் இருக்கின்றான். நம்பமுடியாதது ஆனாலும் உண்மையான ஒன்று 01.08.1963 ஒருவரையொருவர் பாதிப்பிற்குள்ளாக்குதல் நீ குடுமபத்திலுள்ள ஒருவர் பயந்து போகும்படி செய்தால் அது அடுத்த அங்கத்தினருக்கு, அடுத்த அங்கத்தினருக்கு பரவுகிறது. அப்பொழுது நடக்கின்ற முதல் காரியமானது நீங்களெல்லோரும் தேவையற்ற பரபரப்படைந்து அனைவரும் பயந்து விடுகிறீர்கள். குடும்பத்திலுள்ள ஒருவர் ஏதாவதொன்றைக் குறித்து கவலை கொண்டால், அது அடுத்தவருக்கு, அடுத்தவருக்கு பரவி விடுகிறது. அப்பொழுது குடும்பம் முழுவதுமே கவலைக்குள்ளாகின்றது. அது சாத்தான், குடும்பத்திலுள்ள ஒருவர் களிகூர்ந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர் அவருடன் களிகூரட்டும். எனவே குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அதைச் செய்ய முயலுங்கள். கேள்விகளும் பதில்களும் 23.08.1964 3. இயேசு கிறிஸ்து, உங்கள் குடும்பம், கடைசியாக நீங்கள் உங்களுக்கு ஒரே குறிக்கோள் உண்டு, அது தான் இயேசு கிறிஸ்து. அதற்கு புறம்பாயுள்ள வேறெதுவும் முக்கியம் அல்ல - அவரைத் தவிர, இரண்டாவதாக, உங்கள் குறிக்கோள் உங்கள் குடும்பத்தைக் குறித்ததாயிருக்க வேண்டும், மூன்றாவதாக, அது உங்களைக் குறித்து, நீங்கள் தான் பாதையின் முடிவில் மூன்றாவதாக இருக்க வேண்டும். உங்களைக் கடைசியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் அப்படித்தான் செய்தார். நான் எப்படி ஜெயங்கொள்வது? - 25.08.1963 4. குடும்பமானது தங்கியிருக்க வேண்டிய இடம் - ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்படும் இடத்திலே இன்றைக்கு அநேகர் ... சபைக்கு செல்லும் ஒரு குடும்பத்தினரை எடுத்துக் கொள்ளுங்கள். தேவன் அந்த குடும்பத்தினரை சுகப்படுத்தி, ஆசீர்வதித்து, அவர்களுக்கு பரிசுத்த ஆவியை கொடுத்திருப்பார். சிறு பிள்ளைகள் உணவு மேஜையில் ஜெபிப்பார்கள் அவர்கள் படுக்கைக்குப் போகும் முன்பு ஜெபிப்பார்கள். தகப்பனும் தாயும் கைகோர்த்து ஜெபம் செய்வார்கள். அவர்கள் இப்படித் தொடர்ந்து செய்து கொண்டே யிருக்கும் வரைக்கும், அவர்கள் ஒரு குடும்பமாக நிலைத் திருப்பார்கள். ஆனால் அவர்கள்... ஆரம்பத்தில் அவர்களுக்கு ஒன்றும் இருக்கவில்லை. ஒருக்கால் அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு செல்ல ஒரு டப்பா கார் இருந்திருக்கக்கூடும். அல்லது அவர்கள் நடந்து சென்றிருப்பார்கள். முடிவில் அவர்கள் நல்ல கார் ஒன்றை வாங்குவார்கள். ஒரு நல்ல வீடும் கூட. முதலாவதாக என்ன தெரியுமா, உலகம் உயர்வகுப்பினர் என்றழைக்கப் படுபவர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் இடம் மாறி வசிக்கின்றனர். அங்கே அவர்கள் தவறான பாதிப்பினால் பாதிக்கப்படு கின்றனர். நீங்கள் எப்பொழுதுமே தேவனுடைய ராஜ்யம் எங்குள்ளதோ, தேவனுடைய மகிமை எங்கு ஊற்றப்படு கிறதோ, அங்கு தங்கியிருக்க வேண்டும், ஆவிக்குரிய விதமாக நீங்கள் இரவும் பகலும் போஷிக்கப்படக்கூடிய இடத்தில் தங்கியிருங்கள். முதலாவதாக என்ன நடக்கிறது தெரியுமா? குடும்பத்தில் பிரிவினை உண்டாகின்றது. உலகப்பற்று அவர்களை ஆட்கொள்ளுகிறது. அவர்கள் மேட்டிமை கொள்கின்றனர். உசியாவும் அதைத்தான் செய்தான். அவன் மேட்டிமை கொண்டான். அவனுக்கு அதிகப் பெருமை வந்து விட்டது. வேறொருவரால் விளையும் பாதிப்பு 13.10.1962 பெற்றோரின் பொறுப்புகள் 1. பெற்றோர் நிலை ஒரு குடும்பத்தை பேணி வளர்க்க இருவர் அவசியம். நான் அந்த சிறு பிள்ளைகளைக் குறித்து நினைத்துப் பார்க்கின்றேன். இங்கே இந்த சிறிய பெட்டி போன்ற வீட்டில் இருக்கின்ற அவர்களை உங்களெல்லாருக்கும் நினைவிருக்கும். அவர்களுடைய மகிழ்ச்சியற்ற தந்தை அவர்களுக்காக இங்கே சபையில் பின்புறத்தில் உட்கார்ந்திருப்பார். அந்த சிறு பிள்ளைகள் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, எப்படி நான்... நாமெல்லோரும் அவர்களைக் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோமே. மகிழ்ச்சியற்ற அந்த சிறிய ஓரா மே.. ஒரு குடும்பத்தை பேணி வளர்க்க இரண்டு பேர் அவசிய மாயிருக்கிறது. ஓ, தேவனே, இந்த விவாகமும் விவாகரத்தும் என்கின்ற காரியமானது மிக பயங்கரமான ஒன்றாயிருக்கிறதே, எப்படி கர்டீஸ் (Curtis) தன்னாலான விதத்தில் மிகவும் பிரயாசம் எடுக்கின்றார். அவர் மிகக் கடுமையாக பிரயாசப்படுகிறார். ஆனால் ஒரு பிள்ளைக்கு ஒரு தாயின் அன்பு மிகவும் தேவைப்படுகின்றது. அது எந்த பிள்ளையாயிருந்தாலும் சரி, அப்பிள்ளைகளிடத்தில் அன்பு கூர ஒருவர் தேவைப்படுகின்றது. அது உங்களுடைய உளமார்ந்த உணர்வுகளை அமைதிப்படுத்த இயற்கை வைத்திருக்கும் ஒரு காரியமாகும். நான் ஒரு வேட்டைக் காரன். நான் வன விலங்குகளின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் ஒருவனாவேன். அது .... அது... நான் அங்கே காடுகளுக்கு சென்று அதை ஆராய்வது வழக்கம். ஒரு தாய்க்கரடி வருடத்தின் இலையுதிர்க்காலத்தின் போது அது மறுபடியுமாக தாய்ப்பருவத்தையடைய தயாராகும். அக்கரடி தன்னுடைய குட்டிகளையெல்லாம் துரத்தி விடும். அக்கரடிக்கு ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் இருக்கும். அக்குட்டிகளை அது துரத்தி விடும். அதை அப்படியே செயலற்றிருக்கும்படி செய்து விடும், ஏனென்றால் அக்குட்டிகள் அப்பொழுது வாழப் பழகிக்கொள்ளும். பரிபூரணம் 10.06.1950 பிள்ளைகளுக்கு சிறந்ததை அளியுங்கள் ஏதேனில், தேவன் தம்முடைய எதிராளியையும், தம்முடைய எதிராளியின் எல்லா தாக்குதல்களையும் அறிந்திருந்தார். இப்பொழுது, தேவன் எல்லையற்ற தேவனாக இருக்கிறார். எல்லையற்ற தேவனானவர் பரிபூரணங்களின் பரிபூரணமாக இருக்கிறார். அவைகள் இருப்பதற்கு முன்னதாகவே அவைகளைக்குறித்து எல்லாக் காரியங்களையும் அவர் அறிந்திருந்தார். ஆதலால் இந்த எல்லையற்ற தேவனானவர் இனி நடக்க இருப்பவைகளை முன்னோக்கிப் பார்த்து, (நிச்சயமாக பார்த்தார்), துவக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் பார்த்து, இந்த பூமியில் தமக்கு பிள்ளைகளை, தம்முடைய சொந்த ஆசீர்வதிக்கப்பட்ட பிள்ளைகளைக் கொண்டிருப்பார் என்பதை அறிந்திருந்து, தம்மால் அளிக்க இயலுகின்றதிலே மிகச் சிறந்ததை அப்பிள்ளைகளுக்கு அளிப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? தாங்களாகவே தங்களை கவனித்துக் கொள்ள முடியாத உதவியற்ற சிறு பையன்களாகிய உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் அளிக்க முடிந்ததிலேயே சிறந்ததை அளிக்கத்தக்கதாக நீங்கள் பாடுபட்டு, வேலை செய்து, எல்லாவற்றையும் செய்து அதை அளிப்பீர்கள் அல்லது அப்பிள்ளைகளுக்கு வேண்டியதை கொடுக்கத் தக்கதாக இன்றிரவு முனைவீர்களல்லவா? ஏனென்றால் நீங்கள் ஒரு தகப்பனாக, ஒரு பெற்றோரோக இருக்கிறீர்கள். அப்படியானால் ... நான் என்ன கூற முனைகிறேனென்றால் ஒரு பூமிக்குரிய பெற்றோரின் எண்ணத்தையும் அதின் உண்மையையுமே .. பெற்றோர்த்துவம் தேவனில் ஆரம்பித்தது. ஏனென்றால் அவர் தான் முதல் பெற்றோராயிருந்தார். அவர், சாத்தான் எப்படிப்பட்டவனாக இருப்பானென்றும் சாத்தான் என்ன செய்வானென்றும் கண்டிருந்து, தம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கப்பட விருந்ததிலேயே சிறந்ததை அவர் கொடுத்தளித்தார் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்களா? எதிராளியினுடைய தாக்குதல் என்ன வாயிருக்கும் என்பதை அறிந்தவராய் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அரண் அமைத்தார். பாருங்கள். தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயுள்ள போராட்டம் - 31.05.1962 அவபக்தியுள்ள பெற்றோர்கள் ஆகவே எலியா அவர்களை கர்த்தருடைய நாமத்தினாலே சபித்தான். பிள்ளைகளின் காரணமாக அல்ல, ஆனால் அவபக்தி கொண்ட பெற்றோரின் காரணமாக, ஏனென்றால், அவர்கள் பிள்ளைகளை வளர்த்திருந்த விதமானது அப்பிள்ளைகள் தேவனையே அவமதிக்கும் படிச் செய்தது. இரண்டு பெண் கரடிகள் புறப்பட்டு வந்து அவர்களில் நாற்பத்திரண்டு பேரைக் கொன்று போட்டன. இப்பொழுது அது தான் அவபக்தி, மரியாதையின்மை, தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார்! அவர்கள் அவருடைய தீர்க்கதரிசியை அவமதித்த போது, அவரை அவமதித்தனர். அவர்கள் விசுவாசிக்காமலிருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் தங்கள் வாய்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்து அதிலிருந்து தள்ளியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அர்த்தமற்ற ஏதாகிலும் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். அவர்கள் சொல்லக்கூடாத ஒன்றை சொன்னார்கள். அவர்களுக்கு நடந்தது என்ன? மரியாதை 15.10.1961 தந்தை நிலைகளும் மற்றும் பெண்ணியல்புகளும் உடைந்திருத்தல் நம்மிடத்தில் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள்களில் ஒன்றை நான் வாங்கினேன். அதில் எழுதப்பட்டிருந்தது என்னவென்றால், கடந்த உலகப் போரின் போது அயல் நாடுகளுக்கு சென்ற இராணுவ வீரர்களில் நான்கில் மூன்று பேர், வெளிநாடுகளுக்கு சென்று ஆறு மாதங்கள் ஆனதும் தங்கள் மனைவிகளால் விவாகரத்து செய்யப்பட்டனர். அப்பெண்கள் வெடி மருந்து தொழிற்சாலைகள், மற்றும் இன்னும் பிறவற்றில் வேலைக்குச் சென்றனர். இப்பொழுது, ஒரு மனிதன் வியாதிப்பட்டிருந்து, அவனுடைய மனைவி வேலைக்குச் செல்ல முடியாதிருந்து. என்னை மன்னிக்கவும் - அவனால் வேலைக்கு செல்ல முடியாத ஒரு நிலையில், அவனுடைய மனைவி குடும்பத்தை நடத்தும்படியாக வேலை செய்தாக வேண்டிய சூழ்நிலை இருக்குமானால் அதைக்குறித்து நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். அது சரி, ஆனால் சற்று கூடுதலான பணம் சம்பாதிக்க அவள் வெளியே செல்வாளானால், அவள் பணி செய்கின்ற இடத்திலிருக்கின்ற அந்த போக்கிரிகளின் கூட்டத்திலிருந்து அவளை அப்பால் நீங்கள் வைத்திருப்பது நலம். அவளுடைய இடம் வீடு தான். அது தான், அவள் வீட்டில் தான் இருக்கவேண்டியவளாக இருக்கிறாள். அடுத்ததாக, திருவாளனே, நீ உன்னை எப்பொழுதுமே நல்லவன் என்று கூறிக்கொள்கிறாய், ஆனால் இரவிலே நீ அவளை விட்டு விடுதிகள் மற்றும் பல இடங்கள் உன்னை அழைக்குமானால், அவ்வாறே செய்கிறதினாலே உன்னைத் தானே நீ வெட்கத்திற்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும். தேவன் உனக்கு ஒரு வீட்டைக் கொடுத்திருக்கின்றார். அதை நீ நெஞ்சார நேசிக்கவும் அதில் நீ மனநிறைவு கொள்ளவுமே உனக்கு ஒரு வீட்டைக் கொடுத்திருக்கின்றார். காரியம் அப்படியிருக்கையில் மனிதர் தங்கள் மனைவிகளை நடத்துகிற விதத்தையும் மனைவிகள் மனிதரை நடத்துகிற விதத்தையும் காணும் போது வெட்கித்தலைகுனிய வேண்டியதாயிருக்கிறது. தேசத்தில் பெண்ணியல்புகளும் தந்தை நிலைகளும் சுக்கு நூறாகப் போய்விட்டன. நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகள் குவிந்து நிறைந்திருக்கின்றன. அவ்விதமாகத் தான் இருக்கும் என்று இயேசு கூறினார். “நோவாவின் நாட்களில் நடந்தது போல, நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் பெண்கொண்டு பெண் கொடுத்தார்கள்” என்றார். அது பாவமும் அவமானமான ஒரு செயலுமாகும். அவ்விதமாக என்னை அழைக்க வேண்டாம். நான் இல்லை ..... ஜீவனுக்காக தாகம் கொள்ளுதல் 04.03.1960 2. தந்தை நிலை உன் மகனை பாழாக்குதல் - அது அன்பல்ல தந்தையே, இதை சற்று நினைவில் கொள். உன் சிறு பையன் ஒரு நாளிலே மனிதனாகும்படிக்கு வளரப் போகிறான். அவன் விவாகம் செய்து ஒரு குடும்பத்தையும் கொண்டிருக்கப்போகிறான். தான் விருப்பங்கொள்கின்ற எல்லா காரியத்திலேயும் தான் நினைப்பது மாத்திரமே நடக்க வேண்டும் என்கின்ற மனப்பாங்கைக் கொண்டிருக்கவும் - சரியானது எது தவறானது எது என்பதன் வித்தியாசத்தை சரியாக பகுத்தறியாத நிலையில் இருக்கும்படி வளர்க்கப்பட்டிருக்கும் ஒரு பையனுடன் வாழப்போகும் மனைவிக்கு தேவன் உதவுவாராக. அவ்வாறான ஒரு வளர்ப்பை செய்வது அன்பல்ல. அக்காரியமானது முழு அலட்சியமாகும். வேதாகமம் முற்றிலும் சரியாகக் கூறுகிறது. பிரம்பைக் கையாடாமல் இருப்பது உன்னுடைய மகனை பாழாக்குதலாகும். கர்த்தரின் சரீரத்தைப் பகுத்தறிதல் 12.08.1959 தந்தை அந்த பொறுப்பை சந்திக்க வேண்டும் – பிரம்படி ஆனால், அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், சில நேரங்களில் அவ்விதம் செய்வது நம்முடைய தோலை உரிக்கும் நிலைக்குள்ளாக்கும். ஒரு தகப்பன் என்ற முறையில் உன்னுடைய பிள்ளைக்கு நீ பிரம்படி கொடுக்கும் படிக்கான பொறுப்பை சந்திக்க வேண்டிய வனாயிருக்கிறாய். அந்த சிறு பிள்ளைகளை நீ பார்க்கும் போது அவ்விதமாக செய்வதற்கு நீ விரும்பமாட்டாய். ஆனால் ஒரு தகப்பன் என்கின்ற முறையில், ஒரு தாய் என்கின்ற முறையில் அந்த சிறு பிள்ளையை வளர்க்க வேண்டிய பொறுப்பை நீ சந்திக்கத்தான் வேண்டும். ஏனென்றால் வேதாகமம் "பிரம்பைக் கையாடவில்லை யென்றால் நீ உன் மகனை பாழாக்குகிறாய்'' என்று கூறுகின்றது. இந்த காரியமானது இன்றைக்கும் உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு உளவியல் நிபுணருடைய கண்களிலும் சரியான ஒன்றாகவே காணப்படுகின்றது. அது இன்னும் தேவனுடைய சத்தியமாக நிலைநிற்கின்றது. அது இன்னும் அதிகமாக கையாளப்பட்டிருக்குமானால் இன்றைக்கு நம்மிடையே சிறு பிள்ளை, இளமை பருவத்தினர் குற்றம் புரிதல் காரியம் மற்றும் நம்மிடைய காணப்படுகின்ற மோசமடைந்த நிலையானது அதிகமாக இருந்திருக்காது. தேவனுடைய சமூகத்திலிருந்து விலகியோடும் ஒரு மனிதன் 17.02.1965 3. தாயின் நிலை ஒரு குழந்தையுடன் முதன் முதலாக இருப்பதும் - அதை சரியான பாதையில் வைப்பதும் ஒரு தாயே ஒரு தாயானவள் மிகச்சிறந்த ஒருவளாவாள். இந்த வாழ்க்கையில் உன்னை முதலாவதாக பெற்றுக்கொள்வது யார் தெரியுமா, உன்னுடைய தாய் தான். உன்னை யாராலும் தொடக்கூட முடியாது. ஏனென்றால் நீ கர்ப்பத்தில் உருவாகும் போது அவள் உன்னை தன் இருதயத்தின் கீழாக சுமந்து கொண்டிருக்கிறாள். இந்த வாழ்க்கையில் உன்னை முதலாவதாக அறிந்துக்கொள்வதும் அவளே, உன்னை சுமப்பதும் அவளே, பிறகு நீ பிறக்கையில் முதலில் உன்னைத் தொட்டு நீ அழுகையில் உன் கண்ணீரைத் துடைக்கும் கைகளில் அவளுடையது ஒன்றாகும். இந்த வாழ்க்கையில் உன்னை முதன் முதலாக தட்டிக்கொடுத்து, உன்னிடத்தில் அன்பு கூர்ந்து, உன்னிடம் இனிய ஒலி எழுப்பி செல்லமாக கொஞ்சுவது உன்னுடைய தாயே ஆகும். இப்பொழுது ஒரு தாய்க்கு போதுமான கனம் அளிக்கப்படுவதில்லை என்று தான் நான் நினைக்கின்றேன். ஒரு குழந்தையுடன் முதன் முதலாக இருப்பது தாய் தான். ஆகவே அந்த குழந்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதற்கான பெரிய பொறுப்பை அவள் உடையவளாக இருக்கிறாள். அக்குழந்தை எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பது அந்த தாய் எப்படி அந்த பாதையை துவக்கிக்கொடுக்கிறாள் என்பதை பொறுத்துத் தான் அமையும். அந்த குழந்தையை சரியான பாதையில் வைக்கும் பொறுப்பு அந்த தாயைச் சார்ந்தது. தேவனிடத்திலிருந்து அந்த பொறுப்பு வருகின்றது. அதன் காரணமாகத் தான் தாய்மார்கள் அந்த விசேஷ தொடுதலைக் கொண்டிருக் கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். தாயின் தினம் 10.05.1959. பெண்கள் வீட்டில் தங்கமாட்டார்கள் கிறிஸ்துவினுடைய வருகையின் அடையாளம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவைகளை நோக்கிப் பாருங்கள். நான் இன்றிரவு உங்களிடம் கூறினது பலரால் விரும்பப்படாமலிருக்கலாம். ஆனால் அது உண்மை யாகும். அது தேவன் கூறினதாவது, இதோ நாம் அவைகளைக் காண்கிறோம். பெண்களுக்கு வீட்டில் தங்க விருப்பமில்லை. அவர்களுக்கு குடும்பத்தை கவனித்துக் கொள்ள பிரியமில்லை. அவர்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஒரு நபரை பணிக்கு அமர்த்திவிட்டு எங்காவது ஓரிடத்தில் களியாட்ட விருந்துக்கு சென்று விடுகின்றனர். சிறுவர்கள் குற்றம் புரிதல் மற்றும் எல்லா காரியங்களும் நடந்து கொண்டிருக்கின்றன ; தலை மயிர் கத்தரித்தல், குட்டைக்கால் சட்டை அணிதல், அழகுபடுத்தும் சாதனங்களை உபயோகித்தல், பெண்களின் அழகு நாளடைவில் அதிகரித்துக் கொண்டே போகின்றது. இயேசு கூறினது போன்று, மனிதன், தேவகுமாரர் விழத்தக்கதாக பிசாசானவன் வைத்திருக்கின்ற கண்ணியில் விழுந்துக்கொண்டிருக்கின்றனர். அது அவ்வாறே நிகழ வேண்டும். அவ்வாறு இருக்கும் என்று அவர் கூறினார். இதோ அது நிகழ்ந்துக்கொண்டிருக்கின்றது. அவர், "இவைகள் சம்பவிக்கும் போது, இந்த சந்ததி (ஒரு சந்ததிக்கு நாற்பது ஆண்டுகள்) ஒழிந்து போகாது' என்றார். அதை யோசித்துப் பாருங்கள்! ... பிரகாசிக்கும் சிகப்பு விளக்கு 23.06.1963 ஒரு தாயின் தொடுதல் இந்த நகரத்திலிருக்கும் ஒரு நபரை எனக்குத் தெரியும். அவனுடைய தாய் இப்பொழுது இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவனுக்கு ஏறக்குறைய என் வயதிருக்கும். நான் அந்த தாயை புண்படுத்த வேண்டும் என்று இதைக்கூறவில்லை. ஏனென்றால் எல்லா தாய்களைப் போன்று இந்த தாயும் போதுமான அளவிற்கு மனவேதனையை அடைந்துள்ளார்கள். அந்த நபர் மது குடிக்கின்றான்; அவன் மிக அதிகமாக மது குடிப்பவனாவான். அவனுக்கு அதிகமான போதை ஏறும் போது, நேராக வீட்டிற்கு வந்து படுக்கையில் அவன் தாய் இருக்கும் போது அவளருகே குதித்து வந்து அந்த தாயை கட்டி அணைத்துக்கொள்வான். அவனுக்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆகவே ஒரு தாய் தன் கையினால் மெல்ல தட்டிக்கொடுக்கும் அந்த தட்டுதலில் ஏதோ ஒன்று உள்ளது. மனிதத்தன்மையுடன் இதைக் கூறுவோ மானால், இந்த வாழ்க்கையில் இருக்கின்ற எந்த ஒரு தொடுதலைக் காட்டிலும் இந்த தொடுதலில் ஒரு வித்தியாசம் இருக்கின்றது. தாயின் தினம் 10.05.1959. பிள்ளைகளை வளர்ப்பதென்பது தேவன் அளித்த பணியாகும் இன்றிரவு ஒவ்வொரு சகோதரனுக்கும் பதிலளிக்க தேவனுடைய அழைப்பாகிய எரிகின்ற முட்செடி இங்கே இருக்கின்றது. உங்களுடைய காரியங்களை நினைத்துப் பாருங்கள். வியாதியஸ்தரை சுகமாக்க அடையாளங்கள், அற்புதங்கள் மற்றும் அதிசயங்களைக் காண்பிக்க பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார். மக்களாகிய உங்களில் அநேகர் கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பினீர்கள். உங்களில் அநேகர் தேவனுக்காக ஏதாவதொன்றைச் செய்ய விருப்பங் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆடைகளை துவைக்கும் தொட்டிக்காகவும், அங்கே வெளியே இருக்கின்ற தொழிற்சாலையில் ஒரு வேலைக்காகவும் அதை அசட்டை செய்தீர்கள். பெண்களாகிய உங்களில் சிலர் உங்களுடைய பிள்ளைகளுடன் வீட்டில் இருந்து அவர்களுக்கு வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ இன்னும் கூடுதலாக பணம் சம்பாதிக்க வெளியே வேலைக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமுண்டாவதாக. தேவன் உங்களுக்கு ஒரு வேலையை கொடுத்திருக்கின்றார் ; அதென்னவென்றால் பிள்ளை களை வளர்ப்பது. தேவனுடைய காரியங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என்பதே. அது தான் உண்மையாகும். பெண்களே, உங்கள் வழிகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த பணம் என்ன செய்யும்? யூதாஸ் காரியோத்து செய்தது போல அது செயலில் நின்று காண்பிக்கும். உங்கள் வழிகளை சற்று சிந்தித்து உங்கள் கால்களை அவருடைய சாட்சிக்கு நேராகவும், அவருடைய இரத்தத்திற்கு நேராகவும், அவருடைய கிருபையண்டைக்கும், அவருடைய கோரிக்கைக்கும் திருப்புங்கள். "என் வழிகளை சிந்தித்துக் கொண்டு என் கால்களை உம்முடைய சாட்சிக்கு நேராக திருப்பினேன் என்று தாலது கூறினான். நிச்சயமாக, நீங்கள் செல்கையில் உங்கள் வழிகளை சிந்தித்துக்கொண்டே செல்லுங்கள். என் வழியை சிந்தித்துக்கொண்டிருந்த போது 14.08.1959 ஐந்தாவது சுவிசேஷம் இக்காலையில் தாய்களாகிய நீங்கள், உண்மையான தாய்களாக இருந்து வருகின்ற நீங்கள், உங்களில் அநேகர் இருக்கிறீர்கள் என்று நானறிவேன். உங்களில் ஒவ்வொருவரும் என்றே நான் நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒன்றைக்கூறட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் நினைப்பதென்னவென்றால் நீங்கள் தான் ஐந்தாவது சுவிசேஷம். உங்கள் பிள்ளைகளுக்கு என்ன இருக்கின்றது என்று நான் உங்களுக்கு கூறட்டும். ஒரு சிறு காரியம் மாத்திரமே. ஏனென்றால் சகோதரன் நெவில் ஒருக்கால் இதன் பேரில் பிரசங்கிக்கக்கூடும். , . இன்றிரவு ஒரு தாயைக் குறித்து அல்லது நம்மில் யாராவதொருவர் செய்யலாம். அது சரியே, தாய்களைக் குறித்து, ஆனால் கவனியுங்கள், உங்களை ஒன்று நான் கேட்கட்டும். நினைவில் கொள்ளுங்கள். மோசே ஒரு சிறு பையனாக இருக்கையில் அவனுக்கு வேண்டிய போதனையை அளித்தது தாயாகும். சிறு மோசேயை தன்னுடைய முழங்கால்களில் வைத்துக் கொண்டு மோசே" என்று கூறி எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது ஒரு தேவ பக்தியுள்ள தாயாகும். அவன் தான் அவளுடைய ஆசான் ஆவான். இல்லை ... அவள் தான் அவனுடைய ஆசான் ஆவாள். அவள் பார்வோனுக்கு கீழாக இருந்து அவனுக்கு இந்த காரியங்களையெல்லாம் கூறினாள். அவள், "மோசே, ஒரு நாளிலே நீ இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கப் போகின்றாய். அதை செய்வதற்காக அழைக்கப்பட்டபையன் நீயே. உலகத்தின் காரியத்தினாலே உன்னை கறைப்படுத்திக் கொள்ளாதே. உன்னை பரிசுத்தமாக வைத்துக்கொள். ஏனென்றால் நீ தான் அந்தக்காரியத்தை செய்வதற்காக அழைக்கப்பட்ட ஒருவன்" என்று கூறினாள். அவன் எந்த ஒரு வேதகலாசாலைக்கும் செல்லவில்லை. எந்த ஒரு போதனை செய்கின்ற இடத்திற்கும் அவன் செல்லவில்லை என்பதை நாம் அறிவோம். அஞ்ஞானியின் இடமாகிய பார்வோனின் அரண்மனைக்குள்ளாகவே அவன் தங்கியிருந்தான் ; ஆனால் அவனுடைய தாய் அவனுக்கு போதனை செய்தாள். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார் - ஆசி.) அது தான் ஒரு உண்மையான தாய். அவள் கர்த்தருடைய பிரமாணங்களை அவனுக்குக் கற்றுக்கொடுத்தாள். அவன் எவ்விதமாக பரிசுத்தமாக இருக்கவேண்டுமென்று. அவனுக்கு அவள் எடுத்துக் கூறினாள். அவன் எப்படி, எந்த விதத்தில் எவ்விதமாக ஜீவிக்க வேண்டுமென்றும், தேவன் என்ன செய்யப் போகிறார் என்றும் அவனுக்கு என்ன செய்யப்போகின்றார் என்றும் கூறினாள். அது அவனுடைய ஜீவிய காலம் வரை அவனிலே தங்கிவிட்டது. ஆகவே எந்த ஒரு அருமையான, உண்மையான, உத்தமமான தாயும் தன்னுடைய சிறு குழந்தைகளை படக்காட்சிகளுக்கும், நடன ஆட்டங்களுக்கும் அதைப் போன்றவற்றுக்கும் அனுப்பாமல், அவளே தன்னுடைய சிறுபிள்ளையை எடுத்துத் தன் மடி மீது வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்றுக்கொடுப்பாள். அமெரிக்காவின் மீது படையெடுப்பு 09.05.1954 குழந்தைக்கு முதல் பிரசங்கி - ஒரு தாய் தான் ஒரு குழந்தைக்கு முதலாவதாக ஒரு பிரசங்கி இருப்பாரென்றால் அது அதன் தாயே, நான்கு, ஐந்து சுவிசேஷங்கள் உள்ளன ; மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் மற்றும் ஒரு தாய். ஒரு தாயானவள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு போதனை செய்து, எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்றும் எவ்விதமாக தேவனை அறிந்துக்கொள்ள வேண்டுமென்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவ்விதமாக செய்வதற்கு பதிலாக அக்குழந்தையை, ஒரு குழந்தையைப் பேணும் வேலையாளிடம் கொடுத்து விட்டு இரவு முழுவதுமாக சுற்றித் திரிகிறார்கள். அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலையில் ஞாயிறு பள்ளிக்கு சென்று தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்ளு கிறார்கள். நான் சற்று பிரசங்க பொருளிற்கு வருவது நல்லது, சற்று விலகிச் சென்று விட்டேனல்லவா ? நான் இந்த காரியங்களைக் குறித்து சத்தியத்தை விசுவாசிக்கும் சாஸ்சாபராஸ் (Sassafras) போல ஒருவனாவேன் (சாஸ்சாபராஸ் (Sassafras) என்பது ஒரு அமெரிக்க மர வகையாகும். அதன் பட்டை மருந்தாக பயன்படுத்தப் படும். தமிழாக்கியோன்) அது சரியே. சிறிது காலம் கழித்து நீங்கள் எரிக்கப்பட நான் விட்டு விடுவதைக் காட்டிலும் இப்பொழுதே உங்களுடைய மேற்பரப்பை நெருப்பினால் சுடுவேனாக - அது உண்மையாகும். ஆகவே இது தான் உண்மையென்றும், இது சுவிசேஷ சத்தியமென்றும் சற்று நினைவில் கொள்ளுங்கள். எதிர்பார்ப்பு - 01.10.55 தாய்மை - பெண் தன்னுடைய ஸ்தானத்தை காத்துக் கொள்ள வேண்டும். ஒரு பெண்ணானவள் ஒரு சிறந்த, புனிதமான, அருமையான, அற்புதமான ஸ்தானத்தைக் கொண்டவளாக இருக்கின்றாள். ஆனால் அவள் தன்னை அவ்விதமாக சரியாக நடத்திக்கொள்ள வேண்டியவளாக இருக்கின்றாள். ஒரு தாயாக, ஒரு பெண்ணாக, ஒரு பெண்மை நிலையை யுடையவளாக அவள் தன்னுடைய ஸ்தானத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். பெண்மை நிலை உடைக்கப் படுமானால் அது எந்த ஒரு தேசத்தின் முதுகெலும்பு உடைக்கப்படும். நம்முடைய பெண்களின் நல்லொழுக்கச் சீர்கேட்டினால் தான், அதன் காரணமாகத் தான் இன்றைக்கு நம்முடைய நாடு பாழாய்ப் போயுள்ளது. அது முற்றிலும் சரியே, நிச்சயமாக, நம்மிடையே இருக்கின்ற அந்த அழுகிப்போன நிலை தான் அதை உடைத்துக் கொண்டிருக்கின்றது எபிரெயர் அதிகாரம் 7, பாகம் 15-9-1957 தாயாக இருப்பதென்பது தேவனால் அளிக்கப்பட்ட ஒரு நன்மையாகும் தாய்மை என்பது நம்முடைய தேசத்தை ஒன்றாக பிணைத்துக் கொண்டிருக்கும் காரியங்களில் ஒன்றாகும். அது தான் முதுகெலும்பாகும். ஆகவே தாய்மை என்பது ஒரு பெண் தாயாக ஆக தேவன் அளிக்கும் ஒரு அருமையான நன்மையாகும். ஆனால் அக்காரியமானது எப்பொழுதோ சென்று விட்டது. நீண்ட காலத்திற்கு முன்னதாகவே இவ்வுலகத்தின் பெண்கள், அவர்களுடைய நன்நடத்தையானது ஹாலிவுட் நாகரீக தேவதைக்கு தலைவணங்கிவிட்டது. ஹாலிவுட்டைப் போலவே தங்களை அமைத்துக் கொண்டு, அதைப்போன்றே உடையுடுத்திக்கொண்டு, ஹாலிவுட் நடிகர்கள் சிலர் நடந்து கொள்வது போலவே இவர்களும் நடந்து கொள்கின்றனர். அநேக சமயங்களில் தேவபயமற்ற, பாவத்திற்குரிய விதத்தில் உடையுடுத்திக் கொள்ளுதல், மற்றவர்களை பாலுணர்வு விதத்தில் கவரும்படிக்கு நடந்து கொள்ளுதல் போன்றவைக்கு இன்றைக்கு சபைகளில் நாகரீக செயலாக கருதப்படுகின்றது. மேலும் பிரசங்க பீடத்தின் பின்பாக இருக்கின்ற மேய்ப்பர்கள் அதை கடிந்து கொள்வதற்கு போதுமான துணிவில்லாதவர் களாயும், பரிசுத்த ஆவியின் பெலன் இல்லாதவர்களாயும் இருக்கின்றனர். லோத்து அங்கே உட்கார்ந்து கொண்டு தன்னுடைய ஆத்துமாவில் கவலை கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பது போல, அவர்கள் செய்வது தவறானது என்று மேய்ப்பர்கள் மக்களிடம் எடுத்துச் சொன்னால் உணவுச் சீட்டு கிடைக்காது. ஆம். உலகம் மறுபடியும் விழுந்து போதல் - 27.11.1963 உங்கள் பொறுப்பில் இருக்கும் பெருமதிப்புள்ள இரத்தினங்கள் கர்த்தாவே, இக்காலையில் தேசம் முழுவதுமாக இந்த தாயின் நினைவு நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கையில் இதை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமாய் நாங்கள் கேட்கிறோம். ஆனால் இந்த ஒரு நாள் மட்டும் தாயின் நாளாக நினைவு கூறப்பட வேண்டாம். ஒவ்வொரு நாளும் அவ்விதமாக தாயின் நாளாக நினைவுக்கூறப்படுவதாக. தேவனிடமிருந்து அகன்று அலைந்து திரிகின்ற தாய்மார்கள், பெண்கள் இக்காலை வேளையிலே தங்களுடைய சுய உணர்வுக்கு வந்து, தாய் என்கின்ற வார்த்தை "ஈன்றெடுத்த ஒருவள்" என்று அர்த்தம் கொள்கின்றது என்பதை அவர்கள் உணரும்படி நீர் செய்தருளும். தன்னுடைய கணவனுடனான இணைப்பின் மூலமாக வந்துள்ள இந்த குழந்தைகள் தாமே , தேவன் அவளுடைய பொறுப்பில் வைத்திருக்கும் பரிசுத்தமான சிறு இரத்தினங்கள் என்பதை அவள் உணருவாளாக , பிறகு அப்பிள்ளைகளை வளர்த்து உருவாக்கும் பொறுப்புக்கு தேவன் அவளை உள்ளாக்குகின்றார். வேத வசனம், "அந்த அருமையான ஸ்திரீ, அவள் ஒரு அருமையான தாயாக இருக்கின்றபடியால், அவள் பிள்ளைகள் எழும்பி அவளை பாக்கியவதி என்பார்கள்' என்று கூறுகின்றது. தாயின் தினம் - 10.05.1959 சிறந்த ஆசிரியர் - குணாதியசத்தை உருவாக்குதல் ஆகவே விசுவாசமானது தன்னுடைய நிலையை ஒரு கற்பாறையின் மேல் அமைக்கும், அலைகள் அந்த அஸ்திபாரத்தை அடித்துக் கொண்டேயிருந்து நேராக மரணத்தின் முகத்தை நேராக நோக்கிப்பார்த்து, இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்து விடும் என்று அறிந்திருக்கின்றது. ஆனால் விசுவாசமோ கடலைக் கடந்து அப்பாலே, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக் கின்றேன், என்று கூறினவரை நோக்கிப்பார்த்து அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் சத்தத்தைக்கூட கவனிப்பதே யில்லை. அந்த விதமான ஒரு விசுவாசத்தைத் தான் மோசேயின் தாய் கொண்டிருந்தாள். அவள் அவனுக்கு போதித்து பார்வோனின் அரண்மனையில் அவனை வளர்த்து உருவாக்கி, அவன் ஒரு நோக்கத்திற்காகவே பிறந்திருக்கின்றான் என்றும் யேகோவா தன்னுடைய ஜெபத்திற்கு பதிலளித்தார் என்றும் அவனுக்கு போதித்தாள். ஆகவே மோசேக்கு அவளை விட ஒரு சிறந்த ஆசிரியர் இருந்திருக்க முடியாது. அது தான் மோசேயின் குணாதிசயத்தை சீராக உருவாக்கி அவன் என்னவாயிருக்க வேண்டுமோ அவ்விதமாக இருக்கும் படிக்குச் செய்தது. தாயின் தினம் - 10.05.1959 பழங்கால முறைமை தாய்மார்கள் - சிறுவர்கள் குற்றம் புரிதல் அதிகமாக இருக்கவில்லை உண்மையான பெண்களை, உண்மையான தாய்களை எனக்கு பிடிக்கும். தேவன் நமக்கு இன்னும் அதிகமாக பழங்கால முறைமை தாய்களை நமக்கு அளிப்பாராக. ஒரு தாய் வீட்டிலே தங்கியிராமல் எங்கோ நடக்கின்ற மது விருந்துக்கு சென்று விடுகிறாள், குழந்தைகளை யாரோ ஒரு குழந்தைகளை பாதுகாக்கும் வேலைக்காரிகள் எங்கோ ஒரு இடத்தில் வைத்துப் பாதுகாக்கின்றனர். அப்படியிராமல், ஒரு தாயானவள் வீட்டிலே இருந்து தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்வாளானாள் நம்மிடையே சிறுவர் குற்றம் புரிதல் காரியமானது அதிகளவில் இருக்காது. அது சரியே. அது தான் குழந்தைகளின் மனதை ஒழுக்கக் கேட்டிற் குள்ளாக்குகின்றது. இக்காரியங்களால் அமெரிக்கா மிகவுமாக அழுகிப்போயுள்ளது. இன்னும் அழுகிக் கொண்டேயிருக்கின்றது. இன்னுமாக அழுகிக் கொண்டு தான் இருக்கும். ஒன்றுமே . . அதற்கு எதிராக நான் குரலெழுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன், ஆனால் அது இன்னுமாக அழுகிக்கொண்டேயிருக்கின்றது. அப்படியிருக்கு மென்று வேதாகமம் கூறியிருக்கின்றது. இந்த தேசம் தன்னுடைய வாலிப ப்பிராயத்திலே மரித்துப் போகும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். வெளி. 13. அது தோன்றும் போது அது எப்பொழுதுமே இளமையாக இருக்கும். அது தான் அந்த சிறிய வருகின்ற ஆட்டுக்குட்டி. யேகோவாயீரே 03.08.1960. பழமை நாகரீகமுடைய தாயானவள் தன்னுடைய குடும்பத்தைப் பேணி காப்பாள் இப்பொழுது நமக்குத் தெரிந்தவரை பூமியில் ஒரு உண்மையான தாயை விட இனிமையானதொரு காரியம் எதுவுமே இல்லை. தேவன் தாமே அந்த உண்மையான கருணையுள்ளம் வாய்ந்த தாயின் ஆத்துமாவை ஆசீர்வதிப்பாராக. ஆனால் தாய்" என்று அழைக்கப்படுகின்ற அநேக பதிலாள்கள் (substitutes), மாற்றாள்கள் அநேகர் நம்மிடையே உள்ளனர். அது ஒரு தாயல்ல. அவர்கள் பிள்ளைகளைக் கொண்டுள்ள ஸ்திரீகளே ஆவர். ஆனால் ஒரு தாய் அல்ல. பழமை நாகரீகமுடைய தாயானவள் தன்னுடைய குடும்பத்தை பேணிக்காக்கின்ற ஒருவளாய் இருப்பாள். அவள் இந்த ஒய்யார நடனமாடும் இடங்களிலும், களியாட்டுகளிலும் முழு இரவும் புகை பிடித்துக் கொண்டும், குடித்துக் கொண்டும் இருக்கமாட்டாள். அப்படி செய்பவள் புனிதமான பெயராகிய தாய் என்ற பெயரை பெற அவளுக்கு தகுதியே இல்லை. ஒரு பிள்ளையை வளர்க்கின்ற ஒரு ஸ்திரீயாக மாத்திரமே அவள் இருப்பாள். அவ்வளவு தான்; ஆனால் ஒரு தாய் அல்ல, ஏனெனில் ஒரு தாய் என்பது வேறொரு அர்த்தத்தைக் கொண்டதாய் இருக்கின்றது. இப்பொழுது நான் நினைக்கிறேன். நீங்கள்.. மோசேயைக் குறித்த போதனை - 13.05.1956 குடும்ப நெறிமுறைகள் ஒழுங்கில் அமைக்கப்பட்டிருக்கின்ற ஒரு குடும்பம் தான் சரியானதொரு வீடாகும். நாம் தெருக்களில் அநேக முறைகள் செல்கின்றோம். அப்பொழுது ஒரு வீட்டை நாம் காண்கின்றோம். சில நேரங்களில் நாம், இது அருமையான ஒரு வீடல்லவா" என்கிறோம். ஒருக்கால் அது ஒரு அருமையான வீடாக காட்சியளிக்கலாம், ஆனால் ஒழுங்கில் அமைக்கப் பட்டிருக்கின்ற ஒரு குடும்பம் தான் சரியானதொரு வீடாகும். அதற்குள்ளாக இருக்கும் அந்த ஒழுங்கை பார்க்கலாம் - குடும்பத்தின் ஒழுங்கு. தேவனுடைய வீடும் அவ்விதமாகத்தான் என்று நான் நினைக்கின்றேன். அது ஒரு அழகான ஆலயம் என்று நான் மெச்சுகிறதனால் அல்ல, ஆனால் அதற்குள் இருக்கும் ஒழுங்கு தான் அதன் அழகிற்கு காரணம், எந்த விதமான ஒழுங்கை அவர்கள் கொண்டிருக்கின்றனர்? அவர்கள் உண்மையாகவே கிறிஸ்தவர்களாயிருந்து, கர்த்தரை உண்மையாகவே ஆராதித்து, அவரை உண்மையாகவே நேசிக்கிறார்களா? அது திருத்தப்படுதலின் வீடாக இருந்து சுவிசேஷமானது பிரசங்கிக்கப்பட்டு நம்மைப் பின்தொடரு மென்று இயேசு நமக்களித்த அடையாளங்கள் கூட வருகின்றதா? இங்கே இந்த பியூலா ஆலயத்தில் அவ்விதமாகத் தான் என்று நான் நிச்சயித்திருக்கின்றேன். ஜீவனுக்காக தாகங்கொள்ளுதல் 13.06.1959 குடும்ப வாழ்க்கை மிகவுமாக அசட்டை பண்ணப் பட்டிருக்கின்றது. வேதாகமம் பின்னால் தள்ளப் பட்டுள்ளது. மேலும் நம்மிடையே குடும்ப வாழ்க்கை நெருக்கடியும் இருக்கின்றது. குடும்ப வாழ்க்கையானது ஆழமில்லாத உறுதியற்ற நிலைக்குள்ளாக சென்று கொண்டிருக் கின்றது போல காணப்படுகின்றது. ஒரு குடும்பத்தில் குடும்பத்தின் தலைவனான தகப்பன் காலையில் உட்கார்ந்து தன்னுடைய குடும்பத்தாரிடம் பேசுவார். பிறகு அவர்களெல்லாரும் அந்த பழைய குடும்ப வேதாகமத்தை எடுத்து அதிலிருந்து சிறிது வாசித்து மேஜையைச் சுற்றிலும் எல்லோரும் கூடி ஜெபம் செய்வது வழக்கமாயிருந்தது. அப்படிப்பட்ட காரியமானது இப்பொழுதெல்லாம் காணப் படுவதேயில்லை. அந்த நாள் முடிந்த பிறகு தாயானவள் பாத்திரங்களை யெல்லாம் கழுவி முடித்த பிறகு மறுபடியுமாக அவர்களெல்லோரும் ஒன்று கூடி வேதாகமத்திலிருந்து இன்னும் சிறிது வாசித்து படுக்கைக்கு செல்லும் முன்னர் ஜெயிப்பார்கள். அந்நாட்களில் சிறுவர் குற்றம் புரிதல் என்பது மிகவும் அரிதான ஒரு சம்பவமாக இருந்தது. பையன்களெல்லாம் வேலைக்கு வயல்வெளிக்குச் சென்றனர், பெண்பிள்ளைகள் நீரோடைகளில் துணி துவைக்க அம்மாவிற்கு உதவி செய்தனர். ஆனால் இன்றைக்கோ நாம் ஒரு சிறு பொத்தானை அழுத்தும் போது இயந்திரம் எல்லா பாத்திரங்களையும் கழுவி முடித்து விடுகின்றது. அம்மா காரில் அமர்ந்து சீட்டு கச்சேரி விருந்திற்கு அல்லது எங்கோ வெளியில் சென்று விடுகிறார்கள். தெருக்களில் எலியைப் போல இங்குமங்கும் ஓடுகின்றாள். வயல் பணியை ஒரு ட்ராக்டர் இயந்திரம் (tractor) செய்து முடித்துவிடுகின்றது. ஆகவே நம்மிடையே இருப்பவர்கள் எல்லாம் யாரென்றால் செய்வதற்கு ஒன்றுமில்லாத சோம்பேறி மக்கள் கூட்டமே. அமெரிக்காவில் அநேக வீடுகளில் குடும்ப வாழ்க்கையானது மிகவும் அசட்டை செய்யப்பட்டிருக்கின்றது. வேதாகமம் எங்கோ உள்ளே வைக்கப்பட்டு அதைத் தேடி எடுக்க வேண்டு மென்றால் அவர்களுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படும் அளவிற்கு இன்று அநேக வீடுகளில் நிலைமையானது உள்ளது. அருமையான பழைய நாகரீகக் குடும்பம் நான் உங்களுக்கு இதைக்கூறட்டும். நான் நினைப்பதென்னவென்றால், இன்றைக்கு தேசமுழுவதிலும் சிறுவர் குற்றம் புரிதல் காரியமானது அலை போல பாய்ந்துக்கொண்டிருக்கின்றது. ஆனால், உண்மையாக பார்ப்போமானால், அக்காரியமானது வீட்டில் தான் ஆரம்பித்தது என்று நான் நினைக்கின்றேன். பெற்றோர் அவ்விதமாக விட்டு விட்டனர் என்று நான் நினைக்கின்றேன். பிள்ளையானது ஒரு அருமையான, பழமை நாகரீகம் கொண்ட, தேவ பக்தியுள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்குமானால்; அதினால் எல்லாம் முடிந்து விடும் என்று நான் கூறவில்லை, நிச்சயமாக இல்லை, ஆனால் அவ்விதமான ஒரு வளர்ப்பு பிள்ளைக்கு சரியான ஒரு விளைபயனை, பாதிப்பை நிச்சயமாக அது உண்டாக்கியிருக்கும். அநேக சமயங்களில் நான் நினைப்பது என்னவென்றால் அநேக வீடுகளில் பிள்ளைகள் தவறான விதத்தில் வளர்க்கப்பட்டு தெருக்களில் திரிய விடப்பட்டு அப்பிள்ளையின் தாய் அல்லது அதன் தந்தை மதுபான பார்களில் இருக்கையில் அப்பிள்ளை தனக்கு வேண்டியதை தானே பார்த்துக் கொள்கின்றது. அவர்கள் அந்த பிள்ளையைக் குறித்து அக்கரை கொள்வதேயில்லை. மற்றொரு காரியம் என்னவென்றால் அவர்கள் அதை நேசிக்காமல் அதற்கு தேவைப்படுகின்ற பாசத்தை காண்பித்து அதை எடுப்பதேயில்லை. அது சிறு பிள்ளையாகும். நீங்கள் அதற்கு அன்பு, மரியாதை மற்றும் வேதத்தை வாசிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். செல்வாக்கு 14.11.1963 குடும்பமானது பிள்ளைகளுக்கு அருமையான ஒன்றாக இருக்கும் படிக்குச் செய்யுங்கள். நான் உங்களுடைய வீட்டுக்குள் வந்து உங்கள் வீட்டுச் சுவர்களில் எந்த விதமான படங்களை வைத்துள்ளீர்கள் என்பதை நான் பார்ப்பேனாக. நான் உங்களுடைய வீட்டிற்குள்ளாகவோ அல்லது உங்களுடைய அலுவலகத்திற்குள்ளாகவோ வந்து எந்தவிதமான இசை போடப்பட்டுள்ளது என்று நான் பார்ப்பேனாக. பாருங்கள்? என்ன காரியத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள், எதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் கண்டு உங்களுக் குள்ளாக என்ன இருக்கிறது என்று நான் உங்களிடமாக கூறட்டும், ஏனென்றால் உங்களுக்குள்ளாக இருக்கின்ற அது தான் அதற்கு வேண்டியதை மாத்திரமே நாடும். பாருங்கள்? ஆகவே, ஓ, ஒரு குடும்பத்தை பொறுத்த மட்டில், நாம் அதை அருமையான ஒன்றாக இருக்கும்படிக்குச் செய்வோ மானால் பிள்ளைகள் அதை விட்டு ஓடிப் போக விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு வீடானது மகிழ்ச்சி வாய்ந்த ஒன்றாகவும், அருமையான ஒன்றாகவும், அவர்களை வரவேற்கிற ஒன்றாகவும், எங்கிருந்தாலும் அவர்கள் வீட்டை துரிதமாக அடைய துடிக்கும் நிலையில் வீடானது இருக்கும்படிக்கு அவர்களுக்காக இன்னும் அதிக காரியங்களைச் செய்யுங்கள். அந்த விதமாகத் தான் ஒரு குடும்பம் இருக்க வேண்டும். செல்வாக்கு. தூதர்கள் வீடுகளுக்கு வருகை தராதிருக்கின்ற காரணம் இந்த போர்கள், நீங்கள் சிறு பிள்ளைகளை வீட்டை விட்டு எடுத்து அவர்களில் சிறந்தவர்களை எடுத்து அனுப்புகிறீர்கள், ஏனெனில் இராணுவ ஒழுங்கைத் தவிர வேறு எந்த ஒரு ஒழுங்கும் அவர்களுக்குத் தெரிவதில்லை . 'அங்கே மலையின் மீது நிமிர்ந்து ஏறு, யாராவது சுட்டு விட்டால் ஒரு வீரனைப் போல மடி'' என்கிறீர்கள். அவர்களும் அதை மகிழ்ச்சியுடனே செய்கின்றனர். அங்கே ஓடிச்செல்கின்றனர். ஒருவரையொருவர் சுட்டுக் கொல்கின்றனர். சுடுகின்றனர்... அவர்கள் குடும்ப ஆளாக இருந்தாலொழிய தேசம் அவர்களை மறந்து விடுகிறது. அவர்கள் இங்கே திரும்பி வருகையில், அவர்கள் எப்படி வந்தாலும் சரி... நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா, போர்வீரர்கள் அநேகர்... ஆனால் கிறிஸ்துவுக்காக தன்னுடைய ஜீவனை கொடுக்கின்ற ஒரு மனிதனை உங்களால் கண்டுபிடிப்பது அரிது. சபைக்கு செல்லத்தக்கதாக அவன் தன்னுடைய மரத்தின் நிழலிலிருந்து தவழ்ந்து கூட வெளியே வரமாட்டான். அவன் நீண்ட நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டேயிருப்பானே தவிர புதன் இரவு ஜெப ஆராதனைக்கு அவன் செல்லவே மாட்டான். அது சரியே, ஆமென். அது அவமானகரமான ஒன்றாகும். வெட்கக்கேடான காரியமாகும். அதன் காரணமாகத்தான் தூதர்கள் சபைகளுக்கு வருகை தருவதேயில்லை. அதன் காரணமாகத்தான் தூதர்கள் வீடுகளை சந்திப்பதேயில்லை. இந்த காரியத்தைக் குறித்து நாம் சற்று உத்தமமாக, ஆழமாக பார்ப்போமாக. தேவ தூதர்கள் எப்போதும் செய்து கொண்டிருப்பது போலவே இப்பொழுதும் இன்றிரவு இங்கே பூமியின் மீது இருக்கின்றார்கள். இயேசு கிறிஸ்து பரத்திற்கு எடுக்கப்பட்டு பெந்தே கொஸ்தேயில் வந்ததிலிருந்து பரிசுத்த ஆவியானவர் இங்கே தான் இருந்து கொண்டிருக்கிறார். அவர் எல்லா சபை காலங்களினூடாக தோன்றி மக்களில் ஒரு சிறு கூட்டத்தினரை அவர் ஒன்று சேர்த்தார். மற்ற எல்லோருமே குண்டுகளுக்கு இரையாவற்கு இருக்கின்றனர் ; அதை நான் இப்பொழுது உங்களுக்கு கூறுவேன். அது எப்படிப்பட்ட ஒரு இரையாக இருக்கு மென்றால் படு வேதனையுடன் கலந்து புகையோடு கலந்து ஒன்றாக இருக்கும். ஆம் ஐயா, இந்த வார்த்தையின் கூற்றுப்படி ஒரு மறுபடியும் பிறந்த அனுபவத்துடன், ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் கழுவப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்டு பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பட்டிருந்தால் தவிர அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லமுடியாது. ஆம், வேதாகமம் அதைத்தான் சரியாக கூறுகின்றது. மாறாத தேவனுடைய வார்த்தை 24.07.1960 வீட்டிலே ஒழுங்கை பெற்று அதைக் கற்றுக்கொள் பிள்ளைகள் ஒழுங்கை அறிய வேண்டியவர்களாய் உள்ளனர். அவர்கள் அதை வீட்டிலே பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாயுள்ளனர். அது என்னுடைய பிள்ளை களாக இருந்தாலும் சரி, சாரா, ரெபேக்கா, ஜோசப், பில்லி அல்லது அது வேறு யாராக இருந்தாலும் சரி. அவர்கள் எந்த நேரத்திலும் இங்கே உள்ளே வந்து, ஒழுங்கற்றவர் களானாலும் சரி, வேறு ஒரு வழியை அவர்களுக்கு நான் பிரயோகிக்கமாட்டேன் ; அதை எனக்கு சொல்லுங்கள். நான் அதைப் பார்த்துக் கொள்வேன். அவர்களால் ஒழுங்காக நடந்து கொள்ள முடியவில்லையானால், ஒழுங்காக நடந்து கொள்ள அவர்கள் கற்றுக்கொள்கின்ற வரையில் அவர்கள் சபைக்கு வராமலிருப்பார்கள். இது ஒரு விளையாடும் விளையாட்டரங்கமல்ல, இது தேவனுடைய வீடாகும். இது விளையாடுவதற்கோ, சறுக்கு விளையாட்டிற்கோ, குறிப்புகள் எழுதுவதற்கோ, சிரிப்பதற்கோ, கடுமையான குறை கூறுவதற்கான இடம் இதுவல்ல, இது தேவனுடைய வீடாகும். இது தேவபக்தியுடன் நடத்தப்பட வேண்டிய ஒரு இடமுமாகும். சபை ஒழுங்கு 26.12.1963 மணிக்கணக்கான பயிற்சிகள் வீட்டிலே தான் கொடுக்கப்பட வேண்டும். சபையில் செல்வ செழிப்பைக் குறித்துப் பார்ப்போமானால் - செல்வ செழிப்பை வெளிக்காண்பித்தல் காரியமானது இப்பொழுது இருப்பது போல முன்பு இருந்திருக்காது. அழகான ஸ்தலங்கள் முன்பு இருந்திராத வகையில் இப்பொழுது அதிகமாக பொருத்து போய்க் காணப்படுகிறது. மிகப் பெரியதை, அழகானதை யார் கட்டுவார் பார்க்கலாம் என்று பல்வேறு ஸ்தாபன குழுக்கள் போட்டா போட்டியிட்டு கட்டிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கணக்கிடப்பட முடியாத இலட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு கல்விக்கூடங்களை கட்டியிருக்கின்றனர். அந்த கட்டடங்களோ வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் தான் உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பொழுது இது மோசமான ஒன்றல்ல, ஆனால் அதை விட மோசமான காரியம் என்னவென்றால், வீட்டிலே கொடுக்கப்பட வேண்டிய மணிக்கான பயிற்சிகளுக்கு பதிலாக இந்த கல்விக்கூடத்திலே பிள்ளைகள். செலவழிக்கின்ற இந்த குறைந்த மணி நேரமே ஏற்றது என்று அவர்கள் எதிர்பார்க் கின்றார்களே அது தான். அந்த மோசமான காரியம். லவோதிக்கேயா சபைக்காலம். ஞாயிறு பள்ளி ஆசிரியரின் 15 நிமிட வகுப்பை மாத்திரமே சார்ந்திருத்தல் ஓ, என்னே, நாம் எப்படிப்பட்ட ஒரு மோசமான காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். சுற்றுமுற்றும் பார்க்கும் போது நாம் பாவத்தைத் தான் காண்கின்றோம். அதைக் கவனித்துப் பாருங்கள். ஓ . ஆம், ஒரு ஜெப ஆராதனைக்கு உங்களால் போக முடியவில்லை , "ஓ மிக வெப்பமாக இருக்கின்றது. "மிக குளிராக இருக்கிறது.'' "ஆம், அந்த பிரசங்கி நீண்ட நேரம் பிரசங்கம் செய்கின்றார்." என்கிறீர்கள். ஆனால் அந்த பழைய பிசாசின் தொலைக்காட்சி பெட்டியின் முன் இரவும் பகலும் உட்கார்ந்து உங்கள் தலையை எட்டி நிமிர்த்தி உங்களால் பார்க்கமுடியுமல்லவா. நீங்கள் அதை நோக்கி ... ஏன், சிறு பிள்ளைகளில் பாதி . . . தாய்களாகிய நீங்கள் தான் பிள்ளைகளுக்கு கிறிஸ்துவைக் குறித்து போதிக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். வாரத்திற்கு ஒரு முறை பதினைந்து நிமிடங்களுக்கு ஞாயிறு பள்ளி வகுப்பு நடத்தும் ஆசிரியரை நம்பி சார்ந்திருக்க வேண்டாம். இன்றைக்கு தேசத்தில் ஒவ்வொரு பிள்ளையும் டேவிட் க்ராக்கெட் (David Crockett) யார் என்றும், எங்கிருந்து அவன் வருகிறான் என்றும், அவன் கரடியைக் கொன்ற போது அவனுக்கு என்ன வயது என்றும் சொல்லும். ஆனால் பாவிகளை இரட்சிக்க இயேசு கிறிஸ்து எவ்விதம் வந்தார் என்று உங்களிடம் கூறும் பிள்ளைகள் நூறில் ஒரு பங்கு, அந்த பங்கிலிருந்து ஒரு பங்கு அளவிற்குக் கூட இல்லை. இருபத்து நான்கு இருபத்து நான்கு மாதத்திற்குள்ளாக ஆமாம், பன்னிரண்டு மாதத்திற்குள்ளாக டேவிட் க்ராக்கெட்டைக் குறித்து முழு தேசமே அறிந்து கொண்டது. மிருகத்தின் முத்திரை 15.07.1956 தீர்க்கதரிசிக்கு செய்ய வேண்டிய விருந்தோம்பல் எலிசாவின் நாட்களிலே சூனேமியாள் என்னும் ஸ்திரீயானவள் இருந்தாள் என்று அவள் வேதாகமத்தில் வாசித்திருந்தாள். அந்த சூனேமியாள் மலடியாயிருந்தாள். ஆனால் அவள் விசுவாசத்தைக் கொண்டிருந்தாள். அந்த மனிதன் அந்த நாளின் தீர்க்கதரிசி எலிசா ஆவான். ஆகவே அவளும் அவனுடைய கணவனும் குடியிருந்த அந்த அருமையான வீட்டில் பக்கத்தில் அவள் ஒரு சிறு இடத்தை அவனுக்கு கட்டித்தந்தாள். அவர்கள் ஒரு இடத்தை கட்டி தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தை அங்கே வைத்தார்கள். அவன் குளித்து தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி அது அவனுக்குமிகவும் சௌகரியமான ஒரு இடமாக அதைச் செய்தார்கள். அவன் தன்னுடைய வேலைக் காரனான கேயாசியுடன் வந்த போது “இந்த சூனேமியாள் நம்மிடையே பாராட்டியுள்ள இந்த அன்பைப் பார்'' என்றான். அவன் " சேனாதிபதியிடத்தில் உனக்காக நான் பேச வேண்டிய காரியம் உனக்குண்டோ என்று அவளிடம் கேள்" என்று கூறினான். அப்பொழுது இயேசு வந்து அழைத்தார் 1.04.1964 தேவனுடைய ஊழியக்காரனுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் அப்பொழுது அங்கே ஒரு ... ஓ அவனுக்கு . . . இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், அவனுக்கு கோபமும் இருந்தது. அவன் தலை வழுக்கையாயிருந்ததால் சில பிள்ளைகள் அவனைப் பரியாசம் செய்ய ஆரம்பித்தனர். அப்பொழுது அவன் அந்த பிள்ளைகளை சபித்தான். அதற்கான முழு பொறுப்பை பிள்ளைகளின் மேலேயே போடுவதென்பது மிகையான ஒன்றாகும். அதற்கு பொறுப்பாளிகள் யாரென்றால் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று அப்பிள்ளை களுக்கு சொல்லித்தராமல் சரியாக வளர்த்திராத பெற்றோர்களே. அது தான் காரணமாகும். இரண்டு பெண் கரடிகள் வந்து அப்பிள்ளைகளில் நாற்பத்தி ரெண்டு பேரைக் கொன்று போட்டன. பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இழந்தனர். ஒருக்கால் சுமார் 100 பிள்ளைகள் எலிசாவை பரியாசம் செய்து அவன் பின்னாலே வந்து கொண்டிருந் திருப்பார்கள். அந்த தீர்க்கதரிசி சமாரியாவினூடாக சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது. அந்த தீர்க்கதரிசி அங்கே வார்த்தையை மிக நீண்ட நேரம் அவர்களுக்கு பிரசங்கித்திருப்பான். ஆனால் அச்சம்பவத்திலிருந்து ஒரு காரியத்தை உங்களால் காண முடிகின்றதா? தேவனுடைய செய்தியாளன் பேரில் மக்கள் கொண்டிருந்த மனப்பான்மையே அது காண்பிக்கின்றது. தீர்க்கதரிசியாகிய எலிசா 02.10.1956 ஒரு வேறே ஒரு சூழ்நிலையை உண்டாக்குதல் நான் மெதுவாகக் சென்று முன்புறத்தில் கட்டிக் கொள்ளும் ஒரு துணியை எடுத்து அதை என்னைக் சுற்றிக்கொண்டு அவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தேன். அப்பொழுது நான், "தேனே, உனக்கு ஒன்று தெரியுமா? சென்ற நாளிலே நான் ஒரு அழகான ஆடையைக் கண்டேன். அதை நான் உனக்கு வாங்கலாமென்று விரும்பினேன். அது இங்கே அருகாமையிலுள்ள ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ளது. நாம் போய் அதை வாங்கிக் கொள்ளலாம்" என்றேன். அதே நேரத்தில் என் இருதயத்தில் நான் "பரலோகப் பிதாவே இந்த அருமையான பெண்ணை சற்று அமைதிபடுத்தும்” என்று ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். நான் என் கரத்தை அவள் மீது வைத்து, அவள் அறியாத விதத்தில் நான் ஜெபித்துக்கொண்டேயிருந்தேன். “ஆம் தேனே, ஓ, அது அழகாயிருந்தது என்று கூறிக்கொண்டேயிருப்பேன். அதே நேரத்தில் "ஓ கர்த்தாவே, இந்த சிறு பெண்ணை சற்று அமைதிப்படுத்துவீராக” என்று ஜெபித்துக் கொண்டிருப்பேன். அவள் அறியாத விதத்தில் நான் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிருப்பேன். நான் செய்து கொண்டிருந்தது என்ன தெரியுமா? வேறு ஒரு சூழ்நிலையை நான் உண்டாக்கிக்கொண்டிருந்தேன். பிறப்பித்து ஏவிக் கொண்டிருந்தேன். தேவனுடைய அன்பில் நடவுங்கள்; ஐக்கியம் கொள்ளுங்கள். சில நிமிடங்களில் அவள் அமைதியானாள். அவள் அமைதியானவுடனே சாரா, பெக்கி, விளையாட்டு பொருட்களை சரி பாதியாக பிரித்துக் கொண்டார்கள் ; ஜோசப் விளையாடுவதற்கு ஒன்றை எடுத்துக் கொண்டான் வீட்டில் சமாதானம் இருந்தது. அது என்னவாயிருந்தது? அன்பை பிறப்பித்து காண்பித்தல். என் பிள்ளைகள், என் மனைவி, அவர்கள் என்னுடையவர்களாவர். நான் தேவனாயிருந்தேன் (god). அப்பொழுது தேவன் (God) தம்முடைய ஆவியை அளித்து, அந்த ஆவியின் மூலமாக, என் குடும்பத்தின் பேரில் அன்பை செலுத்தி, எல்லையற்ற கிருபை உள்ளே வந்து குடும்பத்தை அமைதிபடுத்தினது. அது நிச்சயமாகச் செய்யும். அது செய்யும் என்று எனக்குத் தெரியும். தெய்வீக அன்பு பிறப்பிக்கப்படச் செய்யும் போது 26.01.1957 அன்பு செலுத்தவும், மரியாதை செலுத்தவும், வேதத்தை வாசிக்கவும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள் நான் உங்களுக்கு இதை கூறட்டும், நான் நினைப்ப தென்னவென்றால், இன்றைக்கு தேச முழுவதிலும் சிறுவர் குற்றம் புரிதல் காரியமானது அலை போல பாய்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், உண்மையாக பார்ப்போ மானால், அக்காரியமானது வீட்டில் தான் ஆரம்பித்தது என்று நான் நினைக்கின்றேன். பெற்றோர் அவ்விதமாக விட்டு விட்டனர் என்று நான் நினைக்கின்றேன். பிள்ளையானது ஒரு அருமையான, பழமை நாகரீகம் கொண்ட தேவ பக்தியுள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருக்குமானால், அதினால் எல்லாம் முடிந்து விடும் என்று நான் கூறவில்லை . நிச்சயமாக இல்லை, ஆனால் அவ்விதமான ஒரு வளர்ப்பு பிள்ளைக்கு சரியான ஒரு விளைபயனை, பாதிப்பை நிச்சயமாக அது உண்டாக்கியிருக்கும். அநேக சமயங்களில் நான் நினைப்பது என்னவென்றால் அநேக வீடுகளில் பிள்ளைகள் தவறான விதத்தில் வளர்க்கப்பட்டு தெருக்களில் திரிய விடப்பட்டு அப்பிள்ளையின் தாய் அல்லது அதன் தந்தை மதுபான பார்களில் இருக்கையில் அப்பிள்ளை தனக்கு வேண்டியதை தானே பார்த்துக் கொள்கின்றது. அவர்கள் அந்த பிள்ளையைக் குறித்து அக்கரை கொள்வதேயில்லை. மற்றொரு காரியம் என்னவென்றால் அவர்கள் அதை நேசிக்காமல் அதற்கு தேவைப்படுகின்ற பாசத்தை காண்பித்து அதை எடுப்பதேயில்லை. அது சிறு பிள்ளையாகும். நீங்கள் அதற்கு அன்பு, மரியாதை மற்றும் வேதத்தை வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்க வேண்டியவர் களாக இருக்கிறீர்கள். செல்வாக்கு 14.11.1963 பெண்கள் பிள்ளைகளுக்கு வேதத்தை வாசித்துக் காண்பிக்க வேண்டும் பெண்களாகிய உங்களில் சிலர் உங்களுடைய பிள்ளைகளுடன் வீட்டில் இருந்து அவர்களுக்கு வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருக்க வேண்டியவர் களாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்களோ இன்னும் கூடுதலாக பணம் சம்பாதிக்க வெளியே வேலைக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமுண்டாவதாக. தேவன் உங்களுக்கு ஒரு வேலையை கொடுத்திருக்கின்றார். அதென்னவென்றால் பிள்ளைகளை வளர்ப்பது, தேவனுடைய காரியங்களை, அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். அது தான் உண்மையாகும். பெண்களே, உங்கள் வழிகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த பணம் என்ன செய்யும்? யூதாஸ் காரியோத்து செய்தது போல அது செயலில் நின்று காண்பிக்கும். உங்கள் வழிகளை சற்று சிந்தித்து உங்கள் கால்களை அவருடைய சாட்சிக்கு நேராகவும், அவருடைய இரத்தத்திற்கு நேராகவும், அவருடைய கிருபையண்டைக்கும், அவருடைய கோரிக்கைக்கும் திருப்புங்கள். “என் வழிகளை சிந்தித்துக் கொண்டு என் கால்களை உம்முடைய சாட்சிக்கு நேராக திருப்பினேன்" என்று தாவீது கூறினான். நிச்சயமாக, நீங்கள் செல்கையில் உங்கள் வழிகளை சிந்தித்துக்கொண்டே செல்லுங்கள். என் வழியை சிந்தித்துக் கொண்டிருந்த போது 14.08.1959 பிள்ளைகளுக்கு உண்மையான கதையைக் கூறுங்கள் அங்கேயுள்ள பின்புறத்தில் இருக்கும் என் சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஒருக்கால் வாழ்க்கையில் மகத்தான அநேக காரியங்களை செய்திருக்க மாட்டீர்கள். ஆனால் நீங்கள் செய்த எல்லாவற்றைக் காட்டிலும் மகத்தான ஒன்றைச் செய்துள்ளீர்கள். சுமார் பன்னிரெண்டு வயதுள்ள ஒரு சிறுவன் தன் கரத்தை உயர்த்தியுள்ளான். மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, ''ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்'' என்று வேதாகமம் கூறுகின்றது. அந்த சகோதரன் அந்த சிறு ஆத்துமாவை 'பழைய உண்மையான கதை' என்னும் பத்திரிக்கை களினூடாகவும், உண்மையான கதைகள் என்று அழைக்கப்படும் காரியங்களினூடாகவும் கொண்டு செல்லவில்லை. எனக்குத் தெரிந்த வரை ஒரேயொரு உண்மையான கதை தான் இருக்கின்றது. அதென்னவென்றால் வேதாகமத்தில் இருக்கின்றவை மாத்திரம் தான். இன்றைக்கு சிறு பிள்ளைகள் இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் டேவிட் க்ராக்கெட் (David crockett) என்பவனைக் குறித்து தான் அதிகம் அறிந்துள்ளனர். அந்த விதமான குதிரையின் மீது மாடுகளை மேய்க்கும் காரியங்களைக் குறித்த எல்லாவிதமான கதைகளையும் பிள்ளைகளுக்கு கூறப்படுகின்றன. அந்த விதமான காரியத்தை தான் பிள்ளைகளும் கேட்கின்றன. அதை கிரகித்துக் கொள்கின்றன. கடலின் மேல் ஒரு சாட்சி - 20.07.1962 மறுபடியும் பிறந்த அனுபவம் இல்லாதிருக்கிற ஒரு பிள்ளை ஒரு பிள்ளை எப்படிப்பட்ட ஒரு அருமையான வீட்டில் வளர்க்கப்பட்டிருந்தாலும் சரி, சரியானதை செய்ய வேண்டும் என்று எவ்வளவாக அது போதிக்கப் பட்டிருந்தாலும் சரி, அது எனக்கு ஒரு பொருட்டே அல்ல ; அந்த பிள்ளையானது மறுபடியும் பிறத்தலின் அனுபவத்தை அது ஏற்றுக்கொள்ளா திருக்குமென்றால், அது ராக் - அண்ட்ரோல் இசையை கேட்கின்ற மாத்திரத்தில் அந்த இசையானது அப்பிள்ளையினுடைய கவனத்தை கவரும். ஏனென்றால் இயற்கையாகவே அவனுக்குள்ளாக உலகத்தின் ஆவி அவனுக்குள்ளாக பிறந்திருக்கின்றது. ஆகவே அந்த சிறு பிள்ளையின் ஆவியை பிடித்துக் கொள்கின்ற அளவிற்கு இன்று பிசாசின் வல்லமையானது மிகப் பெரிதாக உள்ளது. பணமுமின்றி விலையுமின்றி 02.08.1959 உலகத்தினால் தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும்படிக்கு அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் இக்காலையில் தாய்களாகிய நீங்கள், உண்மையான தாய்களாக இருந்து வருகின்ற நீங்கள், உங்களில் அநேகர் இருக்கிறீர்கள் என்று நானறிவேன் ; உங்களில் ஒவ்வொருவரும் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு நான் ஒன்றைக் கூறட்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, நான் நினைப்பதென்னவென்றால் நீங்கள் தான் ஐந்தாவது சுவிசேஷமாகும். உங்கள் பிள்ளைகளுக்கு என்ன இருக்கின்றது என்று நான் உங்களுக்கு கூறட்டும், ஒரு சிறு காரியம் மாத்திரமே. ஏனென்றால் சகோதரன் நெவில் ஒருக்கால் இதன் பேரில் பிரசங்கிக்கக்கூடும்..... அல்லது நம்மில் யாராவதொருவர் இன்றிரவு ஒரு தாயைக் குறித்து பிரசங்கிக்கலாம் அது சரியே, தாய்களைக்குறித்து, ஆனால் கவனியுங்கள், உங்களை ஒன்று நான் கேட்கட்டும். நினைவில் கொள்ளுங்கள், மோசே ஒரு சிறு பையனாக இருக்கையில் அவனுக்கு வேண்டிய போதனையை அளித்தது ஒரு தாயாகும். அவள் சிறு மோசேயை தன் முழங்கால்களில் வைத்துக் கொண்டு மோசே என்று கூறி எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது ஒரு தேவ பக்தியுள்ள தாயாகும். அவன் தான் அவளுடைய ஆசான் ஆவான். இல்லை . அவள் தான் அவனுடைய ஆசான் ஆவாள். அவள் பார்வோனுக்கு கீழாக இருந்து அவனுக்கு இந்த காரியங்களையெல்லாம் கூறினாள். அவள், " மோசே, ஒரு நாளிலே நீ இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்கப்போகின்றாய். அதை செய்வதற்காக அழைக்கப்பட்ட பையன் நீயே . உலகத்தின் காரியத்தினாலே உன்னை கறைப்படுத்திக் கொள்ளாதே. உன்னை பரிசுத்தமாக வைத்துக் கொள். ஏனென்றால் நீ தான் அந்த காரியத்தை செய்வதற்காக அழைக்கப்பட்ட ஒருவன்” என்று கூறினாள். அவன் எந்த ஒரு வேதகலாசாலைக்கும் செல்லவில்லை என்பதை நாம் அறிவோம். அஞ்ஞானியின் இடமாகிய பார்வோனின் அரண்மனைக்குள்ளாகவே அவன் தங்கியிருந்தான் ; ஆனால் அவனுடைய தாய் அவனுக்கு போதனை செய்தாள். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார் - ஆசி.) அது தான் ஒரு உண்மையான தாய். அவள் கர்த்தருடைய பிரமாணங்களை அவனுக்குக் கற்றுக்கொடுத்தாள். அவன் எவ்விதமாக பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்று அவள் எடுத்துக் கூறினாள். அவன் எப்படி, எந்த விதத்தில், எவ்விதமாக ஜீவிக்க வேண்டுமென்றும், தேவன் என்ன செய்யப் போகிறார் என்றும் அவனுக்கு என்ன செய்யப்போகின்றார் என்றும் கூறினாள். அது அவன் ஜீவிய கால முழுமையும் அவனுடனே தரித்து நின்றது. ஆகவே எந்த ஒரு அருமையான, உண்மையான, உத்தமமான தாயும் தன்னுடைய சிறு குழந்தைகளை படக்காட்சிகளுக்கும், நடன ஆட்டங்களுக்கும் அதைப் போன்றவற்றுக்கும் அனுப்பாமல், அவளே தன்னுடைய சிறு பிள்ளைகளை எடுத்துத் தன் மடி மீது வைத்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்றுக் கொடுப்பாள். அமெரிக்காவின் மீது படையெடுப்பு 09.05.1954 பிள்ளைகளுக்கு பொய்களைக் கூறுதல் - சாண்டாகிளாஸ் கதை போன்று சாண்டாகிளாஸ் (Santa Claus) என்பது ஒரு கட்டுக்கதைத்தானே தவிர வேறெதுவுமில்லை. அப்படிப்பட்ட ஒரு காரியமானது இருந்ததே கிடையாது! பிள்ளைகளுக்கு நீங்கள் பொய்களைக் கூறுவீர் களானால் நியாயத்தீர்ப்பின் நாளிலே அதற்காக நீங்கள் பொறுப்பாளியாவீர்கள். ஆமாம். தேவனால் சுற்றப்பட்ட வெகுமதி 25.12.1960 தேவனைக் குறித்துப் பேசுங்கள் - அவர்களுக்கு வேதாகமக் கதைகளைக் கூறுங்கள் இன்றைக்கு தாய்கள் தங்கள் பிள்ளைகளை எடுத்து அவர்களுக்கு வேதாகமக் கதைகளைக் கூறாதிருக்கின்ற காரியமானது மிக மோசமான ஒன்றாக இருக்கின்றது. ஒரு தாய் மாத்திரம் அல்ல. அவ்விதமாகச் செய்கின்ற ஒரு மேய்ப்பனைக் காண்பதும் மிக அரிதானதாக இருக்கின்றது. ஐந்து சுவிசேஷங்கள் உள்ளன என்று நான் நினைக்கின்றேன். வேதாகமத்தில் இருக்கின்ற அவைகளில் நான்கை மாத்திரமே நீங்கள் அறிவீர்கள். ஆகவே அவை என்னவென்றால் மத்தேயு, மாற்கு, லூக்கா , யோவான் மற்றும் தாய் என்பவைகளே. பிள்ளைகள் சிறியவைகளாக இருக்கும் போதே ஒரு தாய் அவைகளை அவர்களுக்கு கற்பிக்கிறாள். அவர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியவைகளைக் குறித்து எந்த ஒன்றையும் அறிந்து கொள்வதற்கு முன்னதாகவே அந்நிலையிலிருந்து அவள் பிள்ளையை வளர்க்க ஆரம்பிக்க வேண்டும். ஆகவே தாய்கள் தங்கள் பிள்ளைகளிடத்தில் தேவனைக் குறித்து பேசவும் அவர்களுக்காக ஜெபிக்கவும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வார்களென்றால், நம்மிடத்தில் சிறுவர்கள் குற்றம் புரிதல் காரியமானது குறைவாகவே இருக்கும். கூறப்போனால் சிறுவர் குற்றம் புரிதலுக்கு காரியத்திற்கு முன்னதாக பெற்றோர் குற்றம் புரிதல் காரியம் தான் முதலாவதாக வைக்கப்பட வேண்டும். ஏதோ ஒரு தையல் போடும் விருந்துகளுக்கு சென்று, சீட்டுக்கட்டு விளையாட்டுகளை விளையாடி, மது குடித்து, புகை பிடித்து, அது போன்ற காரியங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக தாய்கள் வீடுகளில் தங்கள் ஸ்தானத்தை எடுத்து, வேதாகமத்தை எடுத்து தங்கள் பிள்ளைகளுக்காக ஜெபித்து அவர்களை கிறிஸ்துவண்டை வழி நடத்துவார்களானால் . . . ஊம் அதைக்குறித்து பேச ஆரம்பித்து விட நான் விரும்பவில்லை. ஆனால் என்னவாகிலும் . . நான்... அப்படிச் செய்வதென்பது மோசமான காரியமாகும். பயப்படாதீர்கள் 11.03.1961 பிள்ளைக்காக மத்தியஸ்தம் செய்யுங்கள் அதனிடம் பேசுங்கள் ஒரு மருந்து என் மகன் பில்லி பாலை ஏறக்குறைய கொன்றே போட்டு விட்டது. சுமார் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பில்லி பால் ஒருவித பழக்கத்திற் குள்ளாகி இங்குமங்கும் சுற்றிக் கொண்டிருந்தான். அதன் காரணமாகத்தான் நான் அவனை வாக்சஹாட் சீக்கு (waxahatchee), அங்குள்ள பள்ளிக்கு அனுப்ப வேண்டிய தாயிருந்தது. நம்முடைய பொதுப்பள்ளியில் பையன்கள் கூட்டமானது சிகரெட்களை பிடித்துக் கொண்டும் மற்றவைகளைச் செய்து கொண்டும் இருந்தன. ஒரு நாள் பில்லி வீட்டிற்கு வந்து “அப்பா எப்படி இருக்கிறீர்கள்”? என்றான். அப்பொழுது ஒரு தரிசனம் அவன் மீது மேலெழும்பத் தொடங்கியதை நான் கண்டேன். நான் அப்பொழுது “இங்கே ஒரு நிமிடம் வா, நான் உன்னோடு சற்று பேச வேண்டும்” என்றேன். அதற்கு அவன், "அப்பா என்ன அது?" என்றான். நான், “நீ செய்து கொண்டிருப்பது என்ன, நீ சிகரெட்டு புகைக்கின்றாயே?" என்றேன். அவன் “நான் புகை பிடிப்பதில்லை ” என்றான். அப்பொழுது நான், 'பில்லி, என்னிடம் நீ பொய் சொல்லாதே” என்றேன். அப்பொழுது அவன் அழத்தொடங்கினான். அவன், "அப்பா இனிமேல் அவ்விதமாக நான் செய்ய மாட்டேன்" என்றான். பிறகு அவன் வெளியே சென்றான். அவன் தொடர்ந்து சிகரெட்டு பிடித்துக்கொண்டு தான் இருந்தான். அவனால் அதை மறைக்கக்கூடாதிருந்தது, மறைக்க முடியவில்லை. ஆகவே நான் ஒரு தரிசனம் கண்டடேன். அதில் பில்லி எனக்கு கீழ்ப்படியாதிருந்து, ஒரு ஜன்னலின் வழியாக குதித்துச் சென்று மிகவும் சிரித்துக் கொண்டு இருந்தான். காலமானது கடந்து கொண்டே சென்றதை நான் அத்தரிசனத்தில் கண்டேன். நான் அந்த தரிசனத்திலிருந்து வெளி வந்த உடன், என் உச்சக்கட்ட குரலில் நான் "ஓ தேவனே, என் மகனை எடுத்துக் கொள்ளாதேயும், கர்த்தாவே, எனக்கிருக்கும் ஒரே மகன் அவன் தான்" என்று கதறினேன். நான் என் உச்சக்கட்ட குரலில் நான் சத்தமாய்க் கதறிக்கொண்டிருந்தேன். பில்லியிடம் நான் கூறினேன். வழக்காடுவோம் வாருங்கள் 04.10.55 உங்கள் பிள்ளைகள் யாரிடம் விளையாடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள். தொலைக்காட்சி. தணிக்கைக்குட்படுத்தப்படாத படக்காட்சிகள், அசுத்தம், நாற்றமெடுத்த காரியங்கள் .... அது ஒரு உதாரணத்தை எனக்கு கொண்டு வருகின்றது. இன்றைக்கு நம்முடைய வாலிபப்பிள்ளைகளைக் கவனியுங்கள். நம்முடைய பெண் பிள்ளைகளைக் கவனியுங்கள். பள்ளியிலிருந்து வருகின்ற சிறு பையன்களைக் கவனியுங்கள். ஆறு, ஏழு அல்லது எட்டு வயதிற்கு மேலே கூட இருக்காது. அப்பிள்ளைகள் சிகரெட்டுகளை பற்ற வைக்கின்றன. ஏன் அவ்வாறு அப்பிள்ளைகள் செய்கின்றன? ஒருக்கால் அப்பிள்ளைகளின் அம்மாக்கள் அவர்கள் முன்பாக அவ்விதமாக செய்திருப்பார்கள். அவர்களும் அப்படி செய்திருக்கவில்லையெனில், அப்பிள்ளைகள் யாருடன் நண்பர்களாக ஐக்கியம் வைத்துள்ளனரோ அந்த பிள்ளைகள் அவ்விதம் செய்திருப்பார்கள். உங்கள் பிள்ளைகள் எங்கே விளையாடுகின்றன என்பதை கவனித்துக் கொண்டேயிருங்கள். அது சரியே, இங்கே மற்றுமொரு காரியம். என் மனைவி அதை அறிவாள். முன்பொரு சமயத்தில் நாங்கள் மேஜையை சுற்றி உட்கார்ந்திருந்தோம். குடிபோதையில் இருக்கும் ஒரு கடல் மாலுமி கூட தன்னைக் குறித்து வெட்கமடையச் செய்யும் ஒரு வார்த்தையை என்னுடைய சிறு ஜோசப் உளறினான். நான் திரும்பிப் பார்த்து "என்ன அது?" என்று கேட்டேன். அவனுடைய தாய் ஏறக்குறைய மயக்கமே அடைந்து விட்டாள். அந்த சிறு பையனோ ஒன்றும் அறியாத விதத்தில் அப்பாவியாக காணப்பட்டான். அவன், "அப்பா, உங்களுக்கு என்னவாயிற்று?" என்று கேட்டான். அவனுடைய கண்களில் பெரிய நீர்த்துளிகள் வந்தன. அப்பொழுது நான் அதைப் போன்ற ஒன்றை நீ கூறவே கூடாது என்றேன். அந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்பதை அவன் அறியாதிருந்தான். காரியம் என்னவென்று ஆராய்ந்து பார்த்த போது, பள்ளியிலே இருந்த சிறு பிள்ளைகள் அந்த அசுத்த வார்த்தையை உபயோகித்துக் கொண்டிருந்தனர் என்று கண்டு கொண்டேன். அப்பொழுது நான், "தேனே, அந்த வார்த்தை பிசாசினுடையது" என்றேன். பாருங்கள், உங்களுக்குப் புரிகின்றதா, உங்கள் சிறு பிள்ளைகள் ... சகோதரனே, அது எந்தவிதமான நிலையை அடைந்துள்ளதென்றால், நாய் நாயை சாப்பிடும் நிலையை அடைந்துள்ளது. எல்லாவிதமான பாவங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. ஓ, என்னே! தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாவத்தை விரும்புகிறவர்கள், சுகபோகத்தை விரும்புகிறவர்கள் . . . ஓ என்னே ! இருபது நிமிட பிரசங்கம் மிக நீண்ட ஒன்றாயிருக்கின்றது. ''நான் சென்ற இரவு நிகழ்ச்சியை காண வேண்டுமே, பாருங்கள். “சீக்கிரம், இதை சீக்கிரம் முடியுங்கள், நான் இந்த காரியத்தைச் செய்ய வேண்டும்" பாருங்கள். அவர்கள் தங்களுடைய மதத்தை முடித்து விட்டனர். அவர்கள் அங்கே சென்றனர். அதுவே போதுமானதாயிருக்கிறது. ஒரு உண்மையான தீர்க்கதரிசியின் பாதை - 19.01.1963 ஜெபம் பிள்ளையினிடத்தினின்று பிசாசை வெளியே விரட்டுகின்றது அப்பொழுது நான் வந்து “ஜோசப், நீ இந்த - இந்த காரியத்தை செய்யவே கூடாது" என்று கூறுவேன். ஆகவே உங்களுக்கு தெரியுமா, முதலாவதாக என்ன நடக்கின்றது என்று உங்களுக்கு தெரியுமா? அவன் ஒரு பழக்கத்திற்குள்ளாகிறான். அவர்கள் உங்களிடத்தில் பொய் சொல்லுவார்கள். அதை உங்கள் பிள்ளைகளுக்குள் இருப்பதை நீங்கள் காணலாம். அது என்னவென்றால் குழந்தையின் மீது இருக்கும் அந்த பொய் சொல்லுதலின் ஆவியேயாகும். அதை போக்கு வதற்கென்று ஒரேயொரு நிவாரணி , வழி மாத்திரமே இருக்கின்றது. துப்பாக்கி முனை தடியை உபயோகிப்பது என்னுடைய கருத்தல்ல, உங்களுக்கு தெரியுமா அந்த ராம் குச்சியை (Ramrod) வைத்து வழக்கமாக நம்மை அடிப்பார்களே அது போன்று தான். நாங்கள் தொல்லைக்குள் அகப்படும் போது அந்த பழைய துப்பாக்கிகளிலிருந்து அந்த குச்சிகளில் நாங்கள் அடி வாங்குவது வழக்கம். உங்களுக்கு தெரியும். அந்த ஹிஸ்ட ரி குச்சிகள் (Ola muzzle leaders). அது காரியமல்ல. ஆனால் ஜெபமானது அந்த தீய பிசாசை அப்பிள்ளையி னிடத்திலிருந்து விரட்டி விடும். அது சரியே. ஜெபம் அதைச் செய்கின்றது. கேள்விகளும் பதில்களும் 23.12.1959 பிள்ளைகளோடு ஜெபியுங்கள், தேவன் காரியங்களை மாற்றுவார் அருமையானவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அந்த காரியங்களை கூற நான் விரும்பவில்லை. ஆனால் சத்தியத்தை நான் சொல்லாவிடில் தேவன் என்னை பொறுப்பாளியாக்குவார். நீங்கள் வீட்டிற்குச் சென்று நீங்கள் எல்லோரும் இரவு நேரத்தில் கட்டிலைச் சுற்றி கூடி அல்லது தாய் மற்றும் பிள்ளைகள் எல்லோரையும் அழைப்பித்து படுக்கையைச் சுற்றிலும் கூடி "தாயே, தேவன் இங்கே காரியங்களை சரியாக மாற்றி அமைக்கும் வரைக்கும் நாம் இங்கே ஜெபிப்போமாக" என்று கூறுங்கள். மேய்ப்பர்களே ஞாயிற்றுக்கிழமை காலை உங்கள் சபையை கூட்டி அழைத்து, "நாம் நம்மை மாற்றிக் கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிப்போமாக'' என்று நீங்கள் கூறத்தான் வேண்டும். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள். பெந்தெகொஸ்தே பிரசங்கிகள், மனிதர் சில சமயங்களில் நகரத்திற்கு செல்லும் போது, அவர்கள் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலில் தவறான பாதையில் செல்கையில் நீங்கள் அவர்களை உங்கள் நண்பர்களாகக் கருதுங்கள். அவர்கள் அபராத சீட்டைப் பெறுகையில், அது யாராயிருந்தாலும் சரி. அவன் பாக்கெட்டில் காசைப் போடுங்கள், அவர் மீது அபராதம் விதிக்கப்பட விடாதீர்கள். எல்லா காரியத்திலும் அது உங்களை வளர்ச்சிக் குள்ளாக்கும். ஒவ்வொருவரோடும் அன்பாக இருக்க முயலுங்கள். ஒவ்வொருவரோடும் கை குலுக்கி அவர்களிடத்தில் அருமையானவர்களாகவும் நண்பர் களாகவும் இருக்க முயலுங்கள். உங்களைச் சுற்றி இருக்கும் பிரிவு என்னும் சுவர்களை இடித்துப் போடுங்கள். அது என்னவென்றால், வெறுப்புணர்ச்சி, வித்தியாசம், தேவ பயமில்லாமை ஆகியவையே. அவற்றையெல்லாம் இடித்துக் கீழே தள்ளுங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து கொண்டே இருங்கள். ஒருவரையொருவர் நீங்கள் சந்திக்கும் போதெல்லாம் உங்களை மற்றவர்களுக்கு அருமையான விதத்தில் நடத்திக் கொள்ளுங்கள். ஆகவே முதலாவதாக என்ன சம்பவிக்கின்றதென்று உங்களுக்குத் தெரியுமா, அது உங்களைச் சுற்றிலும் வளர ஆரம்பித்து அன்பென்னும் குவியலானது உங்களை முழுவதுமாக சுற்றிக் கொள்ளும்படிக்குச் செய்கின்றது. அல்லேலூயா. அது தேவன் முத்தரித்தல் ஆகும். அந்திக்கிறிஸ்துவினுடைய முத்திரை 11.03.1955 பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள் - அவை தவறு செய்யலாம் தாய்களும் தந்தைகளும் இந்த காரியத்தை அதிகமாக செய்திருந்தால் சிறு பிள்ளை குற்றம் புரிதல் காரியமானது இருந்திருக்கவே இருக்காது. இன்று பிள்ளைகள் தெருவில் இங்குமங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். புரிகின்றதா?'' “இப்பொழுது, ஒரு வேளை, அவர்கள் பாவம் செய்வார்களானால், அவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியத்திற்காகவும் நான் ஒரு பலியைச் செலுத்தப் போகின்றேன். அவர்கள் பாவம் செய்யும்படியாக ஏதாவது நடக்குமானால் அப்பொழுது அவர்கள் பழைய நிலைக்கு திரும்பும்படியாக சிந்தப்பட்ட இரத்தம் அவர்களுக்காக இருக்கும்". ஓ என்னே! "அவர்களுக்கு நான் அதை ஏறெடுக்கப் போகிறேன். இதை ஜானுக்காக செய்கின்றேன். தேவனே இந்த பலியை ஜானுக்காக செலுத்துகிறேன். இப்பொழுது அவன் அங்கே வாழ்க்கைப் பாதையில் வழிதவறிப் போவானானால் அவனை வழி நடத்தும்படியாக இன்னுமாக பரிசுத்த ஆவி இன்னுமாக அவனிடம் வரவில்லை . ஆகவே அவன் வழி விலகிப் போவானானால், கர்த்தாவே, இங்கே நான் அவனுக்கு ஒரு பாதையை அமைப்பேன்" என்பாள். ஓ, என்னே! "இன்றிரவு மேரி அங்கே இருக்கின்றாள். ஆகவே கர்த்தாவே, அவள் வழி விலகிப் போவாளானால், நான் அவளை சரியான விதத்தில் வளர்த்திருக்கின்றேன். ஆனாலும் அவள் வழி விலகுவாளானால், முன்பு சிந்தப்பட்ட இரத்தத்தைக் கொண்டு நான் அவளுக்கு ஒரு பாதையை அமைப்பேன்" தேவனே, இரவு நேரத்தில் அவ்விதமாக தங்களுடைய பிள்ளைகளுக்காக ஜெபித்த அந்த பழமை தாய்களை போன்று எங்களுக்கு அப்படிப்பட்ட தாய்களை எங்களுக்குத் தாரும். அப்படிப்பட்ட ஒரு தாய் எந்த ஒரு தேசமானாலும் அதின் முதுகெலும்பாக அவள் இருப்பாள். அது சரியே. மீட்பின் மூலமாக ஐக்கியம் - 03.04.1955 வீட்டில் கொடுக்கப்படும் பயிற்சியின் முடிவுகள் பிள்ளை தவறான சூழலில் வளர்க்கப்படுதல் இப்பொழுது நாம் காண்பதென்னவென்றால் இந்த அகசியா, ஆகாப் மற்றும் யேசபேலின் மகன் ஆவான். அவன் சபிக்கப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவனாவான். தங்கள் பிள்ளைகளை தவறான சூழலில் வளர்க்கின்ற ஒரு குடும்பத்தை எடுத்துக் கொள்வீர் களானால், அதனிடமிருந்து எந்த ஒரு காரியத்தையும் எதிர்பார்க்கவே முடியாது. ஏன்?- 22.06.1962 அவர்களுடைய சிறிய மனதை தயார் செய்தல் தகப்பன்களாகிய நீங்கள், தாய்களாகிய நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு பீடத்தை ஏற்படுத்தி வீட்டிலுள்ள அந்த தொலைக்காட்சிப் பெட்டியை வெளியே எடுத்துப் போட நீங்கள் ஆயத்தமா? மேஜையில் இருக்கின்ற சீட்டுக்கட்டுகளை எடுத்துப்போட நீங்கள் ஆயத்தமா? உங்கள் பிள்ளைகள் வாசிக்கின்ற காமிக்ஸ் புத்தகங்களானது பிசாசு அவர்களுக்கு கொடுக்க விருக்கும் அந்த அதிரடிக்கு அவர்களுடைய சிறிய மனதை தயார் செய்கின்றன. அந்த பழங்கால குடும்ப பீடத்தை உங்கள் வீட்டில் நிறுவ நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா, அல்லது நீங்கள் இருக்கின்ற வண்ணமாகவே தொடர்ந்து அந்த வழியையே பின்பற்றவே விரும்புகிறீர்களா, நீங்கள் அதைத் தொடர்ந்து செய்ய விரும்பினால், நீங்கள் வெளியே வரும் நிலையில் இல்லாதிருக்கிறீர்கள். ஆனால், ''கர்த்தாவே நான் அவர்களோடு மடியட்டும்" என்று சிம்சோனைப் போல நீங்கள் இருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கின்றேன். அது தான் நீங்கள் காணும் கிரயம். உங்களின் ஆயத்தம். இன்னும் ஒரு விசை கர்த்தாவே 20.01.1963 ஒரு குடும்பத்திலிருந்து தான் ஒரு பிரசங்கி வருகிறான். பத்து இலட்சம் ஆத்துமாக்கள் வருகின்றன. சரியாக ஸ்தானத்தில் பொருத்தப்படாதிருக்கின்ற இங்கேயிருக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும்... நீங்கள் ஒரு இல்லத்தரசியாக மாத்திரம் இருந்து மற்ற எதுவுமாகவும் இல்லாதிருக்கலாம். நீங்கள் சகோதரன் பிரன்ஹாம், என் வாழ்க்கையில் நான் ஒரு காரியத்தைக் கூட செய்யவில்லை. நான் ஒரு பிரசங்கியும் கூட அல்ல என்று நீங்கள் கூறலாம். சரி, ஒருக்கால் நீங்கள் பிள்ளைகள் நிறைந்த ஒரு குடும்பத்தை வளர்த்து எழுப்பவே தேவன் இங்கே உங்களை கொண்டு வந்திருக்கக்கூடும். அந்த பிள்ளைகளினிடத் திலிருந்து மற்று மொரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பமானது எழும்பும், அதிலிருந்து ஒரு பிரசங்கி வந்து கிறிஸ்துவுக்கு பத்து இலட்சம் ஆத்துமாக்களை அனுப்பலாம். ஆகவே நீங்கள் இங்கே இருக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு நோக்கத்திற்காகவே இங்கே இருக்கிறீர்கள். அதை நீங்கள் அறிவீர்களா? புத்திர சுவிகாரம் அல்லது பொருத்தப்படுதல் 22.05.1960 பிள்ளைகள் பிறப்பிலிருந்து முதிர்வடையும் வரை இப்பொழுது ...... சரி, நீங்கள் உங்கள் பிறப்பிலிருந்து வளர்ந்து வந்துள்ளீர்கள். நீங்கள் பிறந்து பிறகு இந்த உலகத்திற்குள்ளாக அளிக்கப்பட்ட போது, இந்த பூமியில் நீங்கள் இருக்கப் போகின்றீர்கள் என்பதை தேவன் அறிந்திருந்தார். நீங்கள் பிறப்பிலிருந்து முதிர்ச்சிக்கு வளர்ந்து வந்துள்ளீர்கள். நீங்கள் இளம் பெண் பருவத்தில், வாலிபப்பையன் பருவத்தில், பிள்ளைகளாக இருக்கையில் உங்களுக்கு மிக விசித்திரமாக காணப் பட்ட காரியங்களானது இப்பொழுது மிக உண்மை யானவைகளாக தென்படுகின்றது. நீங்கள் ஒரு குழந்தையாக இருந்த போது அதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது நீங்கள் பெரியவர்களான போது, நீங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து, எல்லா காரியமும் சரிவர வைக்கப்பட்டு சரியாக அமைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கண்டு கொள்கிறீர்கள். ஆகவே உங்களுக்கு . . . அது உங்களுக்கு இப்பொழுது அர்த்தமுள்ள ஒன்றாகத் திகழ்கின்றது. இனி வரப்போகும் காரியங்கள் 05.12.1965 சிறு பிள்ளைப் பருவத்தைப் போல வேறெதுவும் கிடையாது சிறுபிள்ளைப் பருவம் மற்றும் சிறு பிள்ளை பருவத்திலிருந்து வாலிபப் பருவத்திற்கிடையே உள்ள பருவத்தைக் குறித்து சிறந்த ஒன்று உண்டு, வாழ்க்கை முழுவதுமாக இருக்கின்ற பருவங்களிலே இந்த பருவத்தின் இடத்தை வேறு எந்த பருவமும் எடுக்க முடியாது. பழைய காரியங்களை நினைத்துப் பாருங்கள். நாம் தவறு செய்யும் போது நம்முடைய தாய்கள் நம்முடைய தகப்பனிடத் தினின்று நம்மை இழுத்து ஒரு சிறு அடியைக் கொடுப்பார்கள் அல்லவா? ஓ, அது பயங்கரமானதல்லவா. ஆனால் , இந்த மத்திய வேளையில் உங்களில் அநேகர் உங்களோடு கூட நானும் - அதை அறிவோம். இந்த பூமியில் என் தந்தை இருந்து அவர் ஒரு அடி எனக்கு கொடுப்பதை நினைத்துப் பார்க்கும் போது அந்த நினைவுகளுக்காக என்னால் எதையுமே கொடுத்து விட முடியும். என் தகப்பனார் இனிமேல் அவ்விதமாக செய்ய முடியாது. அவர் கடந்து சென்று விட்டார். உங்களில் அநேகருக்கு அவ்விதமாகத்தான் இருக்கும். சிறுபிள்ளைப் பருவத்தைப் போல வேறெதுவும் கிடையாது. என் வாழ்க்கைக் கதை 08.11.1953 வாக்குத்தத்தத்தினுடனான முதலாம் கட்டளை அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, வேதாகமத்திலிருக்கின்ற முதல் கட்டளை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா, முதல் கட்டளையானது ஒரு வாக்குத்தத்தமாகும். என்ன வாக்குத்தத்தம் அது? இந்த கட்டளைகளை நீங்கள் அறிந்துக் கொள்வதென்பது சற்று கடினமான ஒன்றாகும். முதலாம் கட்டளை என்னவெனில், "அவரைத் தவிர வேறெந்த ஒரு தேவனையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது என்பதாகும். ஆனால் மகத்தான கட்டளை என்ன வென்றால் , , . அந்த முதலாம் கட்டளையானது ஒரு வாக்குத்தத்ததையும் கொண்டதாக இருக்கின்றது. பாருங்கள், அந்த வாக்குத்தத்தம் பிள்ளைகளுக்கான ஒன்றாகும். அதை நீங்கள் அறிவீர்களா? பாருங்கள். அவர் கூறினது என்னவென்றால், 'உங்கள் பெற்றோரை கவனித்து அதை நீ தொடர்ந்து செய், அப்பொழுது அது உனக்கு பூமியின் மீது நீண்ட ஆயுளைத் தரும். அவருக்கு அதிக காலம் சேவை செய்யும்படியாக கர்த்தர் அதை உனக்குத் தந்திருக்கிறார்' என்பதே. வழி நடத்தும் தன்மை. என்னைப் பின்பற்றுங்கள்31.12.1965 நீ எதை வாசிக்கின்றாயோ அது உன் குணாதிசயத்தை உருவாக்கும் இந்த காரியத்தை நான் வாலிபப் பிள்ளைகளுக்கு கூறுவேனாக. ஆபிரகாம் லிங்கன் தன்னுடைய இருபத்தோறாம் வயது வரைக்கும் வேதாகமம் மற்றும் ஃபாக்ஸின் இரத்த சாட்சிகளின் பட்டியல் ஆகிய இரண்டு புத்தகங்களைத் தவிர வேறு எந்த புத்தகத்தையுமே வைத்திருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள், நீங்கள் எதை வாசிக்கின்றீர்களோ, அதுவே உங்கள் குணாதிசயத்தை உருவாக்கும். இன்றைக்கு நம்மிடையே நரம்புத்தளர்ச்சியை கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை நாம் கொண்டிருப்பதில் வியப்பொன்றுமே யில்லை அசிங்கமான மற்றும் அர்த்தமற்ற சிறுகதை புத்தகங்கள் மாத்திரமே இன்று பத்திரிகைக் கடைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஆபிரகாம் லிங்கன் வேதாகமத்தையும், ஃபாக்ஸின் இரத்த சாட்சிகளின் புத்தகத்தையும் மாத்திரமே வைத்திருந்தார். ஆகவே அவரை உருவாக்கினது என்னவென்று பாருங்கள். காரியமானது இந்த விதமாக இருக்கையில் ஒரு நாள் இந்த விதமாக அவர் கூறினார். அவர் கூறினது என்னவென்றால், "என்னில் நல்ல காரியம் ஏதாவது காணப்படுகிறதென்றால் அதற்கு காரணம் என்னுடைய தேவ பக்தியுள்ள தாய் தான் எனக்கூறினாள். அவர் தாய் தான் அவர் கர்த்ருக்கு சேவை செய்யத்தக்கதாக வளர்த்து ஆளாக்கினவராவார். தாயின் தினம் 10.05.1959 மிகவும் அருமையான ஒரு வாழ்க்கை - வாலிபப் பிராயத்திலேயே அது மரித்தது. இப்பூமியிலே வாழ்ந்ததிலேயே மிகவும் அருமையான ஒரு ஜீவனான இயேசுவின் வாழ்க்கையானது அதனுடைய வாலிபப்பிராயத்திலேயே மரிக்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், தேவன் அவ்வாறு உரைத்திருந்தார். அவருடைய நியாயத்தீர்ப்புகள் நியாயத்தைக் கொண்டவைகளாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால், "அதைப் புசிக்கும் அந்த நாளில் நீ சாகவே சாவாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவனுடைய நியாயத்திற்கு மரணம் தேவைப்பட்டது. ஒருவருக்காக ஒருவர் மரிக்கும்படியாக நம்மில் யாருமே இருக்கவில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதைச் செய்யக்கூடாதிருந்தது. அந்தவிதமான ஒரு மரணத்தை அடைய அந்த ஒரு மனிதனால் மாத்திரமே முடியும். ஏனெனில் நாமெல்லோரும் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தினால் உருவாக்கப்பட்டு பொய் பேசுகிறவர் களாக இவ்வுலகத்திற்கு வந்தோம். நம்முடைய ஆரம்பத்திலிருந்தே நாம் குற்றமுள்ளவர்களாக இருக்கிறோம். ஆகையால் எப்படி ஒரு நல்ல மனிதனே குற்றமுள்ளவனாக இருக்கையில் அவன் எப்படி வேறொரு மனிதனுக்காக மரிக்க முடியும்? அந்த விதமான ஒரு ஸ்தானத்தை எடுக்க நம்மிலே யாருமே இருக்க முடியாது. ஆகவே அவருடைய மரணம் தான் அதற்கு சரியானதாக காணப்பட்டது. ஆகவே தேவன் கீழே இறங்கி வந்து அந்த விதமான ஒரு மரணத்தை அடையத்தக்கதாக மாம்சத்தில் வெளிப் பட்டார். தேவனால் ஆவியில் மரணமடைய முடியாது. ஏனென்றால் தேவன் நித்தியானவர் ஆவார். அவர் தேவனாயிருந்தபடியால் அவர் தம்மைத் தாமே பிரித்து, தம்முடைய சபையை பாதுகாப்பாக எடுக்க அல்லது தம்முடைய சபையை மீட்டு, அவர்களை திரும்பவுமாக தம்மிடமாக சேர்த்துக்கொள்வதற்காக, மகிமையிலிருந்து ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு வந்து மரிக்கத்தக்கதாக இந்த பாவம் நிறைந்த மாம்ச சரீரத்தின் ரூபத்தை எடுத்துக் கொண்டார். ஜீவித்து, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடெழுந்து வருதல் - 03.04.1959. தாழ்வு மனப்பான்மை / உங்கள் வழியையே கடைப்பிடிக்க வேண்டுமென்னும் மனப்பான்மை ஒரு நபர் தனக்கு தாழ்வான மனப்பான்மை அல்லது அவ்விதமான ஏதோ ஒரு மனப்பான்மை இருப்பதாக உணருவாரானால், அவர் இதை எப்படி மேற்கொள்வது. எனவே, அவர் ஒரே பிள்ளையாக இருந்த காரணத்தால் வாலிபத்தின் ஆரம்பத்திலே அது ஏற்பட்டிருக்கக்கூடுமா? அதற்கு எதிரான மனப்பான்மையைக் கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுதுமே உங்கள் வழியையே கடைப்பிடிக்க வேண்டுமென்னும் மனப்பான்மையை குழந்தை பருவத்தில் கொண்டிருந்திருப்பீர்களானால், அந்த நிலையிலிருந்து மாறி, மற்ற வழியைக் கடைபிடிக்க உங்களாலான எல்லாவற்றையும் செய்யுங்கள். நீங்கள் தன்னெண்ண முள்ளவர்களாய், எல்லாவற்றையுமே நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டுமெனும் எண்ணம் கொண்டிருப்பீர் களானால், உங்களுக்கு இருப்பவைகளை மற்றவர்களுக்கு கொடுக்கத் தொடங்குங்கள். பாருங்கள்? உங்கள் மனப்பான்மைக்கு மாறான ஒன்றை செய்யுங்கள். எதையுமே மேற்கொள்ள அதுவே சிறந்த எதிர்மருந்து (anti dote) கேள்வி பதில்கள் 30.08.1964 தாய் மற்றும் தந்தை மீது எப்பொழுதும் மரியாதை வைத்திருங்கள். ஆகவே வாலிபப் பிள்ளைகளே, வாலிபர்களே, சற்று கவனியுங்கள். அது எந்த காரணமாயிருந்தாலும் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை ; நீங்கள் எப்பொழுதுமே உங்கள் தந்தை மற்றும் தாய் பேரில் மரியாதையைக் கொண்டிருங்கள். நான் கேட்பதிலேயே மிகவும் பயங்கரமான காரியங்களில் ஒன்று என்ன வென்றால் பிள்ளைகள் அல்லது வாலிப மக்கள் " அந்த வயதான கிழவன்" மற்றும் " அந்த வயதான கிழவி' என்று கூறுவதேயாகும். கவனியுங்கள், அது "வயதான கிழவன்'' மற்றும் “வயதான கிழவி" அல்ல ; அவர்கள் உங்கள் தகப்பன் மற்றும் தாய் ஆவார்கள். ஒரு நாளிலே அவர்கள் சவபெட்டியிலே கிடத்தப்பட்டு, அதற்கு கீழாக சக்கரத்தைக் கொண்ட அந்த சவ வண்டியில், அறையிலிருந்து தலைப்பாகமானது முதலாவதாக வெளியே தள்ளப்பட்டு அறையைவிட்டு வெளியேறும் போது, அப்பொழுது அவர்கள் “வயதான கிழவன்' அல்லது “வயதான கிழவி” என்பதாக உங்களுக்கு தோன்றாது. அது சரியே. அப்பொழுது பிரசங்கி, "மண்ணுக்கு மண், புழுதிக்கு புழுதி” என்று கூறுகையில், பூமியிலே உங்களுக்கு இருந்ததிலேயே உங்கள் சிறந்த நண்பரானவர் கீழே போகின்றார் என்பதை நீங்கள் உணருவீர்கள். ஆனால் தொல்லை என்னவெனில், அதை நீங்கள் மிகவும் காலதாமதமாக உணருவதேயாகும். அப்பொழுது நீங்கள் கதறி அழுது அதிகமான மலர்கள் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக இப்பொழுதே அந்த மரியாதையைக் கொடுங்கள். ஒரு அருமையான பையனாக அல்லது அருமையான சிறு பெண்ணாக இருங்கள். வாழ்க்கைக்கதை 15.04.1951 ஒரு ஆணாக இரு - ஒரு வாலிபப் பெண்ணுக்காக வண்டியின் ஒலியை எழுப்பாதே என் பெண் சிநேகிதியை சென்று சந்திக்கத்தக்கதாக புதன்கிழமை எப்பொழுது வரும் என்று அந்த வாரம் முழுவதுமாக நான் காத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் சபைக்கு செல்லவிருந்தோம். அது என் நினைவிற்கு வருகின்றது. அந்த இரவு நான் அவளுடைய ஜனங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி நான் செல்ல ஆரம்பித்தேன். அங்கே ஒரு அருமையான பெரிய வீட்டில் அவர்கள் வசித்தனர். அப்பொபழுது நான், "ஓ இந்த இடத்தில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று நான் நினைத்தேன். ஓ, என்னே! அப்பொழுது நான் நினைத்தேன். உம் நான் அவர்கள் வீட்டின் முன் காரை நிறுத்தினேன். அப்பொழுது நான் நினைத்தேன் .... நான் என் வண்டியின் ஒலியை எழுப்புவதை விட வேறே சிறந்த வழி உள்ளதென்று அறிந்திருந்தேன். நான் ஒலி எழுப்பினால் அவளுடைய தாயும் தந்தையும் என் மீது கோபம் கொள்வர் என்பதையும் நான் அறிந்திருந்தேன். அது சரி என்று நான் நினைக்கின்றேன். பையன்களாகிய நீங்கள், அந்த பெண் வெளியே வர வேண்டும் என நீங்கள் வண்டியின் ஒலியை எழுப்புவது என்பது கேவலமான ஒரு செயலாகும். உள்ளே சென்று உங்களால் அவளிடம் பேசி அவளை வெளியே கொண்டு வர முடியவில்லை என்னும் பட்சத்தில் அவளுடைய தாயிடமும் தந்தையிடமும் பேசுங்கள். நீங்கள் எப்படியாயினும் நீங்கள் அவளோடு இருக்க வேண்டியதாயிருக்கிறது. அது சரி. செல். ஒரு ஆண் மகனாக இரு. ஆகவே நான் வீட்டின் கதவிற்கு சென்றேன். "இன்றிரவு நான் வெளியிலேயே தங்கிவிடுகிறேன்" என்று நினைத்தேன். அப்பொழுது நான் யோசிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கைக்கதை 20.07.1952 பிள்ளைகள் பெற்றோர் மீது மரியாதையிழந்தால் - அது தான் குடும்பத்தின் முடிவு ''அதைக்குறித்து நான் என்ன செய்ய வேண்டும் சகோதரன் பிரன்ஹாமே? நான் அதற்கு மரியாதையைக் கொடுக்க வேண்டியவனாக இருக்கின்றேன். நான் ஒரு அமெரிக்க குடிமகன், பெரிய முதலாளி இதைச் செய் என்று என்ன கூறுகின்றாரோ அதை நான் செய்கின்றேன். நான் ..... ஒரு குடும்பமானது குடும்பத்தின் பேரில் மரியாதையை இழக்குமானால் (பெற்றோர் மீதான மரியாதையை பிள்ளைகள் இழக்குமானால்), அந்த குடும்பம் சுக்கு நூறாக கிழிந்து போகும். ஒரு சபையானது தன்னுடைய மேய்ப்பன் மீது கொண்டிருக்கும் மரியாதையை இழக்குமானால் என்ன ஆகும், அந்த சபையின் காரியம் அவ்வளவு தான், முடிவுறும். ஒரு தேசமானது அதனுடைய உச்சநீதிமன்றத்தின் பேரிலும் அதன் தீர்ப்பின் பேரிலும் இருக்கின்ற மரியாதையை இழக்குமானால், அந்த தேசம் சுக்கு நூறாக உடைந்து போகும். அது முற்றிலும் சரியே. நாம் அந்த காரியங்களின் பேரில் மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவை தான் பெரிய முதலாளியாகும். பாருங்கள். ஆனால் அது துவக்கத்திலேயே அது சரியாக இருக்கவில்லை . சரியாக! கேள்விகளும் பதில்களும், எபிரேயர் பகுதி 3 - 06.10.1957 வாலிப (டீன் ஏஜ்) பருவத்திற்கான உதாரணம் தேவன் வாலிபப் பருவத்தில் ஜீவித்தார். எந்த விதமான வாலிப பருவத்தினராக அவர் இருந்தார்? அவர் வாலிப் பருவத்தினருக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தார். அவருடைய தந்தையும் தாயும் அவரை தவறவிட்டு விட்டு அவரை இங்குமங்கும் தேடி பிறகு அவரை தேவாலயத்தில் கண்டு பிடத்த போது, வாலிபனாக இருந்த அவர் அவர்களுக்கு என்ன பதிலளித்தார்? "நீங்கள் அறிந்திருக்க வில்லையா? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா? என்றார். டீன் ஏஜ். வாலிபப் பருவத்திற்கான ஒரு உதாரணம். மேம்பட்ட அடையாளம் 27.12.1959. தம்முடைய பிதாவுக்கு முழுமையான கீழ்ப்படிதல் மாட்டு சாணம் நிறைந்த ஒரு மாட்டுத்தொழுவத்தில் யேகோவா ஒரு குழந்தையாக இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? யேகோவா ஒரு பையனாக விளையாடிக்கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அது ஒரு உதாரணமாகும். அவர் ஒரு வாலிப பருவத்தில், டீன் ஏஜ் பருவத்தினனாக இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? ஒரு தச்சு வேலை செய்பவனின் கடையில் அவர் இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அவர் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து, தம்முடைய விழுந்து போன சிருஷ்டியை மீட்கத்தக்கதாக சிலுவையில் மரித்துக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றதா? அந்த விதமான ஒரு அன்பைத் தான் தேவன் கொண்டிருக்கின்றார். மரணத்தின் கூரை பிடித்துக்கொள்ள, மரிக்கத்தக்கதாக அந்த விதமான நிலைக்கு அவர் ஆளாக வேண்டியிருந்தது. அடையாளப்படுத்துதல் 23.01.1963