தூதன் லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்ன வெனில்: உண்மையும் சத்தியமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறப் படியினால் உன்னை என் வாயினின்று வாந்திப்பண்ணிப்போடுவேன். நீ நிர்பாக்கி முள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் நான் ஐசுவரியவா னென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறப்படியால்; நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்தில் வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்கு கலிக்கம் போடவும் வேண்டுமென்றும் உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாக இருந்து மனந்திரும்பு இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசிதது. அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்தது போல; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்திலே என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்..... பவுல் தூதனாக அனுப்பப்பட்ட முதலாம் சபையைத் தவிர, வேறெந்த சபையும், தேவனால் அந்தச் சபைக்கு அனுப்பப்பட்ட தூதனை அறிந்து கொள்ளவில்லை. பவுலின் காலத்திலும் கூட, அநேகர் அவனைத் தூதனாக ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் ஜீவிக்கும் இந்தக் காலம் மிகவும் குறுகியதாயிருக்கும் என்பதை நான் கூற விரும்புகிறேன். சம்பவங்கள் அனைத்தும், இக்காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக நிகழ்ந்தேறும். அப்படியெனில், லவோதிக்கேயா சபையின் தூதன், நாம் அவரை அறியவில்லையென்றாலும், இந்நேரம் தோன்றியிருக்க வேண்டும். அவருடைய ஊழியத்தை விவரிக்கும் வேதவசனங்கள் இருப்ப தால், அவர் நிச்சயமாக ஒரு காலத்தில் அறியப்படவேண்டும். முதலாவதாக, இச்சபையின் தூதன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்து, தீர்க்கதரி சன ஊழியத்தை உடையவராயிருக்கவேண்டும். அவர் உரைக்கும் தீர்க்க தரிசனங்களும், அவர் காணும் தரிசனங்களும், வார்த்தையை ஆதாரமாகக் கொண்டதாயிருந்து. நிச்சயமாக நிறைவேற வேண்டும். அவர் தீர்க்கதரிசி யென்று ரூபகாரப்படுவார். வேதவசனமும் அவர் தீர்க்கதரிசியென்பதை நிரூபிக்கிறது. "தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தப்படி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும் (வெளி. 10:6). இங்கு தூதன்' என்று அழைக்கப்படுபவர் ஒரு தேவதூதனல்ல. எக்காளம் ஊதும் ஆறாம் தேவதூதன் வெளி. 9:13லும், ஏழாம் தேவதூதன் வெளி 11:15லும் குறிக்கப்படுகின்றனர். ஆனால் வெளி. 10-6ல் கூறப்படுபவர் ஏழாம் சபையின் காலத்தின் தூதன்; அவர் ஒரு மனிதன். அவர் தேவனுடைய செய்தியை மனிதர்களிடம் கொண்டு வருவார் அவருடைய செய்தியும், ஊழியத்தின் தன்மையும், தேவன் தம் முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்தப்படி, தேவரகசி யத்தை நிறைவேற்றும் அவர் தீர்க்கதரிசியாயிருப்பதால், தேவன் அவரைத் தீர்க்கதரிசியாகக் கருதுகிறார். பவுல், முதல் சபையின் காலத்தில் தீர்க்கதரிசி யாய் விளங்கினான். கடைசிச் சபையின் காலமும் ஒரு தீர்க்கதரிசியை உடையதாய் இருக்கவேண்டும். "ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக் காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்" (ஆமோஸ். 3:6-7). இயேசுவை பற்றி முழங்கின அந்த ஏழு இடிகள் கடைசிக்கால நேரத்தில் தான் உண்டானது. 'சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்பரித்தான். அவன் ஆர்பரித்த போது, ஏழு இடிகளும் சத்திமிட்டு முழங்கின. அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கின போது, நான் எழுத வேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்ன வைகளை எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்" (வெளி. 10:3-4). அந்த இடிமுழக்கங்கள் கூறிய வைகளை யாரும் இதுவரை அறியவில்லை. தேவன் வேதப் பிரகாரமான வெளிப் பாட்டைத் தீர்க்கதரிசிகளின் மூலமேயளிப்பதால், ஏழு இடிமுழக்கங்கள் கூறின யாவையும் ஒரு தீர்க்கதரிசியே வெளிப்படுத்தவேண்டுமென்பது தேவனுடைய நியமமாயிருக்கிறதென்பதை வேதத்தின் மூலம் நாமறியலாம். "ம்முடைய வழிகளில் மாறாத நித்திய தேவன், ஒவ்வொரு காலத்திலும் மக்கள் தெய்வீக ஒழுங்குகளை விட்டு அகலும்போது, தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். வேதபண்டிதர்களும் சபையின் மக்களும் வராததையை புறக்கணித்த போது, தவறான போதனையைச் சரிப்படுத்தி, மக்களைத் தேவ னிடத்தில் திருப்ப தம்முடைய ஊழியக்காரரைச் சபையின் மக்களிடம் அவர் அனுப்பினார். (வேத பண்டிதரிடத்திலல்ல) இதிலிருந்து ஏழாம் சபையின் தூதன் வரவேண்டுமென்றும் அவர் தீர்க்கதரிசியாயிருப்பாரென்றும் நாமறிகிறோம். இயேசுவின் வருகைக்கு முன்பு எலியா வரவேண்டுமென்று வேதம் நமக்குப் போதிக்கிறது. 'அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லு கிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதி யுத்தரமாக: எலியா முந்தி வந்து எல்லாவற்றையும் சீர்படுத்துவது மெய்தான என்றார்" (மத் 17:10-11) கர்த்தர் மறுபடியும் வருமுன்பு. எலியா வந்து சபையைப் பழைய நிலைக்குத் திரும்பிக்கொண்டு வரவேண்டும் இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதப்படிக்கு, அவன பிதாககளுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்" (மல். 4:5-6). இயேசு கிறிஸ்து வருமுன்பு, எலியா நிச்சயமாகத் திரும்பி வரவேண்டும். அவன் நிறைவேற்ற வேண்டிய ஒரு பிரத்தியேக ஊழியம் அவனுக்குண்டு. அதுதான் மல் 4:6ன் ஒருபாகம் : "அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களி டத்திற்குத் திருப்புவான்." எலியாவின் ஊழியம் யோவான் ஸ்நானன் மூலம் நிகழ்ந்த போது, மல்.4:6ன் மற்ற பாகமான "அவன் பிதாக்களுடைய இருதயத் தைப் பிள்ளைகளிடத்தில் திருப்பும்' ஊழியம் நிறைவேறியதென்று வேதத்தின் வாயிலாய் நாமறிகின்றோம். "பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளி டத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப் பான்" (லூக். 1:17). ஆம், இயேசுவின் இரண்டாம் வருகையின் முன்பு எலியா வந்து, கடைசி காலத்தின் பிள்ளைகளின் இருதயத்தைப் பெந்தெகொஸ்தே காலத்தின் முற்பிதாக்களிடத்திற்குத் திருப்புவான். இயேசு தம்முடைய பிள்ளைகளைத் தம்முடைய பாதுகாப்பிற்குள் வரவேற்க, யோவான் ஸ்நானன் பிதாக்களை ஆயத்தம் செய்தான். ஆனால், எலியாவின் ஆவியைக் கொண்ட கடைசி காலத்துத் தீர்க்கதரிசி, இயேசுவை வரவேற்கப் பிள்ளைகளை ஆயத்தம் செய்வான். இயேசு யோவான் ஸ்நான்னை எலியாவென்று அழைத்தார். "ஆனாலும் எலியா வந்தாயிற்று என்று உங்களுக்கு சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்'' (மத் 17:2) எலியாவின் மேல் இருந்த அதே ஆவி, ஆகாப் ராஜாவின் அரசாட்சிக்குப் பின்பு, எலிசாவின் மேல் வந்தது போன்று, அது யோவான் ஸ்நானனின் மேலும் வந்தது. மறுபடியும் அதே ஆவி, இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பு வேறொரு மனிதனின் மேல் வரும். இந்த மனிதன் தீர்க்கதரிசியாயிருப்பார். பரிசுத்த ஆவியானவரும், அவர் மூலம் நடப்பிக்கும் மகத்தான கிரியைகளைக் கொண்டு, அவரைத் தீர்க்கதரிசியென நிரூபிப்பார். அவருக்கு வெளிப்படும் ஒவ் வொன்றும் நிச்சயமாய் சம்பவிக்கும். அவருடைய கட்டளையினால், மகத்தான கிரியைகள் நடக்கும். அதன்பின்பு, மக்களைச் சத்தியத்துக்கும், தேவனுடைய உண்மையான வல்லமைக்கும் திருப்ப, தேவன் அளித்த செய்தியை அவர் மக்களுக்குக் கொடுப்பார். ஒரு சிலர் அவருடைய செய்தியை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலோர் சபையின் ஆசாரங்களுக்கு உண்மையாய் ஜீவித்து, அவரைப் புறக்கணிப்பார்கள். வெளி, 10:6ல் கூறப்பட்ட தீர்க்கதரிசி, தூதனே மல், 4-6ல் குறிக்கப் பட்டிருக்கிறார். ஆகையால் இவர் எலியாவைப் போன்றும், யோவான் ஸ்நானனைப் போன்றும் இருப்பார். இவ்விருவரும் அவரவர் காலத்தின் மார்க்கக் கொள்கைகளைப் பின்பற்றாதவராயிருந்தனர். இருவரும் வனாந்திரத்தில் ஜீவித்தனர். இருவரும் தேவனுடைய வெளிப்பாட்டையும் அவருடைய கட்டளையையும் பெற்றாலன்றி, தாமாகவே எதையும் செய்யவில்லை. இருவரும் அவரவர் காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்களையும், கடைபிடிக்கப்பட்ட மதக் கொள்கைகளையும் எதிர்த்தனர். அது மாத்திரமல்ல, அவர்கள் நேர்மையிழந்த வர்களையும், மற்றவர்களை நேர்மையிழக்கச் செய்தவர்களையும் எதிர்த்துப் பேசினர். இருவரும் நல்லொழுக்கமில்லாப் பெண்களையும் அவர்கள் பின்பற்றின வழிகளையும் கண்டித்தனர். எலியா யேசபேலுக்கு விரோதமாக அறைகூவினான். யோவான் ஸ்நானன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைக் கண்டித்துணர்த்தினான். இக்காலத்துத் தூதன் புகழ் பெற்றவராயிராவிட்டாலும், தேவன் அவனை சரியென நிரூபிப்பார் (Vindicate) யோவான் ஸ்நானனை இயேசுவும், இயேசுவைப் பரிசுத்த ஆவியும் உறுதிப்படுத்தியது போன்று. வேறெங்கும் காணக்கூடாத அற்புதங்களையும், அடையாளங்களையும் பரிசுத்த ஆவியானவர் இத்தூதனுடைய ஜீவியத்தின் மூலம் நிகழ்த்தி, அவனை உறுதிப்படுத்துவார். இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது, யோவானைக் குறித்து சாட்சி கொடுத்தது போன்று, தம்முடைய இரண்டாம் வருகையில் இத்தூதனைக் குறித்து சாட்சி கொடுப்பார். இத்தூதனும் யோவானைப் போன்று , இயேசுவின் வருகையை அறிவிப்பார். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையே இந்தத் தூதன் அவருடைய வருகைக்கு முன்னோடியவன் என்பதை நிரூபிக்கும். இயேசு மறுபடியும் பிரசன்னமாகும் போது . புறஜாதிகளின் காலம் முடிவு பெறும். அப்பொழுது அவனைப் புறக்கணித்தவர்கள் இரட்சிக்கப்படு வதென்பது காலங்கடந்ததாயிருக்கும். மத். 11:12ல் குறிக்கப்பட்ட தீர்க்கதரிசி யோவான் ஸநானன். அவனுடைய தோற்றம் மல். 3:1ல் முன்னறிவிக்கப்பட்டது. 'இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணு வான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' (மல், 3:1). "இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடிந்த பின்பு, அவர்களுடைய பட்டினங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக் கவும் அவ்விடம் விட்டுப் போனார். அத்தருணத்தில் காவலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொவர் வரக் காத்திருக்க வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சொஸ்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். அவர்கள் போன பின்பு, இயேசு யோவானைக் குறித்துச் சொன்னது என்னவென்றால்; எதைப் பார்க்க வனாந்தரத்திற்கும் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால் எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்தவர்கள் அரசர் மாளிகையில் இருக்கிறார்கள். அல்லவென்றால் எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்; இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான் ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும் பரலோக ராஜஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக் கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்'' (மத் 11:1-11) யோவான் ஸ்நானன் ஏற்கனவே வந்தாயிற்று; அதன் மூலம் மல் 3:1ல் உரைக் கப்பட்டது நிறைவேறிற்று. இப்பொழுது கீழ்க்கண்ட வசனங்களை வாசியுங்கள்; "இதோ சூளையைப் போல் எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள், நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயபிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங் களையும் நினையுங்கள். இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன், நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதப்படிக்கு அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும்; பிள்ளை களுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்" (மல் 4:1-6). இந்த வசனங்களில் குறிக்கப்பட்ட எலியா தீர்க்கதரிசி வந்த வுடனே, பூமியானது நெருப்பிலே சுத்திகரிக்கப்பட்டு, பொல்லாதவர்கள் சாம்ப லாய் எரிக்கப்பட்டு போவார்கள். யோவான் ஸ்நானன் (அவன் காலத்து எலியா தீர்க்கதரிசி ) இவ்வுலகத்தில் தோன்றின் போது, இச்சம்பவங்கள் நிகழவில்லை. தேவ ஆவியானவர் ஏசாயா 40:3ல் தூதனுடைய (யோவானுடைய ) வருகையை முன்னறிவித்து, சுமார் முன்னூறு வருடங்கள் கழித்து மல், 3:1ல் அதை மறுபடியும் உரைக்கிறார். "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியில் நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள்'' (ஏசாயா 40:3) ஏசாயாவின் சத்தமும் மல்கியாவின் சத்தமும் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் யோவானின் மூலம் உண்டாயிற்று. "கர்த்த ருக்கு வழியை ஆயத்தப்பண்ணுங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வை பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே' (மத் 3:3). மல்கியா 3ம் அதிகாரத்தில் குறிக்கப்பட்ட தீர்க்தரிசியாகிய யோவான் ஸ்நானன், மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறப்பட்ட தீர்க்கதரிசி அல்ல என்பதை நாம் வேதத்தின் மூலம் அறியலாம். ஆனால் எலியாவின் மேல் தங்கியிருந்த அதே ஆவி யோவான் ஸ்நானன் மேல் தங்கியிருந்து இப்பொழுது கடைசி காலத்துக் தீர்க்கதரிசியின் மேலும் அமர்ந்திருக்கும். மல்கியா 4ம் அதிகாரத்திலும் வெளி. 10:6லும் உரைக்கப்பட்ட இந்த தூதன் இரண்டு பெரிய காரியங்களைச் சாதிப்பார். முதலாவதாக, மல்கியா உரைத்தப்படி, அவர் பிள்ளைகளின் இருதயத்தைப் பிதாக்களிடத்திற்குத் திருப்புவார். இரண்டாவதாக, வெளி. 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு இடி முழக்கங்களின் இரகசியத்தை அவன் வெளிப்படுத்துவான். இவைகள் ஏழு முத்திரைகளில் அடங்கியிருக்கும் வெளிபாடுகளாகும். தேவனால் அருளப்பட்ட இந்த சத்தியம் பிள்ளைகளுடைய இருதயத்தைப் பெந்தெகொஸ்தே பிதாக்களிடத்திற்குத் திருப்பும். இந்தத் தூதன், எலியாவின் தன்மைகளையும் யோவானின் தன்மைகளையும் உடையவராயிருப்பான். இக்காலத்து மக்களும், ஆகாபின் காலத்து மக்களைப் போன்றும், யோவான் ஸ்நானன் வாழ்ந்த காலத்தின் மக்களைப் போன்றும் இருப்பார்கள். பிள்ளைகளுடைய இருதயங்கள் மாத்திரமே பிதாக்களிடத்தில் திருப்பப்படுவதால், பிள்ளைகள் தான் அந்தத் தூதனுக்குச் செவிகொடுப்பார்கள். ஆகாபின் காலத்தில், 7000 உண்மையான இஸ்ரவேலர்கள் (வித்துக்கள் ) காணப்பட்டனர். யோவானின் காலத்திலும் சொற்பபேர் மாத்திரம் சத்தியத்தை ஏற்றுக் கொண்டனர். இவ்விரு காலத்திலும் வாழ்ந்த பெரும்பான்மையோர் விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்தனர். லவோதிக்கேயா காலத்தின் தூதனுக்கும், இயேசுவின் முதல் வருகைக்கு முன்பு தோன்றிய யோவானுக்குமிடையே காணப்படும் வேறொரு ஒற்று மையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அக்காலத்து மக்கள், யோவானை மேசியாவென்று தவறாக எண்ணினர். "எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்ட பொழுது. அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி நான் கிறிஸ்து அல்ல என்று அறிக்கையிட்டான்" (யோவான் 1:19-20). அவ்வாறே கடைசி காலத் தூதனுக்கிருக்கும் வல்லமையை மக்கள் கண்டு, அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தானோ என்று தவறான எண்ணம் கொள்வர். (கடைசி காலத்தில் பொய்யின் ஆவி உலகத்தில் மக்களிடையே காணப்பட்டு, அவர்களை வஞ்சிக்கும். மத் 24:23-26: "இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடு மானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால் : அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்''). அவர் இயேசு கிறிஸ்துவல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசி , தூதன், தேவனுடைய ஊழியன், சகோதரரில் ஒருவர். அவருக்கு விசேஷமான கௌரவம் அளிக்கப்பட அவசியமில்லை. யோவானும் கீர்த்தி எதுவும் தனக்கென்று தேடிக்கொள்ளாமல், "நான் அவரல்ல, எனக்குப் பின் ஒருவர் வருகிறார்,'' என்று அறிக்கையிட்டான். லவோதிக்கேயா சபையின் தூதனைக் குறித்துள்ள செய்தியை நான் முடிக்கும் முன்பு இரு காரியங்களைச் சிந்திக்க விரும்புகிறேன். முதலாவதாக, தீர்க்கதரிசியின் தன்மையைக் கொண்ட ஒரே ஒரு தூதன் இக்காலத்திற்கென்று அளிக்கப்படுவார். அவன் எக்காளம் ஊதப் போகிற போது " (வெளி. 10:6) என்று ஒருமையில் வெளிப்படுத்தின விசேஷம் குறிக்கிறது. தேவன் எந்தக் காலத்திலும் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகளை ஒரே நேரத்தில் அளிக்கவில்லை. தேவன் ஏனோக்கையும், நோவாவையும் தனியாக உலகத்திற்கு அளித்தார். மோசே மாத்திரம் அவன் காலத்தில் தேவ வார்த்தையைக் கொண்டவ னாயிருந்தான். மற்றவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர். யோவான் ஸ்நானன் தனியாக வந்தான். கடைசி காலத்திலும் ஒரு தீர்க்கதரிசி தோன்றுவான். (தீர்க்கதரிசினி ஒருக்காலும் தோன்றுவதில்லை. இக்காலத்தில் பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிகம் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெறு வதாகக் கூறிக் கொள்கின்றனர்). இந்தக் தீர்க்கதரிசி கடைசி காலத்தின் மக்களுக்கு இதுவரை மறைபொருளாயிருந்த இரகசியங்களை வெளிப்படுத்தி, பிள்ளைகளின் இருதயங்களைப் பிதாக்களிடத்தில் திருப்புவானென்று பிழையற்ற வேதவசனம் தெளிவாய் நமக்குப் போதிக்கிறது. அநேகருக்குக் கிடைக்கப் பெறும் வெளிப்பாட்டின் மூலம் (Collective Revelation) தேவனுடைய மக்கள் ஒன்றுபடுவர் என்று சிலர் கூறுவதுண்டு. இதை நான் ஆட்சேபிக்கிறேன். வெளி. 10:6 இதைக் தவறென்று நிரூபிக்கிறது. கடைசி காலத்தில் மக்கள் தீர்க்கதரிசனம் உரைத்து, சரியான ஊழியத்தைச் செய்வர் என்பதை நான் மறுக்கிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். பவுலின் காலத்திலும், அகபு என்னும் தீர்க்கதரிசி வரப்போகும் பஞ்சத்தைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்ததாக வேதம் கூறுகிறது. ஆனால் ஒன்றுக்கு மேற் பட்ட 'தீர்க்கதரிசி. தூதர்கள் ' தேவனுடைய வார்த்தையில் அடங்கி யிருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்தி, பிள்ளைகளுடைய இருதயங் களைப் பிதாக்களிடத்தில் திருப்புவார்கள் என்பதைப் பிழையற்ற வேத வசனங்களை ஆதாரமாகக் கொண்டு நான் மறுக்கிறேன். இக்காலத்திற்கு ஒரு தூதனே அளிக்கப்பட்டிருக்கிறான். அநேகம் பேர் கொண்ட ஸ்தலத்தில், போதக வேற்றுமை ஏற்படுவது சகஜமென்பதை நாமறிவோம், அப்படியெனில் வேதத்துக்கடுத்தவவைகளைப் பிழையற்ற விதத்தில் யார் போதிக்ககூடும்? கடைசி காலத்து சபை தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டும். வார்த்தையில் உறுதியாய் நிற்கும் மண வாட்டியின் சபை இக்காலத்தில் தோன்ற வேண்டும். பவுலின் காலத்தில் சுவிசேஷம் போதிக்கப்பட்டு, அதை மக்கள் புரிந்து கொண்ட விதமாய் இக் காலத்திலும் இது போதிக்கப்பட்டு, மக்கள் வார்த்தையின் அர்த்தத்தைச் சரி வர புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறாயின், இதைச் செய்ய கர்த்தரால் நிலைநிறுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி அவசியம். தேவன் தம்மை அவருக்கு வெளிப்படுத்துவார். அவர் தாமாகவே பேச அவசியமில்லை. தேவன் அவர் மூலமாய் அடையாளங்களை நிகழ்த்தி மக்களோடு பேசுவார் ஆமென். இரண்டாவதாக, ஏழு சபையின் காலங்களும், பரிசுத்த ஆவியின் தன்மை யையும், அந்திக் கிறிஸ்துவின் ஆவியின் தன்மையையும் கொண்டதாய் தொடங்கப்பட்டன. 'பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத் தீர்க்க தரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1). இதை நீங்கள் கவனித்தீர்களா? அந்திக் கிறிஸ்துவின் ஆவி கள்ளத்தீர்க்கதரிசிகளின் ஆவியோடே அடையாளங் காட்டப்பட் டிருக்கிறது. சபையின் காலங்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக் கொண்டவாறு தொடங்கி, அவாகளைக் கொண்டவாறே அவைகள் முடிவு பெறும். வெளிப் படுத்தின விசேஷத்தில் கூறப்பட்ட உண்மையான கள்ளத் தீர்க்கதரிசி தோன்றும் முன்பு, அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகள் உலகத்தில் காணப்படு வர் "அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார். அதோ, அங்கே இருக்கிறா என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந் துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங் களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்; அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ அறை வீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்" (மத் 24:23-26) "கள்ளத் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக் குள்ளும் கள்ளப் போதகாகள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப் பண்ணி, தங்களை கிரயத்துக் கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக் கொள்ளுவார்கள். அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்: அவர்கள் நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்" (2 பேதுரு 2:1-2). "ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சை களுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்கு திரளாய் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும் (2தீமோ. 4:3-4). ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறப்படி பிறகாலங்களிலே மனசாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சில வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங் களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப் போவார்கள்'' (1 தீமோ. 4:1). கள்ளத்தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுபவன் தேவனுடைய வார்த்தைகளை விட்டு விலகினவன் என்பதை இவ்வசனங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அந்திக் கிறிஸ்து' என்னும் வாக்கு 'வார்த்தைக்கு விரோதமாயள்ளவன்' என்று பொருள்படும் என்பதை நான் முன்னமே கூறியுள்ளேன். ஆகையால், கள்ளத் தீர்க்கதரிசிகளென்னப்படுபவர் வார்த் தையைத் தாறுமாறாக்கி, தங்களுடைய பொல்லாங்கான வழிகளுக்கேற்ப அதற்கு அர்த்தத்தை உண்டாக்கிக் கொள்வர். மக்களை வார்த்தையைவிட்டு அகலச் செய்பவர்கள், இம்மக்களை பயமுறுத்தி தங்களோடு ஒன்றாக சேர்த்து வைத்திருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் கூறுவதை மக்கள் பின்பற்றாமல் விட்டுவிட்டால், அழிவு சம்பவிக்கும் என்று அவர்கள் பய முறுத்துகின்றனர். இவர்களெல்லாம் கள்ளத்தீர்க்கதரிசிகளாயிருக்கின்றனர். உண்மையான தீர்க்கதரிசியோ, வார்த்தையை மக்களுக்கு போதித்து, அவர்களை இயேசு கிறிஸ்துவோடு ஒன்று சேர்ப்பான். மக்கள் அவனைக் கண்டு பயப்பட வேண்டுமென்று அவன் ஒருக்காலும் கூறுவதில்லை; வார்த்தை கூறுவதை மாத்திரம் அவர்கள் பயத்தோடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குப் போதிப்பான். இந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகள் யூதாஸைப் போன்று பண ஆசை பிடித்தவராயிருக்கின்றனர். உங்களுக்குள்ள எல்லாவற் றையும் அவர்கள் விற்கச் செய்து, அதனால் வரும் பணத்தைக் கொண்டு, தங்கள் திட்டங்களை நிறைவேற்ற உபயோகிப்பார்கள். அற்புதங்களைச் செய்யும் அநேகர், வார்த்தையைப் புறக்கணித்து, இவைகளினால் பணம் சம்பாதிக் கின்றனர். ஜனங்களும், அது மரணத்திற்குப் போகும் வழியென்பதை உணராமல், அவர்கள் செய்யும் அற்புதங்களை விசுவாசித்து, அவர்களை ஆதரிப் பார்கள். ஆம், பூலோகம் முழுவதும் இத்தகைய போலி அற்புதங்களைச் செய்ப வர்களால் நிறைந்திருக்கிறது. கடைசி காலத்தில் இவர்கள், தீர்க்கதரிசி- தூதன் செய்யும் அனைத்தையும் செய்ய முயற்சிப்பார்கள். ஸ்கேவாவின் ஏழு குமாரர் களும் இவ்விதமாகப் பவுலின் செயல்களையே செய்ய முயற்சித்தனர். மந்திர வாதியாகிய சீமோன்; பேதுரு நடப்பித்த கிரியைகளைத் தானும் செய்ய எண்ணினான். இவர்களின் பாவனை அனைத்தும் மாம்சத்துக்குரியது. உண்மை யான தீர்க்கதரிசி செய்பவைகளை இவர்கள் செய்ய முடியாது. அந்தத் தீர்க்கதரிசி எழுப்புதலின் காலம் கழிந்தது என்று கூறிய பிறகும், மக்களிடையே தேவன் இன்னும் வல்லமையான கிரியைகளைச் செய்து, பெரிய எழுப்புதலை உண்டு பண்ணுவாரென்று இவர்கள் தவறாகப் போதித்து வருகின்றனர். மக்களும் இவர்களுடைய சொற்கேட்டு விசுவாசத்தை விட்டுவழுவி போவர். கடைசி காலத்து தூதன் வேதசாஸ்திரம் படித்தவரல்லவென்றும், அதனால் மக்கள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்கக் கூடாது என்றும் இந்தக் கள்ளத்தீர்க்க தரிசிகள் போதிக்கின்றனர். ஆனால், அந்தக் தூதன் செய்யும் கிரியைகளை நபர்களால் செய்ய இயலாது. தேவனும் கடைசி காலத்துத் தூதனின் வார்த்தைகளைக் கிரியைகளினால் உறுதிப்படுத்துவது போன்று, அவர்களின் போதகததை உறுதிப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் செல்வாக்கை உபயோகித்து, அந்தத் தூதன் கூறுவது யாவும் தவறென்றும் அவருடைய சொற்களை யாரும் ஏற்றுக்கொள்ள கூடாதென்றும் மக்களை எச்சரிப்பர். இவர்கள், தங்கள் முற்பிதாக்களாகிய பரிசேயரைப் போன்று பிசாசினால் உண்டானவர்கள். பரிசேயர்கள், இயேசுவும் யோவானும் போதித்தவை தவறென்றும் அக்காலத்தில் கூறினர். ஆகாபின் காலத்தில், இந்தக் கள்ளத்தீர்க்கதரிசிகளின் முற்பிதாக்களான 400 தீர்க்கதரிசிகள் மிகாயா தீர்க்கதரிசியை எதிர்த்தனர். இவர்களெல்லாரும் ஒரே தீர்க்கதரிசனத்தை உரைத்ததன் காரணமாக, ஜனங்கள் ஏமாந்தனர். ஆனால் மிகாயா ஒருவன் மாத்திரமே தேவனுடைய வெளிப்பாட்டை பெற்று, சரியான தீர்க்கதரிசனம் உரைத்தான். கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் அவர்கள் பட்சிக்கிற ஓநாய்களாயிருக்கின்றனர். இதைப் பற்றி உங்களுக்கு இனியும் சந்தேகம் உண்டாயிருக்குமாயின், தேவன் தம்முடைய ஆவியினாலே உங்களை நிரப்பி, வழிநடத்த அவரிடம் மன்றாடுங்கள் தெரிந்து கொள்ளப்பட்ட எவரும் ஏமாந்து போவதில்லை. ஒரு மனிதனும் அவர்களை வஞ்சிக்கமுடியாது. பவுல் ஒருக்கால் தவறாகப் பிரசங்கித்தருந்தால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அந்தத் தவறை உடனே உணர்ந்திருப்பார்கள் முதலாம் சபையாகிய எபேசு சபையின் காலத்தில் உண்டாயிருந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், கள்ள அப்போஸ்தலர்களையும் சோதித்தறிந்து அவர்களைச் சபையினின்று புறம்பாக்கினர். அல்லேலுயா! அவருடைய ஆடுகள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து அவரைப் பின்செல்கின்றன ஆமென் நான் அதை முற்றிலும் நம்புகிறேன். அக்கினி ஸ்தம்பம் சகோதரன் பிரன்ஹாம் அவாகளின் தலைக்குமேல் இருக்கும் அக்கினி ஸ்தம்பம் ஜனவரி மாதம் 1950-ம் வருஷம் ஹவுஸ்டன், டெக்ஸாஸில் புகைப்படம் எடுக்கப்பட்டது 1909ம் வருடம் அவர் பிறந்தது முதல் அவரை தொடாந்து சென்றது. இன்டியானா. ஜபர்சன்வில்லியிலுள்ள ஓஹோயோ நதியில் 1932ம் வருடம் நடந்த ஞானஸ்நான ஆராதனையின் போது, அநேக நூற்று கணக்கான ஜனங்களுக்கு முன்பாக தோன்றி ''யோவான் கிறிஸ்துவினுடைய முதலாம் வருகைக்கு முன்னோடினது போன்று நீ அவருடைய இரண்டாவது வருகைக்கு முன்னோடுவாய்" என்று உரைத்தது. வெளி. 3:22 'ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது', இதுவே கடைசி எச்சரிக்கை. இதற்குப் பிறகு வேறொரு எச்சரிக்கை கொடுக்கப்படுவதில்லை. சிங்காசனம் வைக்கப்படும் நகரம் தயாராகிவிட்டது. பன்னிரண்டு அஸ்திபாரங்களும் போடப்பட்டன. சுத்தப் பொன்னால் வீதிகள் அமைக்கப்பட்டன. பெரிய முத்துக்களால் செய்யப்பட்ட வாசல்கள் அதன் ஸ்தானங்களில் வைக்கப்பட்டன. ஒரு கூர்நுனிக் கோபுரம் (Pyramid) போன்று அது மகத்தானதாயிருக்கிறது. அதன் மகிமையின் பிரகாசத்தை அதை ஆயத்தம் செய்த பரலோகவாசிகள் வியப்புடன் நோக்குகின்றனர். அதன் அழகின் ஒவ்வொரு அங்கமும் இயேசுவின் கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றது. இயேசுவின் வருகைக்கென ஆயத்தம் செய்யப்பட்ட மக்களுக்கென்று இந்நகரம் உண்டாக்கப்பட்டது. அவர்கள் கூடிய சீக்கிரம் அதன் வீதிகளில் சந்தோஷமாக உலாவுவர். ஆம், இதுவே கடைசி அழைப்பு ஆவியானவர் வேறொரு காலத்தில் பேசமாட்டார். ஏனெனில் சபையின் காலங்கள் இதோ முடிவுபெற்றன. கடைசி சபையின் காலம் இன்னும் முடிவுபெறாததைக் குறித்து நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஆவியானவர் மக்களின் ஆவிக்குரிய செவிகளில் பேசுவதோடு மட்டுமின்றி, ஒரு தீர்க்கதரிசியின் மூலமாகவும் இக்காலத்தில் பேசுகிறார் பவுலுக்கு அவர் சத்தியத்தை வெளிப்படுத்தியது போன்று இக்காலத்தின் தூதனுக்கும் அவர் வெளிப்படுத்துவார். லவோதிக்கேயா சபையின் காலத்தில் தோன்றும் ஏழாம் தூதனின் நாட்களில், பவுலுக்கு வெளிப்பட்ட தேவரகசியத்தை அது வெளிப்பட்ட வண்ணமாகவே இந்த தூதன் வெளிப்படுத்துவார். இந்த தீர்க்கதரிசி - தூதனானவர் பேசுவார். தீர்க்கதரிசியை அவரது சொந்த நாமத்தில் ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அந்த தீர்க்கதரிசியின் ஊழியத்தின் நற்பலனைப் பெறுவார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வெளி 22:17ல் கூறப்பட்ட கடைசி காலத்து மணவாட்டியின் ஒரு பாகமா வார்கள் ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்" நிசாயாவில் பூமியில் விழுந்த கோதுமைமணி (மணவாட்டி) மறுபடியுமாக வார்த்தையில் நிலை நிற்கும் கோதுமைமணியாகத் தோன்றுகிறது. இந்தக் கடைசி காலத்தில் எழும்பும் உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசிக்குச் செவிகொடுங்கள். அவர் தேவனிடமிருந்து பெற்று, மக்களுக்கு உரைக்கும் சத்தியத்தையே மணவாட்டியும் உரைப்பாள். ஆவியானவரும், தீர்க்கதரிசியும், மணவாட்டியும் ஒரே காரியத்தையே கூறுவர். அவர்கள் கூறுவது ஏற்கனவே வேதவாக்கியத்தில் காணப்படும். இப்பொழுது அவர்கள், ''அவள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போங்கள் என்று கூக்குரலிடுகின்றனர். இந்த சத்தம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? இது அதிக காலம் நீடிக்காது என்பதை நாம் அறிவோம் ஏனெனில் இது கடைசி காலமாயிருக்கிறது. ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன். ஆவியானவர் பேசி முடித்து விட்டார். சபைகளுக்கு வெளிச்சம் கொடுத்த சூரியன் இன்னும் வெகு சீக்கிரத்தில் நித்தியத்திற்குள் அஸ்தமிக்க இருக்கிறது அப்பொழது காலங்கடந்ததாயிருக்கும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது தேவ ஆவியானவர் உங்களோடு பேசியிருப்பாரெனில், இப்பொழுதே மனந்திருமபி உங்களுடைய ஜீவியத்தை அவருக்கு ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அவர் உங்களுக்கு நித்திய ஜீவனைத் தந்தருளுவார்.